துப்பறிவாளன் 2: மிஷ்கினை நீக்கி விட்டு விஷாலே இயக்க திட்டம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் ‘துப்பறிவாளன்’.

மிஷ்கின் இயக்கியிருந்த இந்த படத்தில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

வினய் வில்லனாக மிரட்டியிருந்தார்.

இதில் விஷாலின் கணியன் பூங்குன்றன் கேரக்டர் பலரின் பாராட்டையும் பெற்றது.

தற்போது இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகின்றனர்.

முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் துவங்கியுள்ளது.

இதில் விஷாலுடன் பிரசன்னா, கெளதமி, ரகுமான், அஷ்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இளையராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தமானார்.

இந்த நிலையில் இப்பட பட்ஜெட் திட்டமிட்டதை விட அதிகமானதால் மிஷ்கினை படத்திலிருந்து நீக்கி விட்டு நடிகரும் தயாரிப்பாளருமான விஷாலே இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்த உறுதியான தகவல்கள் இல்லை.

Mysskin to not direct Vishals Thupparivalan 2

கண்ணை மூடிக்கிட்டு என் ரசிகர்களை லவ் பண்ணலாம்.; பெண்களுக்கு சிம்பு அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மையில் சிம்பு நடிக்கும் மாநாடு பட சூட்டிங் தொடங்கியது..

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனியார் கல்லூரி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார் சிம்பு.

அப்போது அவர் பேசியதாவது,

“யாருடைய அறிவுரையையும் கேட்காதீர்கள். நான் சொல்வது அறிவுரை அல்ல. பிடித்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையெனில் விட்டுவிடுங்கள்.

கஷ்டம் வந்தால் முதலில் பாட்டுப் போட்டு டான்ஸ் ஆடுங்கள்.

கீழே நிக்கிறவன்தான்டா சூப்பர் ஸ்டாரு..; கல்லூரி விழாவில் சிம்பு மாஸ்

நம்மைப் பலர் திட்டுகிறார்கள் என்றால் நாம் ஜெயிக்கிறோம் என்று அர்த்தம்.

பிரச்னை இல்லையெனில் வாழ்க்கையே இல்லை.

எல்லோரும் இவன் வேண்டாம். இவன் கெட்டவன் என்று என்னைப் பற்றி ஏதேதோ சொல்கிறார்கள்.

என்னை உங்களுக்கு ஏன் பிடித்திருக்கிறது.??

நீங்கள் இப்படி கை தட்டி ஏற்றிவிடுவதால் என்னை தேவையில்லாமல் சிலர் சீண்டுகிறார்கள். ரொம்ப ஓவரா பண்றாங்க..

இந்தியன் 2 விபத்து; பணம்-வார்த்தை உயிரிழப்பை ஈடு செய்யாது என சிம்பு அறிக்கை

நீங்கள் இப்படி கை தட்டி ஆதரவு கொடுப்பதால் என்னை சீண்டுபவர்களுக்கு கோபம் வரும்.

சிம்பு பெண்களுக்கு எதிரானவர் என்று சொன்னார்கள். ஆனால் அந்தப் பெண்கள் தான் என் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள்.

பெண்களுக்கு பிரச்னை என்றால், முதலில் குரல் கொடுப்பது நான் தான். பெண்களுக்கு பிரச்னை தருபவர்களை சும்மா விடமாட்டேன்..

சிம்பு ரசிகர்களை பெண்கள் கண்ணை மூடிக் கொண்டு காதலிக்கலாம். என்னை பலரும் கழுவி கண்ணா பிண்ணா திட்டிய போதே என்னை விட்டு செல்லாதவர்கள் என் ரசிகர்கள்.

அவர்களை நீங்கள் காதலித்தால் எந்த காலத்திலும் காதலியை/ மனைவியை விட மாட்டார்கள்..

இவ்வாறு மாணவ & மாணவிகள் மத்தியில் பேசினார் சிம்பு.

இவருடன் விடிவி கணேஷ் கலந்துக் கொண்டார்.

Girls can love my fans blindly says STR aka Simbu

விஜய் டி‌வி புகழ் பிரஜினின் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழிசை தந்த உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் மகன் ‘சாதக பறவைகள்’ சங்கர் ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்

வார்வின் புரொடக்ஷன்ஸ் சார்பாக ஐ ராஜா தயாரிக்க, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர் பறவை’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட படங்களில் முன்னணி இயக்குனர் சீனுராமசாமியிடம் துணை இயக்குனராக பணியாற்றிய தயானந்தன் இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் தடம் பதிக்கிறார்.

இத்திரைப்படம் இன்றைய காலகட்டத்தில், மனித வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமித்து கொண்டிருக்கும் மதுவுக்கு அடிமையான ஒருவர், தன்னை உணர்ந்து, அதிலிருந்து விடுபட்டு, முன்னெடுக்கும் புரட்சிகரமான நடவடிக்கைகளை தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டுகிறது. தனிமனித வாழ்வின் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் ஒரு முக்கியமான திரைப்படமாக இது அமையும்.

சாஸ்திரீய இசை அனைவருக்கும் புரியவில்லை என்ற போதிலும், ராகத்திலும் தாளத்திலும் மயங்கி, மொழியும் அர்த்தமும் புரியாமல் ரசித்து வந்த நிலையில், எளிய தமிழில் உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்களின் இசைப்பங்களிப்புப் போற்றுதலுக்குரியது. பெரும்பாலும் பக்தி இலக்கிய படைப்புகளை உருவாக்கிய அவர், திருவாசகம், பன்னிரு திருமுறைகளுக்கு அப்பாற்பட்டு எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளத்தக்க வகையில் பாடல்களை உருவாக்கினார்.

