ஹன்சிகாவை ஏன் இப்படி காட்டுறாங்க தெரியல…? லட்சுமி ராமகிருஷ்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகையாக தன்னை அறிமுகப்படுத்திய கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது படங்களை இயக்கி வருகிறார்.

இவரது அம்மணி படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

“ஹன்சிகா ஒரு நல்ல திறமையான நடிகை. அவருடன் ஒரு படத்தில் ஒர்க் பண்ணியிருக்கிறேன்.

அவங்ககிட்ட அவ்ளோ திறமையிருக்கு. ஆனா அவங்கள எப்பவும் வெறும் அழகா மட்டும் காட்டிட்டு இருப்பாங்க.

அவங்க திறமைக்கு உள்ள மாதிரி ஒரு படத்தை டைரக்ட் பண்ணனும். என்றார்.

தனுஷ்-சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த அக். 14ஆம் தேதி, வெளியான அம்மணி படம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் இவரது வருங்கால படங்கள் தொடர்பாக பேட்டியளித்தார்.

அப்போது பேசியதாவது…

தனுஷின் யதார்த்த நடிப்பு ரொம்ப பிடிக்கும்.

சோஷியல் மெசேஸ் சொல்ற படங்களை எடுக்கனும்னா கொஞ்சம் பெரிய ஸ்டார்ஸ் வேனும். சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி போன்ற நடிகர்கள் இருந்தால் அப்படி சொன்னா ரீச் கிடைக்கும்” என்றார்.

விஜய்யுடன் தீபாவளி கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கிவரும் பைரவா படத்தில் விஜய்யுடன் நான்கு நாயகிகள் நடித்து வருகிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

விரைவில் சில காட்சிகளை படப்பிடிக்க, வெளிநாடு செல்லவிருக்கிறார்கள்.

தற்போது அதற்கான முழுவிவரம் வந்துள்ளது.

விஜய், கீர்த்திசுரேஷ் நடனம் ஆடும் பாடலின் படப்பிடிப்பை சுவிட்சர்லாந்து நாட்டில் படம் பிடிக்கிறார்கள்.

அக்டோபர் 22 முதல் 29 வரை (தீபாவளி) வரை அங்கு சூட்டிங் நடைபெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே பைரவா படக்குழுவினர் தீபாவளியை விஜய்யுடன் கொண்டாடுவார்கள் எனத் தெரிகிறது.

ரஜினியை சந்திக்க சென்னை வந்த தாய்லாந்து இளவரசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் சூட்டிங், மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் நடைபெற்றது.

அப்போது ரஜினிக்கு மலேசியா, தாய்லாந்து மக்களும் அரசாங்கமும் உற்சாக வரவேற்பை தந்தனர்.

அப்போது ரஜினியுடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக அவரை சந்திக்க, தாய்லாந்து இளவரசி ராஜ்தாராஸ்ரீ ஜெயம்குரா சென்னை வந்துள்ளார்.

அப்போது ரஜினியிடம் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.

மேலும் தாய்லாந்தில் மிகப்பெரிய அளவில் ரஜினிக்கு ரசிகர் வட்டம் உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இவர்களின் சந்திப்பின் போது, வி கிரியேஷன்ஸ் தலைமை நிர்வாகி பரந்தாமன் தாணு உடன் இருந்தார்.

ஜெய்-ப்ரணிதா காதலை சேர்த்து வைக்கிறாராம் அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இறைவி படத்தில் அருமையான நடிப்பை கொடுத்த அஞ்சலி, தற்போது தரமணி, பேரன்பு, காண்பது பொய், பலூன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் பலூன் படத்தில் ஜெய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் மேலும் ஒரு படத்தில் ஜெய்யுடன் நடிக்கிறாராம்.

எனக்கு வாய்த்த அடிமைகள் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் ஜெய்க்கு ஜோடியாக பிரணிதா நடித்து வருகிறார்.

மகேந்திரன் ராஜா மணி இயக்கும் இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் ஜெய், பிரணிதா காதலை சேர்த்து வைக்கும் கெஸ்ட் ரோலில்தான் அஞ்சலி நடிக்கிறாராம்.

இப்படத்தில் கெஸ்ட் ரோல் இருப்பது தெரிந்து தானாகவே முன்வந்து அஞ்சலி நடிக்க ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் வெற்றிக்கு காரணமான மூன்று பாலிசிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு வளர்ந்து வரும் நடிகர், முன்னணி நடிகர்களின் வரிசைக்கு வர குறைந்தது 10 வருடங்களாவது ஆகும்.

ஆனால் ஐந்து வருடங்களில் அதுவும் பத்தே படங்களில் அந்த வரிசையில் இடம் பிடித்திருப்பவர் சிவகார்த்திகேயன்.

இவரது ரெமோ படத்தின் மாபெரும் வெற்றி கோலிவுட்டில் பல ஆச்சரியங்களை எழுப்பியுள்ளது.

இந்த வெற்றிக்கு இவரது 3 பாலிசிகளே காரணம் என கூறப்படுகிறது.

அவை…

  1. ஒரு நேரத்தில் ஒரு படத்தை ஒப்புக் கொண்டு அதில் முழு கவனத்தை கொடுத்து, அதற்கான புரோமோஷனில் ஈடுப்படுகிறார். அதே சமயம், சம்பளத்தை இரண்டாம் பட்சமாக வைத்துக் கொண்டு தனக்கான கதையை தேர்ந்தெடுத்து வருவது.
  2. இவரது படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளை பெரும்பாலும் தவிர்த்தே வருகிறார்.
  3. குழந்தைகள் படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளை தவிர்த்து விடுகிறாராம்.
More Articles
Follows