தமிழக நன்மைக்காக காமாட்சியம்மனுக்கு யாகம்; லதா ரஜினி பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த இரண்டு ஆண்டுகளாக எப்போதும் இல்லாத அளவில் தமிழகத்தில் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன.

ஜெயலலிதா மர்ம மரணம், ரிசார்டில் எம்எல்ஏக்கள் தஞ்சம், நிலையற்ற தமிழக முதல்வர்கள், மீத்தேன் திட்டம், கூடங்குளம், ஜல்லிக்கட்டு, விவசாயிகள் போராட்டம், பஸ் கட்டண உயர்வு, ஆர் கே நகர் இடைத்தேர்தல், காவிரி மேலாண்மை, ஸ்டெர்லைட், போலீஸ் அராஜகம் இப்படி ஒவ்வொரு பிரச்சினையாக தமிழக மக்களை பாதிப்பு அடைய செய்துள்ளது.

தமிழகமே போராட்ட பூமியாக மாறிவரும் நிலையில், தமிழகத்தில் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து நன்மை நடக்க வேண்டும் என லதா ரஜினிகாந்த யாகம் செய்துள்ளார்.

காஞ்சிபுரத்திலுள்ள காமாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற யாகத்தில் லதா ரஜினிகாந்த் அவர்கள் கலந்துக் கொண்டுள்ளார்.

Latha Rajinikanth conducted Yaagam for welfare of TN peoples

பிரியா கண்ணடித்த மாணிக்க மலராய பாடலை நீக்க மீண்டும் வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள படம் “ஒரு அடார் லவ்”.

இந்த படத்தில் இடம் பெற்ற “மாணிக்க மலராய பூவி” என்ற பாடலும் அந்த பாடலில் பிரியா வாரியர் கொடுத்த ஐப்ரோ எக்ஸ்பிரசன்ஸ்ம் அவரை உலகளவில் பிரபலமாக்கியது.

இதுவரை படத்தின் பாடல்கள் மற்றும் சில காட்சிகள் மட்டுமே வெளியாகியுள்ளது.

இதனிடையில் இந்த பாடலை எதிர்த்து பிரியா மற்றும் டைரக்டர் மீது கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் படக்குழுவுக்கு ஆதரவாக கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த இருவர் தற்போது இப்பாடல் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அவர்களின் மனுவில், “ஒரு அடார் லவ்’ படத்தில் வரும் பாடல் முகம்மதுவையும் அவரது மனைவி கதீஜாவையும் இழிபடுத்துவது போல உள்ளது.

இஸ்லாமியர்களின் உணர்வை அவமதிக்கும் அந்த பாடலை உடனே படத்தில் இருந்து நீக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கு குறித்து டைரக்டர் ஓமர்லூலு கூறியதாவது:-

மலபாரில் உள்ள முஸ்லிம்கள் இந்த பாடலை பல வருடங்களாக கிட்டதட்ட 40 ஆண்டுகளாக பாடி வருகிறார்கள்.

அவர்கள் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

திருமண விழாக்களில் கூட அந்த பாடலை பாடுகிறார்கள். அப்படி இருக்கும்போது, அந்த பாடலை இப்போது திடீரென ரத்து செய்ய சொல்வது ஏன்?” என கேட்டுள்ளார்.

Manikya malaraya poovi song to be removed from oru adaar love movie Case filed

ரஜினியுடன் மோத பாலிவுட் நடிகரை அழைக்கும் கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளார் கார்த்திக் சுப்பாராஜ்.

இப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் ரஜினிகாந்த்துடன் முதன்முறையாக இணைகிறார் அனிருத்.

சினிமா ஸ்டிரைக் நிறைவு பெற்ற பின் காலா படம் ரிலீஸ் ஆனவுடன் இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார்.

இதற்காக 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ரஜினிக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு மும்பை சென்ற கார்த்திக் சுப்பாராஜ், நவாஸுதீனிடம் கதை சொல்லியதாகவும் அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

50க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் நடித்தவர் நவாஸ்.

மேலும் ‘தலாஷ்’ படத்தில் நடித்தமைக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை அவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே ரஜினிக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிப்பார் என தகவல்கள் வந்தன.

ஒருவேளை படத்தில் இரண்டு வில்லன்கள் இருப்பார்களோ? என்ற சந்தேகமும் தற்போது வலுத்துள்ளது.

Nawazuddin Siddiqui will be baddie in Rajini and Karthik Subbaraj movie

சபதம் எடுத்துருக்கேன் அதான் நடிகர் சங்க போராட்டத்தில் கலந்துக்கல.. : பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழ் திரையுலகினர் நேற்று மவுன அறவழிப் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் திரையுலகை சார்ந்த பல்வேறு கலைஞர்கள் கலந்துக் கொண்டனர்.