அவரது மகனான ‘சாதக பறவைகள்’ இசைக்குழு அமைப்பாளர் சங்கர், உலகெங்கிலும் சுமார் 8000 க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்திய பெருமைக்குரியவர், தொடர்ந்து நடத்தியும் வருகிறார். தீவிர இசை ரசிகர், பல்வேறு இசை வடிவங்களில் முறையான தேர்ச்சி பெற்றவர். அறிமுகமாகும் முதல் படத்திலேயே பல புதுமைகளை புகுத்தியிருக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் தீரத் தீர் எனும் முதல் பாடல் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் ‘அக்கப்பல்லா’ என்றழைக்கப்படும் பாரம்பரிய முறையில், மிகக் குறைவான இசைக்கருவிகளின் துணையுடன், வாய்மொழியாகவே ஒரு முழுப்பாடலையும் வடிவமைத்திருக்கிறார். இப்பாடலை வைரபாரதி எழுதியிருக்கிறார்.

இப்படத்தில் விஜய் டிவி புகழ் பிராஜின், அறிமுக நாயகி ரியாமிகா, இயக்குனர் கே பாக்யராஜ், இமான் அண்ணாச்சி மற்றும் ஷகிலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

வார்வின் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் தயானந்தன் இயக்கத்தில், உருவாகியுள்ள ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில், வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

புரோமோசனுக்கு வரலேன்னா பணத்தை திருப்பி கொடுங்க..; த்ரிஷாவுக்கு சிவா எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் திருஞானம் இயக்க த்ரிஷா நடித்துள்ள படம் ‘பரமபதம் விளையாட்டு’.

இப்படத்தின் பிரி புரமோஷன் விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினர்களும் கலந்துக் கொண்டனர். ஆனால் த்ரிஷா விழாவுக்கு வரவில்லை.

இதில் தயாரிப்பாளரும் நடிகருமான டி.சிவா பேசும்போது, ‘நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால், படம் பார்த்த என் நண்பர்கள் சிறப்பாக இருக்கிறது என்று கூறினார்கள்.

பெரிய நாயகன் இல்லாமல், விளம்பர நோக்கோடும் இல்லாமல், ஆனால், நட்சத்திர அந்தஸ்த்தோடு இப்படத்தை இயக்கியிருக்கிறார் திருஞானம்.

இப்படிப்பட்ட படத்தின் விளம்பரத்திற்கு திரிஷா வரவில்லையென்பது வருத்தத்திற்குரிய விஷயம். தொடர்ந்து அவர் விளம்பரத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பித்தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக எச்சரிக்கை விடுக்கிறேன்’ என பேசினார்.

Producer T Siva warning Trisha at Paramapadham Vilayattu event

இந்தியன் 2 விபத்து; பணம்-வார்த்தை உயிரிழப்பை ஈடு செய்யாது என சிம்பு அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி இரவு 10 மணியளவில் ‛இந்தியன் 2′ படப்பிடிப்பில் நேர்ந்த விபத்தில் 3 பேர் பலியாகினர்.

9 பேர் காயமடைந்தனர். இது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கமல், ஷங்கர், தனுஷ், ஜிவி. பிரகாஷ் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாநாடு படத்தில் நடித்து வரும் சிம்பு விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது :

எமது சினிமா தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் குறிப்பா சண்டைக் காட்சி நடிகர்களும் மயிரிழையில் உயிர் தப்பியே தினம் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு தொழிலாளர்களையும் நான் எங்களை ஏற்றி வைக்கும் ஏணியாகப் பார்க்கிறேன்.

அவர்களின் வியர்வையில்தான் எங்கள் உயரம் தீர்மானிக்கப் படுகிறது. அவர்கள் ஒவ்வொருவரையும் என் குடும்பமாகவே பார்க்கிறேன். இந்தியன் -2 படப்பிடிப்பில் நேர்ந்த விபத்தை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.

எத்தனை கனவுகளோடு விபத்தில் சிக்கியவர்களின் சினிமா பயணம் ஆரம்பித்திருக்கும்? அவர்களின் குடும்பத்தின் கனவுகளும் சேர்ந்தே தொலைந்து போய்விட்டதே என்பதை நினைக்க நினைக்க கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது.

இறந்துபோன தொழிலாளர்கள், உதவி இயக்குநர்களின் குடும்பத்திற்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பைத் தாங்கும் பலத்தை இறைவன் தர வேண்டிக் கொள்கிறேன். இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் நலமுடன் வீடு திரும்ப அந்த ஆண்டவன் துணை நிற்கட்டும்.

இனியொரு போதும் இப்படியொரு இழப்பு வேண்டாம். தொழிலாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்குமான பாதுகாப்பை இன்னும் கவனமாக கையாள வேண்டும் என்பதை அமைப்புகள் உறுதிசெய்ய வேண்டும்.

பணமோ, வார்த்தைகளோ உயிரிழப்பை ஈடுசெய்துவிட முடியாது. அதனால் பணியின் போது ஒவ்வொருவரும் தங்கள் உயிரின் மீது கவனம் வைத்து பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு சிம்பு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

STR aka Simbu emotional statement about Indian 2 accident

இந்தியன் 2 சூட்டிங் விபத்து… 3 பேர் மரணம்; மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் இந்தியன் 2 சூட்டிங்கில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் கமல் தரப்பில் தலா ரூ.1 கோடி நிதியுதவியும், லைகா நிறுவனம் சார்பில் 2 கோடி நிதியுதவியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்து இருக்கிறார்.

Indian 2 Accident case and latest news

More Articles
Follows