*கடமான் பாறை* படத்துக்காக ஆதிவாசி சூரப்பனாக மன்சூரலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “கடமான்பாறை“ என்று பெயரிட்டுள்ளார்.

இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார்.

மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் மன்சூரலிகானிடம் கேட்டோம்…

கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் இப்போது வழிமாறி போகிறார்கள். அப்பா அம்மா, ஆசிரியர் என யார் சொன்னாலும் எதையும் அவர்கள் பொருட்படுத்துவது கிடையாது.

அப்படி இருக்கும் ஒரு காதல் ஜோடி கல்லூரியை கட்டடித்துவிட்டு. ஒரு மலைப்பகுதிக்கு செல்கிறார்கள். அந்த கங்குவாரெட்டி மலை, கஞ்சாமலையை தன் வசம் வைத்திருக்கும் ஆதிவாசி சூரப்பன் மன்சூரலிகானிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.

அவனிடம் பாரஸ்ட் ரேஞ்சர் கூட மாட்டிக்கொண்டால் உயிரோடு திரும்ப முடியாது அந்த மலையில் இருந்து செம்மரக்கட்டை கடத்த முடியாது, கனிமவளங்களை திருட முடியாது.

காட்டிலிருந்து எந்த பொருளும் வெளியே விடாமல் அந்த காட்டின் பாதுகாவலனாக இருக்கும் அவனிடம் சிக்கிய ஜோடி தப்பிதார்களா இல்லையா என்பதுதான் இந்த கடமான்பாறை படத்தின் திரைக்கதை. திகிலூட்டும் காட்சிகள் மக்களை ரசிக்கவைக்கும்.

படப்பிடிப்பு ஆந்திரா மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், பாண்டிசேரி, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

Mansoor AliKhan movie Kadamaan Paarai news updates

ஒளிப்பதிவு – மகேஷ்.T
இசை – ரவிவர்மா பாடல்கள் – விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், ரவிவர்மா, மன்சூரலிகான்,
கலை – ஜெயகுமார்
நடனம் – டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், சந்துரு, சிவா
ஸ்டன்ட் – ராக்கி ராஜேஷ்,
தயாரிப்பு நிர்வாகம் – J.அன்வர்
ஒருங்கிணைப்பு – ஜே,ஜெயகுமார் ஆக்கம், இயக்கம் – மன்சூரலிகான்.

 

*அகோரி* ஆக மாறிய சாயாஜி ஷிண்டே ஆகஸ்ட்டில் வருகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘என்கிற படம் உருவாகி வருகிறது. ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி பாலா’ மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இப்படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குநர் D.S. ராஜ்குமார் .

சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே கதை, இது ஒரு முழுமையான எண்டர்டெய்ன்ட் படம் . ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினருக்குமான வணிக அம்சங்கள் படத்தில் இருக்கும்.

சர்வதேச அளவில் புகழ் பெற்ற சாயாஜி ஷிண்டே இதில் அகோரியாக நடிக்கிறார். அவர் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடிப்பவர், படத்தின் கதை தன் தோற்றம் எல்லாம் கேட்டதும் உடனே நடிக்கச் சம்மதித்து இருக்கிறார். மிகவும் ஈடுபாடு காட்டி நடித்து வருகிறார்.

படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னை பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான ஹரிதுவார் செட் அமைத்து 150 அகோரிகளுடன் நடித்த காட்சி படமாக்கப்பட்டது.

இப்படத்திற்காக கேரளா காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு 200 அகோரிகள் நடிக்கும் காட்சிகள் படமாகியுள்ளன.

படத்தில் இடம்பெறும் ஒரு மணி நேர கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை மிரளவைக்கும்படி இருக்கும்.

தெலுங்கில் ‘சஹா ‘படத்தின் மூலம் புகழ் பெற்ற சகுல்லா மதுபாபு தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். இவரது உயரம் 6.5 ” ஆகும்.

நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார், இவர் கர்நாடக மாநில அரசின் விருது பெற்றவர், இவர் 144 பட நாயகி.

மைம் கோபி, சித்து, டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி, கார்த்தி, கலக்கப்போவது யாரு சரத், டிசைனர் பவன், இவர்களுடன் கூத்துப்பட்டறை பயிற்சி பெற்ற புதிய கலைஞர்களும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு வசந்த். இவர் ஈகோ, கள்ளத்துப்பாக்கி படங்களின் ஒளிப்பதிவாளர். இசை அண்மையில் கேரளாவில் புகழ் பெற்று வரும் ஃபோர் மியூசிக்.

நான்கு இசையமைப்பாளர்களின் கூட்டணி இது., ஆர்ட் டைரக்டர் ஜெயச்சந்திரன், வசனத்தை தயாரிப்பாளர் ஆர்.பி பாலா எழுதியுள்ளார்.

அண்மையில் சென்னை எம் ஜி.ஆர் பிலிம் சிட்டியில் அகோரிகள் புடை சூழ படப்பிடிப்பில் கலந்து கொண்டார் நடிகர் சாயாஜி ஷிண்டே.

