பிரசவ நேரத்தில் நிறுத்தி விட்டனர்; நடிகர் சங்க கட்டிடம் பற்றி நாசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் தமிழக அரசு நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்தது குறித்து சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் நாசர், கார்த்தி, மனோபாலா, சச்சு, பூச்சி முருகன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விபரம் வருமாறு:-

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கடந்த தேர்தல் முதல் எங்கள் அணி சட்ட ரீதியாகவே அணுகி வருகிறது. முந்தைய அணிகள் செய்த தவறுகளை நாங்கள் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.

இம்முறை தேர்தலுக்கு பல பிரச்சனைகள் வந்த போதிலும் அவற்றை சட்ட ரீதியாகவே சந்தித்தோம். இப்போது சங்கத்தை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிக்கு எங்கள் ஒத்துழைப்பை அளிப்போம். அது எங்கள் கடமை.

ஆனால், எங்கள் மீது எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் வைக்க முடியாத நிலையில் இதனை ஜனநாயக படுகொலையாகவே பார்க்கிறோம். ஆனால், அனைத்தையும் சட்ட ரீதியாகவே சந்திப்போம் என்று உறுதி கூறுகிறோம்.

அதிகாரிக்கு ஒத்துழைப்பு அளிக்கிறேன் என்கிறீர்கள் அப்படியானால் இதனை ஏற்றுக்கொள்கிறீர்களா ?

இல்லை. ஆனால் அவர் இன்று பொறுப்பேற்று கொண்டார் என்கிற போது அவருக்கு ஒத்துழைத்து கணக்கை ஒப்படைப்பது எங்களது கடமை. ஆனால் இதனை சட்டப்படி நாங்கள் எதிர்கொள்வோம்.

விஷால் அரசியலில் ஈடுபட்டதால் தான் இந்த பிரச்சனை நடப்பதாக சொல்வது பற்றி?

இது முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையாலானது. அவர் மீது குற்றமே சொல்லவில்லை எனும்போது ஏதாவது ஆதாரத்தின் படி குற்றம் சாட்டினால் நடவடிக்கை எடுக்கலாம் அப்படி எதுவுமே இல்லையே.

அமைச்சர்களை சந்தித்தீர்களா ?

சந்தித்தோம். ஆனால், அது பற்றி வெளியிட முடியாது. பிரச்சனை என்னவென்றால் கடந்த ஏப்ரல் மாதம் வரை பென்சன் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இப்போது வழக்கு நடப்பதால் கட்டடம் கட்டுவது தொடர்பாக எதுவும் நடக்க வாய்ப்பில்லை.

அடுத்த உறுப்பினர்கள் வந்து பொறுப்பேற்றால் தான் எல்லாம் நடக்க முடியும். ஆனால், நடிகர் சங்கத்தில் உதவி பெறுபவர்கள் சிலர் வழக்கு தொடர்கிறார்கள். அவர்களுக்கு ஆஜராகும் வக்கீல்கள் லட்சங்களில் ஃபீஸ் வாங்குபவர்கள்.

இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். நியாயமான தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். அதற்கு சட்டப்படி போராடுவோம் என்றார் கார்த்தி.

அரசு சங்கத்திற்கு எதிராக இருக்கிறதா?

அதனை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

சிறப்பு அதிகாரியால் என்ன பிரச்சனை?

முன்னால் முதல்வர்கள் பலரும் பங்கு கொண்ட அமைப்பு தான் இந்த நடிகர் சங்கம். நாங்கள் வந்த பிறகு கடனை அடைத்திருக்கிறோம். கட்டடம் கிட்டதட்ட முடித்திருக்கிறோம். ஆனால், பிரசவ நேரத்தில் இதனை நிறுத்தி வைத்துள்ளார்கள்.

அரசு ஏன் சங்கத்திற்கு எதிராக இருப்பதாக நினைக்கிறீர்கள்?

அரசு அப்படி இல்லை என்றே நம்புகிறோம். ஆனால் இப்போது நடக்கும் பிரச்சனைகள் அனைத்தையும் சட்ட ரீதியாக சந்தித்து வெல்ல முடியுமென்று நம்புகிறோம். பத்திரிகைகளை நம்புகிறோம்.

கடைசியாக பூச்சி முருகன் அவர்கள் இப்போது நடந்து கொண்டிருப்பது ஜனநாயக படுகொலை இதனை பத்திரிகையாளர்கள் தான் தட்டிக்கேட்க வேண்டும் என்றார்.

Nadigar sangam members interaction with Press and Media

மஹிமா அதுல்யா இந்துஜா… மூவருக்கும் பற்றிய ஃபயர் லவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மேயாத மான், பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இந்துஜா.

குற்றம் 23, மகாமுனி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மஹிமா நம்பியார்.

காதல் கண் கட்டுதே, ஏமாலி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அதுல்யா.

