10 நாட்கள் ஆகியும் ஒரு நாளைக்கு 7 காட்சிகள்; இதாண்டா மெர்சல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் கடந்த அக், 18ல் தீபாவளியன்று வெளியானது.

இப்படம் வெளியாகி இன்றுடன் 10 நாட்களை கடந்துள்ளது.

படத்திற்கு கிடைத்த பாஜக.வின் புரோமோசனால் பட்டி தொட்டிங்யெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது.

இந்நிலையில் அக். 28 மற்றும் அக். 29 ஆகிய தேதிகளில் ஒரு நாளைக்கு 7 காட்சிகளை திரையிட உள்ளதாக சென்னையைச் சேர்ந்த வெற்றி தியேட்டர்ஸ் நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் ஒரு படம் ரிலீஸாகி 3 அல்லது 4 நாட்களுக்கு மட்டுமே 5 காட்சிகள் திரையிடப்படும்.

ஆனால் முதன்முறையாக 10 நாட்களை கடந்த பின்னும் 7 காட்சிகள் திரையிடப்படுவது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.

இது விஜய் ரசிகர்களை பெருமையடைய செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Rakesh Gowthaman‏ @VettriTheatres 2m2 minutes ago
#Mersal will have 7 shows this Sat & Sun . Book 8am Spl Morning Show for rear seatings in #Vettri ….

கமல் மீது வழக்குப்பதிய சட்ட நிபுணர்களுடன் போலீஸ் ஆலோசனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டெங்கு காய்ச்சலுக்கு வழங்கப்படும் நிலவேம்பு குடிநீரால் மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதனையடுத்து, ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை, நிலவேம்பை விநியோகம் செய்ய வேண்டாம் என தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் கமல்.

எனவே, நிலவேம்பு கசாயம் குறித்து கமல் தவறான தகவலை பரப்புவதால், கமல் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்காததால், சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு விசாரணைக்கு வரவே நிலவேம்பு விவகாரத்தில் முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்குப்பதியலாம் என நீதிமன்றம் கூறியிருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அது தொடர்பான செய்தியை நம் தளத்தில் பதிவிட்டு இருந்தோம்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதியலாமா? என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் காவல்துறை ஆலோசனை செய்துவருவதாக செய்திகள் வந்துள்ளன.

எனவே விரைவில் கமல் மீது வழக்கு பதியலாம் என கூறப்படுகிறது.

ஜிஎஸ்டி சர்ச்சை; விஜய்யின் மெர்சல் தெலுங்கு வெர்சன் ரிலீஸ் என்னாச்சு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த ‘மெர்சல்’ தெலுங்கு பதிப்பான ‘அடிரிந்தி’ திட்டமிட்டபடி தீபாவளியன்று வெளியாகவில்லை.

எனவே இன்று அக்டோபர் 27-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற வசனங்கள் இருப்பதால்தான் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் ‘அடிரிந்தி’ வசனங்கள் மியூட் செய்யப்பட்டு படம் வெளியாவதாக செய்திகள் வெளியாகின.

இதில் ஜிஎஸ்டி காட்சிகள் நீக்கப்படவில்லை என படத்தயாரிப்பு குழு மறுத்துள்ளது.

இதனால் ‘அடிரிந்தி” ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் உறுதியான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கேமரா நுழையாத காடுகளில் படமாக்கப்பட்ட மரகதக்காடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் என்கிற பெயரை ‘மரகதக்காடு ‘படம் பெற்றுள்ளது

இப்படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார்.

அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன்,ஜே.பி. மோகன்., ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர்.

இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன.

படம் பற்றி இயக்குநர் பேசும்போது…

” அழிந்துவரும் காடு பற்றிய பொறுப்புடன் எடுக்கப்பட்ட படம். காடு, காடு தரும் பொருட்கள் தான் வாழ்க்கை என்றிருக்கும் காணி இன மக்கள், அவர்கள் வாழ்க்கை பற்றிப் பேசுகிற படம் இது.

நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும் அநீதி பற்றி படம் பேசுகிறது. மரகதக்காடு முழுக்க முழுக்க நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் கதை.

படம் முழுவதும் தமிழக,கேரள அடர்ந்த வனப்பகுதியில் இதுவரை கேமரா நுழையாத இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின் போது செயற்கை ஒளி எதுவும் பயன்படுத்தப்படவில்லை, எந்த பிளாஸ்டிக் பொருளும் பயன்படுத்தப்படவில்லை.

படம் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்று கருத்தைச் சொல்லும். அதேபோல காடு எவ்வளவு அழகானது என்று ரசிக்கவும் நேசிக்கவும் வைக்கும்படி அழகுணர்வோடு எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமையும். ” என்கிறார்.

மேலும் கூறுகையில், தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் நாம் விரைவில் காற்றையும் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைவரும், சுவாசிக்கிற காற்று மாசுபடுதுனு கவலைபடுகிற நாம் காற்றே பாற்றாக்குறையாகப்போகுதுனு கவலை இல்லாம இருக்கோம்.

Save water ங்கிறது save air என மாறக்கூடாது என்பதைப் பற்றி மிக ஆழமாகக் கவலைப்பட்டிருக்கும் படம் ’மரகதக்காடு’ என்றார்.

நகரத்திலிருந்து கனிம வள ஆய்வுக்காகக் காட்டுப் பகுதிக்குச் செல்கிற நாயகன் அங்குள்ள ஒரு பெண்ணைச் சந்திக்கிறான். காதலிக்கிறான்.

அந்தக் காதல் அவனைப் புரட்டிப் போடுகிறது. வெறும் இனக்கவர்ச்சியில் மூழ்கி ஆண் – பெண் சேரும் ஒற்றைக் குறிக்கோளை அடைவது மட்டும்தானா காதலின் முடிவாக இருக்க வேண்டும் ?

அவனை மாற்றி பல திருப்பங்களுக்கு அழைத்துச் சென்று லட்சியத்தை சுமக்க வைத்து முழு மனிதனாக்குகிறது அவனது காதல்.

காட்டுப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் நம்பிக்கைகள் காதலுக்கு தடையாக இருக்கிறது. அவன் சந்தித்த திருப்பங்கள் என்ன? முடிவு என்ன? என்பதே கதை.

காதலுடன் காடு, மக்கள், அவர்களின் இயற்கை சார்ந்த நம்பிக்கைகள், அவர்களது வாழ்வியல், காட்டின் கனிம வளம் சுரண்டப்படுதல் போன்ற பலவும் கதையில் இருக்கும்.

ஒளிப்பதிவு – நட்சத்திர பிரகாஷ்
இசை – ஜெய் பிரகாஷ்
பாடல்கள் விவேகா, மீனாட்சி சுந்தரம், அருண் பாரதி
எடிட்டிங் – சாபு ஜோசப்
கலை – மார்டின் டைட்டஸ்
நடனம் – சாய் மதி
ஸ்டண்ட் – மைக்கேல்
பி.ஆர்.ஓ – A. ஜான்
என ஆர்வமுள்ள இளைஞர் கூட்டம் இணைந்து படக் குழுவாகியுள்ளது.

‘மரகதக்காடு ‘படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

Maragathakkaadu movie The Real Gem of Movie in Reel

ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது… உலகநாயகன் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகநாயகன் கமல்ஹாசன், பிரபல பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில் பேசும்போது…

ஆட்சியாளர்கள் செய்வார்கள் எனக் காத்திருந்தது போதும்.

இனி செயல் திட்டங்கள் தீட்ட ஒன்று கூடுவோம். இதை ஒரு தியாகமாக நினைத்து முன்வருபவர்கள் இப்போதே தயவுசெய்து ஒதுங்கிக் கொள்ளுங்கள்.

தமிழகத்துக்குச் செய்ய வேண்டிய கடமையாக நினைத்து வருபவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.