ஆனால் இதில் தமிழ் உணர்வாளரும் இயக்குனருமான பாரதிராஜா கலந்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது அதற்கான விளக்கம் கொடுத்தார் பாரதிராஜா.

அவர் கூறியதாவது…

“மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு நடிகர் சங்கம் சென்னை ஒன்றே சினிமாவின் மையமாக இருந்தது.

ஆனால், இன்று எல்லாருமே தனித்தனியாக அவர்களுக்கென அமைப்பு வைத்து பிரிந்து சென்றுவிட்டனர்.

தமிழ்நாட்டில் மட்டும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயர் இதுவரை மாற்றப்படவில்லை.

எனவே, இந்தப் பெயரை மாற்றும் வரை அதுசார்ந்த எந்த நிகழ்ச்சிகளிலும் நான் கலந்துகொள்ள மாட்டேன் என்று சபதம் எடுத்திருக்கேன்” என கூறினார்.

ஆப்சென்ட்டான அஜித்தால் அப்செட்டான ரசிகர்கள்; என்னாச்சு தல..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவைத் தாண்டியும் நடிகர் அஜித்துக்கு ரசிகர்கள் உள்ளனர்.

அதற்கு காரணம் அவரது உழைப்பு, வளர்ச்சி, நேர்மை, வெளிப்படைத் தன்மை ஆகியவைத்தான்.

ஆனால் சில காலமாக தான் சம்பந்தப்பட்ட துறை சார்ந்தோ விழாக்களிலோ அல்லது தமிழர்களின் நலனுக்காக நடைபெறும் நிகழ்வுகளிலோ அவர் கலந்துக் கொள்ளாமல் இருப்பது அவரது ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகம் பல்வேறு பிரச்சினைகளை சநித்து வருகிறது.

ஆனால் எந்தவொரு பிரச்சினைக்கும் அஜித் மௌனம் கலையவில்லை.

ஜல்லிக்கட்டுக்காக நடிகர் சங்கம் போராட்டம் நடத்திய போது கூட ஒன்றும் பேசாமல் கலந்துக் கொண்டு சென்றார்.

அதன்பின்னர் நடிகர் சங்கத்தின் கலை விழா, சங்க கட்டிட பூஜை என எதிலும் கலந்துக் கொள்ளவில்லை.

நடிகர் சங்கத் தேர்தலிலும் அவர் வாக்களிக்க வரவில்லை.

நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்துக் கொண்டே அவர் எதிலும் கலந்துக் கொள்வதிலை.

இவை ஒரு புறம் இருந்தாலும் அவரை வாழவைத்த தமிழக மக்கள் பிரச்சினைகளுக்காக நடைபெறும் போராட்டத்தில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை.

இது மக்கள் மத்தியில் அவர் மீதான வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு விளக்கமளிக்கும் வகையில் ஓர் அறிக்கை கூட அஜித் தரப்பில் இருந்து இதுவரை வெளியாகவில்லை அவரது ரசிகர்கள் அப்செட்டாகியுள்ளனர்.

விஜய்யை ரஜினி இழுக்க தனுஷை இழுத்தார் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் தினம் தினம் நடந்து வருகிறது.

மக்களின் பிரச்சினையில் பங்கேற்கும் வண்ணம் நடிகர் சங்கம் மௌன போராட்டத்தை நடத்தியது.

இதில் சிவகுமார், இளையராஜா, எஸ்பி முத்துராமன், வைரமுத்து, கமல், ரஜினி, விஜய், சத்யராஜ், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால், விஜய்சேதுபதி, ஜிவி. பிரகாஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

அப்போது மேடையேறிய பல பிரபலங்கள் ரஜினி, கமலிடம் பேசிக் கொண்டிருந்தனர்.

இளையராஜா அருகில் வந்தபோது கமல், ரஜினி ஆகியோர் இணைந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

அப்போது ரஜினி அருகில் இருந்த விஜய்யை அருகில் வர இழுத்தார்.

அப்போது விஜய்க்கு அருகில் நின்று கொண்டிருந்த சிவகார்த்திகேயன் தனக்கு அருகில் அந்த பக்கம் இருந்த தனுஷை இழுத்து விஜய்க்கு அருகில் நிற்க சொன்னார்.

தனுஷ் முதலில் மறுத்தபோதும் அவரை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்தார். உடனே தனுஷ்ம் வந்துவிட்டார். இவர்களுக்கு இடையில் எஸ்ஜே. சூர்யா நின்றுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் அனைவரும் இணைந்த வண்ணம் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

இதுநாள் வரை தனுஷ்க்கும் சிவகார்த்திகேயனுக்கு உரசல் என சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இந்த காட்சியை பார்த்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர்.

Dhanush and Sivakarthikeyan join together at Nadigar Sangam protest

(கீழே உள்ள போட்டோவில் பார்த்தால் தனுஷை சிவகார்த்திகேயன் இழுப்பது தெரியும்..)

More Articles
Follows