விருது விழாவை தவிர்த்த குஷ்பூ-நயன்தாரா-விஜய்சேதுபதி-கார்த்திக்கு நடிகர் சங்கம் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த காலங்களில் திரை உலகில் திரைப்பட விழாக்கள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல நிகழ்வுகளும் நடந்துள்ளது.

அந்த நிகழ்ச்சிகளில் நடிகர் நடிகைகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

ஆனால், சமீப காலங்களில் அது வியாபார நோக்கத்தில் நடத்தபடுவதால் அந்த பயனை நடிகர் நடிகைகளும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் சங்க சிறப்பு கூட்டத்தில் இது பற்றி விவாதித்து முடிவெடுக்கப்பட்டது .

அன்று எடுத்த முடிவில் இனிமேல் இது போன்ற விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகர்கள் பொருளாதாரமாக பயன்படும் வகையிலோ அல்லது தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் ஆகியவற்றுக்கு நன்கொடையாக தருபவர்கள் நிகழ்வில் மட்டும் கலந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டது.

இதற்கு பின் நடந்த விழாக்களான கலர்ஸ் டிவி, விஜய் டிவி, கலாட்டா டாட் காம் விருது விழாக்களில் இந்த நடைமுறையில் பணம் பெறப்பெற்று அறக்கட்டளையின் செயல்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக ஹைதராபாதில் பிலிம் பேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்த நடைமுறையை அந்த விழா நடத்துபவர்களிடம் எடுத்து கூறியும் இன்றுவரை ஒத்துழைப்பு தராததினால் , இதை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர் நடிகைகளிடம் வேண்டுகோள் வைத்தோம் .

எங்கள் வேண்டுகோளை ஏற்று கொண்டு அந்த விருது விழாவினை தவிர்த்த செல்வி. நயன்தாரா, திருமதி.குஷ்புசுந்தர், திரு.விஜய்சேதுபதி, திரு கார்த்தி மற்றும் அனைவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

தங்களின் ஒத்துழைப்பால் பல ஏழை கலைஞர்களின் குடும்பங்களுக்கு உதவமுடியும். இனி வரும் காலங்களில் மற்ற திரை கலைஞர்களும் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

Nadigar Sangam thanks statement for Actors who avoided Film fare award function

ஆந்திரா மெஸ்-ஸை கன்னா பின்னான்னு கழுவி ஊற்ற ஜெய் சவால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவிற்கு இதுவரை பரீட்சயமில்லாத கோணத்தில் கதை சொல்லப்பட்டிருக்கும் படம் “ஆந்திரா மெஸ்”.

நான்கு திருடர்கள், ஒரு முன்னாள் ஜமீன்தார், அவருடைய இளம் மனைவி.

இவர்களின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கிற சம்பவங்களின் தொகுப்பை மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கும் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், பிரபல விளம்பரப் பட இயக்குநர் ஜெய்.

“ஷோ போட் ஸ்டுடியோஸ்” சார்பில் நிர்மல் கே.பாலா தயாரித்திருக்கும் இப்படத்தின் கதாநாயகனாக “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, “ரிச்சி” போன்ற படங்களில் நடித்த ராஜ் பரத், கதாநாயகிகளாக தேஜஸ்வினி, பூஜா தேவரியா நடித்திருக்கின்றனர்.

இவர்களுடன் புகழ்பெற்ற ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படம் பற்றி சமீபத்தில் பேசிய இயக்குநர் ஜெய், தமிழ் சினிமா சூழலில் இருக்கிற வியாபார சிக்கல்களை கொஞ்சம் கடுமையாகவே சாடியுள்ளார்.

“ஒரே படத்தைப் பற்றி இரண்டாவது முறையாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இருந்தாலும் பேசித்தான் ஆக வேண்டும். இந்தப் படத்திற்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறோம்.

ஒரு முதல்பட இயக்குநரான நான் சொன்ன இந்தக் கதையை நம்பி, நான் நினைத்த மாதிரி எடுத்து முடிக்கிற வரை எனக்கு பலமாக இருந்த தயாரிப்பாளர் நிர்மல் கே.பாலாவிற்கு முதலில் என் நன்றிகள்.

அதேபோல் இத்தனை இடர்களிலும் என்னோடு நிற்கிற என் படக்குழுவினர் அத்தனை பேருக்கும் எனது நன்றிகள்.

