ப்ளுசட்டை மாறனுக்கு லாரன்ஸ்-ஜிவி.பிரகாஷ் கடும் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விவேகம் படத்தை விமர்சிக்கும் போது அதை கடுமையாக விமர்சித்திருந்தார் ப்ளுசட்டை புகழ் மாறன்.

எனவே இவருக்கு அஜித் தரப்பிலும் திரையுலகினர் தரப்பிலும் பல்வேறு கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதகுறித்து இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அதில். ‘நான் விவேகம் படம் பார்த்தேன். அஜீத்தின் கடின உழைப்பிற்கு தலைவணங்குகிறேன். படம் பற்றி நல்லவிதமான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், ப்ளூசட்டை மாறன் என்பவர் மோசமாகவும், மனதில் வலியை ஏற்படுத்தும் வகையிலும் விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார்.

சினிமாவையும், சினிமா துறையினரையும் இழிவுபடுத்தும் ப்ளூசட்டை மாறன் மீது தயவு செய்து சினிமா துறையினர் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து, நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் அவர்களும் தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதில்… ஒரு படம் வெளியானால் குறைந்தபட்சம் 4 நாட்களுக்கு பிறகே விமர்சனம் செய்ய வேண்டும் என அறிவுறுத்த வேண்டும்.

மேலும் ஒரு படம் எப்படி உள்ளது? என்பதை மக்கள் பார்த்து தெரிந்துக் கொள்ளட்டும்” என விவேகம் படத்திற்கு ஆதரவாக தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

Lawrence and GV Prakash condemned Blue Sattai Maaran in Vivegam review issue

5வது முறையாக அவருடன் நடிக்க ஆசைப்படும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் இருந்தாலும் ஒரு சில காமெடியர்களுக்கு மட்டும் ஹீரோவுடன் செம கெமிஸ்ட்ரி இருக்கும்.

அதற்கு உதாரணமாக சத்யராஜ்-கவுண்டமணியை சொல்லலாம். இவர்களின் லொள்ளு நடிப்பை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

இவர்களின் வரிசையில் தற்போது சிவகார்த்திகேயன்-சூரி கூட்டணியை சொல்லலாம்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரஜினிமுருகன், இவர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது பொன்ராம் இயக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சூரி தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அவருக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவிக்கும் போது, ஐந்தாவது முறையாக உங்களுடன் இணைந்து நடிக்க காத்திருக்கிறேன் சூரி அண்ணா என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இன்று சிவகார்த்திகேயன் தன் 7வது ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகிறார் என்பதும் இங்கே கவனித்தக்கது.

Sivakarthikeyan wish to act with Soori for 5th time

Sivakarthikeyan‏Verified account @Siva_Kartikeyan
Happy birthday to my dear annan @sooriofficial everyday wit him wil be a celebration..waiting to continue our fifth film

கோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் இணையும் சாயிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயம்ரவி நடித்த வனமகன் படத்தில் நாயகியாக நடித்தவர் சாயிஷா.

இப்படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இவர் பிரபல நடிகர் திலீப் குமாரின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த படத்தையடுத்து பிரபுதேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி நடிக்கும் ’கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இந்நிலையில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இயக்குனர் கோகுல் இயக்கவுள்ள படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இப்படத்தின் கதைப்படி இவர் பாரிஸ் நகரில் பிறந்து வளர்ந்த பெண்ணாக வருகிறாராம் சாயிஷா.

இப்படத்திற்கு ஜீங்கா (Junga) எனப் பெயரிட்டுள்ளனர்.

