மகாமுனி படத்தின் மெகா வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் மஹிமா நம்பியார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மகாமுனி படத்தின் மெகா வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் மஹிமா நம்பியார். தென்னிந்திய சினிமாவில் இனி ஒரு நல்ல நடிகை என்ற அடையாளத்தோடு உலா வரும் அளவிற்கு மகாமுனி படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. அந்த சந்தோஷத்தோடு நமது கேள்விகளுக்கு மிக இயல்பாக பதில் அளித்தார்,

“மஹிமாவிற்கு சினிமா ஆர்வம் எப்படி வந்தது?”

“அதுதான் எனக்கே தெரியவில்லை. எங்கள் வீட்டில் யாருக்கும் சினிமா தொடர்பு என்பது துளியும் கிடையாது. எந்த சினிமா பின்புலமும் இல்லாத குடும்பத்தில் பிறந்த எனக்கு ஏனோ சிறுவயது முதலே நடிப்பின் மீது அளப்பரிய ஆசை மற்றும் ஆர்வம். நாம் உண்மையாக ஒன்றை நேசித்தால் அது நம்மை நோக்கி வருமல்லவா? அதுதான் என்னை நடிகையாக்கி இருக்கிறதென்று நினைக்கிறேன்”

“முதல்பட அனுபவம் பற்றி சொல்லுங்கள்?”

“எப்படியாவது நடிகையாக வேண்டும் என்ற ஆர்வத்தில் தினமும் வீட்டில் கண்ணாடி முன்பு நின்று நடித்துப் பார்ப்பேன். திரைப்பட வசனங்களை மனப்பாடம் செய்து பேசுவேன். ஆனால் சினிமாவில் நடிகையாக எப்படி முயற்சி செய்ய வேண்டும் என்று தெரியாது. ஒருமுறை கேரளாவிற்கு லொக்கேசன் பார்க்க வந்த இயக்குநர் சாமி சார் கண்ணில் நான் படவும், சிந்துசமவெளி படத்தில் ஒரு சிஸ்டர் கேரக்டருக்கு என்னை நடிக்க அழைத்தார். என் பள்ளிப்படிப்பு காரணமாக அப்படத்தில் நடிக்க இயலவில்லை. ஆனால் அப்போது அவர்கள் மூலமாக என் போட்டோ சாட்டைப் பட இயக்குநர் கண்களில் பட அதன்பிறகு வந்த வாய்ப்பு தான் சாட்டை படம். சாட்டைப் படத்தில் நடிக்கும் போது எனக்கு சூட்டிங் பற்றி எதுவுமே தெரியாது. இயக்குநர் அன்பழகன் சார் தான் நிறைய விசயங்களை கற்றுக்கொடுத்தார். குறிப்பாக தமிழ் தெரியாததால் மிகவும் சிரமப்பட்டேன். எல்லோரும் என்னை தமிழ் தெரியவில்லை என்பதற்காக கிண்டல் செய்தார்கள். நான் அப்போது எப்படியாவது இந்தப்படம் முடிவதற்குள் தமிழ் எழுதப்படிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த ஆசை உடன் நடிக்கும் மாணவிகள் துணையோடு சிறப்பாக நிறைவேறியது. தமிழில் முதல் பட அனுபவமே எனக்கு தமிழை நன்றாக கற்றுக் கொடுத்து விட்டது. தமிழை கற்கும் போது இருந்த காதலை தமிழை கற்றபிறகு அம்மொழி மீது அதிக காதல் வந்துவிட்டது”

“மகாமுனி அனுபவம் பற்றி?”

“என் வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்து விட்டது மகாமுனி. எனக்குப் படத்தின் கதையே தெரியாது. மெளனகுரு பட இயக்குநர் சாந்தகுமார் என்றதும் வேறு கேள்வியே கேட்கத் தோன்றாதல்லவா? அப்படித்தான் நான் எதுவுகே கேட்கவில்லை. என்னை ஸ்கீரினில் பார்க்கும் போது எனக்கே வியப்பாக இருந்தது. அது இயக்குநர் சாந்தகுமார் சார் செய்த மேஜிக்”

“படத்தில் உங்கள் கதாப்பாத்திரம் பேசிய வசனங்கள் எல்லாம் மிகவும் காத்திரமான வசனங்கள். நீங்களே சொந்தமாக டப்பிங் பேசும்போது எப்படி இருந்தது?”

