ரஜினிக்கு ஒரு மகள் கிடைப்பாரா..? காத்திருக்கும் கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய திரையுலகில் சினிமா நட்சத்திரமாக 40 வருடங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் ஒரே நட்சத்திரம் ரஜினிகாந்த்.

தற்போது அரசியல் களத்திலும் அடியெடுத்து வைத்துள்ளார்.

எனவே இவர் சினிமாவில் அதிக கவனம் செலுத்த மாட்டார் என பலர் கூறி வந்த நிலையில், திடீரென சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்தன.

இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க அனிருத இசையமைக்க, திரு என்பவர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு ஒரு மகள் கேரக்டர் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அந்த கேரக்டருக்கு தற்போது தேடுதல் வேட்டை நடந்து வருகிறதாம்.

இன்னும் சில நாட்களில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இதன் சூட்டிங் தொடங்கவிருப்பதால், அதற்குள் மற்ற கலைஞர்களை தேர்வு செய்யும் முயற்சியில் இருக்கிறாராம் கார்த்திக் சுப்பராஜ்.

அண்மைக்காலமாக கபாலி, காலா உள்ளிட்ட படங்களில் ரஜினிகாந்த் வயதான வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Karthik Subbaraj searching actress for Rajinis daughter character

Breaking: இருட்டு அறையில் முரட்டு குத்து நாயகனுடன் இணையும் முத்தையா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹர ஹர மகாதேவகி மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களின் மூலம் நடிகர் கவுதம் கார்த்திக்கு நேர் மறையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது.

இருந்தபோதிலும் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை தயாரித்த ஞானவேல் ராஜாவே கவுதம் கார்த்திக்கின் அடுத்த படத்தையும் தயாரிக்கவுள்ளதாக சற்றுமுன் அறிப்பை வெளியிட்டுள்ளார்.

இப்படத்தை மருது, கொடி வீரன் புகழ் முத்தையா இயக்குகிறார்.

சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் பிரசன்னா இசையைமைக்கிறார்.

இப்படத்திற்கு தேவராட்டம் என பெயரிட்டு இதன் பர்ஸ்ட் லுக்கை சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தை இந்தாண்டே வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Muthaiya teams up with Gautham Karthik for Devarattam

 

எனக்கு கட்-அவுட் வேண்டாம்; என் இஷ்டப்படி இருப்பேன்… கலங்கிய சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிம்பு கலந்துக் கொள்ளும் விழாக்கள் என்றால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அப்படியொரு பரபரப்பு இன்று ஏற்பட்டது.

நடிகர் விவேக், தேவயாணி இணைந்து நடித்துள்ள எழுமின் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிம்பு வந்திருந்தார். கூடவே சிம்புவின் ஏராளமான ரசிகர்களும் வந்திருந்தனர்.

சிம்பு பேசும்போது…

‘நான் பொதுவாக இசை வெளியீட்டு விழா, உள்ளிட்ட விழாக்கெல்லாம் போக மாட்டேன். விவேக் சார் இந்த படத்த பத்தி சொன்னாரு. சின்ன பசங்கள ஹீரோவாக்கி அவங்க பின்னாடி நின்னு இந்த படத்த கொடுத்திருக்கார்.

விவேக் ஒரு படத்துல நடிக்கும் போது ஒருத்தர ஒரு சீன் நடிக்க கேட்டேன். அவர் உடனே சரி என்று சொன்னார். அப்படி அவர் சொல்லலனா சந்தானம்னு ஒருத்தர் வந்திருக்க முடியாது.

நடிகர் சங்க தேர்தலின் போது, விஷாலை எதிர்த்து பேசினேன். ஆனா நடிகர் சங்க கட்டிடம் கட்டும் போது நல்ல மனசோட விஷால் என்னை அழைத்தார்.

அவருடைய மனிதாபிமானம் எனக்கு மிகவும் பிடித்தது. எல்லாரும் ஒற்றுமையா இருக்கணும்.