இந்த நடிகைகள் மூவரும் நெருங்கிய தோழிகளாக உள்ளனர்.

இந்த நிலையில் இந்துஜா தன் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அதை பார்த்த மஹிமா நாம கல்யாணம் பண்ணிக்கலமா? என கேட்டுள்ளார். அதற்கு அவரும் ஓகே சொல்ல அதுல்யாவும் கல்யாணம் செய்ய விருப்பம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்துஜா என்னைக் கட்டிக்கலேன்னா உன்ன (அதுல்யா) நான் கட்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார் மகிமா.

பெண்கள் மூவரும் இப்படி பேசிக் கொள்வதால் இவர்களை ஓரினச் சேர்க்கையாளர்கள் என கிண்டலடித்து வருகின்றனர்.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் சூர்யா & கௌதம் மேனன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடிப்பில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் உருவாகி வருகிறது.

சுதா கொங்காரா இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இப்படத்தை அடுத்து ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இதன் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கவிருக்கிறாராம்.

கார்த்தி ஜோதிகா நடித்த படத்திற்கு சீமான் படத்தலைப்பா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் நடித்த பாபநாசம் படத்தை இயக்கியவர் மலையாள இயக்குனர் ஜித்து ஜோசப்.

இவர் இயக்கும் புதிய படத்தில் கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், அன்சன் பால், நிகிலா விமல், சவுகார் ஜானகி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

திரில்லர் கதையாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது.

இந்த நிலையில் ‘தம்பி’ என்று பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே இதே பெயரில் சீமான் இயக்கிய படத்தில் மாதவன் நடித்திருந்தார்.

விரைவில் இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட இருக்கிறது.

இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் வரும் டிசம்பர் 20ம் தேதி இப்படத்தை வெளியாகவுள்ளது.

இணையத்தில் தர்பார் ஆட்சி; ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படம் 2020 பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

இதில் ரஜினியுடன் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

லைகா தயாரித்துள்ள இந்த படத்தை முருகதாஸ் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் தர்பார் பட மோஷன் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ளார். இன்று கமல் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில், கமல், மலையாளத்தில்மோகன்லால், தெலுங்கில் மகேஷ்பாபு, ஹிந்தியில் சல்மான் இந்த பட போஸ்ட்ரை வெளியிட்டுள்ளனர்.

இத்துடன் தர்பார் தீம் மியூசிக்கும் வெளியானது.

இதில் ரஜினி போலீஸ் உடையில் மிக கம்பீரமாக இருக்கிறார். கையில் நீண்ட வாளுடன் ரத்தம் தெறிக்க புன்னகை செய்கிறார். அனிருத்தின் மியூசிக்கும் தெறி லெவலில் உள்ளது.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருப்பது காட்சி ப்ரேம்களில் தெறிகிறது. ஆக இந்த பட டீசர் மற்றும் டிரைலர் வெளியானால் நிச்சயம் திருவிழா தான்.

தர்பார் திருவிழா, தர்பார், ரஜினி, தலைவா என்ற பல ஹேஷ்டேக்குகள் தற்போது இணையத்தில் டிரெண்ட்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது.

இதனை ரஜினி ரசிகர்கள் போஸ்டர் அடித்து கொண்டாடி வருகின்றனர்.

Kamal released Rajinis Darbar Motion poster

 

நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் – வெங்கட் பிரபு நடிக்கும் லாக்கப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா கலையை கற்றதோடு நில்லாமல் அந்த கலையில் சாதிக்க துடிக்கும் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளிப்பதில் ஆர்வம் காட்டும் தயாரிப்பாளர்களில் முக்கியமானவர் நித்தின் சத்யா.

தனது தயாரிப்பு நிறுவனமான “ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக நித்தின் சத்யா சென்ற வருடம் ஜெய் நடிப்பில் உருவான “ஜருகண்டி” படத்தை புதுமுக இயக்குனர் பிச்சுமணி இயக்கினார். தற்போது அவர் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இரண்டாவது படமான “லாக்கப்” படத்தை புதுமுக இயக்குனர் SG சார்லஸ் இயக்கியுள்ளார். SG சார்லஸ் இயக்குனர் மோகன்ராஜாவிடம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான “லாக்கப்” படத்தின் முதல் பார்வை போஸ்டர் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் வைபவ் கதாநாயகனாகவும் வாணி போஜன் கதாநாயகியாகவும் நடிக்க, பிரபல இயக்குனரும் நடிகருமான வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஆரோல் கரோலி இசையமைக்க, சாண்டி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

படத்தொகுப்பு – ஜெரால்டு ஆனந்த்

கலை – ஆனந்த் மணி

மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள படக்குழுவினர் “லாக்கப்” திரைப்படம் விரைவில் வெளியாகி ரசிகர்களுக்கு திரைவிருந்தாக அமையும் என்று கூறியுள்ளனர்.

More Articles
Follows