கடமான் பாறை-க்கு எதிர்பார்த்த மாதிரியே ஏ சர்ட்டிபிகேட் கிடைச்சிட்டு… : மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “கடமான்பாறை“ என்று பெயரிட்டுள்ளார்.

இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – மகேஷ்.
இசை – ரவிவர்மா
பாடல்கள் – விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், ரவிவர்மா, மன்சூரலிகான்,
கலை – ஜெயகுமார்
நடனம் – டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், சந்துரு, சிவா. ஸ்டன்ட் – ராக்கி ராஜேஷ்,
தயாரிப்பு நிர்வாகம் – J.அன்வர்
ஒருங்கிணைப்பு – ஜே,ஜெயகுமார் ஆக்கம் , இயக்கம் – மன்சூரலிகான்.

கடமான் பாறை படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படத்திற்கு A சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

இது பற்றி குறிப்பிட்டுள்ள மன்சூரலிகான்…

நான் எதிர்பார்த்ததுதான். என் படத்தில் என்ன கமர்ஷியல் இருக்க வேண்டுமோ அது இருக்கிறது. அதனால் “ A “ தான் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன் சரியாக கிடைத்திருக்கிறது.

காதல், மோதல், காமெடி எல்லாம் இருக்கு படத்தில்.” என்கிறார் மன்சூரலிகான்.

படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடை பெற உள்ளது.

Mansoor Ali Khans Kadamaan Paarai censored A certificate

டிக் டாக் தளத்தில் ஆரி & ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் பட ப்ரொமோஷன் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆரி – ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் ப்ரொமோஷன் வீடியோ ‘டிக் டாக்’ தளத்தில் ரிலீஸ் செய்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது படக்குழு.

விரைவில் படத்தின் தலைப்பும் டிக் டாக் தளத்தில் ரிலீஸாக உள்ள இந்தப் படத்தினை S.S.ராஜமித்ரன் இயக்குகிறார். இவர் ‘அய்யனார்’ என்ற படத்தை இயக்கியவர். A.G.மகேஷ் இசை அமைக்க, ‘அண்ணாதுரை’, ‘தகராறு’ புகழ் தில்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். கிரியேட்டிவ் டீம்ஸ் E.R.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் B. தர்மராஜ் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்த ப்ரொமோஷன் வீடியோ ரிலீஸ் குறித்து பட நாயகன் ஆரி கூறியதாவது :

இந்திய அளவில் ஏன் சர்வதேச அளவில் ஒரு படத்தின் ப்ரொமோஷன் வீடியோ டிக் டாக்கில் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. எல்லா மனிதர்களும் தங்களோட வாழ்நாளில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் காதலை கடந்தே வந்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் தங்களுடைய காதலை முதலில் கடக்கும் பருவம் இளமைப் பருவம் என்பதால் இன்னும் சுவாரஸ்யமாக உணர்வார்கள். அப்படிப்பட்ட காதலை மையமாக வைத்து சுழலும் படம்தான் இது. ஆகவே, இப்படத்தினை எங்கள் காதல் கதை என்று சொல்லாமல் உங்கள் காதல் கதை என்று சொல்வதிலேயே படக்குழுவினராக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

காதலிக்கும் நாம் கால ஓட்டத்தால் மாறுவோம். ஆனால் காதல் எப்போதும் மாறாது. எல்லா காலகட்டத்திலும் அது இளமையாகவே இருக்கும். அப்படி ஒவ்வொருவருக்குக்குள்ளும் உலாவும் காதலை பெரிய அளவில் கொண்டாடுகிற இன்றைய இளைஞர்கள் அதிகம் கூடும் இடம் சமூக வலைதளமாக இருக்கிறது. அதனால்தான் அவர்கள் தங்களது காதல் விஷயத்துக்காக பெரிதும் பயன்படுத்தும் ‘டிக் டாக்’ தளத்திலேயே படத்தின் ப்ரொமோஷன் வீடியோவை வெளியிட்டோம். அடுத்து விரைவில் படத்தின் தலைப்பும் அறிவிக்க உள்ளோம். அதையும் இதே போல டிக் டாக் தளத்திலேயே வெளியிட உள்ளோம். இனிமேல் இந்தமாதிரி படத்தின் பர்ஸ்ட் லுக், இசை, பாடல்கள் எல்லாம் இந்த தளத்தில் வெளியாவது அதிகரிக்கும்!’’ என்கிறார், படத்தின் நாயகன் ஆரி.

ரஜினிக்காக பாடியது சந்தோஷம்..; பேட்ட பாடல் குறித்து பாடகர் எஸ்பிபி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மரண மாஸ் என்ற சிங்கிள் டிராக் பாடலை சில தினங்களுக்கு முன் வெளியிட்டனர்.

