ஜீன் மாதத்திற்குள் 25 படங்கள் ரிலீஸ்; கலை கட்டும் தமிழ் சினிமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 19ம் தேதி வரை சுமார் 50 நாட்களாக எந்த தமிழ்ப் படமும் வெளியாகவில்லை.

ஏப்ரல் 20ம் தேதிதான் ‘மெர்க்குரி மற்றும் முந்தல்’ ஆகிய படங்கள் வெளியாகின.

தற்போது புதிய விதிமுறைகளை விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ளது.

டங்களின் சென்சார் தேதியைப் பொறுத்தே புதிய படங்களுக்கான வெளியீட்டுத் தேதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஒவ்வொரு தயாரிப்பாளரிடமிருந்தும் அவர்களது படங்களை வெளியிட 3 தேதிகளைக் குறிப்பிட சொல்லுமாறு கேட்டு இருக்கிறார்களாம்.

அதற்காக அமைக்கப்பட்ட ஒரு குழு அந்தப் படங்களைப் பரிசீலித்து ஒன்றுகொன்று அதிகமான மோதல் இல்லாதபடி அனைத்துப் படங்களுக்கும் சரியான வெளியீட்டுத் தேதியை பிரித்துக் கொடுத்து வருகிறார்கள்.

அதன்படி இப்போதைக்கு ஜுன் மாதம் வரையிலான படங்களுக்கான தேதியை கொடுத்துவிட்டதா கூறப்படுகிறது.

மேலும் ஒரு வருடத்திற்கு உண்டான படங்களின் வெளியீட்டுத் தேதியை குறித்துக் கொடுக்க உள்ளார்களாம்.

அதன்படி, “பக்கா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், பாடம், தியா ஆகிய நான்கு படங்கள் ஏப்ரல் 27ல் இந்த வாரம் வெளியாகிறது.

இதனையடுத்து ஜீன் 7ல் காலா ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலா ரிலீஸை அறிவித்துவிட்டதால் மற்ற படங்களும் விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளனர்.

ஜீன் மாதத்திற்குள் கீழே உள்ள படங்கள் வெளியாகவுள்ளன.

விஸ்வரூபம் 2, டிக் டிக் டிக், இரவுக்கு ஆயிரம் கண்கள், இருட்டு அறையில் முரட்டு குத்து, ஒண்ணு போதும் நின்னு பேசும், செம போத ஆகாத, வல்லவனுக்கும் வல்லவன், மோகினி, கீ, கோலி சோடா 2, இரும்புத் திரை, காளி, கடைக்குட்டி சிங்கம், சர்வர் சுந்தரம், செம, ஆண்டனி, ஒரு குப்பைக் கதை, மிஸ்டர் சந்திரமௌலி ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.

ஜூன் 7ல் ரிலீஸ் ஏன்..? காலா போட்ட கர்நாடகா கணக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்துள்ள ‘காலா’ படம் சில வாரங்களுக்கு முன்பே சென்சார் செய்யப்பட்டுவிட்டது. ஏப்ரல் 27 அன்று படம் வெளியாகும் என தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்தார்.

ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நடத்திய ஸ்டிரைக்கால் அனைத்து பட வேலைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. எந்த புதியப்படங்களும் வெளியாகவில்லை.

வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து ‘காலா’ ரிலீஸை ஜூன் 7-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாக தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

ஜூன் 15-ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு அதற்கு ஒரு வாரம் முன்னதாகவே ‘காலா’ ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் காலாவின் ரிலீஸ் தேதியை சுமார் 45 நாட்கள் தள்ளிவைத்தது ஏன் என்பது குறித்து தகவல்கள் கசிந்துள்ளன.

அதாவது காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இதனால் கர்நாடகாவில் ரஜினி படத்தை ரிலீஸ் செய்யவிட மாட்டோம் என அங்குள்ள சில அமைப்புகள் தெரிவித்தன.

மே 12 அன்று நடைபெறும் கர்நாடகா சட்டசபை தேர்தலின் முடிவு மே 15 அன்று வெளியாகிவிடும்.

பின்னர் புதிய அரசு அமைப்பது, மற்ற நிலவரங்கள் இவை எல்லாம் நடந்து முடிவதற்குள் 2-3 வாரங்கள் ஆகிவிடும்.

அப்போது காலாவை ரிலீஸ் செய்தால் எங்கும் எந்த பிரச்சினையும் எழாது என்பதால்தான் இந்த ஏற்பாடு என சொல்லப்படுகிறது.

வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பாக வி.ராஜா தயாரித்திருக்கும் “ அருவா சண்ட “ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்காக கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய “ இவ சித்தூரு சிறுக்கி செக்ஸான கிறுக்கி முத்தாடு மீசை முறுக்கி..

இது சத்தான சரக்கு சர்வீசும் இருக்கு ஜி எஸ் டி இல்ல உனக்கு “

என்ற பட்டைய கெளப்பும் பாடலுக்கு பல லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு டான்ஸ் மாஸ்டர் தீனா நடன அமைப்பில் படமாக்கப்பட்டது.

“எம் பேரு மீனாகுமாரி” பாடல் புகழ் அனிதா இந்த பாடலை கிக் ஏற்றும் குரலில் பாடியிருக்கிறார்.

