ஹிந்தி ரசிகன் எதிர்பார்ப்பையும் *கழுகு-2* பூர்த்தி செய்யும்… – சிங்காரவேலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொதுவாக நம் தமிழ்ப்படங்களை பொறுத்தவரை ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சூர்யா ஆகியோரது படங்களை இந்தியில் திரையிட வேண்டுமென்றால் நேரடியாகவே வந்து வியாபாரம் பேசி முடிக்கின்றனர்.

மற்றபடி பிற நடிகர்களின் படங்களை இங்குள்ள ஃபிலிம் மீடியேட்டர்கள் மூலம் தான் வாங்கி வருகின்றனர்.

இதனால் தயாரிப்பாளர்களுக்கு அந்த லாபம் முழுதாக சேருவதில்லை.

தற்போது தமிழக விநியோகஸ்தர்களில் முக்கியமான ஒருவரான சிங்காரவேலன் ‘கழுகு-2’ படத்தின் மூலம் இந்தி விற்பனையில் ஒரு புதிய பாதையை திறந்துவிட்டுள்ளார்.

லிங்கா படம் மூலம் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை தொடர் போராட்டத்தின் மூலம் பெற்றுத்தர காரணமாக இருந்தவர்தான் இந்த சிங்காரவேலன்.

நடிகர் கிருஷ்ணா, பிந்து மாதவி ஜோடி சேர்ந்து நடித்துவரும் கழுகு-2 படத்தின் இந்தி உரிமையை இங்குள்ளவர்கள் ரூ.15 லட்சத்திற்கு கேட்டனர்.

அதிலும் இதற்கு முன் கிருஷ்ணா நடித்த படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்பதால் இதுவே அதிகம்தான் என மீடியேட்டர்கள் கூறினார்களாம்.

ஆனால் ‘கழுகு-2’ படத்தின் இந்தி உரிமையை 75 லட்சத்திற்கு வியாபாரம் செய்து தயாரிப்பாளருக்கு சந்தோஷத்தையும் தமிழ் திரைப்பட துறை வியாபார வட்டாரத்தில் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளார் சிங்காரவேலன்.

கூடவே இது கிருஷ்ணாவிற்கான பட வாய்ப்புகளையும் அதிகப்படுத்தியுள்ளது.

அந்தவகையில் ‘கழுகு-2’ படத்தின் பட்ஜெட்டில், 25% தொகை இந்தி உரிமை மூலமாகவே கிடைத்துவிடும்.

என்கிற சிங்காரவேலன், “தமிழ் படங்களுக்கான இந்தி உரிமை வியாபாரம் நடிகர்களை மட்டும் வைத்து விலை பேசப்படுவது இல்லை சண்டைக் காட்சிகள், விலங்குகள் இடம்பெறும் காட்சிகள் படத்தில் குறைந்தபட்சம் 20% இருந்தால் அப்படத்தின் விலை அதிகரிக்கிறது, அதனை இங்குள்ள மீடியேட்டர்கள் கூறுவதும் இல்லை, அதன் பலனை தயாரிப்பாளர்களுக்கு பெற்றுத் தர முயற்சிப்பதும் இல்லை” என்கிறார்.

தென்னிந்தியாவில் தயாராகும் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களின் இந்தி உரிமைகளை அதிகளவில் வாங்கி வரும் மும்பையை சேர்ந்த கோல்டு மைன் நிறுவனத்தின் உரிமையாளர் மணிஷ் ஷாவை நேரடியாக தொடர்பு கொண்டபோதுதான் இந்த விபரங்கள் தனக்கு தெரிய வந்தது என்கிறார் சிங்காரவேலன்.

கழுகு படத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்கொலை செய்து கொள்பவர்களின் பிணங்களை உயிரை பணயம் வைத்து மீட்டெடுக்கும் தொழிலாளி கதாபாத்திரத்தில் கிருஷ்ணா, ‘கழுகு-2’ படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான மிருகமான செந்நாய்களை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இன்னும் சொல்லப்போனால் மேற்கு தொடர்ச்சி மலையை வசிப்பிடமாக கொண்டுள்ள புலி, யானை மிருகங்களும் படத்தின் பெரும்பகுதி காட்சிகளில் இடம் பெறுவதுதான் ‘கழுகு – 2′ படத்தின் இந்தி உரிமையை 75 லட்சத்திற்கு வியாபாரமாக்கியுள்ளது,

“இப்படம் இந்த அளவுக்கு வியாபாரம் ஆனதற்கு காரணம் எங்களது திட்டமிட்ட தொலைநோக்கு பார்வைதான். இந்தி பட ரசிகன் தமிழ் படங்களில் என்ன எதிர்பார்க்கிறானோ அதனை கழுகு – 2 படத்தில் கொண்டு வந்திருக்கிறோம்.

