‘எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்’.. வைரலாகும் LKG டிரைலர் & சாங்ஸ் !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நகைச்சுவை’ யாரும் செய்து விட முடியும், ஆனால் அரசியல் நையாண்டி படங்களை எடுக்க நல்ல கதை மற்றும் சரியான பேக்கேஜிங் தேவைப்படும். அப்போது தான் பெரிய அளவு பார்வையாளர்களை சென்றடையும். ஆர்.ஜே. பாலாஜியின் LKG படத்தின் சிங்கிள் பாடலான “எத்தனை காலம் தான்’ பாடல் நம்பமுடியாத வரவேற்பை பெற்று, மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இது YouTube பார்வைகள், சமூக ஊடகங்கள் தாண்டி ரேடியோ ஸ்டேஷன்களிலும் வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது. நையாண்டியான விஷயங்களை கொண்டிருந்த இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது. வெளியான சில மணி நேரத்திற்குள் ஒரு மில்லியன் பார்வைகளை கடந்திருப்பது என்பது மிகவும் சுவாரசியமான தகவல்.

இது குறித்து இயக்குனர் கே.ஆர் பிரபு கூறும்போது, “ட்ரைலருக்கு எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட வரவேற்பை ரசிகர்கள் கொடுத்தது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். உண்மையில், டிரெய்லரில் பார்த்தது கொஞ்சம் தான், படத்தில் இத்தகைய நையாண்டியான விஷயங்கள் நிறைய உள்ளன. அது வெறுமனே சிரிக்க வைக்காமல், ஆழமாக சிந்திக்கவும் வைக்கும். சிவகுமார் சார் போன்ற ஒரு லெஜண்ட் LKG படத்தின் டிரெய்லரை, அதுவும் இளையராஜா 75 போன்ற ஒரு பெருமைக்குரிய விழாவில் வெளியிட்டது எங்கள் ஒட்டுமொத்த குழுவுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. எங்கள் திரைப்படத்தின் டிரெய்லர் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தில் வெளியானதும், ஒட்டுமொத்த ரசிகர்களும் அதை முழுமையாக ரசித்ததும் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதே போன்ற ஒரு அனுபவத்தை நல்ல கதையுடன் கொடுக்க நாங்கள் முயற்சித்திருக்கிறோம். ரசிகர்கள் அதை திரையரங்குகளில் ரசிப்பார்கள் என நம்புகிறோம்” என்றார்.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கியிருக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி, பிரியா ஆனந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, ராம்குமார், அரசியல்வாதி நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், மயில்சாமி, சந்தானபாரதி மற்றும் இன்னும் சில முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். லியோன் ஜேம்ஸ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

பேட்ட & விஸ்வாசத்தை விட பேரன்பு பெருசா ஓடனும்.. ; மிஷ்கின் ஆசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீயோன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பொது நலன் கருதி’.

இதில் கருணாகரன், யோக் ஜபீ, இமான் அண்ணாச்சி, சந்தோஷ் பிரதாப், ஆதித், அனு சித்தரா, சுபிக்ஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதன் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சற்றுமுன் சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

இவ்விழாவில் மிஷ்கின் பேசியதாவது…

பொது நலன் கருதி படத் தலைப்பிலேயே இயக்குனரின் நல்ல எண்ணம் தெரிகிறது.

பத்திரிகையாளர்கள் நல்ல படத்திற்கு எப்போதும் ஆதரவு தருவார்கள்.

அண்மையில் பேரன்பு படம் பார்த்தேன்.

இதுபோன்ற நல்ல படங்களை பார்த்து விட்டு அது போன்ற வாதம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் சிறிது நேரம் நம் குழந்தைகளை விளையாட சொல்ல வேண்டும்.

பேட்ட & விஸ்வாசம் படங்கள் ஓடனும். அதே வேளையில் பேரன்பு படம் பெருசா ஓடனும்..” என்று பேசினார் மிஷ்கின்.

சிவகார்த்திகேயன் ஒரு Mr லோக்கல்; நயன்தாரா ஒரு அதிசயம்.. ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படத்தின் தலைப்பு என்பது ஏறத்தாழ ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கும். குறிப்பாக சிவ கார்த்திகேயன் படங்களின் தலைப்பு மக்களை எளிதாக ஈர்க்கும் வகையில் இருக்கும். அதை போலவே இயக்குனர் ராஜேஷ் படங்களின் தலைப்பும் பரபரப்பு கூட்டும் தலைப்பாகவே இருக்கும். ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் படங்களும் அவ்வாறே சுவாரசியமான தலைப்பை கொண்ட படங்களாகவே இருக்கும்.

இவர்கள் மூவரும் இணைந்து பணிபுரியும் படம் என்னும் போது தலைப்பை பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக வே இருக்கும். அந்த எதிர்பார்ப்பை ஈடு செய்யும் வகையில் தற்போது தயாரிப்பில் இருக்கும் இவர்கள் இணையும் படத்துக்கு “மிஸ்டர் லோக்கல்” என தலைப்பு இடப்பட்டு இருக்கிறது. இணைய தளத்தில் இந்த தலைப்பு வெளி வந்த உடனே அதற்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