“எனக்கு டப்பிங் பேசும்போது ரொம்பப் பயமாக இருந்தது. நான் சாந்தகுமார் சாரிடம் என் வாய்ஸ் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அவர் மிகவும் கான்பிடன்டாக பேசச்சொன்னார். அவரின் நம்பிக்கை நன்றாக வொர்க்கவுட் ஆகியுள்ளது. இதைப்போல நடிக்கும் போதும் சாந்தகுமார் நம்மை உளவியல் ரீதியாக தயார்படுத்துவார். ஸ்பாட்டில் அவர் நடித்தெல்லாம் காட்டமாட்டார். அந்தக் கேரக்டரின் மனநிலையை நம் கண்முன் கொண்டு வருவது போல விவரிப்பார். அவர் சொல்லச் சொல்ல அந்தக் கதாபாத்திரத்திற்குள் நாம் ட்ராவல் ஆகிடுவோம்.”

“நடிகர் ஆர்யாவுடன் முதல்படம் இது. ஆர்யா உங்களுக்கு உதவியாக இருந்தாரா?”

“ஆர்யா போல ஒரு அபூர்வ நடிகரை பார்க்கவே முடியாது. அவர் மிகமிக பிரண்ட்லியான மனிதர். படப்பிடிப்பில் அவர் என்னிடம் “அப்படி நடிங்க இப்படி நடிங்க” என்று எதுவும் சொல்ல மாட்டார். ஆனால் எனது நடிப்பும் நல்லா வரணும் என்று மெனக்கெடுவார். உதாரணத்திற்கு அவர் எதிரில் நிற்கையில் எனக்கு மட்டும் கேமரா வைத்து சஜேஷன் ஷாட் எடுக்கும்போது அவர் சும்மா நின்றால் போதும். ஆனாலும் அவர் நமது ரியாக்‌ஷன் பெஸ்ட்டாக வர வேண்டும் என்பதற்காக அவரும் நடித்துக் கொண்டிருப்பார். இப்படி சக ஆர்ட்டிஸ்ட் நடிப்பும் நல்லா வரவேண்டும் என்பதற்காக மெனக்கெடும் நடிகர்களை நான் பார்த்ததில்லை”

“மகாமுனி படத்திற்காக உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு எது?”

“எங்கள் இயக்குநர் சாந்தகுமார் சார் எடிட்டிங்கில் இருக்கும் போது என்னிடம், “நீ நடித்த கேரக்டர்ல வேற யாரையும் நினைச்சுப் பார்க்க முடியல” என்று சொன்னார். எனக்கு லைப்லாங் மறக்க முடியாத பாராட்டு அது.”

“உங்களின் அடுத்தடுத்த படங்கள்”?

” ஐங்கரன் படம் ரிலீஸாக இருக்கிறது. எல்லாருக்கும் பிடிக்கும் அளவில் ஜனரஞ்சகமான படமாக அது உருவாகி இருக்கிறது. விக்ரம்பிரவுடன் அசுரகுரு படத்திலும் நடித்திருக்கிறேன். மேலும் இரண்டு புதியபடங்கள் உள்பட ஒரு மலையாள படத்திலும் கமிட்டாகியுள்ளேன்”

“சினிமாவில் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?”

“எல்லா நடிகர்களும் பிடித்த நடிகர்கள் தான். ரஜினிகாந்த் சாரை கூடுதலாக பிடிக்கும். நடிகைகளில் நயன்தாரா ரொம்பப்பிடிக்கும்”

“இந்தமாதிரி படங்கள் அல்லது இந்தமாதிரி கேரக்டர்கள் தான் நடிக்கணும் என்ற வரையறை எதுவும் வைத்துள்ளீர்களா?”

“அப்படி எந்த வரையறையும் வைத்துக்கொள்ளவில்லை. நான் நடிக்கணும் என்று மிகவும் ஆசைப்பட்டு சினிமாவிற்கு வந்தேன். நடிக்கணும் என்ற ஆசையோடு வந்தேனே ஒழிய இந்தமாதிரி தான் நடிக்கணும் என்று வரவில்லை. அதனால் எனக்கு நடித்தால் மட்டும் போதும். ஐ லவ் ஆக்டிங்” என்றார் உற்சாகமாக

மேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி கீர்த்தி சுரேஷ் நடிப்பில், அறிமுக இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் எங்களது ‘படைப்பு எண் : 3’, இன்று இனிதே கொடைக்கானலில் படப்பிடிப்புடன் துவங்கியது என்பதை மிகவும் பெருமிதத்தோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் வழங்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். கல் ராமன், எஸ் சோமசேகர் மற்றும் கல்யாண சுப்பிரமணியன் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிருஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை சக்தி வெங்கட்ராஜ் வசமும், ஆடை வடிவமைப்பு பல்லவி சிங் வசமும், ஒலி வடிவமைப்பு தாமஸ் குரியன் வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று, அடுத்த ஆண்டின் துவக்கத்திலேயே திரைக்கு வரும் வகையில் இப்படக் குழு திட்டமிட்டிருக்கிறது.

