ஹரி இயக்கத்தில் மீண்டும் விக்ரமுடன் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐயா படம் மூலம் நயன்தாராவை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்தவர் இயக்குனர் ஹரி.

இந்நிலையில் ஹரி இயக்கவுள்ள சாமி 2 படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதில் ஏற்கெனவே த்ரிஷாவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரி இயக்கத்தில் சாமி, அருள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விக்ரம்.

தற்போது ஹரி இயக்கத்தில் விக்ரம் நயன்தாராவும் இணைந்து நடிக்கிறார்கள் என்பதுதான் இதில் ஹைலைட்.

மீண்டும் ரஜினி ஜோடியுடன் டூயட் பாடும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனனின் என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும் வெற்றிமாறனின் வடசென்னை ஆகிய படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.

மேலும் ஒரு இந்தி படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

இதற்கு முன்பு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் நாயகியாக நடிக்க ராதிகா ஆப்தேவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் அவரும் ஓகே சொன்னதாக சொல்லப்படுகிறது.

இதற்கு முன்பு ரஜினியுடன் நடித்த ஸ்ரேயாவுடன் தனுஷ் டூயட் பாடியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

விஜய்யின் தலைவா கொடுத்த நஷ்டத்தை ஈடுகட்டிய சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய், இயக்குனர் விஜய் இருவரும் இணைந்த தலைவா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதனால் இப்படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் பெரியளவில் பாதிக்கப்பட்டார்.

எனவே நஷ்டத்தை ஈடுகட்ட விஜய் ஒரு படம் நடித்து தர சம்மதித்து இருக்கிறாராம்.

இந்நிலையில் சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு படத்தின் உரிமையை வாங்கி வெளியிட்டார் சந்திரபிரகாஷ் ஜெயின்.

இப்படம் நல்ல லாபத்தை கொடுத்துள்ளதால், மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.

தெறி இயக்குனர் அட்லியின் அடுத்த படத்தில் பிரபல ஹீரோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜா ராணி, தெறி என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் அட்லி.

எனவே இவரது 3வது படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ஆனால் இயக்குனர் வேலைக்கு சிறிது ஓய்வு கொடுத்துவிட்டு, தயாரிப்பாளராக பிஸியாக இருந்து வருகிறார்.

ஜீவா, ஸ்ரீதிவ்யா நடிக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இத்துடன் மலையாளத்தின் பிரபல ஹீரோ நிவின்பாலி நடிக்கவுள்ள நேரடி தமிழ் படம் ஒன்றையும் தயாரிக்கிறார்.

அட்லியின் நண்பரும் சூர்யா இயக்குநராக அறிமுகமாகிறார்.

ரெமோ தயாரிப்பாளர் ஆர்டி ராஜா தயாரிக்கும் படத்திலும் நிவின்பாலி நடிக்கவிருக்கிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

முதன்முறையாக இணையும் சூர்யா-கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரி இயக்கும் சிங்கம் 3 படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

இதனையடுத்து கபாலி புகழ் ரஞ்சித் இயக்கவுள்ள படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது,

ஆனால் இதனிடையில் கொம்பன் முத்தையா இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதை முன்பே பார்த்தோம் அல்லவா.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இவர்கள் இணைவது இதுதான் முதன்முறையாகும்.

விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை கீர்த்தி தேர்ந்தெடுத்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

‘கபாலி’ வெற்றி விழா குறித்து ரஜினியின் ‘மகிழ்ச்சி’ தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த படம் கபாலி. இப்படம் கடந்த ஜீலை மாதம் 22ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது.

இப்படம் ரூ. 320 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தாணுவே உறுதி செய்திருந்தார்.

விரைவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ள இதன் வெற்றி விழா கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து ஒரு டிவி நிகழ்ச்சியில் ரஜினி தொலைபேசி வாயிலாக தெரிவித்த தகவல் தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளதாம்.

கபாலி இப்படி ஒரு மகத்தான வெற்றியை பெறும் என நான் எதிர்பார்க்கவில்லை. என் குருநாதருக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி.

இயக்குநர் ரஞ்சித்துக்கு பெரிய உயரங்கள் காத்திருக்கிறது.

இதன் பிரம்மாண்ட விழாவுக்கு தாணு தயாரான போது அவருடைய கையைக் கட்டிப் போட்டேன். இனிமேல் கட்டிப் போட மாட்டேன்” என்று தெரிவித்தார் ரஜினிகாந்த்.

More Articles
Follows