ரூ.3 கோடி வித்தியாசத்தில் விவேகத்தை வீழ்த்திய மெர்சல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மைக் காலமாக தமிழ் சினிமாவின் வியாபாரம் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சக்கை போடு போட்டு வருகிறது.

இதில் ஆந்திராவுக்கு விற்பனை செய்யும் போது தெலுங்கு மொழிக்கு டப்பிங் செய்ய வேண்டும்.

மேலும் சில காட்சிகளை தெலுங்குக்கு ஏற்ப மாற்றம் செய்ய வேண்டும்.

ஆனால் கேரளாவில் நேரடி தமிழ் படமாக ரிலீஸ் செய்யலாம் என்பதால், கேரளாவை குறிவைத்தே சில தமிழ் படங்கள் தயாராகி வருகிறது.

இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள மெர்சல் மற்றும் விவேகம் படத்தின் கேரள உரிமை அதிக தொகைக்கு விற்பனையாகியுள்ளது என்பதை பார்த்தோம்.

விவேகம் படத்தின் கேரள உரிமையை புலிமுருகன் தயாரிப்பாளர் ரூ. 4.6 கோடிக்கு பெற்றிருக்கிறார்.

மெர்சல் படத்தின் கேரள உரிமையை குளோபல் யுனைட்டட் மீடியா நிறுவனம் ரூ. 7.5 கோடிக்கு பெற்றுள்ளதாம்.

கிட்டதட்ட ரூ. 3 கோடி இடைவெளியில் விவேகத்தை முந்தியுள்ளது மெர்சல் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்துடன் மகேஷ்பாபுவை இணைக்க ஏஆர் முருகதாஸ் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மகேஷ்பாபு நடித்துள்ள ஸ்டைபர் படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளது.

நாளை மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இதை வெளியிட இப்பட இயக்குனர் ஏஆர் முருகதாஸ் வெளியிட திட்டமிட்டுள்ளார்.

மேலும் இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு டிரைலர்களை வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

அதற்கு அடுத்த நாள் அஜித் நடித்துள்ள விவேகம் படம் ரிலீஸ் ஆகிறது.

எனவே விவேகம் படம் திரையிடப்படும் தியேட்டர்களில் ஸ்பைடர் பட டிரைலரை திரையிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

இது உறுதியானால் அஜித் ரசிகர்களுக்கு இரட்டிப்பு உற்சாகம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

அதற்கு முக்கிய காரணம் அஜித்தை தல என அழைக்க காரணமானவரே ஏஆர் முருகதாஸ்தான் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

AR Murugadoss plans to Join Spyder with Vivegam

விவேகம் சாங்ஸ் கேட்டீங்களா? அஜித்தோட பேவரைட் எது தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அனிருத் இசையமைப்பில் அஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் அனைத்துப்பாடல்களும் நேற்று இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியானது.

இந்தப்பாடல்கள் அனைவரையும் கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் பாப் பாடகரான யோகி.பி பாடிய ’சர்வைவா’ சிங்கிள் ட்ராக் முதலில் வெளியாகி வைரலானது.

இதுகுறித்து பாடகர் யோகி.பி கூறியதாவது…

‘ சர்வைவா பாடலை ரெகார்ட் செய்து முடித்து இயக்குநர் சிவாவுக்கு இ-மெயிலில் அனுப்பி வைத்தார் அனிருத்.
அதை அஜித்தும், சிவாவும் கேட்டுள்ளனர்.

பின்னர் அனிருத்துக்கு போன் செய்த அஜித், ‘இந்தப்பாடல் செம எனர்ஜிட்டிக்கா இருக்கு. இதான் என்னோட பேவரைட் சாங்” என்று பாராட்டியுள்ளார் என்று யோகி.பி தெரிவித்துள்ளார்.

Do you know in Vivegam songs which is Ajiths favorite

விஐபி2 ரிலீசில் திடீர் மாற்றம்; தனுஷ் ரசிகர்கள் அப்செட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட்டில் மட்டுமில்லாது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.

அதிலும் அமிதாப்புடன் நடித்த ஷமிதாப் படம் இவரை வட இந்தியா முழுக்க பிரபலமாக்கியது.

எனவே தனுஷ் நடித்துள்ள விஐபி2 படத்திற்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிலும் இதில் பிரபல நடிகை கஜோல் நடித்துள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாம்.

இந்நிலையில் விஐபி2 படத்தின் தமிழ் பதிப்பை மட்டும் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர்.

ஆனால் தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புக்ளை ஆக. 18ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் தனுஷ் ரசிகர்கள் கடும் அப்செட்டில் இருக்கிறார்களாம்.

