தேசபக்தியை பொது இடத்தில் நிரூபிக்க கட்டாயப்படுத்தாதீர்… கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கும்போது எழுந்து நிற்பது கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது மக்கள் எழுந்து நின்று தங்கள் தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

சிங்கப்பூரில் ஒவ்வொரு நாளும் நள்ளிரவில் அந்நாட்டு தேசியகீதம் இசைக்கப்படுகிறது.

அதேபோல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நமது தேசியகீதத்தை ஒளிபரப்பலாம்.

எனது தேசபக்தியை பொது இடங்களில் நிரூபிக்க கட்டாயப்படுத்தி பரிசோதிக்காதீர்கள்.

விவாதங்களில் சிங்கப்பூரைப் பற்றி பலரும் உதாரணம் பேசுகின்றனர்.

சிங்கப்பூரில் இருப்பது கருணைமிக்க சர்வாதிகாரமே என்பதே சில விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது. நமக்கும் அதுபோன்ற சூழல் வேண்டுமா? வேண்டாமே!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Kamalhassan talks about National Anthem on Cinema Theatres

2018 பொங்கல் தினத்தில் சூர்யா-விஷாலுடன் மோதும் விமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம்.

இப்படத்தை அடுத்த ஆண்டு 2018 பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்யவுள்ளனர்.

இதே நாளில் விஷால் தயாரித்து நடித்துள்ள இரும்பு திரை படமும் வெளியாகவுள்ளது.

இந்த இரு படங்களும் மோதவுள்ள நிலையில் பொங்கல் ரேஸில் விமல் நடித்துள்ள மன்னர் வகையறா படமும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு…

விமல் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராகி வரும் படம் தான் ‘மன்னர் வகையறா’. இந்தப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் தயாரித்துள்ளது. அந்த அளவுக்கு விமலுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ள கதையம்சம் கொண்ட இந்தப்படத்தை, காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படங்களை தருவதில் கைதேர்ந்தவரான இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கியுள்ளார்.

விமல் ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க முக்கிய வேடங்களில் பிரபு, சரண்யா, ரோபோசங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி) என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

குறிப்பாக ரோபோ சங்கருடன் விமல் புதிதாக கூட்டணி அமைத்திருப்பது படத்தின் ஹைலைட்டாக இருக்கும்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் நவ-8ஆம் தேதி இந்தப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட இருக்கிறார்கள்.

அதை தொடர்ந்து வரும் 2018 ஜனவரியில் பொங்கல் திருநாளன்று இந்தப்படத்தை ரிலீஸ் செய்யவும் முடிவு செய்துள்ளார்கள்.

மன்னர் வகையறா படம் 2017 தீபாவளிக்கே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.

Actor Vimal movie clash with Suriya and Vishal on Pongal 2018

மெர்சலில் டபுள் ஆக்டிங் செய்யும்போது மற்றொரு விஜய்யாக நடித்தது யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கிய மெர்சல் படத்தில் 3 வேடங்களில் விஜய் நடித்திருந்தார்.

தந்தை மற்றும் இரண்டு மகன்களாக நடித்திருந்தார்.

இதில் தந்தை கேரக்டர் பிளாஷ்பேக்கில் வரும். ஆனால் மகன்கள் கேரக்டர்கள் இரண்டும் தற்கால நிகழ்வாக வரும்.

அதில் இரண்டு விஜய்யை இயக்கும்போது மற்றொரு விஜய்யாக அட்லிதான் நடிப்பாராம்.

அதன் பின்னர்தான் விஜய் அந்த கேரக்டரில் நடித்து டேக்கை முடிப்பார்கள்.

இந்த தகவலை மெர்சல் பட ஒளிப்பதிவாளர் விஷ்ணு தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Mersal movie double character of Vijay news

தனுஷ்-விஜய் சேதுபதிக்கு பிறகு சந்தீப் தான்… சுசீந்திரன் நம்பிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துக் கொள்ள நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துக் கொண்ட இப்பட இயக்குனர் சுசீந்திரன் பேசியதாவது…

நான் மகான் அல்ல திரைப்படம் எப்படி வெற்றிப்படமாக அமைந்ததோ அதை போலவே இந்த திரைப்படமும் வெற்றி படமாக அமையும்.

பாண்டிய நாடு போலவே இந்த படத்திலும் அனைத்து பாடல்களும் ஆல்பமாக ஹிட்டாகியுள்ளது. இமான் அண்ணனோடு நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.

நாயகன் சந்தீப் கிஷன் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவரோடு நான் ஜீவா திரைப்படத்திலேயே இணைந்திருக்க வேண்டும்.

ஜீவா திரைப்படத்தை முதலில் தமிழ் மற்றும் தெலுங்கில் Bi-lingual படமாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து தமிழில் விஷ்ணு விஷாலை வைத்தும் தெலுங்கில் சந்தீப்பை வைத்தும் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து ஆரம்பித்தேன்.

ஆனால் அதுக்கு கடுமையான உழைப்பு தேவைப்பட்டது. இரண்டு நாள் படபிடிப்புக்கு பின் தான் இரண்டு மொழிகளிலும் வெவ்வேறு ஹீரோவை வைத்து படமெடுப்பது கடினம் என்பது எனக்கு தெரிந்தது.

சில காலத்துக்கு பிறகு சந்தீப்புடன் இணைந்துள்ளேன். தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பிறகு பி மற்றும் சி செண்டர் நாயகனாக சந்தீப் வருவார்.

