ஜெயம்ரவி மகனுக்கு பாட்டியாக நடிக்க ஆசைப்படும் நிவேதா பெத்துராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இமானின் இசையில் 100வது படமாக உருவாகியுள்ள படம் ‘டிக் டிக் டிக்’.

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவி உடன் அவரது மகன் ஆரவ் ரவி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இப்படத்தை வருகிற ஜனவரி 26ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது படத்தின் நாயகி நிவேதா பெத்துராஜ் பேசியதாவது…

ஒரு வித்தியாசமான பட அனுபவத்தை இப்படம் தந்துள்ளது. படம் நன்றாக வந்துள்ளது.

ஜெயம் ரவியின் மகன் இதில் நடித்துள்ளார். அவன் வளர்ந்து பெரிய நடிகராக வந்தபின் அவருக்கு பாட்டியாக நான் நடிப்பேன்.” என்றார்.

அரசியலுக்கு வரும் ரஜினி-கமல்-விஷாலுக்கு சூர்யா வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ்சிவன் இயக்கத்தில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பட நாயகன் சூர்யா பேசியதாவது…

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் எல்லா கனவுகளும் சிறப்பாக நிறைவேற வேண்டும். நமது துறையிலிருந்து அடுத்த பயணத்தை துவங்கயிருக்கும் ரஜினி சார், கமல் சார், விஷால் உள்ளிட்டவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

எல்லாருடைய வரவும் நல்வரவாக இருக்க வேண்டும். எங்கள் அனைவரின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு.

எப்படி ஒவ்வொரு டைரக்டரும், ஒவ்வொரு தயாரிப்பாளரும் எனக்கு முக்கியமோ, அதேபோல் ஒவ்வொரு படத்திலும் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் முக்கியம்.

ரசிகர்கள் முக்கிய காரணமாக இருந்துள்ளனர். ஆனால் இன்னும் ஆதரவாக இருந்தது ஞானவேல் தம்பி.

என்னுடைய வாழ்க்கையில் நல்ல முடிவுகளை தேர்ந்தெடுத்து என்ன பண்ண வேண்டும் என்று அறிவுரை கூறுவார். எனக்கு அறிமுகம் கிடைத்த சில இயக்குநர்கள், எடுத்த முடிவுகள் என்னுடைய வாழ்கையில் முக்கியமாக அமைத்துள்ளது.

1987-ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கபட்டது என்றாலும், அதை மையாக வைத்து தான் ஸ்பெஷல் 26 என்ற படம் உருவானது. முற்றிலும் வேறு ஒரு பாதையில் கதை செல்கிறது.

முதல் சந்திப்பில் இருந்து `தானா சேர்ந்த கூட்டம்’ என்று படத்தின் பெயர் வைக்கும் வரை சிறப்பாக அமைந்தது.

7 வருடங்களுக்கு பிறகு பண்டிகை தினத்தன்று என் படம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது.

எல்லா படங்களிலும் தொடக்கத்தில் வரும் புகை பிடிக்காதீர், மது அருந்தாதீர் என்ற Disclaimer card எங்கள் படத்தில் வராது, அப்படி ஒரு படத்தை எடுத்துள்ளார். அதற்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்” என்றார் சூர்யா.

பொம்பள கமல் ரம்யாகிருஷ்ணன்; ஆம்பள மனோரமா தம்பிராமையா… : விக்னேஷ்சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டுடியோ கீரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் சூர்யா, தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது…

`தானா சேர்ந்த கூட்டம்’ சிறப்பாக உருவாக காரணம் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான்.

நான் `ஸ்பெஷல் 26′ படத்தின் உரிமையை வாங்கி, அந்த படத்தின் முக்கியமான கருவை மட்டும் எடுத்து, புதிதாக ஒரு திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கியுள்ளேன்.

உங்களை இயக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி சூர்யா. சூர்யாவுக்கு படத்தில் புதுமையான லுக்கை கொடுத்துள்ளேன்.

இதற்கு மேல் மற்ற விஷயங்களை நீங்கள் படத்தில் பாருங்கள். கீர்த்தி சுரேஷ் என்னை பிரதர், பிரதர் என்று அழுத்தி கூறிவிட்டார். நீங்கள் பயப்பட வேண்டாம். பாதுகாப்பான ஒரு இடத்தில் தான் இருக்கிறீர்கள்.

ரம்யா கிருஷ்ணன், கமல்ஹாசன் மாதிரி மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடியவர். இவரை பொம்பள கமல்ஹாசன் என்று கூறலாம்.

அதேபோல் தம்பி ராமையா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். இவரை ஒரு ஆம்பள மனோரமா என்று கூறலாம். அந்த அளவுக்கு அவர் பிசியாக நடித்து வருகிறார்.

அனிருத்தின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலம்.” என்றார்.

தயாரிப்பாளர் K.E. ஞானவேல்ராஜா பேசியதாவது…

`தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு என்னுடைய பங்களிப்பை என்னால் சரியாக கொடுக்க முடியவில்லை.

அனைத்தையும் பொறுத்துக்கொண்ட சூர்யா, விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு நன்றி. இன்னைக்கு இருக்கக்கூடிய கால சூழ்நிலையில் நல்லவனாக வாழ்வதை விட வல்லவனாக வாழ வேண்டியுள்ளது.

இனிமேல் என்னோடு இருப்பவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் முடிவுகளை வாழ்கையில் நான் எப்போதும் எடுக்க மாட்டேன்.

