நடிகை தீக்‌ஷிதாவை மணக்கும் இசையமைப்பாளர் தரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போடா போடி, நாய்கள் ஜாக்கிரதை, பிஸ்தா உள்ளிட்ட 25 படங்களுக்கு இசையமைத்தவர் தரண்.

இவர் நடிகையும் ஆடை வடிவமைப்பாளருமான தீக்‌ஷிதாவை திருமணம் செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

நகர்வலம், ஆகம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தீக்‌ஷிதா என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் திருமணம் செப்டம்பர் 15ஆம் தேதியும் திருமண வரவேற்பு செப்டம்பர் 16ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

Music Director DharanKumar wedlock with Dheekshita on 15th September 2017

இது என் இந்தியா அல்ல… ஆஸ்கர் நாயகன் ஏஆர்.ரஹ்மான் ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மைக்காலமாக அதிகளவில் நடக்கும் அராஜகம், ஊழல் மற்றும் அரசியல் நிகழ்வுகளை பார்த்தால் எந்தவொரு மனிதனும் நிச்சயம் கொதித்து எழுவான்.

இதுகுறித்து பிரபலங்களிடம் கேட்கும்போது அவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒன் ஹார்ட் படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் இசையமைப்பாளர் ஏஆர். ரஹ்மான் கலந்துக் கொண்டுள்ளார்.

அப்போது அவரிடம் பெங்களுர் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளிக்கும்போது… அது மிகவும் வருத்தம் அளிக்க கூடிய செய்தி. இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியாவில் நடக்கக்கூடாது.

இது என்னுடைய இந்தியா அல்ல. நான் பாசிட்டிவ்வான பொறுப்பான இந்தியாவை எதிர்பார்க்கிறேன் என ஆதங்கத்துடன் தன் கருத்தை தெரிவித்துள்ளார்” இந்த ஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மான்.

I expect Positive and Responsible India says AR Rahman

சூர்யா-சுதா இணையும் படத்தின் இசையமைப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கிவரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இப்படத்தை ஒப்புக் கொள்ளும் சமயத்தில் அடுத்து எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கவும் ஒப்புக் கொண்டார்.

இந்நிலையில் இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார் சூர்யா என கூறப்பட்டு வருகிறது.

இப்படத்திற்கு விக்ரம் வேதா பட இசையமைப்பாளர் சிஎஸ். ஷாம் இசையமைப்பார் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

செல்வராகவன் படத்திற்கு பிறகா? அல்லது முன்பே சுதா இயக்கத்தில் சூர்யா நடிப்பாரா? என்ற விவரங்கள் தெரியவில்லை.

CS Sam will be composing music for Suriya Sudha combo movie

அனிதா குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிதியுதவி அளித்த விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீட் தேர்வு பிரச்சினையால் +2ல் நல்ல மதிப்பெண் எடுத்தும் மருத்துவ நுழைவுத் தேர்வில் தோல்வியை தழுவிய அனிதா தற்கொலை செய்துக் கொண்டார்.

இச்சம்பவம் கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, பல போராட்டங்களை உருவாகியுள்ளது.

ரஜினி, கமல், தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் தங்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.

ஆனால் நடிகர் ஜி.வி.பிரகாஷ் முதல் நபராக, அனிதா தற்கொலை செய்த அன்றே அவரது குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லியிருந்தார்.

இந்நிலையில் விஜய் அவர்கள் அனிதா வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ஒரு லட்சம் ரூபாயை அவரது தந்தையிடம் கொடுத்துள்ளார்.

மேலும் எந்த விதமான உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். செய்து தருகிறேன் என அனிதாவின் தந்தையிடம் கூறினாராம்.

இதனால் தளபதியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Actor Vijay visits Anitha home and consoled her father

நதிகளை மீட்போம்; சத்குருவின் திட்டத்திற்கு ரஜினி வாய்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபலமான சத்குரு அவர்கள் நதிகளை மீட்போம் என்ற திட்டத்தை தொடங்கி அதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

அவரின் இந்த திட்டத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் ஆதரவை ஒரு வீடியோ பதிவின் மூலம் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது…

ரத்த நாளங்கள் இல்லை என்றால் உடம்பு இயங்காது. நதிகள் பூமியின் ரத்த நாளங்கள். அதை பாதுகாக்க வேண்டியது நம் எல்லோரின் கடமை.

இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளை ஜீவநதியாக்க நதிகள் மீட்பு இயக்கத்தை தொடங்கி இருக்கும் சத்குரு அவர்களின் முயற்சி வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

நீங்களும் உங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்றால் 80009 80009 என்ற நம்பருக்கு மிஸ்டு கால் கொடுங்கள்.

Rajinis support and given his voice for Sathgurus Rally for Rivers

முதன்முறையாக மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கவுள்ள படத்தில் விஜய்சேதுபதி, அர்விந்த்சாமி, துல்கர் சல்மான், பகத்பாசில் உள்ளிட்டோர் நாயகர்களாக நடிக்கவுள்ளனர்.

இதில் ஜோதிகா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இதில் உள்ள முக்கிய கேரக்டரில் சிம்பு நடிக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் என கூறப்படுகிறது.

இதற்கு முன்பே மன்மதன், சரவணன் ஆகிய படங்களில் சிம்பு, ஜோதிகா இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Its official Simbu Vijay Sethupathi Jothika on board for Mani Ratnams next

More Articles
Follows