இப்படத்தில் நடிப்பது பற்றி அவர் பேசும் போது…

“தமிழில் பாரதி படம் எனக்கு அழுத்தமான அறிமுகம் கொடுத்தது. அதன் பிறகு குணச்சித்திரம், வில்லன், நகைச்சுவை என்று விதவிதமான பாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.

இந்தப் படத்தில் நடிக்கக் கேட்ட போது அவர்கள் சொன்ன கதை எனக்குப் பிடித்திருந்தது. இப்படத்தில் நான் ஓர் அகோரியாக அதாவது சிவனடியாராக நடிக்கிறேன்.

நான் அகோரியைச் சந்தித்து இருக்கிறேன். அவர்களிடம் ஆசியையும் பெற்று இருக்கிறேன். அப்படிப்பட்ட அகோரியாக நானே நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இப்பாத்திரமும் அதன் தோற்றமும் நடிப்பும் என் வாழ்வில் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட்டில் ‘அகோரி’ வெளியாகவுள்ளது.

Sayaji Shinde starring Aghori plans to release on August 2018

ராசு ரஞ்சித்தின் *தீதும் நன்றும்* படத்தை வெளியிடும் சிங்காரவேலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

N H.ஹரி சில்வர் ஸ்கிரின் சார்பில் H.சார்லஸ் இம்மானுவேல் தயாரித்துள்ள படம் ‘தீதும் நன்றும்’. அழகிய தமிழ் வார்த்தைகளில் தமிழ்ப்படங்களுக்கு பெயர் வைப்பது அரிதாகிவிட்ட சூழலில் ‘தீதும் நன்றும்’ என அழகு தமிழ் டைட்டிலுடன் இயக்குனராக அறிமுகமாகிறார் ராசு ரஞ்சித்.

இவர் நாளைய இயக்குனர் குறும்பட போட்டியில் டைட்டில் வின்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றாட தேவைகளுக்காக சின்னச்சின்ன திருட்டுக்களில் ஈடுபடும் மூன்று நண்பர்கள் பற்றிய கதை தான் இந்தப்படம். ஒருவருக்கு நல்லது நிகழ்வதும் பாதிப்பு ஏற்படுவதும் அவரவர் செய்யும் செயல்களால் தான்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்கிற தமிழ் பொன்மொழியில் இருந்துதான் இந்தப்படத்தின் டைட்டிலையே தேர்ந்தெடுத்து வைத்துள்ளோம். இந்தப்படம் ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ளது.

தமிழ் கலாச்சாரம் சார்ந்த படம் தான் என்றாலும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை இந்தப்படம் கொடுக்கும் என்கிறார் இயக்குனர் ராசு ரஞ்சித்.

இந்தப்படத்தின் மூன்று கதாநாயகர்களில் ஒருவராகவும் நடித்துள்ளார் ராசு ரஞ்சித், மற்ற இரண்டு ஹீரோக்களாக சந்தீப் ராஜ், ஈசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில் சந்தீப் ராஜ் ஏற்கனவே தூங்காவனம் படத்தில் கமலுடன் நடித்தவர். கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்..

இவர் ‘8 தோட்டாக்கள்’ வெற்றிப்படம் மூலமாக ஏற்கனவே தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இவர் மூன்று நண்பர்களில் ஒருவரின் மனைவியாக படத்தின் மைய கதாபாத்திரமாக நடித்துள்ளார்.

இன்னொரு முக்கிய வேடத்தில் கேரளாவை சேர்ந்த லிஜிமோல் ஜோஸ் என்பவர் நடித்துள்ளார்.

அபர்ணாவை ஒப்பந்தம் செய்வதற்காக மலையாளத்தில் அவர் நடித்த படத்தை பார்த்தபோது அதில் இன்னொரு கேரக்டரில் நடித்திருந்த லிஜிமோலையும் இந்தப்படத்திற்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டார் இயக்குனர் ராசு ரஞ்சித்.

கவின்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ‘எங்கேயும் எப்போதும்’ புகழ் சி.சத்யா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்களாலும் பின்னணி இசையாலும் படத்திற்கு முதுகெலும்பாக அவர் இருப்பார் என்கிறார் இயக்குனர் ராசு ரஞ்சித்.

அதுமட்டுமல்ல இவர் அடையாறு திரைப்பட கல்லூரியில் எடிட்டிங் படித்தவர் என்பதால் இந்தப்படத்தின் படத்தொகுப்பையும் தானே கவனித்துள்ளார். சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

தற்போது இறுதிகட்ட பணிகளில் இருக்கும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.

படத்தை பார்த்து வியந்த விநியோகஸ்தர் சிங்காரவேலன் உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.

Theethum Nandrum movie will be released by Distributor Singaravelan

பேரிடர் காலத்தில் அவசர உதவிக்கு ஆளில்லா விமானம்; அசத்திய அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சில நடிகர்கள் சினிமாவில் நடிப்பு, இயக்கம், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்கள் எடுத்திருப்பார்கள்.

ஆனால் அஜித் சினிமாவில் நடிக்க மட்டுமே செய்வார். ஆனால் மற்ற நடிகர்கள் எவரும் செய்யாமதை நிஜத்தில் செய்து காட்டி வருபவர் அஜித்.

