தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அதிமுக கட்சியை எம்.ஜி.ஆர் தொடங்கினார். சிவாஜி கணேசனும் ஒரு கட்சியை தொடங்கினார். அது என்னவானது என்பது தெரியாது.
தேமுதிக கட்சியை விஜயகாந்த் தொடங்கினார்.
இவர்களுக்கிடையில் தாயக மறுமலர்ச்சி கழகத்தை பாக்யராஜ் அவர்களும், லட்சிய தி.மு.வை டி.ராஜேந்தர் அவர்களும் நாடாளும் மக்கள் கட்சியை கார்த்திக் அவர்களும் சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் அவர்களும் தொடங்கினார்கள்.
தற்போது இவர்களின் வரிசையில் இணைந்துள்ளார் நடிகர் கருணாஸ்.
இவர் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க ஆதரவுடன் திருவாடணை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவர் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். ஆனால் தற்போது இந்த அமைப்பை ஒரு அரசியல் கட்சியாக மாற்ற இருக்கிறாராம்.
விரைவில் கட்சி குறித்த முறையான அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தெரிகிறது.