என்னுடைய ரசிகர் ஒருத்தன் என் மேல இருக்க அன்புல எனக்கு கட் அவுட் வச்சப்போ ஏற்பட்ட தகராறுல இறந்து போயிட்டான். அத விட எனக்கு பெரிய வருத்தம் என்னவென்றால் அந்த தகராறு விசயத்துல 9 பேர் கைதாகி இருக்காங்க.

ஒருநாள் எதார்த்தமா அவர் நண்பர்களை பார்த்தேன். போஸ்டர் ஒட்டிட்டு இருந்தாங்க. என்ன விசயம் கேட்டப்ப தான் விஷயத்த சொன்னாங்க. அந்த ரசிகர் எத்தன முறை எனக்காக கட் அவுட் வச்சிருப்பாரு.

அதனாலத்தான் அவனுக்காக போஸ்டர் ஒட்டுனேன். அத நான் பப்ளிசிட்டிக்காக பண்ணதா சொல்றாங்க. ஆனா அதுக்காகலாம் நான் பண்ணல.

எனக்கு கட் அவுட் வச்சி பால் ஊத்தி உங்க அன்பை நிரூபிக்கனும்னு அவசியம் இல்லை. உங்க மனசுல நான் இருக்கேனு எனக்கு தெரியும். இனிமே எனக்கு கட் அவுட் வைக்க வேண்டாம்.

நான் எப்பவும் என் இஷ்டப்படி தான் இருப்பேன். அது பல பேருக்கு பிரச்சினையா இருக்கு. இனி அந்த பிரச்சினை வராம பாத்துக்கிறேன். நான் லேட்டா போறதனால எல்லாருக்கும் கஷ்டம்னா நான் இனிமே லேட்டா போக மாட்டேன்’ என்றார்.

நான் என் குழந்தைய ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டேன்… சிம்பு அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விவேக் நாயகனாக நடித்துள்ள எழுமின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்துக் கொண்டார்.

அப்போது சிம்பு பேசியதாவது….

”எழுமின் படத்துல நடிச்ச பசங்கலாம் அவங்க அப்பா அம்மா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குங்க. அவங்க இல்லனா நீங்க வந்திருக்க மாட்டீங்க.

நான் என் குழந்தைய ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டேன். படிக்க கத்துக்க தான் ஸ்கூலுக்கு அனுப்பறோம். ஆனா.. அங்க யாரு மொதல்ல ஆன்சர் பண்றாங்கனு தான் பாக்குறாங்க.

பேரண்ட்ஸ்கிட்ட ஒண்ணு சொல்றேன். பசங்களுக்கு என்ன வருமோ.. அந்த திறமைய வளர்த்து விடுங்க. பொறாமை, போட்டிலாம் வேணாம்.

உங்க எல்லாருக்குமே தெரியும், என்னுடைய அப்பா, அம்மா, திறமை எல்லாத்தையும் தாண்டி, என்னோட மிகப்பெரிய பலம் என்னுடைய ரசிகர்கள் தான்.” என்று பேசினார் சிம்பு.

நடிகர் சிம்புக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்‌ஷன் ஹீரோன்னு சொல்லவே வெட்கப்படும் விஷால்; ஏன் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விவேக் நாயகனாக நடித்துள்ள எழுமின் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் சிம்பு, கார்த்தி, விஷால் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

அப்போது விஷால் பேசும்போது…

விஷால் பேசும்போது, ‘நான் ஆக்‌ஷன் ஹீரோ என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுறேன். இந்தப் படத்தில் பசங்க கலக்கி இருக்கிறார்கள்.

குழந்தைகள் எல்லோரும் தற்காப்பு கலைகள் கற்றுக் கொள்ள வேண்டும். முக்கியமா குட் டச், பேட் டச் எது என்று சொல்லி தர வேண்டும்.

இந்த படத்துக்கு கொடி அசைக்க நான் வரக்கூடாது. ஜாக்கிசான் தான் வர வேண்டும். இந்த பசங்க என்ன இன்ஸ்பையர் பண்ணிருக்காங்க. மியூசிக் நல்லா வந்திருக்கு.