நம் இயக்கத்தார் மக்களுடனும் என்னுடனும் தொடர்புகொள்ள வசதியாக இருக்க சில ஏற்பாடுகள் நடக்கின்றன. அதைப் பற்றிய அறிவிப்பை வரும் நவம்பர் 7-ம் தேதி வெளியாகும்’ என தெரிவித்திருந்தார்.

இதனால், கமலின் நேரடி அரசியல் குறித்த அறிவிப்பை அவர் தன் பிறந்தநாளான நவம்பர் 7-ல் வெளியிடுவார் என பார்த்தோம்.

ஆனால் நவம்பர் 7-ல் புதிய கட்சி அறிவிப்பு இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது. நவம்பர் 7-ல் இயக்கத்தார் கூடுவது எம் பலவருட வழக்கம்.

பொது அறிவிப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம் தற்போது அரசியல் கட்சியை கமல் அறிவிக்க மாட்டார் என்பது தெளிவாகியுள்ளது. இன்னும் சில காத்திருக்கவும்.

Kamal clarifies that he will not announce his political party on his birthday

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது. நவம்பர்.7 இயக்கத்தார் கூடுவது எம் பலவருட வழக்கம்.பொது அறிவுப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும்

துபாயில் நடைபெற்ற 2.0 பட பிரஸ் மீட் ஹைலைட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர்-ரஜினி-ஏஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகியுள்ள 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை துபாய் நாட்டில் நடைபெறவுள்ளது.

எனவே இன்று அங்குள்ள பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது….

ஏஆர். ரஹ்மான் பேசியதாவது…

இந்த படத்தில் 3 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. நாளை இரண்டு பாடல்கள் மட்டுமே வெளியிட இருக்கிறோம்.

மீதமுள்ள ஒரு பாடலை விரைவில் வெளியிட உள்ளோம்.

எமிஜாக்சன் பேசியதாவது…

இதற்கு முன் செய்த படங்களை விட முற்றிலும் புதிய அனுபவமாக இப்படம் இருந்தது.

படத்தின் முதல் நாள் சூட்டிங் முதல் அனைத்தும் ஒரு சவாலாக இருந்தது.

ஷங்கர் பேசியதாவது…

இது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் கிடையாது. உலக ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு இந்திய திரைப்படம் இது.

இப்படத்தின் கரு கிடைக்கவே ஒரு வருடத்திற்கு மேலானது.

இதில் சொல்லப்பட்டுள்ள ஒரு கருத்திற்கு உலகம் தெரிந்த ஒரு நடிகர் தேவைப்பட்டார். அதான் அர்னால்ட்டை அனுகினோம்.

ஆனால் சில காரணங்களால் அவரை ஒப்பந்தம் செய்ய முடியவில்லை. அதன்பின்னர் அக்‌ஷய்குமாரிடம் பேசி ஒப்பந்தம் செய்தோம்.

ரஜினியுடன் பணி புரிந்த அனுபவம் பற்றி அக்‌ஷய்குமார் பேசியதாவது…

ரஜினிகாந்த் மிகவும் ஜாலியான மனிதர். ஒரு யதார்த்தமான மனிதரும் கூட. அவருடன் பழகிய அனுபவம் புதுமை.

வாழ்க்கையில் புகழின் உச்சியை தொட்ட பின்பும் இவ்வளவு எளிமையாக இருக்கிறார். அவர் புகழை தன் தலையில் ஏற்றிக் கொள்வதில்லை. எனவேதான் எல்லாருக்கும் பிடித்த வகையில் இருக்கிறார்.

இன்னும் அவரிடம் 5 படங்களாவது பணி புரிய வேண்டும். அவரிடம் நிறைய கற்றுக் கொள்ள இருக்கிறது. என்றார்.

ரஜினிகாந்த் பேசும்போது…

இந்திய சினிமாவே பெருமைப்பட கூடிய படம் 2.0 படம். இது உலக சினிமா ரசிகர்களை கவரக்கூடிய படம்“ என்றார்.

More Articles
Follows