ஒரு நடிகன் டயலாக்கை எளிதாக பேசிவிடலாம். ஆனால் அவர் நடிப்பின் மூலமாக அனைவரையும் ஹோல்ட் செய்கிறார். சந்தீப் என்ற மிக சிறந்த நடிகனை இந்த படத்தில் நான் பார்த்தேன்.

அவருடைய நடிப்புக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும்” என்றார் இயக்குநர் சுசீந்திரன்.

Suseenthiran speech about Sundeep Kishan at Nenjil Thunivirunthal Trailer launch

பிச்சுவா கத்தி-யை தொடர்ந்து இனிகோ பிரபாகரின் வீரையன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிச்சுவா கத்தி படத்தை தொடர்ந்து நாயகன் இனிகோ பிரபாகர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வீரையன்.

இப்படம் 90-களின் காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது.

இப்படம் ஒரு பக்கம் தந்தை – மகன், இன்னொரு பக்கம் காதலர்கள், மற்றொரு பக்கம் சமூகத்தால் கேவலமாக நடத்தப்படும் மூன்று உதவாக்கரைகள் என குடும்பம், காதல், நட்பு ஆகிய மூன்று கோணங்களில் ஆரம்பமாகும்.

ஆரம்பித்த 15 நிமிடங்களிலேயே இந்த மூன்றும் ஒரு புள்ளியில் இணைந்து பயணிக்க ஆரம்பித்து பார்வையாளர்களை சுவாரஸ்யத்தில் ஆழ்த்தும்.

சோழ மன்னன் வாழ்ந்த உயர்ந்த பூமியான தஞ்சாவூர், கால ஓட்டத்தில் தடம் புரண்டு மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது என்பதையும், தஞ்சை மக்களின் நம்பிக்கையையும், மரியாதையையும் வலியுறுத்தும் கதையாகவும் உருவாகி இருக்கிறது இப்படம்.

பொதுவாக கதாநாயகன், கதாநாயகி, வில்லன், காமெடியன் என்ற வழக்கமான சினிமாவின் கட்டமைப்புக்கு அப்பாற்பட்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

கதாபாத்திரங்களின் நியாய, தர்மங்களை சொல்லும், சூழ்நிலைகளும், சம்பவங்களுமே கதையை முன்னோக்கி எடுத்து செல்லும். இது புதிய வகை யதார்த்தவாதம் என்ற கோட்பாட்டு வகையைச் சார்ந்தது.

5 பாடல்கள் மற்றும் 4 சண்டைக் காட்சிகளுடனான இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் திருநங்கை கதாபாத்திரமும், ”சரசம்மா” என்கிற ஆவி கதாபாத்திரமும் முக்கியமான தவிர்க்க முடியாத கதாபாத்திரங்களாகும்.
இத்திரைப்படம் நவம்பரில் திரைக்கு வரவிருக்கிறது.

நாயகன் : இனிகோ பிரபாகர்,
கதாநாயகி : ஷைனி
நடிகர்கள். நடிகையர் : ‘ஆடுகளம்’ நரேன், வேலா ராமமூர்த்தி, கயல் வின்சென்ட், ‘ஆரண்ய காண்டம்’ வசந்த், யூகித், ஹேமா மற்றும் திருநங்கை பிரீத்திஷா
இசை: S.N.அருணகிரி, ஒளிப்பதிவு: P.V.முருகேஷா படத்தொகுப்பு: ராஜா முகமது, பாடல்கள்: யுகபாரதி, நடனம்: சரவண ராஜா, சண்டைக்காட்சி: ராக் பிரபு
கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம்: S. பரீத்

Inigo Prabhakarans next movie Veeraiyan updates

பிரபாஸின் சாஹோ… ஹாலிவுட் டிசைனை காப்பியடித்து சிக்கிய பாகுபலி ஹீரோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு இந்தியா முழுக்க பிரபலமாகி விட்டார் பிரபாஸ்.

எனவே இவர் அடுத்து நடிக்கும் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது.

இந்நிலையில் நேற்று பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அடுத்த படமான ‘சாஹோ’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

ஆனால் அது ‘பிளேட் ரன்னர் 2049’ என்ற ஹாலிவுட் பட டிசைனில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்ற தகவலும் சில நிமிடங்களில் வெளியானது.

அந்த ஹாலிவுட் படத்தின் நாயகன் ரியான் கோஸ்லிங் அணிந்திருந்த நீளமான கோட், முகத்தின் பாதியை ஒரு கருப்புத் துணியால் மறைத்திருப்பது, பின்னணியில் பனி மூட்டம் என அப்படியே காப்பியடித்து ‘சாஹோ’ போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள்.

வழக்கமாக இதுபோல் காப்பியடித்தால் பழைய பட போஸ்டரைத்தான் காப்பியடிப்பார்கள்.

ஆனால் ‘பிளேட் ரன்னர் 2049’ படம் இந்த மாதம் 6ம் தேதி தான் ரிலீஸ் ஆனது.

இதனால் பாகுபலி ஹீரோவையும் ‘சாஹோ’ இயக்குனரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

மேலும் போஸ்டர் மட்டும்தான் காப்பியா? இல்லை படமும் அப்படிதானா? என கேட்டு வருகின்றனர்.

Saaho first look poster copied from Ryan Goslings Blade Runner

More Articles
Follows