தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் ‘மார்க் ஆண்டனி’.
இதில் நாயகியாக ரித்து வர்மா நடிக்க, வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க, தெலுங்கு நடிகர் சுனில் வர்மா மற்றும் நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யா, கடந்த வாரம் தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பை முடித்திருந்தார்.
தற்போது இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடியும் தருவாயில் உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்து இருந்தார்.
இப்படத்தை மினி ஸ்டுடியோ சார்பாக வினோத் பிரம்மாண்டாக தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் ‘மார்க் ஆண்டனி’ டீசர் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
அதில் செம மாஸாக ஸ்டைலாக எஸ்.ஜே. சூர்யா போஸ் கொடுத்துள்ளார்.
MarkAntony Teaser release update by sj suryah