என்றும் உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டும்,

நன்றிகளுடன்,
ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ்

பேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகராக ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் கொடுத்து வந்தாலும், அப்படங்களின் மாறுபட்ட கதைக் களங்களில் அவரது வேறுபட்ட நடிப்பு மூலம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறார். சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைபோடும் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் தன் இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஜி.வி.பிரகாஷ், அடுத்து நடிக்கவிருக்கும் பேச்சிலர் படத்தின் மூலம் நடிப்பின் புதிய பரிமாணத்தைத் தொடத் தயாராகியிருக்கிறார்.

விமர்சன ரீதியிலும் வணிக ரீதியிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற ராட்சசன் படத்தைத் தயாரித்த ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலம் ஜி.டில்லி பாபு இப்படத்தைத் தயாரிக்கிறார்.
இயக்குநர் சசியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சதீஷ் செல்வகுமார் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
பேச்சிலர் படம் குறித்து இயக்குநர் சதீஷ் செல்வகுமார் பேசும்போது கூறியதாவது….

கிராமிய மணம் கமழும் காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். இதற்கு முன் நடித்த எந்த படத்திலும் அவருக்கு இப்படி ஒரு வேடம் அமைந்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் ஜி.விக்கு பேச்சிலர் திரைப்படம் ஒரு புதிய இமேஜைக் கொடுக்கும் என்று சொல்லலாம்.

கோயமுத்தூரிலிருந்து பெங்களூரு வரும் இளைஞன் ஒருவன், தன் நண்பர்களின் வாழ்க்கை முறைகளால் பெரிதும் கவரப்படுகிறான். இந்த பாதிப்புகள் அவன் வாழ்க்கையை எவ்வாறு தடம் மாற்றுகின்றன என்பதை சுவைபட விவரிக்கும் படம் இது என்றார் சதீஷ் செல்வகுமார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் பெங்களூரிலும், சில பகுதிகள் சென்னை மற்றும் பொள்ளாச்சியிலும் படமாக்கப்படவிருக்கின்றன. பிரபல மாடல் அழகி திவ்யா பாரதி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பகவதி பெருமாள், யு டியூப் நக்கலைட்ஸ் புகழ் அருண் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, இசையமைக்கும் பொறுப்பையும் ஜி.வி.பிரகாஷ் குமாரே ஏற்றிருக்கிறார். சான் லோகேஷ் படத்தொகுப்பை கவனக்க, ஒளிப்பதிவு இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கிறார் தேனி ஈஸ்வர்.

பத்தே நாட்களில் 400 கோடி ரூபாயை தொட்டு, வசூலில் பின்னி எடுக்கும் “சாஹோ” !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டோலிவுட் செல்லம் பாகுபலி பிரபாஸின் அசைக்கமுடியாத நட்சத்திர அந்தஸ்த்தும் , UV Creations ன் மிகப் பிராமாண்டத் தயாரிப்பும் உலகளவில் “சாஹோ” படத்தை, சரித்திரம் படைக்கும் படமாக மாற்றி வருகிறது. இந்த வெற்றிப்பயணத்தின் அடுத்த மகுடமாக, ஆக்ஸ்ட் 30 அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் வெளியான “சாஹோ” உலகளவில் பத்தே நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலை எட்டி மீண்டும் ஒரு சரித்திர சாதனை படைத்திருக்கிறது.

மிகப்பெரிய வரவேற்புடன் களமிறங்கிய “சாஹோ” ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அசைக்கமுடியாத தொடர் வெற்றி ஓட்டத்தில் பயணித்து, தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் மிகப்பெரிய லாபத்தை ஈட்டித் தந்துள்ளது.

“சாஹோ” படக்குழு படம் செய்த இந்த உலக சாதனையால் மட்டுமன்றி , இதன் மூலம் “சாஹோ” உலகளவில் தென்னிந்திய சினிமாவிற்கு புதிய கதவுகளை திறந்து வைத்திருப்பதில், மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைத்து வருகிறார்கள்.