படப்பிடிப்பு தொடங்கும் முன் இதனை தயாரிப்பாளர்கள் இயக்குனருடன் இணைந்து திட்டமிட்டால் பட்ஜெட் படங்களுக்கான பிரதான வியாபாரத் தளமாக இந்தி உரிமை இருக்கும்” என்கிறார் சிங்காரவேலன்.

தான் மட்டுமே பலனடைந்தால் போதாது என நினைக்கும் சிங்காரவேலன், இதே கோல்டு மைன் நிறுவனத்தின் உரிமையாளர் மணிஷ் ஷாவுடன் சிறு பட தயாரிப்பாளர்களை சந்திக்க வைக்கும் கூட்டம் ஒன்றை நடத்தவும் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

“பெரிய பட்ஜட் படங்களை கோடிகளை கொட்டி எடுத்து சிரமப்படுவதற்கு பதிலாக கிருஷ்ணா போன்றவர்களை வைத்து குறுகிய கால பட்ஜெட் படங்களை தயாரித்தால் குறைந்த பட்ச லாபம் நிச்சயமாக கிடைக்கும்” என்கிறார்’ தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பிரிதிநிதி ‘முரளி’.

Kazhugu 2 movie hindi rights bagged by Manis sha at huge price

விவேக் படத்தில் *எழடா.. எழடா…* பாடலை பாடிய தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில், நடிகர் தனுஷ் – நடிகர் விவேக் இணை குறிப்பிடத்தக்கது.

இருவரும் இணைந்து நடித்த “படிக்காதவன்”, “உத்தம புத்திரன்”, “மாப்பிள்ளை”, “வேலையில்லா பட்டதாரி 1&2” ஆகிய அத்தனையுமே வெற்றிப் படங்களாகவே அமைந்தன.

இதனால்தான் இந்த ஜோடி தமிழ் சினிமாவின் ராசியான ஜோடிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த ராசியான ஜோடியை மீண்டும் ஒருமுறை இணைத்திருக்கிறார் தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய V.P.விஜி. இவர் தற்போது உருவாக்கி வரும் “எழுமின்” திரைப்படத்தில் நடிகர் விவேக் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான பாடலை, தனுஷ் பாடிக் கொடுத்திருக்கிறார். பாடலாசிரியர் தமிழணங்கு வரிகளில் “எழடா.. எழடா” எனத் தொடங்கும் அந்த பாடலுக்கு கணேஷ் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

நடிகர் விவேக், படத்தின் திரைக்கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் உத்வேகம் பொருந்திய இப்பாடலை, தனுஷ் பாடினால் தான் சரியாக அமையும் என பரிந்துரைத்திருக்கிறார்.

அதன்படியே தனுஷ் இந்தப்பாடலை பாடியதாக சொல்கிறார் இயக்குநர் V.P.விஜி.

மேலும், இந்த பாடலுக்கு மட்டுமல்லாமல், படத்திற்கும் தனுஷின் குரல் பலம் சேர்த்திருப்பதாக கூறுகிறார் அவர்.

தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற இப்படத்தில் விவேக், தேவயானி முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள்.

“வையம் மீடியாஸ்” சார்பில் தயாரிப்பாளர் V.P.விஜி தயாரித்து, இயக்கி இருக்கிறார்.

கணேஷ் சந்திரசேகரன் என்ற புதிய இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார்.

Actor Dhanush sings for actor Viveks movie Ezhumin

*8 தோட்டாக்கள்* பட நாயகன் வெற்றி நடிக்கும் *ஜீவி*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில நேரங்களில், ஒரு படத்தின் ஜானர் மாதிரியே படப்பிடிப்பும் மிக வேகமாக முடியும். 8 தோட்டாக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் ஜீவி படம் இதை திறம்பட நிரூபிக்கிறது.

ஒரு விறுவிறுப்பான திரில்லர் இந்த படத்திற்கேற்ப, படப்பிடிப்பும் அத்தனை வேகத்தில் ஒரே கட்டமாக முடிக்கப்பட்டிருக்கிறது.