இது ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக் என்றாலும் ஒரு நேரடி தமிழ் படத்துக்கு என்ன உழைப்பு தேவையோ அதைவிட பல மடங்கு உழைப்பை விக்கி இந்த படத்துக்கு கொடுத்துள்ளார்.

அயன் படத்தில் வருவது போல் எனர்ஜியான சூர்யாவை இப்படத்தில் பார்க்கலாம் என்றார் ஞானவேல் ராஜா.

விக்னேஷ்சிவனை பிரதர் பிரதர் என அழுத்தமாக அழைத்த கீர்த்திசுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டுடியோ கீரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் தானா சேர்ந்த கூட்டம்.

அனிருத் இசையைமத்துள்ள இப்படத்தை பொங்கல் தினத்தில் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

எனவே இது தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பட நாயகன் சூர்யா, தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பட நாயகி கீர்த்தி சுரேஷ் பேசும்போது… நான் சூர்யாவின் ரசிகை. இன்று அவருடன் நடித்துவிட்டேன். என்றார்.

மேலும் பட வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறிவிட்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை பலமுறை பிரதர் பிரதர் என்று அழுத்தமாக அழைத்தே பேசினார்.

அதன்பின்னர் பேசிய விக்னேஷ்சிவன் பயப்படாதீங்க சிஸ்டர், நீங்க பாதுகாப்பத்தான் இருக்கீங்க” என்றார்.

என்ன ரகசியமோ? என்ன நடந்துச்சோ..?

கட்சியை பலப்படுத்த விரைவில் தமிழகத்தை ரவுண்ட் அடிக்கும் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆன்மிக அரசியல் கட்சி அமைத்து வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்து தமிழக அரசியலை பரபரப்பாக்கி இருக்கிறார் ரஜினிகாந்த்.

இது தொடர்பாக ரஜினி மன்றம் பெயரில் பிரத்யேகமாக இணையதள முகவரியையும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ரஜினிக்கு தமிழகத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்ட 20 ஆயிரம் ரசிகர் மன்றங்கள் உள்ளன.

இவையில்லாமல் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மன்றங்கள் பதிவு செய்யப்பட்டாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது அனைத்து ரசிகர் மன்றங்களை ஒரே குடையில் கீழ் கொண்டுவர ரஜினி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் பொதுமக்களையும் சந்திக்கவுள்ளாராம் ரஜினிகாந்த்.

அப்போது சில பொதுக்கூட்டங்களில் பேசுவார் என்றும் கட்சியின் கொள்கை திட்டங்களை மக்கள் மத்தியில் வெளியிடுவார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

நஷ்ட பணத்தை ஜெய் திருப்பி தரவேண்டும்; பலூன் படத்தயாரிப்பாளர் போர்க்கொடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி, யோகி பாபு ஆகியோர் நடித்த ‘பலூன்’ படம் கடந்த டிசம்பர் 29-ம் தேதி வெளியானது.

தற்போது ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில் பட இயக்குனர் சினிஷ் நான் மகிழ்ச்சியாக இல்லை என அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தித்துள்ளார்.

இந்நிலையில், படத்தை தயாரித்த 70 எம்.எம். என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் ஜெய் மீது புகார் மனு அளித்திருக்கிறது.

அதில் நடிகர் ஜெய் சரியாக படப்பிடிப்புக்கு வரவில்லை என்றும், அவரால் ரூ.1.50 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில் தெரிவிக்கபட்டுள்ளதாவது..

பலூன் படத்தை 2017 ஜனவரி மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். ஆனால் 9 மாதங்கள் கழித்து டிசம்பர் 29-ஆம் தேதி தான் வெளியிட முடிந்தது. அதற்கு முக்கிய காரணம் நடிகர் ஜெய் தான்.

* 2016, ஜுன் மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே ஜெய் தேதிகளை சரிவர கொடுக்கவில்லை.

* பின்னர் செப்டம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். ஆனால் டப்பிங்குக்கு கூட வராமல் மனஉளைச்சலை ஏற்படுத்தினார்.

* அவரது தொடர் டார்ச்சரால் இயக்குநர் சினிஷ் கொடைக்கானலில் தற்கொலை முயற்சி செய்ய தூண்டும் மனநிலைக்கு தள்ளப்பட்டார்.

கொடைக்கானலில் 20 நாட்கள் சூட் செய்வதற்காக செட் போட்டு ஜெய் வருவார் என காத்திருந்தோம். ஆனால் அவரை போனிலோ, நேரிலோ எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

* தினமும் குடித்துவிட்டு தான் சூட்டிங்குக்கு வருவார். நடிப்பில் கவனம் செலுத்தாமல் மெத்தனப் போக்குடன் இருப்பார்.

* அவரது இந்த தவறான நடவடிக்கையை நாங்கள் சுட்டிக் காட்டினோம். அதில் கோபமடைந்து அவர் படப்பிடிப்பில் இருந்து வெளியேறினார். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது.

இறுதியில் நாங்கள் வாங்கிய கடன், அதற்கான வட்டி என மொத்தமாக ரூ.1.50 அதிகமாகவே இவரால் செலவானது.

* எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஜெய் தான் காரணம். அதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. இது எங்களுடன் பணிபுரிந்த அனைவருக்கும் தெரியும்.

* நஷ்ட தொகையான ரூ.1.50 கோடியை ஜெய் உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

More Articles
Follows