சினி மியூசிசியன்ஸ் யூனியன் தேர்தலில் தலைவராக தினா தேர்வு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை சினி மியூசிசியன்ஸ் தேர்தல் நடை பெறுவது வழக்கம், அதன்படி நேற்று சென்னை வடபழனியில் அவர்களது யூனியனில் தேர்தல் நடைப்பெற்றது.

தலைவர் பதவிக்கு கல்யாண சுந்தரம் மற்றும் தினா இருவரும் போட்டியிட்டனர்.

அதில் அதிக வாக்குகள் பெற்று இசையமைப்பாளர் தினா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செயலாளர் பதவிக்கு சாரங்கபாணி – P G வெங்கடேஷ் இருவரும் போட்டிதிட்டதில் சாரங்கபாணி வெற்றி பெற்றார்.

குருநாதன்- ரங்கராஜன் இருவரும் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டதில் குருநாதன் வெற்றி பெற்றார்.

உப தலைவர்களாக மகேஷ், பாலேஷ், கோபிநாத்சேட், வீரராகவன்
இனை செயலாளர்களாக P.செல்வராஜ் P.V. ரமணன், R.செல்வராஜ் P.பாஸ்கர், ஜோனாபக்தகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதே நேரத்தில் சினி மியூசிசியன்ஸ் யூனியனின் அறக்கட்டளைக்கு நடந்த தேர்தலில் டிரஸ்டிக்கு போட்டியிட்ட ஐந்து பேரில் இசையமைப்பாளர் S.A.ராஜ்குமார், தினா, குருநாதன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களின் பதவியேற்பு விழா வரும் 27ம் தேதி அன்று சென்னையில் நடக்கிறது.

Music composer Dheena won in Cine Musicians Association election

செம போத ஆகாதே படம் ஜூன் 14க்கு தள்ளிப் போக இதான் காரணம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அதர்வா நடித்து, தயாரித்துள்ள செமபோத ஆகாதே வருகிற மே 25ந் தேதி வெளிவருதாக இருந்தது.

அதற்கான விளம்பரமும் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அந்த தேதியில் வெளியிட தயாரிப்பாளர் சங்கம் அனுமதி தரவில்லை.

இதனால் பட வெளியீடு ஜுன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள விளக்கம் வருமாறு:

அதர்வா, தான் தயாரித்துள்ள செமபோத ஆகாதே படத்தை 25ந் தேதி வெளியிட விரும்பினார். தயாரிப்பாளர் சங்கம் அமைத்துள்ள பட வெளியீட்டு குழு, மாதத்தில் ஒரு வாரம் சிறிய படங்கள் மட்டுமே வெளியிடுவது என்று முடிவு செய்துள்ளது.

மே 11ந் தேதி வெளிவர வேண்டிய பாஸ்கர் ஒரு ராஸ்கல் 17ந் தேதி வெளிவந்ததால், 18ந் தேதி வெளிவருவதாக இருந்த செமபோத ஆகாதே படத்தை 25ந் தேதிக்கு தள்ளி வைத்தோம்.

ஆனால் 25ந் தேதி செம, பொட்டு, ஒரு குப்பையின் கதை, திருப்பதிசாமி குடும்பம், காலக்கூத்து, கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா, பேய் இருக்காக இல்லியா, கள்ளச்சிரிப்பழகி போன்ற சிறிய படங்கள் வெளிவருகிறது.

அன்று செம போத ஆகாதே வெளிவந்தால் இந்த படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காது, என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை அதர்வாவிடம் தெரிவித்தபோது தனது படத்தை ஜூன் 14ந் தேதி வெளியிட்டுக் கொள்வதாக அவரே பெருந்தன்மையுடன் உறுதியளித்தார்.

என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவை மாற்ற முயற்சித்தவர் பாலகுமாரன்; குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சில தினங்களுக்கு பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்.

அவரின் மறைவுக்கு ரஜினி, சிவகுமார், விவேக், லிங்குசாமி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

ஆனால் நடிகர் கமல், தன் அரசியல் சுற்றுப் பயணங்களில் பிசியாக இருந்த காரணத்தால் நேரில் செல்லவில்லை.

இந்நிலையில் இன்று பாலகுமாரன் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது……

சினிமாவிற்கு முன்பே பாலகுமாரனை எனக்கு தெரியும். எனவே அவர் சினிமாவிற்கு வர வேண்டும் என விரும்பினேன்.

அற்புதமான எழுத்தாளர் அவர். நவயுக சினிமாவை பற்றி நிறையே பேசியிருக்கிறோம்.

தமிழ் சினிமாவை எப்படி மாற்றலாம் என பல விஷயங்களை அவர் என்னிடம் பகிர்ந்து இருக்கிறார்.

நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு கதை எழுதினோம். நன்றாக வாழ்ந்து சென்றிருக்கிறார். தமிழுக்கு அவர் கொடுத்து சென்ற பரிசுக்கு நன்றி. என கூறினார் கமல்ஹாசன்.

பிரம்மாண்டமான அரங்கத்தில் கொரில்லா; விரைவில் டீசர் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘கொரில்லா’.

ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி நடிக்கிறார்.

டான் சாண்டி இயக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைக்கிறார்.

படத்தைப் பற்றி தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா பேசும் போது,..

‘இந்தியாவில் முதன்முதலாக சிம்பன்சி குரங்குடன் நடிகர்கள் இணைந்து நடிக்கும், இந்த கொரில்லா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் தாய்லாந்து நாட்டில் நடந்தது.

இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக நூற்றுக்கணக்கான திரைப்பட தொழிலாளர்களின் உழைப்பில் சென்னையின் புறநகரில் பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது.

அதில் ஜீவா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு மற்றும் ராதாரவி ஆகியோருடன் ஆயிரம் துணை நடிகர் நடிகைகள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

அந்த காட்சிகள் படமாக்கப்பட்ட உடன் ‘கொரில்லா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியிடப்படும்.’ என தெரிவித்தார்.

Breaking : ரஜினி-கமலை தாக்கி பேசவில்லை; நடிகர் விவேக் விளக்கம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விவேக் நாயகனாக நடித்துள்ள படம் எழுமின்.

வையம் மீடியாஸ் சார்பாக வி.பி.விஜி தயாரித்து இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் விஷால், சிம்பு, கார்த்தி ஆகியோர் கலந்துக் கொண்டு டிரைலரை வெளியிட்டனர்.

இந்த விழாவில் நடிகர் விவேக் பேசும்போது… பொதுவாக சில விஷயங்களை பேசினார்.

அப்போது அவரவர் வேலைகளை அவரவர் பார்த்தாலே போதும்; கொடிகள் அதிகமான நிலையில் சிலர் கொள்கைகளை தேடுகின்றனர்” –என்று பேசினார்.

இதனை நியூஸ் 7 சேனல், அவர் ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசினார் என்ற செய்தியை வெளியிட்டது.

இந்த விழா முடிந்தவுடன் தன் ட்விட்டர் பக்கத்தில் நான் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

Vivekh actor‏Verified account @Actor_Vivek 7m7 minutes ago
Vivekh actor Retweeted News7 Tamil
யாரையும் நான் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நான் அரசியலிலும் இல்லை. ஊடகங்களுக்கு பணிவோடு சொல்லிக் கொள்கிறேன். @rajinikanth @ikamalhaasan

Actor Vivek clarifies his speech at Ezhumin audio launch

ரஜினியை தாக்கி பேசினாரா விவேக்.?; நியூஸ்7 சேனலுக்கு ரசிகர்கள் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விவேக் மற்றும் தேவயாணி இணைந்து நடித்துள்ள படம் எழுமின்.

வையம் மீடியாஸ் சார்பாக வி.பி.விஜி தயாரித்து இப்படத்தை இயக்கியுள்ளார்.

கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சற்றுமுன் சென்னையில் நடைபெற்றது.

இந்த ட்ரைலரை நடிகர்கள் விஷால், சிம்பு, கார்த்தி உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

இந்த விழாவில் விவேக் பேசும்போது….

அவரவர் வேலைகளை அவரவர் பார்த்தாலே போதும். கொடிகள் அதிகமான நிலையில் சிலர் கொள்கைகளை தேடுகின்றனர். என்று பேசினார்.

உடனே நியூஸ் 7 சேனல்… அவர் ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசினார் என்ற செய்தியை வெளியிட்டது.

ரஜினியுடன் நெருங்கிய நட்பில் இருப்பவர் விவேக். அவரே சினிமாவுக்கு முன்பு வேறு ஒரு அரசு துறையில் வேலை பார்த்தவர். அவர் இப்போது சினிமாவுக்கு வரவில்லையா? அவருக்கு விருப்பம் இருந்தது அதனால் சினிமாவுக்கு வந்தார்.

அதுபோல் யார் விருப்பம் இருந்தாலும் எந்த துறைக்கு வேண்டுமானாலும் வரலாம்.

அதை விடுத்துவிட்டு, இவர்களாக ஒரு கற்பனை செய்து செய்தியை வெளியிட்டு டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றிக் கொள்கிறார்கள்.

இப்படி திரித்து செய்தியை வெளியிடும் நியூஸ் 7 சேனலுக்கு ரஜினி ரசிகர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Rajini fans condemns News7 channel about Vivek speech at Ezhumin event

More Articles
Follows