“ஒருவேளை, படத்தின் ஜானரின் பாதிப்பு படப்பிடிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும்” என்கிறார் தயாரிப்பாளர் எம்.வெள்ள பாண்டியன். அவர் கூறும்போது…

“எல்லா புகழும் இயக்குனர் வி.ஜே. கோபிநாத் அவர்களுக்கே.

அவர் ஒரு புதுமுக இயக்குனராக இருந்தாலும், அவரது சரியான திட்டமிடல் மற்றும் அதை சமாளித்த அவரது திறமை எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒரு அறிமுக இயக்குனர் வழக்கத்திற்கு மாறான கதையுடன் அல்லது சிறப்பான கதை சொல்லும் திறனால் ஒரு தயாரிப்பாளரை ஈர்க்கக் கூடும். ஆனால் குறித்த காலத்துக்குள் படத்தை முடித்து கொடுப்பது அரிது.

ஆனால் கோபிநாத் இத்தகைய திறன்களை நிரூபித்தது நினைத்து நான் மகிழ்கிறேன்” என்றார்.

இயக்குனர் வி.ஜே.கோபிநாத் கூறும்போது, “தயாரிப்பாளரின் முழுமையான ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை.

எனக்கு படைப்பு சுதந்திரத்தை வழங்குவதில் அவர் உண்மையாக செயல்பட்டது என் வேலையை மிகவும் எளிதாக்கியது.

மேலும், அத்தகைய குணங்களை கொண்ட ஒரு தயாரிப்பாளர் கிடைப்பது எந்தவொரு இயக்குனருக்கும் ஒரு வரம்.

ஆனால் அதுவே போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகளை முடிக்கவும் மற்றும் அவருக்கு உறுதியளித்தபடி முழு படத்தை சிறப்பாக வழங்கும் கூடுதல் பொறுப்பையும் என் தோள்களில் ஏற்றி உள்ளது” என்றார்.

தீவிரமான சஸ்பென்ஸ் விஷயங்களை கொண்ட இந்த ஜீவி, விஞ்ஞானம் மற்றும் உள்ளுணர்வுகளுக்கு இடையே உள்ள மனித உணர்வுகளை பற்றி பேசியிருக்கிறது.

8 தோட்டாக்களில் தனது நடிப்பு திறனை நிரூபித்த வெற்றி, வழக்கத்திற்கு மாறான நாயகன் கதாபாத்திரத்தில் மீண்டும் ஒரு முறை நடித்திருக்கிறார்.

மேலும் இயக்குனர் அஸ்வின் நாயகியாக நடித்திருக்கும் மோனிகாவுக்கும் நன்றி கூறுகிறார். “படத்தின் சில காட்சிகளில் இந்த கலைஞர்களிடம் இருந்து திறமையான நடிப்பு தேவைப்பட்டது.

குறித்த நேரத்துக்குள் முடிக்க வேண்டிய ஒரு கட்டாயம் இருந்தாலும், அவர்கள் சிறந்த நடிப்பை கொடுத்தனர். மற்ற படங்களில் நடித்து வந்தாலும் நாங்கள் கேட்ட தேதிகளை ஒதுக்கி முழு ஆதரவு தந்தார் நடிகர் கருணாகரன் “என்கிறார் ஜீவி படத்தின் இயக்குனர் கோபிநாத்.

இறுதியாக, ஒளிப்பதிவாளர் பிரவீன் குமாருக்கு நன்றி சொல்லி பேசும்போது, “படப்பிடிப்பு முழுவதும் அவர் பிரதான ஆதரவு தூணாக இருந்தார்.

குறித்த காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டிய அழுத்தத்தில் நாங்கள் இருந்தபோது, அவரது பங்களிப்பு தான் எங்களுக்கு சிறப்பாக படத்தை முடிக்க உதவியது” என்றார்.

தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் பிரவீன் கே எல் எடிட்டராக பணிபுரிவதும், சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைப்பதும்,படத்தின் தரத்தை மேலும் உயர்த்தும். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் லைன் ப்ரொடுயூசராக முழு ஈடுபாட்டுடன் பணிபுரிவது படத்துக்கு பலம்.

பாபு தமிழ் எழுதிய திரைக்கதை மற்றும் வசனம் படத்தின் தரத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது.