பாடலாசிரியர் விவேக் எழுதிய அந்த பாடலை எஸ்.பி.பியுடன் இணைந்து அனிருத்தும் பாடியிருந்தார்.

சில வருடங்களுக்கு பிறகு ரஜினி பட பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருப்பதால் அனைவரும் இதை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் அந்த பாடலில் சில நொடிகள் மட்டுமே எஸ்.பி.பி. பாடியிருந்தார்.

இதனால் இசை பிரியர்கள் சற்று வருத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில், அந்த பாடல் குறித்து எஸ்.பி.பி., விடுத்துள்ள ஒரு செய்தியில் கூறியுள்ளதாவது…

பேட்ட படத்தில் நான் பாடிய மரண மாஸ் பாடலில் எனக்கான போர்ஷன் கம்மிதான் என்பது எனக்கு தெரியும். என்றாலும் நான் பாடியது ரஜினிகாந்துக்காக என்பதால் வருத்தப்படவில்லை. மாறாக, மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

பேட்ட படத்தை 2019 பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வர சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது

றெக்க பட இயக்குனருடன் ஜீவா இணையும் படத்தை விஜய்சேதுபதி தொடங்கி வைத்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் வரிசையாக ரிலீசுக்கு தயாராகவுள்ளன.

கீ, கொரில்லா, ஜிப்ஸி என ஒவ்வொரு படங்களாக விரைவில் வெளியாகவுள்ளது.

இதனிடையில் நடிகர் அருள்நிதியுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளார்.

இப்படத்தை முடித்துவிட்டு றெக்க பட இயக்குனர் ரத்னசிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

வேல்ஸ் பிலிம் இப்படத்தை தயாரிக்கிறது. இதை நடிகர் விஜய் சேதுபதி துவக்கி வைத்தார்.

ரத்னசிவா இயக்கிய றெக்க படத்தில் நடித்தவர் விஜய்சேதுபதி என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

மூட்டை தூக்கிய பணத்தில் கஜாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மூன்று வாரங்கள் கடந்த நிலையிலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகள் இன்னும் மீளாத் துயரில் தத்தளிக்கிறது.

இந்நிலையில் கஜா புயலில் பாதித்த 14 குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக கடலூர் கவிதாலயா தியேட்டரில் திண்பண்டங்கள் விற்பனை செய்தும், அந்தப் பகுதியில் மூட்டைத் தூக்கி அதில் கிடைத்த தொகையையும் கஜா புயலில் பாதித்தவர்களுக்காக அளித்துள்ளார் விஷால்.

இது வரும் ஞாயிற்றுக்கிழமை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சன் நாம் ஒருவர்’ நிகழ்ச்சியில் வரவிருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் இதுவரை வாரம் ஒரு நபருக்கு மட்டுமே உதவி என்ற வரிசையில் நடைபெற்று வந்தது. ஆனால் வரும் வாரம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு உதவி செய்யும் அத்தியாயம் வர உள்ளது.

நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்களின் பரிதாப நிலை குறித்தும் பேசுகிறார்கள்.

நடிகர் விஷால் நடத்தும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் சமுத்திக்கனி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்வதை கேட்டு கண்ணீர் வடித்ததோடு,

‘‘கஜா புயல் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களை தின்றுவிட்டது. இது ஏதோ வேறு ஒரு நாட்டில் நடந்ததைப் போல இப்போதும் பலர் நினைப்பதுதான் வேதனையாக இருக்கிறது!’’ என்றார்.

ஜானகி பாடிக்கொடுத்த பாடலால் பரவசத்தில் *பண்ணாடி* படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையுலகிலிருந்து ஓய்வு பெற்ற போதிலும் இளைஞர்களை ஊக்கப்படுத்த எஸ்.ஜானகி பாடல்கள் பாடிக் கொடுத்ததை எண்ணி ‘பண்ணாடி’ படக் குழு நெகிழ்ந்து போய்க்கிடக்கிறது.

முற்றிலும் புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகி வரும் படம் “பண்ணாடி’. இப்படத்தை டி.ஆர். பழனிவேலன் இயக்கி வருகிறார்.

பார்த்தசாரதி ஒளிப்பதிவு செய்கிறார். ராஜேஷ் ராமலிங்கம் இசையமைத்துள்ளார்.

இயக்குனர் பழனி வேலன் கூறும்போது…..

நம்மை யார் என்று நமக்கு சொல்ல வரும் கதைக்களம் ‘ பண்ணாடி என்கிற படத்தின் படப்பிடிப்பு விரைவில் .

