கைதி-2 வேலைகளில் ‘மாஸ்டர்’ டைரக்டர் பிஸி.; கமல்-ரஜினி படம் ட்ராப்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாநகரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ்.

இந்த படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போதே நடிகர் விஜய்க்கு கதை சொன்னார் லோகேஷ்.

அந்த கதை விஜய்க்கு பிடித்துபோகவே மாஸ்டர் படம் உருவானது.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

கொரோனா பிரச்சினையால் பட வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்தன.

ஆனால் கொரோனா பிரச்சினைக்கு பிறகு இந்தியன்2 பட சூட்டிங்கில் கமலும், அண்ணாத்த பட சூட்டிங்கில் ரஜினியும் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

எனவே அவர்களுக்காக காத்திருக்காமல் கார்த்தியை வைத்து கைதி 2 படத்தை குறைந்த நாட்களில் எடுக்கவிருக்கிறாராம் லோகேஷ்.

முதன்முறையாக சிம்பு & ஸ்ருதிஹாசன் ஜோடியை இணைக்கும் மிஷ்கின்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி நடித்த ‘சைக்கோ’ படத்தை தொடர்ந்து துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார் முஷ்கின.

லண்டனில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், பட நாயகன் விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சனையால் மிஷ்கின் படத்திலிருந்து விலகினார்.

மீதிப்படத்தை விஷாலே தயாரித்து நடித்து இயக்க உள்ளார் என கூறப்படுகிறது.

எனவே விரைவில் சிம்பு நடிக்கவுள்ள படத்தை மிஷ்கின் இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதில் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

கொரோனா நோயாளிகளை ஒதுக்க கூடாது.; ரோபோ சங்கர் புதிய முயற்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பட்டுக்கோட்டை பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அங்குள்ள கொரோனா சிகிச்சை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவர்களின் மன அழுத்தத்தை போக்க நடிகர் ரோபோ சங்கர் & திண்டுக்கல் செந்தில் ஆகியோர் தங்கள் பட்டுக்கோட்டைக்கு சென்றுள்ளனர்,

மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் கொரோனா நோயாளிகள் முன்பு மிமிக்ரி செய்து உள்ளனர்.

கொரோனா நோய் தொற்றாளர்களை தனிமைப்படுத்த வேண்டுமே தவிர அவர்களை ஒதுக்கி வைக்கக்கூடாது என ரோபோ சங்கர் செய்தியாளர்களிடம் கூறினார்.

’தெளலத்’ படத்தில் எனக்கே தெரியாமல் நானா.? யோகிபாபுக்கு ஷாக் கொடுத்த படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சக்தி சிவன் என்பவர் இயக்கி நடித்துள்ள படம் ‘தௌலத்’.

இதில் ராஷ்மி கவுதம், ஜெயபாலன், அஜய் பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அண்மையில் வெளியான இப்பட போஸ்டரில் நடிகர் யோகி பாபு மட்டுமே இருந்தார்.

இது நடிகர் யோகி பாபுவுக்கே அதிர்ச்சியாக உள்ளதாம்.

இதனையடுத்து யோகி பாபு தன் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது, “தௌலத் பட போஸ்டர் விளம்பரம் பார்த்தேன். எனக்கும் ’தெளலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை” எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என பதிவிட்டுள்ளார் யோகிபாபு.

பாலிவுட் படத்தில் தனுஷுடன் இணையும் பிரபுதேவா பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஞ்சனா, ஷமிதாப் ஆகிய இரண்டு பாலிவுட் படங்களை தொடர்ந்து மீண்டும் 3வது முறையாக ஹிந்தி படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்.

மீண்டும் ராஞ்சனா பட இயக்குநருடன் ‘Atrangi Re’ என்ற படத்திற்காக இணைகிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தில் தனுஷ் உடன் அக்‌ஷய்குமார், சாரா அலிகான் நடிக்கின்றனர்.

கொரோனா ஊரடங்கால் இப்பட சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது.

இப்பட படப்பிடிப்பு மீண்டும் அக்டோபர் மாதத்தில் மதுரையில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் முக்கிய கேரக்டரில் டிம்பிள் ஹயாதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபு தேவா உடன் ‘தேவி 2’ படத்தில் நடித்திருந்தார் டிம்பிள் ஹயாதி.

இவர் அக்‌ஷய்குமாருக்கு ஜோடியா? அல்லது தனுஷூக்கு ஜோடியா? என்பது தான் சஸ்பென்ஸ்.

ஜெயிலுக்கு செல்ல எஸ்.வி.சேகருக்கு ஆசை என்றால் அதிமுக அரசு நிறைவேற்றும்.. – அமைச்சர் ஜெயக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் எஸ்.வி. சேகர் அவர்கள் காவி கலர் குறித்து பேசும்போது… இந்துக்களுக்கு உரிய காவி கலரை எடுத்து விட்டால் இந்திய தேசிய கொடியில் கிறிஸ்துவர்களுக்கு உரிய வெள்ளை & முஸ்லீம்களுக்கு உரிய பச்சை நிறம் மட்டுமே இருக்கும் என பேசியிருந்தார்.

இந்த நிலையில்… இந்திய தேசிய கொடியை அவமதித்ததாகவும் , முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயருக்கு களங்கம் விளைப்பதாகவும் கூறி SV சேகரின் மீது சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் அதிமுக செய்தி தொடர்பாளரும் அமைச்சருமான ஜெயக்குமார் பேசும்போது…

எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாக இருந்தால் அதனை அதிமுக அரசு நிறைவேற்றும் என பேசினார்.

More Articles
Follows