இந்தப் பாடலில் நடித்திருக்கும் மும்பை அழகி சுப்ரா கோஷிற்கு தமிழில் இதுதான் முதல் படம்.

அவர் தனது நளினமான நடன அசைவுகளில் ரசிகர்களை வியக்க வைக்கும் அளவிற்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

சிட்டி மட்டுமல்லாமல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கெளப்பும் பாடலாக பாடல் உருவாகி இருக்கிறது.

தரண் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்ய, சுரேஷ் கல்லேரி கலை அமைத்திருக்கிறார். ஸ்டண்ட்: தளபதி தினேஷ்.

ராஜா, மாளவிகா மேனன் நாயகன், நாயகியாக நடிக்க முக்கிய வேடங்களில் சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன் சௌந்தர்ராஜா,கஞ்சா கருப்பு, காதல் சுகுமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஆதிராஜன்

கபடி, கௌரவக் கொலை பின்னணியில் உருவாக்கப் பட்டிருக்கும் அருவாசண்ட படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மனசாட்சி உள்ளவர்களின் இதயங்களை உலுக்கி எடுக்கும் என்பது நிச்சயம் என்கிறார் இயக்குனர் ஆதிராஜன்.

எப்ப வருவேன்.? எப்டீ வருவேன்.? பன்ச் டயலாக்கை நிஜத்தில் நடத்திய ரஜினி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று இரவு அமெரிக்கா செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ரஜினிகாந்த்.
அப்போது கட்சி தொடங்குவது எப்போது என செய்தியாளர்கள் கேட்டனர்.
நான் கட்சி தொடங்குவது உறுதி. ஆனால், இன்னும் நாள் உறுதியாகவில்லை.
நிச்சயம் உங்களிடம் (மீடியாவிடம்) தெரிவிப்பேன்.” என்றார்.
முத்து படத்தில் ஒரு காட்சியில்.. நான் எப்போ வருவேன் எப்டீ வருவேன் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன் என செந்திலிடம் ரஜினி சொல்வார்.
அது அப்போதே அரசியல் சார்ந்த டயலாக் தான் என கூறப்பட்டது.
தற்போது அதை நிஜத்திலும் அரங்கேற்றியுள்ளார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

கமலின் புதிய முயற்சி; சென்னை சிட்டியில் கிராம சபை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஊராட்சிகளில் நடத்தப்படும், கிராம சபை கூட்டம் போல், சென்னையில், மக்கள் நீதி மைய தலைவரும், நடிகருமான கமல், மாதிரி கிராம சபை கூட்டத்தை அறிவித்துள்ளார்.

‘கிராம சபை கூட்டம்’ என்பது, ஊராட்சி மன்ற தலைவரால் நடத்தப்படும்.
இதில், நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மை, வளர்ச்சி திட்டங்கள், பொதுமக்களை ஒருங்கிணைத்தல் போன்றவை குறித்து, விவாதிக்கப்படும்.
இதே பாணியில், சென்னை, ஆழ்வார்பேட்டையில், மாதிரி கிராம சபைக் கூட்டத்தை, நடிகர் கமல் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து, கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பஞ்சாயத்து ராஜ் என்ற அமைப்பு, 25 ஆண்டுகளுக்கு முன், ஏப்., 24ல் நிறுவப்பட்டது; நகரபாலிகா முறையும் நடைமுறைக்கு வந்தது.
‘இதை கொண்டாடும் வகையில், மாதிரி கிராம சபை நடத்தப்படுகிறது’ என, தெரிவித்துள்ளார்.

கட்சி தொடக்கம்-எஸ்வி.சேகர்-நிர்மலாதேவி-போலீஸ் அதிகாரம்; ரஜினியின் அதிரடி பதில்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் உடல் நிலையை கருத்தில் கொண்டு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்.

10 நாட்கள் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெறவுள்ளார்.

இதனிடையில் விரைவில் உதயமாகவுள்ள அரசியல் கட்சி சம்பந்தமாகவும் மொபைல் ‘ஆப்’ தொழில் நுட்பம் சார்ந்த பணிகளையும் பார்வையிட உள்ளாராம்.

இந்நிலையில் ரஜினிகாந்த் அமெரிக்கா பறக்கும் முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்…

தான் அரசியலுக்கு வருவது உறுதி. அரசியல் கட்சி தொடங்கும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும். அரசியலில் விமர்சனம் என்பதை தவிர்க்க முடியாதது.

சீருடையில் உள்ள காவலர்களை தாக்குவது மன்னிக்க முடியாத குற்றம். அதே நேரம் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக போலீஸ் வரம்பு மீறி செயல்படக் கூடாது.

பெண் பத்திரிகையாளர்களை எஸ்வி சேகர் இழிவாக விமர்சித்தது மன்னிக்க முடியாத குற்றம். அவர் தெரிந்து செய்திருந்தாலும் தெரியாமல் செய்திருந்தாலும் அது மன்னிக்க முடியாது.

படிக்கும் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலாதேவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

ஆடிட்டர் குருமூர்த்தி எனது நீண்டகால நண்பர். அவரை சந்திப்பில் வழக்கமானது. அதில் விசேஷம் எதுவும் இல்லை” என்று பேசினார் ரஜினி.

Rajini talks about Police attack SVe Shekar Nirmala Devi Political Party Announcement

More Articles
Follows