இது கிராமத்துப் பின் புலத்தில் உருவாகிறது . முற்றிலும் புதிய களத்தில் ஆர்.வி. உதயகுமார், வேல ராமமூர்த்தி, முக்கிய கதாபாத்திரத்தில் மற்றும் முன்னனி பிரபலமான நட்சத்திரங்கள் புதுமுக நடிகர்களின் பங்கேற்பில் இதுவரை திரை காணா யதார்த்த பாத்திரங்களின் உணர்வுகளில் இப்படம் உருவாகிறது.

படம் தொடங்குவதற்கு முன் சேகர் என்பவர் மூலமாக. இப்படத்தில் ஒரு பாடல் பாட எஸ்.ஜானகியைக் கேட்டிருந்தோம்.

அப்போதே ஜானகி சினிமாவில் பாடுவதைக் குறைத்து அனேகமாக நிறுத்தியிருந்தார். அப்போது கேட்ட போது சூழல் பிடித்துப்போய் பார்க்கலாம் படம் தொடங்கும் போது வாருங்கள் என்றிருக்கிறார் நாங்கள் மீண்டும் எஸ்.ஜானகியைப் பார்த்த காலக்கட்டத்தில் அவர் சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

“நான் இனிப் பாடுவதில்லை என்று முடிவெடுத்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட் டேன்” என்றிருக்கிறார். ஆனால் இதற்கு உங்களைத் தவிர வேறு யாரையும் கற்பைனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை என்றிருக்கிறார்கள். கடைசியில் ஒரு வழியாகச் சமாதானமாகி பாட ஒப்புக் கொண்டு பாடியிருக்கிறார்.

அந்தஅனுபவம் பற்றி இசையமைப்பாளர் ராஜேஷ் ராமலிங்கம் கூறும் போது

” இப்படத்தில் வரும் ஒரு பாடல் மகிழ்ச்சி, துயரம் என இரு வேறு வடிவங்களில் இருக்க வேண்டும் இதற்கு நான் ஜானகியம்மாவைப் பாட வைப்பதை ஒரு கனவு போல எண்ணியிருந்தேன்.

அவர் சினிமாவை விட்டு விலகி விட்டேன் என்றதும் சற்றே அதிர்ச்சியாகவே இருந்தது..

நாங்கள் ஜானகி அம்மாவிடம் நீங்கள் தான் பாட வேண்டும் என்று கேட்டேன் அதற்கு நீங்கள் வேறு யாராவது புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுங்களேன். என்னை விட்டு விடுங்கள் என்றார். நாங்கள் விடாமல் நச்சரித்தோம்.

விடுவதாக இல்லை. ஒரு கட்டத்தில் எங்கள் தொல்லை தாங்காமல் என்ன வரிகள் என்றார் நான் ‘ஒன் உசிரு காத்துல காத்தாடியா பறக்குறேன் ‘என முதல்வரியைச் சொன்னேன். புன்முறுவல் செய்தார்.

அப்பாடா என்றிருந்தது. முதலில் சோகப் பாடலைப் பாடியவர் ,டூயட் பாடுவது ஆண் குரல் யார் என்றார். நான் டிராக் பாடி இருந்ததைப் போட்டுக் காட்டினேன். என் குரல் அவருக்குப் பிடித்து விடவே நீயே பாடு என்றார். இல்லம்மா நான் சும்மா டம்மிவாய்ஸ் க்காகப் பாடினேன் என்றேன்.

வேறு யாரையாவது வைத்துப் பாடவைப்பதே திட்டம் என்றேன். ஆனால் நீயே பாடு என்றார் .ஒரு கட்டத்தில் நீ பாடினால் தான் நான் பாடுவேன் என்றார் பிடிவாதமாக . சரி என்றேன். மகிழ்ச்சி, சோகம் என இரண்டு பாடல்களையும் ஒரே டேக்கில் பாடிக் கொடுத்தார்.

அத்துடன் படக் குழுவையும் வாழ்த்தினார். 80 வயதில் சற்றும் உற்சாகம் குறையாமல் அவர் பாடிக்கொடுத்தது வியப்பூட்டியது.ஜானகியம்மா எங்கள் படத்திற்குள் வந்தது எங்களுக்குப் பெரிய ஊக்கமாக இருந்தது. ” என்கிறார்.

இப்படத்தை ஸ்ரீ அய்யனாரப்பா பிலிம்ஸ் சார்பில் ரேவதி பழநி வேலன் தயாரிக்கிறார். கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் தெ.ரா. பழநிவேலன்.

இவர், கிராமியக் கதைகளுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரின் மாணவர்.இப்படத்திற்கு பார்த்தசாரதி ஒளிப்பதிவு செய்கிறார். ராஜேஷ் ராமலிங்கம் இசையமைக்கிறார்.

படத்தொகுப்பு பிரகாஷ். ஜானகியம்மா பாடிய இரண்டு பாடல்களை விரைவில் வெளியிடவுள்ளனர்.

After long time Play back singer S Janaki sung in Pannadi movie

More Articles
Follows