” இந்த படத்துக்காக பல்வேறு தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டு வந்தது.ஆனால் இந்த படத்தின் கதைக்கு “மிஸ்டர் லோக்கல்” என்கிற தலைப்பு தான் பொருத்தும் என்பது எங்கள் அனைவரின் ஏகோபித்தக் கருத்தாகும். எங்கள் கதாநாயகன் சிவ கார்த்திகேயன் திரையில்.தரும் சக்தி மிகவும் postive ஆனது. அவரது இதை பார்க்கும் போது, ஒரு இயக்குனராக அவருடன் போட்டி போட வேண்டும் என்கிற ஆசை தூண்ட படுகிறது. கதாநாயகி நயன்தாரா ஒரு அதிசயம்.திரையில் அவர் அற்புதங்கள் செய்கிறார்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா எங்களுக்கு ஒரு மிக பெரிய தூண். அவரது செயல் திறனும், ஒரு கடை நிலை தொழில் நுட்ப கலைஞரிடம் கூட அவர் வைத்து இருக்கும் தொழில் ரீதியான உறவு அவரது வெற்றிக்கு விதை என்றால் மிகை ஆகாது.

“மிஸ்டர் லோக்கல் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகளும் நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது. கோடை விடுமுறைக்கு “மிஸ்டர் லோக்கல்” திரைக்கு வர ஏற்பாடுகள் துரித வேகத்தில் நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது” என்கிறார் இயக்குனர் ராஜேஷ்.

ரெண்டா.? எப்பவும்ஒரே சூப்பர்ஸ்டார் ரஜினி; சுஹாசினியை கண்டித்த இளையராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியை வெகு விமரிசையாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னையில் 2 நாட்களாக நடத்தியது.

இன்று பிப்ரவரி 3ஆம் தேதி இதன் இறுதி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ரஜினி, கமல், ஷங்கர், விக்ரம், விஜய்சேதுபதி, கார்த்தி மற்றும் தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், மோகன்பாபு ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

மலையாள சினிமாவில் இருந்து டைரக்டர் சித்திக், நடிகர் நரேன் கலந்துக் கொண்டார்.

இந்த விழாவில் ரஜினிகாந்த் மேடையேறினார்.

அப்போது சுஹாசினி பேசும்போது… இரண்டு சூப்பர் ஸ்டார்கள் மேடையில் உள்ளனர். ஒருவர் இசை சூப்பர் ஸ்டார் இளையராஜா மற்றொருவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி என்றார்.

உடனே இடைமறித்த இளையராஜா அவர்கள்… ஏம்மா.. மேடையேறிட்ட என்ன வேனாலும் பேசுவீங்களா? சினிமான்னா அது ஒரே சூப்பர் ஸ்டார் தான். அது எப்பவுமே ரஜினிதான் என்று சுஹாசினியை கண்டித்து பேசினார் இளையராஜா.

என் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்..; ஷங்கர் சொன்ன சீக்ரெட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அவரின் திரைத்துறை சாதனைகளை கௌரவிக்கும் வகையிலும் இளைராஜா 75 என்ற நிகழ்ச்சியை 2 நாட்களாக சென்னையில் நடத்தியது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.

இன்று பிப்ரவரி 3ஆம் தேதி இதன் இறுதிநாள் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

அப்போது இளையராஜைவை பற்றி பேச டைரக்டர் ஷங்கர் மேடையேறினார்.

இந்த விழாவை நடிகை ரோகினி தொகுத்து வழங்கும் போது, இளையராஜா மற்றும் ஷங்கர் கூட்டணியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். என்றார்.

உடனே அதை மறித்து, யாருடன் பணி புரிய வேண்டும் என்பது ஷங்கரின் விருப்பம் என்றார்.

அதன்பின்னர் ஷங்கர் பேசும்போது…

ஜென்டில்மேன் படத்திற்கு இசையமைக்க இளையராஜாவை முடிவு செய்துவிட்டு அவரை சந்திக்க அனுமதியும் வாங்கிவிட்டேன்.

ஆனால் அவர் மீது பயம். எப்படி வேலை செய்வது? என்பதால் அதன் பின்னர் சந்திக்கவில்லை.

ஆனால் அரசுக்காக நான் இயக்கிய வருமான வரி விழிப்புணர்வு விளம்பரத்திற்கு இளையராஜா தான் இசையமைத்தார். அதில் கமல் நடித்திருந்தார்.

அந்த இசையில் சில திருத்தங்களை சொன்னேன். உடனே அவரும் எந்த வித தயக்கமுமின்றி செய்து கொடுத்தார்.” என்று பேசினார்.

இளையராஜா 75 நிகழ்ச்சியில் மகள் ஸ்ருதியுடன் இணைந்து பாடிய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜாவை கவுரவிக்கும் விதமாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், இளையராஜா 75 என்ற பாராட்டு நிகழ்ச்சி சென்னையில் 2 நாட்களாக நடந்தது.

இதில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், தனது மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து பாடல்களை பாடினார்.

ஹேராம் படத்திலிருந்து ஹே ராம் ராம் பாடல்களை பாடினார். இதில் சில திருத்தங்களை இளையராஜா அதையும் சரி செய்து பாடினார்.

சிவப்பு ரோஜாக்கள் படத்தில் இடம்பெற்ற, நினைவோ ஒரு பறவை என்ற பாடலை பாடினர்.

விரும்பாண்டி படத்திலிருந்து உன்ன விட இந்த உலகத்துல என்ற பாடலை பாடகி சித்ரா உடன் இணைந்து பாடினார்.

ஒவ்வொரு பாடல்களின் போதும் சில சுவாரஸ்யமான நினைவுகளை கமலும், இளையராஜாவும் பகிர்ந்து கொண்டது நிகழ்ச்சியின் சிறப்பு.

More Articles
Follows