தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இவருடைய மனைவி பெயர் நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள்.
இருவருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்பதால் நித்யா தன்னுடைய மகளுடன் வசித்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு நித்யா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கணவர் பாலாஜி மீது புகார் கொடுத்து இருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த செய்தியை நம் தளத்தில் அப்போது பதிவிட்டு இருந்தோம்.
இதன் பின்னர் கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றனர். இருவரையும் சேர்ந்து வாழ பலரும் அட்வைஸ் செய்தனர்.
இந்நிலையில் மாதவரம் போலீஸ் நிலையத்தில் தனது கணவர் தாடி பாலாஜி மீது மீண்டும் புகார் ஒன்றை அளித்துள்ளார் நித்யா.
அதில், ‘மீண்டும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து கலாட்டா செய்கிறார். செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுக்கிறார் பாலாஜி, எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என நித்யா தெரிவித்துள்ளார்.
தற்போது பாலாஜி வெளியூர் சூட்டிங்கில் இருப்பதால் அவர் சென்னை வந்ததும், விசாரணை போலீசார் தொடங்கவுள்ளதாக தெரிகிறது.
அண்மையில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள பெண்களுக்கான புதிய கட்சியில் நித்யா முக்கிய பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
