தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது சொந்தத் தயாரிப்பில் இப்படத்தை எடுத்துள்ளார்.
கடந்த 36 நாட்களாக தமிழ்த் திரையுலகில் எந்தவொரு புதுப்படம் வெளியாகவில்லை.
ஆனால் தன் மெர்குரி திரைப்படம் ஏப்ரல் 13ல் ரிலீஸ் ஆகும் எனவும் அதன் ட்ரைலர் இன்று வெளியாகும் எனவும் அறிவித்திருந்தார்.
இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்க, அதன்பின்னர் ட்ரைலரை வெளியீட்டை தள்ளி வைப்பதாகவும் ஆனால் படம் ஏப்ரல் 13ல் வெளியாகும் எனவும் தெரிவித்தார்.
.
மேலும் மெர்க்குரி சைலண்ட் படம் என்பதாலும், என் படத்திற்கு ரத்தம், வியர்வை சிந்தி உழைத்த படக்குழுவினருக்காகவும் படத்தை வெளியிட்டாக வேண்டிய சூழலில் இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
இதற்கும் திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சற்று முன்பு விளக்கம் அளித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
அதில்…ஸ்ட்ரைக் நிறைவடையும் வரை படத்தை வெளியிடமாட்டோம். ஆயிரக்கணக்கான திரையுலகினரைப் போலவே நாங்களும் காத்திருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இது வசனங்களே இல்லாத படம் என்பதால் எல்லா மொழியினரும் இதை பார்ப்பார்கள். எனவே தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் இதை வெளியிட உள்ளார் கார்த்திக் சுப்பராஜ். இதனையும் அவர் அறிவித்துள்ளார்.
