பிரச்னையை பார்த்து கை கட்டி நிக்காதீங்க; மய்யம் விசில் அடிங்க… : கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2017 ஆண்டு நவம்பர் 7-ம் தேதி தன் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்தார் கமல்ஹாசன்.

அப்போதே மக்கள் தங்கள் பிரச்னைகளை தெரிவிக்க ‘மய்யம் விசில்’ என்னும் செயலியை (மொபைல் ஆப்) விரைவில் அறிமுகம் செய்வேன் என அறிவித்தார்.

அதன்படி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ‘மய்யம் விசில்’ என்ற அந்த செயலி வரும் ஏப்ரல் 30ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தற்போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள கமல், அதில் பேசியுள்ளதாவது…

காற்றை கெடுத்தார்கள், ஆற்றையும் கெடுத்தார்கள். தண்ணீர் ஓடினால் அது வெறும் ஆறு, சாயம் மட்டும் ஓடினால் அது சாக்கடை. வண்டி ஓட வேண்டிய இடத்தில் மழை தண்ணீர் ஓடுகிறது.

மரம் இருக்க வேண்டிய இடத்தில் குப்பை குவிந்து கிடக்கிறது. இதுபோன்ற ஆயிரம் பிரச்னைகள், அநீதிகள், அக்கிரமங்கள், அநியாயங்கள் நம்மை சுற்றி நடந்து கொண்டே இருக்கிறது.

இதற்கெல்லாம் முதல் காரணம் யார் தெரியுமா, நம்மை சுற்றி என்ன நடந்தாலும் கை கட்டி வேடிக்கை பார்க்கும் நாம் தான்.

இனி எந்த பிரச்னையையும் பார்த்து, பயந்து, ஒதுங்கி இருக்க வேண்டாம். ஏனென்றால் இனி உங்கள் கையில் விசில் இருக்கிறது. போனை எடுங்கள் மையம் விசில் ஆப்பை டவுன்லோடு செய்யுங்கள். உங்களை பாதிக்கும் பிரச்னைகளை பதிவு செய்யுங்கள். விசில், அது எப்படி கேட்காமல் போகும்..? என்று பேசியுள்ளார்.

ஆண்ட்ராய்டு, ஐஓஸ் இயங்குதளங்களில் இயங்கும் வகையில் ‘மய்யம் விசில்’ செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.

Maiam Whistle App launch on 30th April 2018 to solve peoples problem

மே 1 முதல் தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற மே 1ஆம் தேதி முதல் தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் ஆரம்பமாகிறது. அது பற்றிய விவரம் வருமாறு…

தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் தலைவராக வைசாலி சுப்பிரமணியன் பொறுப்பேற்கிறார்.
அவர் கூறியதாவது…

செயலாளர் ஈஸ்வரி V.P, துணை செயலாளர் மீனா மருதரசி .S, பொருளாளர் கீதா .M, துணை தலைவர் ஏஞ்சல் சாம்ராஜ், நாங்கள் ஐந்து பேருதான் செயற்குளுவாக இருக்கிறோம்.

இதனுடைய வேலைகள் கடந்த ஆறு மாத காலங்களாக நடைபெற்று கொண்டிருந்தது. இதை அதிகாரப்பூர்வமாக மே 1 அன்று ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.

இது தொடர்பாக FEFSI தலைவர் R.K.செல்வமணி சார் கிட்ட பேசினோம், அவர் நல்ல விஷயம் நீங்க பண்ணுங்க என்றார்.

இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன் சார் எங்களை வாழ்த்தினார் மற்றும் ஒளிப்பதிவாளர் சங்க தலைவர் P.C.ஸ்ரீராம் சார் வாழ்த்துக்கள் சொன்னார் .இந்த விழாவிற்கு P.C.ஸ்ரீராம், வெற்றிமாறன், சத்யராஜ், ரோகினி, ரேவதி, சச்சு அம்மா, புஷ்கர் காயத்ரி மற்றும் ஆடை வடிவமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், கீதா குருவப்பன் (sound engineer) இவர்களெல்லாம் விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

ஊடகங்கள் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும். விழாவில் தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் சார்பாக ஒரு காலாண்டு மாத இதழ் வெளியிடுகிறோம்.

இந்த் பத்திரிக்கையின் ஆசிரியர் ஈஸ்வரி V.P (மிஸ்கின் அசோசியேட்).

இந்த தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்திற்கு நிறைய பெண்கள் வரவேண்டும்.

100 வருட தமிழ் திரைப்பட வரலாற்றில் இது ஒரு வரலாறாக இருக்கும்.

அடுத்த தலைமுறைகள் இதில் வரவேண்டும் என்பதற்காக போடப்பட்ட அடித்தளம் இது. இதுக்கு உங்களுடைய ஆதரவும் வாழ்த்துக்களும் எங்களுக்கு தேவை,நன்றி.” என்றார்.

South Indian Film Womens association to be launched on 1st May 2018

அஜித் மச்சினிச்சி ஷாமிலிக்கு கை கொடுப்பாரா நாக சௌரியா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அஞ்சலி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஷாமிலி.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இவர் நடிகை ஷாலினியின் தங்கை. அதாவது அஜித்தின் மச்சினிச்சி.

இவர் நாயகியாக சில படங்களில் நடித்திருந்தாலும் எந்த படமும் சரியான வெற்றியைப் பெறவில்லை.

2009-ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ‘ஓயே’ படத்தில் நடித்தார். அதன்பிறகு ஆறு வருடங்கள் கழித்து மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்தார்.