கருப்பன், 96, அநீதி கதைகள், சீதக்காதி, சைரா (தெலுங்கு) ஆகிய படங்களில் நடித்து வரும் விஜய்சேதுபதி அப்படங்களை முடித்துவிட்டு இப்படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

Sayyeshaa romance with VijaySethupathi for Gokuls project Junga

வரிசையில் நின்று வாழ்த்திய விஜய்; பெருமிதம் கொள்ளும் நட்ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஷால் தங்கை ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மாலை திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் நடிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த திருமண வரவேற்பு விழாவில் நடிகர்கள் விஜய், நட்ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

இதுகுறித்து ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது…

N.Nataraja Subramani‏ @natty_nataraj 2m2 minutes ago

மனித நேயம் நிறைந்த தளபதி, வரிசையில் நின்று தான் வாழ்த்துவோம் என்கின்ற அடக்கம்,பெருமிதத்துடன் கர்வம் கொள்கிறேன், அவருக்கு ஒளிப்பதிவு செய்ததில். என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
விஜய்யின் புலி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் நட்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Nataraj talks about Vijay in Vishal sister Marriage reception

விஷால் தங்கை திருமண வரவேற்பு; ரஜினி-சிவகுமார் நேரில் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகர் சங்க செயலாளருமான நடிகர் விஷால் தங்கை ஐஸ்வர்யா மற்றும் உம்மிடி க்ரிதிஷ் ஆகியோரின் திருமணம் சென்னையில் இன்று காலை நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர்கள், கதிரேசன், ஞானவேல் ராஜா, சத்யஜோதி தியாகராஜன், ராக்லைன் வெங்கடேஷ், ரவி பிரசாத், நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி, சுந்தர்.சி, குஷ்பூ, ஹன்ஸ்ராஜ் சக்சேனா உட்பட ஏராளமான திரையுலகினர் மற்றும் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதனையடுத்து இன்று மாலை திருமண வரவேற்பு நடைபெற்றது.

இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், நட்ராஜ், சிவக்குமார் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் நேரில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Rajinikanth and Sivakumar wishes for Vishal sister Aishwarya marriage

ஸ்டண்ட் கலைஞர்களுக்கு உதவ தயார்; எம்ஜிஆர் வழியில் ரஜினி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமா மற்றும் டிவி ஸ்டண்ட் கலைஞர்கள் பொன்விழா (1966 – 2017) நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் ரஜினிகாந்த், சிவகுமார், மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, சூர்யா, கார்த்தி, விஷால், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜீவா, விக்ரம்பிரபு, விவேக்,ஆர்யா உள்ளிட்ட நடிகர்ளும் எஸ்பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், பி.வாசு, ஷங்கர் உள்ளிட்ட இயக்குனர்களும் கலந்துகொண்டனர்.

விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது…

எந்த நாட்டிலும் ஆக்‌ஷன் படங்கள்தான் அதிக வசூலை பெற்றுத் தருகிறது.

பணம் சம்பாதிக்க பல வழிகள் இருக்கிறது. சிலர் பணத்தையே மூலதனமாக வைத்து பணம் சம்பாதிக்கவும் செய்கிறார்கள். அந்த வகையில் உடம்பை மூலதனமாக வைத்து பணம் சம்பாதிக்கக்கூடிய தொழில் ஸ்டண்ட் கலைஞர்கள் தொழில்.

எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த யூனியனின் பொன் விழாவை அவரது நூற்றாண்டின்போது கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

எம்ஜிஆர் சினிமாவை விட்டு விலகியபோது கூட சண்டை கலைஞர்கள் பலருக்கு மாத சம்பளம் கொடுத்து உதவினார். ஸ்டண்ட் கலைஞர்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்னைக் கேளுங்கள். உங்களுக்காக என் வீட்டுக் கதவு திறந்தே இருக்கும்.

சினிமாவில் மற்ற கலைஞர்கள் வியர்வை சிந்தி உழைக்கிறார்கள். சண்டைக் கலைஞர்கள் மட்டும்தான் வியர்வையுடன் ரத்தத்தை சிந்தி உழைக்கிறார்கள்.

அவர்களின் உயிரையே பணயம் வைக்கிறார்கள்.

அவர்கள் சண்டைக்காட்சியில் காட்டும் அக்கறையை குழந்தைகளை வளர்ப்பதிலும், படிக்க வைப்பதிலும் காட்ட வேண்டும்.” என்று ரஜினி பேசினார்.

My home door will be always open for Stunt Union says Rajinikanth

More Articles
Follows