இவர் ஒரு கார் ரேசர், பைக் ரேசர் என்பது தெரிந்த விஷயம்தான்.

மேலும் இவர் பைலட் லைசன்சும் வைத்திருக்கிறார் என்பது தல ரசிகர்களுக்கு தெரிந்திருக்கலாம்.

அவரின் இந்த திறனை மாணவர்களுக்கு பயன்படுத்தும் விதமாக மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அவசரகாலங்களிலும், பேரிடர் நேரத்திலும் மருத்துவ உதவிசெய்வதற்கு பயன்படும் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தை தயாரிக்க முடிவு செய்தது.

இதனை முன்னிட்டு தக்‌ஷா டீம் எனும் பெயரில் புதிய மாணவர் குழுவை உருவாக்கினார்கள் அதில் அஜித் முக்கிய ஆலோசகராக இருந்தார்.

இதற்கு முக்கிய காரணம் இதுபோன்ற குட்டி விமானங்களை அஜித் ஏற்கெனவே உருவாக்கி இருக்கிறார் என்பதுதான்.

அஜித்தின் ஆலோசனையோடு உருவாக்கப்பட்ட அந்த ட்ரோன் இந்தியா முழுவதும் உள்ள 111 பொறியியல் கல்லூரிகளுக்கிடையே நடந்த போட்டியில் பல சாதனைகளை படைத்துள்ளது.

சமீபத்தில் நடந்த போட்டியில் இந்த தக்‌ஷா ட்ரோன் 6 மணி நேரம் 7 நிமிடம் வானத்தில் பறந்து உலகத்திலேயே அதிக நேரம் பறக்கக்கூடிய ட்ரோன் என சாதனை படைத்துள்ளது.

இதை பயன்படுத்தி மருத்துவ உதவிகளை மேற்கொள்ள முடியுமா என்று அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர்.

அஜித்தின் இந்த அறிவாற்றலை கண்டு அந்த மாணவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Tamil Actor Ajith drone made world record

ரஜினியுடன் நடிக்க விறுவிறுப்பாக படங்களை முடிக்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தலைவர் 165 என்று தற்காலிமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் ரஜினிகாந்துடன் நடிக்கவுள்ளார் விஜய்சேதுபதி.

இவர் முன்னணி ஹீரோவாக வலம் வந்தாலும் இப்படத்தில் இவர் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் முதல் கட்ட சூட்டிங்கை அண்மையில் டார்ஜிலிங்கில் முடித்தார் கார்த்திக் சுப்பராஜ்.

விரைவில் இதன் 2ஆம் கட்ட சூட்டிங்கை துவங்கவுள்ளார். இதுவும் பட இந்தியாவில் இருக்கும் எனத் தெரிகிறது.
அதில் விஜய்சேதுபதி கலந்துக் கொள்வார் என கூறப்படுகிறது.

ரஜினியுடன் முதன் முறையாக நடிக்கவுள்ளதால் அதில் எந்த வித பிரச்சினையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தன் கை வசம் உள்ள ஜீங்கா, 96, சீதக்காதி ஆகிய படங்களின் புரோமோசன் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு விறுவிறுப்பாக முடித்து வருகிறாராம்.

கடந்த இரண்டு நாட்களில் இந்த 3 பட செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

நேற்று ஜுங்கா பட பிரஸ் மீட் நடைபெற்றது. அத்துடன் 96 படத்தின் டீசரும் மாலை வெளியானது.
தற்போது சீதக்காதி படத்தின் மேக்கிங் வீடியோ ஜுலை 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர் 165 பட 3ஆம் கட்ட சூட்டிங்கை மதுரையில் நடத்தவுள்ளாராம் கார்த்திக் சுப்பராஜ்.

Vijay Sethupathi completing his movie promotion in hurry because of Rajini

வித்தியாச விஜய்சேதுபதியுடன் நடிக்க ஆசைப்படும் *காலா* நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்தின் காலா படத்தில் தாராவி பகுதி ஒரு மையக் கருவாக பயன்படுத்தப்பட்டு இருந்தது.

அதில் புயல் சாருமதி என்னும் போராளி வேடத்தில் நடித்தவர் இந்தி நடிகை அஞ்சலி பாட்டீல்.

இவரது அண்மை பேட்டியில்…

‘தமிழில் எந்த நடிகர்களோடு நடிக்க விரும்புகிறீர்கள்?’ என்று கேட்கப்பட்டதற்கு… எல்லாருடன் நடிக்க ஆசைத்தான். முக்கியமாக விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டும்.

அவருடைய படங்களை நான் இதுவரை பாக்கல. ஆனால், நண்பர்கள் பலரும் அவரைப் பற்றி அவருடைய வித்தியாசமான படத்தேர்வுகள் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்கள்.

எனவே அவருடன் நடிக்க விருப்பம்” என்று கூறி இருக்கிறார். எனத் தெரிவித்துள்ளார்.

அஞ்சலி பாட்டீல் இரண்டு தமிழ்ப்படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

More Articles
Follows