விவேக் எழுதியிருக்க பாட்டு ரொம்ப நல்லாருக்கு. விவேக் உண்மையை தைரியமா பேசுவாரு. எலக்சன்ல நின்னா கண்டிப்பா MLA ஆயிடுவாரு. இந்த படத்துக்கு எல்லாரும் சப்போர்ட் பண்ணுங்க.

பசங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகள் கத்துக் கொடுங்க’ என்றார்.

விவேக் பேசும்போது, ‘எனக்கு நல்லது செய்யணும்னு விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோரை கூப்பிட்டேன். ஆனா எல்லாரும் சேர்ந்து என்ன அரசியல்ல கோர்த்து விடுறாங்க.

தமிழ்நாட்டுல கொடி தான் பிரச்சினை. பலபேர் கொள்கை இல்லாம இருக்காங்க. எழுமின் வார்த்தை சைனீஷ் மாதிரி இருக்குனு சொல்றாங்க. சிலர் “ஏழுமீன்”னு படிக்கிறாங்க. தமிழ் வார்த்தை கூட தெரியாம இருக்காங்க.

சமூகத்தில் விளையாட்டுல திறமை இருந்தும் முன்னேறி வர முடியாம இருக்காங்க. அவங்களுக்கு இந்த படம் சமர்ப்பணம். விஷாலுக்கு பல பிரச்சினை இருக்கு. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பல பிரச்சினைக்கு மத்தில வந்திருக்காரு.

நடிகர் சங்கம் கட்டிடத்திற்கு விஷால், கார்த்தி ரொம்ப கஷ்டப்பட்டு உழைக்கிறாங்க. இந்த ட்ரெய்லர் லாஞ்ச்க்கு இப்போ ட்ரெண்ட்ல இருக்க 3 பேர் வந்திருக்காங்க. எனக்காக வந்த எல்லாருக்கும் நன்றி.

அப்போ இருந்த தயாரிப்பாளர் சங்கத்துக்கும், என் படத்துக்கும் பல பிரச்சினை வந்தது, ஆனால் இனி அது இருக்காது. விஷால் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு முறைப்படுத்தி வருகிறார்.” என்றார்.

I feel ashamed to say that i am action hero says Vishal

சினி மியூசிசியன்ஸ் யூனியன் தேர்தலில் தலைவராக தினா தேர்வு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை சினி மியூசிசியன்ஸ் தேர்தல் நடை பெறுவது வழக்கம், அதன்படி நேற்று சென்னை வடபழனியில் அவர்களது யூனியனில் தேர்தல் நடைப்பெற்றது.

தலைவர் பதவிக்கு கல்யாண சுந்தரம் மற்றும் தினா இருவரும் போட்டியிட்டனர்.

அதில் அதிக வாக்குகள் பெற்று இசையமைப்பாளர் தினா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செயலாளர் பதவிக்கு சாரங்கபாணி – P G வெங்கடேஷ் இருவரும் போட்டிதிட்டதில் சாரங்கபாணி வெற்றி பெற்றார்.

குருநாதன்- ரங்கராஜன் இருவரும் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டதில் குருநாதன் வெற்றி பெற்றார்.

உப தலைவர்களாக மகேஷ், பாலேஷ், கோபிநாத்சேட், வீரராகவன்
இனை செயலாளர்களாக P.செல்வராஜ் P.V. ரமணன், R.செல்வராஜ் P.பாஸ்கர், ஜோனாபக்தகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதே நேரத்தில் சினி மியூசிசியன்ஸ் யூனியனின் அறக்கட்டளைக்கு நடந்த தேர்தலில் டிரஸ்டிக்கு போட்டியிட்ட ஐந்து பேரில் இசையமைப்பாளர் S.A.ராஜ்குமார், தினா, குருநாதன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களின் பதவியேற்பு விழா வரும் 27ம் தேதி அன்று சென்னையில் நடக்கிறது.

Music composer Dheena won in Cine Musicians Association election

More Articles
Follows