அஜித் பட டைட்டில்… ஆச்சரியமூட்டும் சூப்பர் ஸ்டார்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இருவேடங்களில் அஜித் நடித்து மாபெரும் ஹிட்டடித்த படம் வில்லன்.

தற்போது இதே பெயரில் உருவாகவுள்ள மலையாள படத்தில் மோகன்லால் மற்றும் விஷால் நடிக்கின்றனர் என்பதை பார்த்தோம்.

இப்படத்தை உன்னி கிருஷ்ணன் விறுவிறுப்பாக இயக்கி வருகிறார்.

இப்படத்தின் சூட்டிங் சமயத்தில் தன் நீண்ட கால ஆசையை நிறைவேற்றி இருக்கிறாராம் மோகன்லால்.

இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல், சைக்கிளிலில் பயணம் செய்ய வேண்டும் என்பதுதான் அந்த ஆசையாம்.

அதன்படி இவர் இரவு நேரத்தில் செல்ல, அதை படம்பிடித்த சிலர் இணையங்களில் பதிவேற்றி விட்டனர்.

தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் அட… இப்படியும் ஒரு சூப்பர் ஸ்டாரா..? என்று வியந்து வருகின்றனர்.

பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரனுக்கு ரஜினி ஆதரவு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததையொட்டி அவர் வென்ற ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் பாஜக சார்பாக பிரபல இசையமைப்பாளருமான இயக்குனருமான கங்கை அமரன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் இன்று சற்று முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

பாஜக வெகுநாட்களாக ரஜினியின் ஆதரவை பெற முயற்சித்து வருகிறது.

இதனால் இந்த சந்திப்பு தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது.

ரஜினியின் 2.0 படத்தின் பாடல் பற்றிய தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா நிறுவனத்திற்காக ஷங்கர் இயக்கி வரும் 2.0 படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் உள்ள ஒரு இறுதி பாடலை ஹைதராபாத்தில் படமாக்கவிருக்கிறார்களாம்.

இதற்காக செட் போடும் பணிகளும் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தில் ரஜினிகாந்த்துடன் எமி ஜாக்சன், அக்சய்குமார் உள்ளிட்டோர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

ரசிகர்களின் கவலையை போக்க தனுஷின் ட்ரைலர் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மதுரையைச் சேர்ந்த தம்பதியர் தனுஷை தங்கள் மகன் என வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இது தொடர்பாக வந்த மருத்துவ அறிக்கையில், தனுஷ் உடலில் உள்ள அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் இறுதி தீர்ப்பு குறித்து ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

இந்நிலையில் தனுஷ் முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள பவர் பாண்டி படத்தின் ட்ரைலரை ஓரிரு நாட்களில் வெளியிட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Dhanush Power Paandi trailer release updates

சினிமா உனக்கு தேவையா..? கார்த்தியிடம் கேட்ட நண்பர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் தயாரித்து இயக்கியுள்ள காற்று வெளியிடை படத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஜோடியாக நடித்துள்ளனர்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சூர்யா தன் தம்பி கார்த்தியை வாழ்த்தினார்.

இவ்விழாவில் கார்த்தி பேசும்போது…

நான் வெளிநாட்டில்தான் படித்தேன். படிப்பு முடிந்த உடன் சினிமாவில் உதவி இயக்குனராக சேர நினைத்தேன்.

இதனை என் நண்பர்களிடம் சொன்னதும், ’உனக்கு ஏன்டா சினிமா? என்று என் நண்பர்கள் கேட்டனர்.

நான் மணிரத்னம் சாரிடம் அசிஸ்டெண்ட் இயக்குனராக சேர வேண்டும் என்று கேட்டதுமே அவர் ஓகே சொல்லிவிட்டார்.

பின்னர் அவரே நீ நடிக்க போய்விடு என்று சொல்லிவிட்டார்.

நான் வேலையில் சின்சியராக உள்ளதற்கு அவர்தான் காரணம்.

இந்த படத்தில் நடிக்க மீசையை எடுத்த ஸ்டோரி பற்றி ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு இருக்கிறது’ என்றார் கார்த்தி.

My friends adviced me not to enter in cinema says Karthi

‘விஜய் 61’ சீக்ரெட்ஸை உடைத்த காஜல் அகர்வால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகும் 61வது படத்தை இயக்கி வருகிறார் அட்லி.

இதில் நாயகிகளாக சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் நடித்து வருகின்றனர்.

தற்போது விஜய்யின் கிராமத்து கெட்டப் காட்சிகளை இயக்கி வருகிறார் அட்லி.

இதில் நித்யா மற்றும் எஸ்.ஜே.சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்.

இந்நிலையில் தன் கேரக்டர் குறித்து காஜல் அகர்வால் கூறியுள்ளதாவது…

இப்படம் ஒரு சமூகம் சார்ந்த பிரச்சினையை சொல்லும்.

இதில் நானும் விஜய் சாரும் தொழில் ரீதியாக சந்திப்பதாகவும் அதனை தொடர்ந்து எங்களுக்கான காட்சிகள் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

More Articles
Follows