சினிமாவில் லிஃப்ட் கிடைக்குமா..? காத்திருக்கும் ‘பிக்பாஸ்’ கவின்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு லிஃப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார் கவின்.

வினீத் பிரசாத் இயக்கி வரும் இந்த படத்தில் அம்ரிதா, காயத்ரி ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஈகா எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக ஹேப்ஸி தயாரித்துள்ளது.

லிஃப்ட் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

அண்மையில் இப்பட டப்பிங் பணிகள் முடிவடைந்திருப்பதாக கவின் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனா பிரச்சினைக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின் படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

வெள்ளித்திரையில் இந்த படம் லிப்ட் கொடுக்குமா? என காத்திருக்கிறாராம் கவின்.

கந்த சஷ்டி கவசம் பற்றி அவதூறு பேச்சு..; வேலு பிரபாகரன் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முருகப்பெருமானுக்கு உரிய பாடலான கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்தி வீடியோ வெளியிட்டது கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல்,

இதனையடுத்து பெரும் சர்ச்சை உருவானது.

நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

ரஜினியின் கண்டனத்திற்கு முன்பே இந்த கறுப்பர் கூட்ட சேனலை சேர்ந்த சுரேந்தர் நடராஜன், செந்தில்வாசன் ஆகிய இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய சோமசுந்தரம், குகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர் .

இந்த நிலையில் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன், கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் நிர்வாகிகளுக்கு ஆதரவாகவும் கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக பேசியிருக்கிறார்.

இதனையடுத்து பாரத் முன்னணி என்ற அமைப்பை சேர்ந்த சிவாஜி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வேலுபிரபாகரனை கைது செய்ய வலியுறுத்தி புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வேலுபிரபாகரன் மீது மத உணர்வை தூண்டி கலகம் ஏற்படுத்துதல், சாதி மத இன ரீதியாக பேசி பிரச்சனை தூண்டிவிடுதல், அசாதாரண சூழ்நிலையை உருவாக்குதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

தற்போது சென்னை மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் விசாரணை நடந்து வருகிறது.

காரைக்காலில் கொரோனா: துறைமுகம் மூடல்.. 10 நாட்கள் மீன் பிடிக்க தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காரைக்காலில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இன்று முதல் 10 நாட்கள் மீனவர்கள் மீன் பிடிக்க தடை: துறைமுகத்தை இழுத்து மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு:*

காரைக்கால் ஜீலை 31…

காரைக்கால் மாவட்டத்தில் 5101 நபர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்ததில் 172 நபர்களுக்கு வைரஸ் தொற்று (பாசிட்டிவ்) ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 132 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், 40 நபர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே காரைக்கால் துறைமுகத்தில் மீன் வாங்க வந்த வெளிமாவட்ட வியாபாரிகளிடமிருந்து, மீனவர்களுக்கு நோய்த்தொற்று பரவியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கிளிஞ்சல்மேடு, காரைக்கால்மேடு, மண்டபத்தூர், காளிகுப்பம் ஆகிய மீனவ கிராமங்களில் அதிகம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளதால், இன்று முதல் 10 நாட்களுக்கு காரைக்கால் மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை இழுத்து மூட அம்மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா உத்தரவு பிறப்பித்துள்ளார்

‘பேட்ட’ தொடங்கி ‘தர்பார்-அண்ணாத்த’ படத்திலும் கனெக்ட்டாகும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்த போதிலும் ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார் விஜய்சேதுபதி.

பேட்ட படத்தை முடித்து முருகதாஸ் இயக்கிய தர்பார் படத்தில் நடித்தார் ரஜினி.

தற்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.

இந்த நிலையில் ரஜினியின் இந்த இரு படங்களுடன் கனெக்டாகியிருக்கிறார் மக்கள் செல்வன்.

விஜய்சேதுபதி தற்போது நடித்து வரும் படத்திற்கு துக்ளக் தர்பார் என பெயரிடப்பட்டுள்ளது என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில் இப்பட சிங்கிள் டிராக் தகவலை வெளியிட்டுள்ளனர்.

‘அண்ணாத்தே சேதி’ என்ற பாடலை வெளியிட இருக்கிறார்களாம்.

இதிலும் அண்ணாத்த என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

அதாவது டைட்டிலை போல பாடலிலும் ரஜினி படம் பெயர் இடம் பெற்றுள்ளது.

இந்த பாடல் வருகிற திங்கட்கிழமை ஆகஸ்ட் 3 மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

இப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்க வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கிறது.

96 படப்புகழ் கோவிந்த வசந்தா இசையமைத்து வருகிறார்.

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்க முக்கியமான கேரக்டரில் பார்த்திபன் நடிக்கிறார்.

தற்போதைய நவீன அரசியல் கதைக்களத்துடன் துக்ளக் தர்பார் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

காங். தலைமைக்கு தலையாட்ட மாட்டேன்.; பாஜகவில் சேர்கிறாரா குஷ்பூ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை வெளியிட்டது.

இதற்கு வழக்கம்போல ஆதரவும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில் எவரும் எதிர்பாராத வகையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு அவர்கள் பாஜக. அரசு வெளியிட்ட புதிய கல்வி கொள்கையை வரவேற்றுள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில்.. புதிய கல்வி கொள்கை வரவேற்கப்பட வேண்டிய ஒரு நகர்வு என பதிவிட்டு இருந்தார்.

இதனால் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு உருவானது.

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, குஷ்புவுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்

மேலும் குஷ்பூ பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் இந்த தகவலை குஷ்பு மறுத்துள்ளார்.

காங். தலைமைக்கு தலையாட்டும் தொண்டனாக ஒருபோதும் இருக்க மாட்டேன் என்றும், நாட்டின் குடிமகனாக கருத்தை வெளியிடுவேன் என குஷ்பு வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உருவாகுகிறது.. தமிழக முதல்வர் சம்மதம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் 1200-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

நடிகர் விஷால் தலைவராக இருந்து வந்த நிலையில் பதவிகாலம் முடிவடைந்துள்ளது.

விரைவில் இந்தச் சங்கத்திற்குத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா தலைமையில் தலைமையில் ஒரு அணி மற்றும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணி ஆகியவை போட்டியிட உள்ளன.

மேலும் விஷால் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட உள்ளது.

மேலும் தயாரிப்பாளர் தானு தலைமையில் ஒரு அணியும் களத்தில் இறங்கவுள்ளது.

இந்தச் சங்கத்தில், 1200 தயாரிப்பாளர்கள் இருந்தாலும் கிட்டதட்ட 200 தயாரிப்பாளர்கள் படத்தை தயாரித்து வருகிறார்கள்.

மற்றவர்கள் தற்போது படத் தயாரிப்பிலிருந்து ஒதுங்கியே இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தொடர்ச்சியாக படம் தயாரிப்பவர்கள் நலனுக்காக புதிய சங்கம் ஒன்றை உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புதிய சங்கத்துக்கு பாரதிராஜா தலைவராகவும் சிவா செயலாளராகவும் சத்யஜோதி தியாகராஜன் பொருளாளராகவும் செயல்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இச்சங்கத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைப்பார் எனவும் தெரிய வந்துள்ளது.

தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை பிரபல தயாரிப்பாளர்கள் இணைந்து தாய்ச் சங்கம் ஒன்றை வைத்துள்ளனர்.

தற்போது படம் தயாரிப்பவர்கள் ஒரு சங்கமாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.

எனவே அந்த பாணியில் தமிழ்த் திரையுலகம் செயல்பட உள்ளதாக கூறப்படுகிறது.

More Articles
Follows