A Racy Thriller By Genre Jiivi movie wrapsup Shoot

பகலில் கஜினிகாந்த்; இரவில் முரட்டு குத்து… சந்தோஷை கலாய்த்த ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள கஜினிகாந்த் அடுத்த மாதம் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இருட்டு அறையில் முரட்டு குத்து பட புகழ் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் ஆர்யா, சாயிஷா, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

அப்போது ஆர்யா பேசும்போது…

ஞானவேல்ராஜா என்னிடம் கால்ஷீட் கேட்ட உடனே ஓகே சொல்லிவிட்டேன். அதன்பின்னர் யார் டைரக்டர் என்று கேட்டேன்? நம்ம சந்தோஷ்தான் என்றார்.

ஆனால் சந்தோஷ் அவர்களோ இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை அப்போது இயக்கி கொண்டிருந்தார். அவர் உடனே எப்படி கஜினிகாந்த் படத்தை தொடங்க முடியும் என்று கேட்டார்.

அதற்கு ஞானவேல்ராஜாவே.. அந்த படத்தை இரவில் சூட்டிங் செய். இந்த கஜினிகாந்த் படத்தை பகலில் சூட்டிங் செய் என்றார்.

அதுபோல் மாறி மாறி இரண்டு படங்களையும் சூட்டிங் செய்தார் சந்தோஷ்.

ஹீரோக்கள் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கலாம். ஆனால் ஒரு டைரக்டர் எப்படி இரண்டு படங்களை ஒரே நேரத்தில் செய்ய முடியும்.

நானே எப்படிடா? இப்படி செய்கிறாய்? என்று கேட்டேன். அவன் வாட்ஸ் அப் இருக்கிறது. பக்கா ப்ளான் இருக்கிறது. செய்கிறேன் என்றான்.

அப்படி ஒரு திட்டமிட்டு எல்லாத்தையும் செய்கிறான்.

சாயிஷா நடனத்தில் செம. நான் இரண்டு மணி நேரம் பயிற்சி செய்வேன். அவர் அசால்ட்டாக 5 நிமிடத்தில் செய்துவிடுவார்.

மாஸ்டர் பாபா பாஸ்கர் சார் என்னை ஆட வைக்க சிரமப்பட்டார். நான் என்னைப் போல் சாயிஷாவை ஆட சொல்லுங்கள்” என்றேன்.

ரஜினி ரசிகருக்கு அம்மாவாக நடிக்கனும்; இம்சை அரசி சித்ரா காஜலின் ஆசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாட்ஸ் அப்பால் பலர் வாழ்க்கையை இழந்தாலும் சிலருக்கு அதுவே வாழ்க்கையை அமைத்து கொடுக்கிறது.

அதாவது ஜிமிக்கி கம்மல், பிரியா வாரியர், பிஜிலி ரமேஷ் என பலர் இதனால் பிரபலமாகியுள்ளனர்.

அதுபோல் சமீபகாலமாக இளைஞர்கள், இளம் பெண்களின் இம்சை அரசியாக மாறியிருப்பவர் சித்ரா காஜல்.

டப்ஸ் மாஸ் வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.

இவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகை என கூறியிருக்கிறார்.

மேலும் விஜய், விஜய் சேதுபதியை மிகவும் பிடிக்குமாம்.

இவருக்கு சினிமாவில் நடிக்க ஆசையாம்.

அத்துடன் ராகவா லாரன்ஸ்க்கு அம்மாவாக ஒரு முறையாவது நடிக்க வேண்டும்.

அடுத்த ஜென்மத்தில் அவர் எனக்கு பிள்ளையாக பிறக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

நடிகர் லாரன்ஸ் ரஜினியின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

*அடங்காதே* பட டப்பிங்கை தொடங்கிய சரத்குமார்-ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அடங்காதே’.

இதில் இவருக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார்.

மேலும் சரத்குமார், மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது டப்பிங் பணியை இன்று தொடங்கி இருக்கிறார்கள்.

இதில், ஜி.வி.பிரகாஷ் மற்றும் சரத்குமார் தங்களது காட்சிக்கான டப்பிங்கை பேசியுள்ளனர்.

ஸ்ரீ கிரீன் புரோடக்ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.சரவணன் தயாரித்து வரும் இப்படம் மிகவும் பிரம்மாண்டமாகவும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாகவும் உருவாக்கி இருக்கிறார்கள்

More Articles
Follows