தமிழ் சினிமா சூழல் என்பது வியாபாரத்தின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதை தாண்டி படங்கள் எடுப்பது என்பது மிகவும் சவாலானதாக இருக்கிறது.

நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள். இந்த சூழல் நிச்சயம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தாது.

இந்தப் படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது திரைக்கு வருகிறது. இப்படத்திற்கான விமர்சனங்கள் எப்படி இருந்தாலும், யார் எப்படி கிழித்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். எது எப்படியாக இருந்தாலும் அத்தனைக்கும் நான் மட்டும் தான் பொறுப்பு” என்று பேசியுள்ளார்.

ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் பேசும்போது…

“இயக்குநர் ஜெய், விமர்சனங்களில் எப்படிக் கிழித்தாலும் ஏற்றுக் கொள்வதாக சொன்னார். ஆனால், அதற்கெல்லாம் “ஆந்திரா மெஸ்” வேலை வைக்காது.

நிச்சயம் இந்தப் படத்தை எல்லோரும் தூக்கி நிறுத்துவார்கள்.

பத்திரிக்கையாளர்களோடு 25 வருட பழக்கம் எனக்குண்டு. அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டவர்கள் தான் இன்று முன்னணி இயக்குநர்களாக தமிழ் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள்.

நிச்சயம் அந்த வரிசையில் ஜெய்யையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது” என்று பேசினார்.

Andhra Mess director Jai expects Negative comments for his movie

பிக்பாஸ் 2-வில் பங்கேற்கும் போட்டியாளர்களின் கம்ப்ளீட் லிஸ்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2017ல் கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தையே ஒரு கலக்கி கலக்கியது.

100 நாட்கள் நடந்த நிகழ்ச்சியை பற்றி பேசாதவர்களே இல்லை என்னுமளவுக்கு இது பாப்புலர் ஆனது.

இதனால் இதில் பங்கேற்ற ஓவியா, ஆரவ், ரைசா, ஹரிஷ் கல்யாண், சினேகன் உள்ளிட்ட பலருக்கும் சினிமா வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இன்று முதல் பிக்பாஸ் சீசன் 2 தொடங்கப்பட உள்ளது.

இன்று இரவு விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ளது.

எனவே இதுவரை வந்துள்ள தகவல்களின் அடிப்படையில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கற்கும் போட்டியாளர்கள் பெயர் பட்டியலை தொகுத்துள்ளோம். இதோ..

1. யாஷிகா ஆனந்த் (இருட்டு அறையில் முரட்டு குத்து)
2. ஆனந்த் வைத்தியநாதன்
3. தாடி பாலாஜி
4. நித்யா பாலாஜி (மனைவி)
5. ஜனனி ஐயர்
6. சுமார் மூஞ்சி குமாரு டேனியல்
7. பொன்னம்பலம்
8. ஐஸ்வர்யா தத்தா
9. மமதி சாரி
10. மஹத்
11. மும்தாஜ்
12. பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன்
13. டேனியல் பாலாஜி
14. பரத்

கடந்த பிக்பாஸ் 1ல் 14க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Complete list of Participants in Bigg Boss Tamil Season 2

பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் பாலாஜி-நித்யா பிரச்சினையை தீர்ப்பாரா கமல்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் பிரச்சினை நாம் அறிந்த ஒன்றுதான்.

தன்னை தன் கணவன் அடித்து சித்ரவதை செய்வதாக பல முறை புகார் கூறியிருந்தார் நித்யா.

தற்போது கமல் நடத்தவுள்ள பிக்பாஸ் வீட்டுக்கு செல்கிறார் தாடி பாலாஜி.

இவரைத் தொடர்ந்து அவரது மனைவி நித்யாவும் இந்த வீட்டுக்கு செல்லவிருக்கிறாராம்.

அது ஏன் ஏன தற்போது விளக்கம் கொடுத்துள்ளார் நித்யா.

“எங்கள் குடும்ப பிரச்னை நல்ல முடிவுக்கு வரணும்னு நினைச்சு, நான் இந்த நிகழ்ச்சிக்கு போகல.

நான் வேலை செய்த எல்லா இடங்களுக்னு வந்து எனக்கு பிரச்சினை கொடுத்தார் பாலாஜி.

