தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கடந்த ஜூன் 9 தேதி நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று அக்டோபர் 9ஆம் தேதி மாலை தங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் அறிவித்தார்.
திருமணமாகி நான்கு மாதங்களில் குழந்தைகள் எப்படி? என நெட்டிசன்கள் பலரும் கேள்வி கேட்டனர்.
இவர்கள் ஏற்கனவே செய்துக் கொண்ட ஒப்பந்தம்படி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்திகளை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம். இந்த நிலையில் வாடகைத்தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றதில் விதிகளை மீறி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
அந்த விதிமுறைகள் என்ன என்பது குறித்து இப்போது பார்ப்போம்…
1) ஒரு தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் எனில் திருமணம் முடிந்து குறைந்தபட்சம் 5 வருடங்கள் ஆகி இருக்க வேண்டும்.
2) கணவனோ மனைவியோ குழந்தை பெற தகுதியற்றவராக இருக்க வேண்டும்.
3) ஒரு பெண் ஒருமுறைதான் வாடகை தாயாக இருக்க வேண்டும். அவர் இதற்கு முன்பு வேறு தம்பதியினருக்கு வாடகை தாயாக இருந்திருக்கக் கூடாது.
4) தம்பதியினருக்கும் வாடகை தாய்க்கும் தகுதி சான்றிதழ் கட்டாயம்.
5) தம்பதியினரின் உறவுவினர் மட்டுமே வாடகை தாயாக இருக்க வேண்டும். உறவினர் அல்லாத வேறு ஒருவரை வாடகை தாயாக இருக்கச் செய்யக்கூடாது.
6) வாடகை தாய்க்கு 15 மாதம் இன்சூரன்ஸ் எடுத்திருக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
