Breaking: மன்னித்து விடுங்கள் தமிழ் மக்களே; கார்த்திக் சுப்பராஜின் மெர்குரி அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 45 நாட்களாக தமிழ் சினிமா துறையிலிருந்து எந்தவொரு புதுப்படமும் ரிலீஸ் ஆகவில்லை.

தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் செய்துவருவதால், இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் பட சூட்டிங் முதல் சினிமா சம்பந்தமாக எந்த நிகழ்வும் நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே வேலையிழந்து காணப்படுகிறது.

இந்நிலையில், பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள மெர்குரி படத்தை இயக்கி தயாரித்துள்ளார் டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ்.

இந்த படத்தை வசனங்களே இல்லாமல் உருவாக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் வசனங்கள் இல்லாத காரணத்தினால் இது எல்லா மொழி ரசிகர்களுக்கும் பொதுவானதாகவே மாறியுள்ளது.

எனவே இந்த படத்தை தமிழ் புத்தாண்டு வெளியீடாக வெளியிட நினைத்திருந்தார்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு கிளம்பவே, படத்தை தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் வெளியிட போவதாக அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று தமிழகம் தவிர உலகம் முழுவதும் 1000 தியேட்டர்களில் வெளியிட்டுள்ளார்.

படத்திற்கு எல்லா தரப்பில் இருந்தும் நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில், படம் தொடர்பாக ஓர் அறிக்கை ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

இன்று நான் நல்ல நிலையில் இருப்பதற்கு தமிழ் ரசிகர்கள்தான் காரணம்.

ஆனால் இந்த படத்தை தவிர்க்க முடியாத காரணத்தால், இன்று வெளியிட்டுள்ளேன்.

ஸ்டிரைக் முடிந்த பிறகு தமிழகத்தில் வெளியிடுவேன். இதன் ஹிந்தி பதிப்பை கூட தமிழகத்தில் வெளியிட அனுமதிக்கவில்லை.

எனவே ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டுகிறேன் என்றும் என் சொந்த மாநிலத்தில் வெளியிடாமல் போனதற்கு வருந்துகிறேன் மன்னிப்பு கோருகிறேன் எனவும் அதில் தெரிவித்துள்ளார்.

தயவுசெய்து திருட்டுத்தனமாக படம் பார்க்காதீர்கள். ரிலீஸ் ஆனவுடன் தியேட்டரில் பாருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Karthik Subbaraj statement about his Mercury release today

அவரின் அந்த அறிக்கை இதோ…

மீண்டும் விஜய்சேதுபதி படத்தில் நயன்தாரா-தமன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆந்திராவில் பிரபலமான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு ‘சயீரா நரசிம்மரெட்டி’ என்ற பெயரில் பிரம்மாண்ட உருவாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகும் இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்க, சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

அண்மையில் இப்படத்திற்காக இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட போது எப்படி இருந்ததோ? அதுபோன்ற ஒரு பிரம்மாண்ட செட்டை ஐதராபாத்தில் அமைத்திருந்தனர்.

இந்த படத்தில் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியாக சிரஞ்சீவி நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

இவர்களுடன் அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், மற்றொரு கேரக்டரில் நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியிருக்கிறார்.

விஜய்சேதுபதி நடித்த நானும் ரௌடிதான் படத்தில் நயன்தாராவும், தர்மதுரை படத்தில் தமன்னாவும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் மகனுக்காக பாட்டெழுதி தயாரிப்பாளரான சிங்கமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீனியர் நடிகர்கள் தங்கள் வாரிசுகளை களத்தில் இறக்கி அழகு பார்த்து வருவது நெடுங்காலமாகவே நடந்து வரும் ஒன்றுதான்.

சிவாஜி கணேசன் தன் மகன் பிரபுவை சினிமாவில் இறக்கினார். அதன் பின்னர் பிரபு தன் மகன் விக்ரமை சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

அதுபோல் முத்துராமன் மகன் கார்த்தி, கார்த்திக் மகன் கௌதம் ஆகியோரும் சினிமாவில் கலக்கி வருகின்றனர்.

இதுபோல் பலரும் தங்கள் வாரிசுகளை சினிமாவுக்கு கொண்டு வந்து அவர்களை வழி நடத்தி செல்கின்றனர்.

சில நேரங்களில் அவர்களுக்கு சரியான படங்கள் இல்லையென்றால் தாங்களே தயாரிப்பாளராக மாறிவிடுவார்கள்.

தற்போது காமெடி நடிகர் சிங்கமுத்துவும் இந்த பாணியில் இறங்கியுள்ளார்.

அவர் தயாரிக்கும் ‘பாசக்கார கூட்டம்’ படத்தில் அவரது மகன் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்.

இதில் அனைத்து பாடல்களையும் சிங்கமுத்துவே எழுதி இருக்கிறார்.

இந்த படத்துக்கு, ஸ்டீபன் ராயல் இசையமைத்துள்ளார்.

இசையமைப்பாளர் ஸ்டீபன் ராயல் இந்த படம் பற்றி கூறியதாவது…

“சிங்கமுத்து தயாரிக்கும் தயாரிக்கும் ‘பாசக்கார கூட்டம்’ படத்தில் 50 இசை கலைஞர்களை வைத்து வித்தியாசமான பாடல் ஒன்றை பதிவு செய்திருக்கிறேன்.