நான் தற்போது ஒரு பிளே ஸ்கூல் தொடங்கி நடத்திவருகிறேன்.

நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதால் பொருளாதார ரீதியாக எனக்கு அது பலன் தரும்” என தெரிவித்துள்ளார்.

Actor Thaadi Balaji and his wife Nithya at BigBoss Tamil 2

ஆந்திரா மெஸ் அப்டேட்ஸ்: ஜமீன்தார் மனைவியிடம் தஞ்சமடையும் நாலு பேர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷோ போட் ஸ்டுடியோஸ், நிர்மல் கே பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் இயக்கியிருக்கும் படம் “ஆந்திரா மெஸ்”

ராஜ் பரத், தேஜஸ்வினி, ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா ஆகியோர் நடித்துள்ள இப்படம் குறித்து இயக்குனர் ஜெய் கூறும் போது,

வரது, ரத்னா, ரிச்சி மற்றும் சேது ஆகியோர் தேவராஜ் என்கிற லோக்கல் தாதாவிடம் வேலை செய்கிறார்கள். ஒரு தருணத்தில் வரது 40-வது பிறந்தநாளைக் கொண்டாடும் போது, அவனது வாழ்க்கையில் ஒரு மாற்றம் நடக்கிறது. அதன் பிறகு நடக்கிற தொடர்ச்சியான சம்பவங்கள் வரதுவின் வாழ்க்கையை மாற்றியமைக்கிறது. இதனால் அவன், தேவராஜிடம் இருந்து பிரிவதற்கு முடிவெடுக்கிறான்.

சில சம்பவங்களால் வரது மற்றும் அவனது சகாக்கள் அனைவரும் ஒரு குக்கிராமத்தில் வசிக்கிற பழமைவாதியான ஜமீன்தார் மற்றும் ஜமீன்தாரின் அழகிய மனைவியிடம் தஞ்சம் அடைகிறார்கள். அங்கேயே சில நாட்கள் தற்காலிமாக தங்கி பிரச்சனைகளை எதிர்கொள்வது குறித்து யோசிக்கிறார்கள். அந்த அழகும், அமைதியும் நிறைந்த அந்த கிராமம் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வேறுவேறு பாதைய காண்பிக்கிறது.

இந்த நான்கு பேரும் பழையதை எல்லாம் மறந்து விட்டு புத்தம் புதியான வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்கள். ஆனாலும், இவர்களை எப்படியாவது பழிவாங்க வேண்டுமென்று தேவராஜ் தேடிக்கொண்டிருக்கிறான். வரது மற்றும் அவனது சகாக்கள் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார்களா? தேவராஜ் அவர்களை என்ன செய்தான்? என்பதே படத்தின் கதை.

‘அங்கமாலி டைரீஸ்’, ‘சகாவு’ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த பிரசாந்த் பிள்ளை இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை முகேஷ்.ஜி மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை பிரபாகர் கவனிக்கிறார். குட்டி ரேவதி, மோகன் ராஜன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.” என்றார்.

ஒவ்வொரு சினிமா டிக்கெட்டின் ஒரு ரூபாயை தெலுங்கு விவசாயிகளுக்கு கொடுக்கும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால், சமந்தா நடிப்பில் வெளியான ‘இரும்புத்திரை’ படம் தெலுங்கிலும் ரிலீஸாகி வரவேற்பை பெற்று வருகிறது.

கடந்த ஆண்டில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடைபெற்றபோது அவர்களுக்கு ஒத்துழைப்பு தரும்விதமாக திரைப்பட டிக்கெட் கட்டணத்தில் இருந்து தயாரிப்பாளர்கள் சார்பாக ஒரு ரூபாய் தொகையை விவசாயிகளுக்காக ஒதுக்கப்படும் என்று விஷால் தெரிவித்தார்.

ஆனால் இங்கே தியேட்டர் உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் அப்போது பல விவசாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்த விஷால் அதை இங்கே அமல்படுத்த முனைப்பு காட்டவில்லை.

தற்போது தெலுங்கில் ரிலீஸாகி ஓடி வரும் தனது ‘இரும்புத்திரை’ படத்திற்கு விற்பனையாகும் டிக்கெட் ஒன்றிற்கு ரூபாய் 1 வீதம் தெலுங்கு விவசாயிகளுக்கு ஒதுக்கியுள்ளார்.

More Articles
Follows