VIP2 movie Telugu and Hindi version release updates

அஜித் வர ஒவ்வொரு சீனும் இடியாய் இருக்கும்… எடிட்டர் ரூபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் அஜித்குமார், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் அக்ஷராஹாசன், கருணாகரன் ஆகியோர் நடித்துள்ள விவேகம் படம் வருகிற ஆகஸ்ட் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இப்படம் குறித்து படத்தொகுப்பாளர் ரூபன் பேசுகையில்…

”’விவேகம்’ படம் முழுவது கைதட்டி கொண்டாடக்கூடிய, ஒரு உண்மையான, பிரம்மாண்டமான சர்வதேச உளவு படம்.

திரையில் அஜித் சார் தோன்றும் ஒவ்வொரு பிரேமும் பலத்த இடியை போல் மிக வலுவாக இருக்கும். அவரது அசுர உழைப்பை கண்டு வியந்தேன். அவ்வளவு சிறப்பாக அவர் செய்துள்ளார்.

அவர் இப்படத்தில் செய்திருக்கும் ஆபத்தான சண்டை காட்சிகள் பார்ப்பவர்கள் வாயை பிளந்து பார்க்கும் வகையில் இருக்கின்றது.

இப்படத்தின் ‘தலை விடுதலை’ பாட்டின் காட்சியமைப்பு ‘ஆலுமா டோலுமா’ பாடலை விட பத்து மடங்கு ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். அஜித் சாரின் ரசிகர்களுக்கும் , பொதுவான சினிமா ரசிகர்களுக்கும் ‘விவேகம்’ ஒரு மாபெரும் கொண்டாட்டமாக நிச்சயம் இருக்கும்.

இயக்குனர் சிவா சாருடன் பணிபுரிவது அற்புதமான அனுபவம். எங்கள் இருவருடைய சிந்தனை போக்கில் நிறைய ஒற்றுமை இருப்பதால் எனது பனியை மேலும் திறம்பட செய்யமுடிகிறது. அ

வர் என் மேல் வைக்கும் நம்பிக்கை எனக்கு மேலும் உழைக்க தூண்டுதலாக இருக்கின்றது. இது ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் படமாக இருந்தாலும் இதில் வரும் கணவன் மனைவி காட்சிகள் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளது.

‘விவேகம்’ ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.’ என்கிறார் ரூபன்.

Ajith scenes will be like a Thunder says Vivegam editor Ruben

பெண்களை புரிந்துக்கொள்ள ஆண்கள் படும் அவஸ்தையே தரமணி.. – ராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலம் வாய்ந்த பெண் கதாபாத்திரத்துடன் தைரியமாக, வெளிப்படையாக பேசும் படங்களும் என்றுமே வரவேற்பை பெறும்.

ராம் இயக்கத்தில், JSK பிலிம் கார்பொரேஷன்ஸ் தயாரிப்பில், ஆண்ட்ரியா மற்றும் வசந்த் ரவியின் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் ‘தரமணி’ இது போன்ற தற்கால ஆண் பெண் உறவு முறை, காதல் பற்றியும் இப்பொழுதுள்ள கலாச்சாரம் பற்றியும் பேசும் படமாகும்.

இது குறித்து இயக்குனர் ராம் பேசுகையில்…

”அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவன் நான். எனது சுற்றுப்புறத்தில் வசிக்கும் இளைஞர்கள், அவர்களது வாழ்க்கை முறை மற்றும் அவர்களது கலாச்சாரம் ஆகியவற்றில் நான் கண்ட விஷயங்களின் எனது புரிதலிலும் கண்ணோட்டத்திலும் உருவாகிய கதை தான் ‘தரமணி’.

உலகமயமாக்கத்தால் தமிழ் பெண்களுக்கு மேலும் சுதந்திரமும் தன்னம்பிக்கையும் கிடைத்திருக்கிறது.

நவீன சிந்தனைகளுக்கும் பழமைவாத சிந்தனைகளுக்கும் இடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் தற்போதய ஆண் வர்கம் தங்கள் காதலி/மனைவியை புரிந்துகொள்வதில் சந்திக்கும் சிரமங்கள் பற்றி ‘தரமணி’ படத்தில் பேசியுள்ளேன்.

இது தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் வாழ்க்கை முறையை பற்றிய படம் மட்டுமே என்பது உண்மையல்ல.

‘தரமணி’ பல கலாச்சாரம், பல்வேறு பின்னையிலிருந்து சென்னைக்கு வந்து வாழும் இளைஞர்கள் பற்றிய பொதுவான படம். எல்லா இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக ‘தரமணி’ இருக்கும்” என்றார் இயக்குநர் ராம்.

Taramani movie talk about Apartment life and current culture says Ram

More Articles
Follows