பின்னர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக தமிழில் ‘வீர சிவாஜி’படத்தில் நடித்தார்.

இவை பெரிய வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் தற்போது 9 வருடங்கள் கழித்து தெலுங்கில் ‘அம்மம்மா காரி இல்லு’ என்ற படத்தில் நாக சௌரியாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்த பட ஹீரோவாவது இவரது வெற்றிக்கு கை கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சாய் பல்லவி நடித்துள்ள கரு (தியா) படத்தில் நாக சௌரியா நாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஏப்ரல் 27ல் ரிலீஸ் ஆகிறது.

Shamili teams up with Naga Shaurya for Ammamma gari Illu

பிறந்தநாளில் கட்சி ஆரம்பிக்கிறார் விஜய்.?; இது அவருக்கு தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட் முதல் கோட்டை வரை என்று தமிழக அரசியலில் எழுதப்படாத ஒரு விதி உண்டு.

கிட்டதட்ட 50 ஆண்டுகாலமாக தமிழகத்தை திரைத் துறையை சார்ந்தவர்களே ஆட்சி செய்து வந்தனர்.

அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா வரை இது தொடர்ந்தது.

தற்போதுதான் திரைத்துறை சாராத எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி செய்து வருகிறார்.

இந்நிலையில்தான் நடிகர்கள் கமலும் ரஜினியும் தங்கள் அரசியல் வருகையை அறிவித்துள்ளனர்.

இவர்களை அடுத்து அரசியல் பேச்சில் அதிகபடியாக பேசப்படுபவர் நடிகர் விஜய் தான்.

அவர் வருகிறாரா? இல்லையா? என்பதை அவரே இப்போது முடிவு எடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்.

இந்நிலையில் மதுரை விஜய் ரசிகர்கள் ஜீன் 22ல் தன் பிறந்தநாளில் கட்சியை ஆரம்பித்து அவர் அரசியல் கட்சிக்கு வருவதாக போஸ்டர் அடித்து ஊரெங்கும் ஓட்டியுள்ளனர்.

அந்த போஸ்டர் ஒரு செய்திதாளில் வெளியானது போல டிசைன் செய்து அச்சடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போஸ்டர் விஜய்க்கு தெரியுமா? என்பதுதான் தெரியவில்லை.

On 22nd June Vijay starts political party Vijay Fans poster issue

நட்புக்காகவும் வரலட்சுமிக்காகவும் வந்தேன்; விஷால் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரித்திருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’.

நவரச நாயகன் கார்த்திக் அரவது மகன் கவுதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்துள்ள படம் இது.

திரு என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகிகளாக ரெஜினா கசாண்ட்ரா, வரலெட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது.

இதில் படக்குழுவினருடன் சூர்யா, விஷால், சாந்தணு, இயக்குநர்கள் சுசீந்திரன், கவுரவ் நாராயணன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் விஷால் பேசும் போது,

ஒருவரின் குழந்தை பருவ ஆசையை நிறைவேற்றி வைப்பது என்பது பெரிய விஷயம்.

அந்த வகையில் சூர்யாவின் சிஸ்டர் பிருந்தா சிவக்குமாரின் ஆசையை தற்போது நிறைவேற்றி வைத்த்திருக்கிறார் இந்த Mr சந்திரமௌலி. அவருக்கு வாழ்த்துக்கள்.

மிஸ்டர்.சந்திரமௌலி என்றாலே அது கார்த்திக் சார் தான். நடிகர் சங்கப் போராட்டத்தின் போது கார்த்திக் சார் உறுதுணையாக இருந்தார்.

அவருடன் பலரும் உறுதுணையாக இருந்தனர். அனைவருக்கும் நன்றி. இது எனக்கான பெருமை அல்ல. இந்திய சினிமாவே தமிழ் சினிமாவை திருப்பிப் பார்க்க வைத்த ஒரு விஷயத்தை சாதித்துள்ளோம்.

என் 3 படங்களை நண்பர் திரு இயக்கியுள்ளார். அவருடன் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளேன்.

அவரின் நட்புக்காகவும், வருவுக்காகவும் (வரலட்சுமி) தான் இங்கு வந்தேன்” என்று பேசினார் விஷால்.

I participated in Mr Chandramouli audio launch because of Varalakshmi says Vishal

சூப்பர் ஸ்டாரின் காலா படத்தை வாங்கியது ஸ்டார் விஜய் டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் 2வது முறையாக நடித்துள்ள படம் ‘காலா’.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் ரஜினியுடன், நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், சாக்ஷி அகர்வால், அஞ்சலி பட்டேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் ஜூன் 7ம் தேதி வெளியாகவுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இந்தப் படம் வெளியாகிறது.
உலகம் முழுவதும் 7,200க்கும் அதிகமான அரங்குகளில் படத்தை வெளியிட வேலைகள் நடக்கின்றன.

இதன் வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் ஏற்கெனவே அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது.

இந்நிலையில், இதன் டிவி உரிமையை அதிவிலைக்கு வாங்கியிருக்கிறார்கள் ஸ்டார் குழுமத்தினர் (விஜய் டிவி) அனைத்து மொழிகளுக்கும் வாங்கியுள்ளனர்.

இதனை அதிகாரப்பூர்வமாக தனுஷ் மற்றும் விஜய் டிவி அறிவித்துள்ளனர்.

Star Vijay tv bagged Rajinis Kaala Satellite Rights

More Articles
Follows