சுஜீத் இயக்கத்தில் பாகுபலி பிரபாஸ், பாலிவுட் ஸ்ரத்தா கபூர் நடிப்பில், UV Creations சார்பில் 350 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட “சாஹோ” படம் வெளியாகும் முன்பே படத்தின் அனைத்து மொழி வியாபரங்களில் சாதனை படைத்தது. மேலும் டிஜிட்டல், சாட்டிலைட் உரிமங்களிலும் படத்தின் பட்ஜெட்டை மிஞ்சிய வியாபரத்தை எட்டியது.
படத்தின் வெளியீட்டுக்கு பிறகு பாகுபலி பிரபாஸின் இமாலய பிரபல்யத்தில் உலகளவில் இப்போது சாதனை படைத்து வருகிறது. இப்படம் பிரபாஸுக்கு எந்த நடிகரும் எட்ட முடியா உயரத்தை அளித்துள்ளது.

MX original series பெருமையுடன் வெளியிடும் “குயின் “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“குயின்” சீரியலின் கதை நாமறிந்த ஒரு பிரபல அரசியல் வாதியின் ஆளுமை மற்றும் அவருடைய குணாதிசயங்கள் மற்றும் இரும்பு கரம் கொண்டு ஆட்சி செய்த திறமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் சிவகாமி தேவி கதாப்பாத்திரத்தில் நம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ரம்யா கிருஷ்ணன் இதில் பிரபல அரசியல் வாதியாக நடித்திருக்கிறார்.

ராம்யா கிருஷ்ணன் நடிக்கும் இந்த சீரியலை எழுதியிருக்கிறார் ரேஷ்மா கட்டாலா. இதை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இணைந்து இயக்கியுள்ளனர்.

MX Player ல் பார்க்கக்கூடிய இந்த முன்னணி தமிழ் வெப் சீரியல், பிராந்திய பொழிகளான இந்தி, தெலுங்கு மற்றும் பெங்காலி, மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாக உள்ளது.
இந்த குயின் வெப் சீரியல் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் தளமான MX Player ல் கட்டணமில்லாமல் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்

அஞ்சலி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஞ்சலி, யோகி பாபு மற்றும் விஜய் டி.வி.புகழ் ராமர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று எளிய பூஜையுடன் தொடங்கியது. நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் வாழ்த்துகளுடன் இன்று படப்படிப்பு தொடங்கிய இப்படம், ஒரு குறுகிய காலத் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
சோல்ஜர்ஸ் பேக்டரி சார்பில் உருவாகும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் சினீஸ் தெரிவித்ததாவது….

விலா நோகச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளும், விறுவிறுப்பு குறையாத காட்சிகளும் நிறைந்த கதையாக இதை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ். ஒரு படைப்பாளி என்ற வகையிலும், ரசிகன் என்ற முறையிலும் இந்தப் படம் எனக்கு பெருமகிழ்ச்சியைத் தருகிறது. முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிகை அஞ்சலியை இந்தப் படத்தில் ரசிகர்கள் பார்க்கலாம். அஞ்சலியின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை இப்படம் ஏற்படுத்தும் என்றால் மிகையாகாது. இதுவரை அஞ்சலி ஏற்று நடித்த வேடங்களிலிருந்து இந்த வேடம் எவ்வளவு மாறுபட்டது என்பதை படம் பார்க்கும்போது ரசிகர்கள் உணர்ந்து கொள்ளலாம்.

யோகி பாபு மற்றும் விஜய் டி.வி.புகழ் ராமர் இருவரையும் அவர்களது புகழுக்காகவோ அல்லது அவர்களுக்கு ரசிகர்களிடம் இருக்கும் வரவேற்பை அறுவடை செய்ய வேண்டுமென்பதற்காகோ இப்படத்திற்குள் கொண்டுவரவில்லை. வலிமை மிக்க அந்தக் கதாபாத்திரங்களுக்கு அவர்கள் எந்த அளவுக்கு பொருத்தமானவர்களாக இருக்கிறார்கள் என்பதையும், அந்தப் பாத்திரங்களை அவர்கள் தங்கள் நடிப்பால் எந்த அளவு நியாயப்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் படம் பார்க்கும்போது உணரலாம். படம் முழுவதும் இருவரும் வந்து அமர்க்களப்படுத்தியிருப்பார்கள். படத்தில் பங்கேற்கும் மற்ற சில முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் குறித்தும் விரைவில் அறிவிக்க இருக்கிறோம் என்றார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு ஆர்வி ஒளிப்பதிவு இயக்குநராக பொறுப்பேற்க, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். சக்தி வெங்கட்ராஜ் கலை இயக்குநராகவும், ரூபன் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைக்க, படத்திற்கான பாடல்களை எழுதுகிறார் அருண்ராஜா காமராஜ்.

More Articles
Follows