சின்மயி ஹரிசரண் பாடியுள்ள ‘எங்க குலசாமி…மல்லிகைப்பூ’ பாடல் மிகுந்த வரவேற்பை பெறும்.

ஒரு பாடலின் வெற்றிக்கு இசை அமைப்பாளர் மட்டும் காரணம் அல்ல. பாடல் ஆசிரியர், பாடகர், சவுண்டு என்ஜினீயர் என்று பலருடைய திறமையும் அதில் இருக்கிறது.

இந்த படம் தவிர ‘குற்றாலம்’, ‘ஆனந்தமழை’ ஆகிய படங்களுக்கும் இசையமைத்துள்ளேன்” என்று கூறினார்.

அசுரகுருவில் விக்ரம் பிரபுவுடன் இணையும் மஹிமா நம்பியார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பக்கா’ மற்றும் ‘துப்பாக்கி முனை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விக்ரம் பிரபு.

விரைவில் இந்த படங்கள் வெளியாகவுள்ள நிலையில், இவரின் அடுத்த படம் ‘அசுரகுரு’ என அறிவிக்கப்பட்டது.

இப்படத்தை ராஜ்தீப் இயக்குகிறார்.

இதில் நாயகியாக நடிக்க மஹிமா நம்பியார் தேர்வாகியுள்ளாராம்,

அண்மையில் வெளியான ‘குற்றம்-2’3, ‘கொடி வீரன்’ ஆகிய படங்களில் மஹிமா நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

மேலும் அருள்நிதியுடன் மகிமா நடித்துள்ள ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

மழை நீரை சேமிக்க வலியுறுத்தி ரூ.25 லட்சம் கொடுத்த அக்‌ஷய்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது.

விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் இல்லாமல் விவசாயம் அழிந்து வருகிறது.

இதனால் மனம் உடையும் விவசாயிகளும் தற்கொலை செய்து வருகின்றனர்.

இது குறித்து பல்வேறு தரப்பினர் வாய் வலிக்க பேசி வந்தாலும், விவசாயிகளுக்கு ஆதரவாக யாரும் களம் இறங்கவில்லை.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் அவர்கள் மகாராஷ்டிராவின் சதாராவில் உள்ள ஒரு Pimpode Budruk என்ற கிராமத்தில் மழை நீரை சேகரிக்க வலியுறுத்தியுள்ளார்.

அதற்கு குளம் வெட்ட ரூ. 25 லட்சமும் கொடுத்து உதவியிருக்கிறாராம்.

இத்தோடு ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு அவரே நேரில் சென்று விவசாயிகளுடன் குளம் வெட்டும் பணியில் இறங்கியுள்ளார்.

Akshaykumar donated Rs 25lakhs to make well to store Rain water

Breaking: தேசிய விருது எண்ணிக்கையில் இளையராஜாவை முந்திய ஏஆர்.ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் தேசிய விருதுகள் கடந்த 64 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.

இன்று 65வது ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.

இதில் தமிழ் சினிமா துறையை சார்ந்தவர்களுக்கு 4 விருதுகள் கிடைத்தன.

ஏஆர். ரஹ்மான் 2 விருதுகளையும், பின்னணி பாடகி சாஷா திரிபாதி அவர்கள் ஒரு விருதையும் இன்னும் திரைக்கு வராத டூ லெட் படம் சிறந்த பட விருதையும் வென்றுள்ளது.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுகளில் இதுவரை இளையராஜா 5 தேசிய விருதுகளை வென்றிருந்தார். ரஹ்மான் 4 விருதுகளை மட்டுமே வென்றிருந்தார்.

இன்று இரண்டு விருதுகள் ஏஆர். ரஹ்மானுக்கு கிடைத்துள்ளதால், இளையராஜாவை முந்திவிட்டார். தற்போது அவருக்கு 6 விருதுகள் கிடைத்துள்ளது.

இதற்கு முன்பு இளையராஜா பெற்ற தேசிய விருதுகள் மற்றும் ஆண்டு

31வது ஆண்டு சகார சங்கமம் தெலுங்கு படம் 1983
33வது ஆண்டு சிந்து பைரவி தமிழ் படம் 1985
36வது ஆண்டு ருத்ர வீணா தெலுங்கு படம் 1988
57வது ஆண்டு பழசிராஜா மலையாள படம் 2009
63வது ஆண்டு தாரை தப்பட்டை தமிழ் படம் 2015

ஏஆர்.ரஹ்மான் பெற்ற விருதுகள்.. (ஏப்ரல் 13, 2018 வரை)

40வது ஆண்டு ரோஜா தமிழ் படம் 1992
44வது ஆண்டு மின்சார கனவு தமிழ் படம் 1996
49வது ஆண்டு லகான் ஹிந்தி படம் 2001
50வது ஆண்டு கன்னத்தில் முத்தமிட்டால் தமிழ் படம் 2002
65வது ஆண்டு மாம் ஹிந்தி படம் 2017
65வது ஆண்டு காற்று வெளியிடை தமிழ் படம் 2017

AR Rahman beat Ilaiyaraja in Number of National awards

More Articles
Follows