கமலுக்கு இளையராஜா இசை விழா.; நவ. 9ல் இருந்து 17க்கு மாறியது.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள் மற்றும் சினிமாவில் அவர் கடந்த 60 ஆண்டுகள் ஆகிய இரண்டையும் கொண்டாடும் விதமாக நவ., 7, 8, 9 தேதிகளில் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டன.

தற்போது இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் .,7ல் பரமக்குடியில் தன் தந்தையின் சிலையை அவரது இல்லத்தில் திறந்து வைக்கிறார் கமல்.

அதற்கு அடுத்த நாள் நவ.,8ல் எல்டாமஸ் ரோட்டில் உள்ள தனது தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அலுவலகத்தையும், இவரின் சினிமா குருநாதரான மறைந்த கே.பாலச்சந்தரின் சிலையை திறந்து வைக்கிறார்.

பின்னர் மாலை 3 மணிக்கு சத்யம் திரையரங்கில் ‛ஹேராம்’ படம் சிறப்பு காட்சியாக திரையிடப்படவுள்ளது.

நவ.,9ஆம் தேதி இளையராஜா இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் சில காரணங்களால் தற்போது நவ.,17க்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாய் நடக்கவுள்ள இந்த நிகழ்வில் கமல்ஹாசனுக்கு பாராட்டு விழாவும் நடைபெறவுள்ளது.

அதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

விஜய்யை அடுத்து கமலை இயக்கும் லோகேஷ் கனகராஜ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாநகரம் என்ற வெற்றிப் படத்தை அடுத்து கார்த்தி நடிப்பில் கைதி என்ற படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ்.

இப்படம் வெளியாவதற்கு முன்பே விஜய்யின் 64வது படத்தை இயக்கத் தொடங்கிவிட்டார்.

இந்த நிலையில், அடுத்ததாக கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் கமல் இவரை அழைத்து பேசியதாகவும் அப்போது அவருக்கு ஒரு ஒன் லைனை லோகேஷ் கூறியதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தை கமலே தன் சொந்த நிறுவனமான ராஜ் கமல் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

ரியோ ராஜ் & ரம்யா நம்பீசன் இணையும் படத்தில் 2 காமெடியன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அதர்வா நடித்த ‘பானா காத்தாடி’, மற்றும் ‘செம போத ஆகாதே’ ஆகிய படங்களை இயக்கியவர் பத்ரி வெங்கடேஷ்.

இவர் தற்போது இயக்கி வரும் படத்தில் ரியோ ராஜ்க்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்து வருகிறார்.

பாசிட்டிவ் ப்ரிண்ட் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் பால சரவணன் மற்றும் முனிஷ்காந்த் ஆகிய இருவரும் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

தர்பார் மோஷன் போஸ்டர்: 4 மொழிகளில் 3 சூப்பர் ஹீரோக்கள் வெளியிடுகின்றனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் லைகா முருகதாஸ் ஆகியோரின் பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகியுள்ள படம் தர்பார்.

இதில் ரஜினியுடன் நயன்தாரா, யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்க ‘தளபதி’(1991) படத்திறகு பிறகு சந்தோஷ் சிவன் அவர்கள் ரஜினி படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் வெளிநாடு வெளியீட்டு உரிமத்தை ஃபார்ஸ் ஃபிலிம் என்ற நிறுவனம் ரூ.36 கோடிக்கு வாங்கியுள்ளதாம்.

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீம் மியூசிக்குடன் கூடிய தர்பார் பட மோஷன் போஸ்டரை நாளை நவம்பர்.7ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளனர்.

இதனை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் திரையுலகில் உள்ள டாப் ஹீரோக்கள் வெளியிட உள்ளனர்.

தமிழில் கமல்  & தெலுங்கில் கமல்ஹாசன், மலையாளத்தில் மோகன்லால், ஹிந்தியில் சல்மான் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

3 Super Heros releasing Darbar motion poster in 4 languages

27 வருடங்களுக்கு பிறகு சபரிமலையில் சிம்பு; விரைவில் மாநாடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருந்த மாநாடு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு.

இப்படம் தொடர்பான அனைத்துப் பணிகளுமே முடிவடைந்த நிலையில் சிம்பு வந்தவுடன் சூட்டிங்கை தொடங்க காத்திருந்தது படக்குழு.

ஆனால் சிம்பு பிரச்சினை செய்யவே, சுரேஷ் காமாட்சி அவர்கள் படத்திலிருந்து சிம்புவை நிறுத்தினார். அவருக்கு பதிலாக வேறொருவர் நடிப்பார் என்று படக்குழு அறிவித்தது.

பின்பு இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தை நடைபெறவே அனைத்துப் பிரச்னைகளுக்கும் முடிவு ஏற்பட்டது.

இதனையடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் சிம்பு.

இப்பணி சுமூகமாக முடிந்தால், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருவதாக சிம்பு வேண்டியிருந்தாராம்.

அதன்படி சிம்பும் அவரின் நண்பர் நடிகர் மகத்தும் மாலை அணிந்துக்கொண்டு சபரிமலை சென்றனர். அந்த படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

முன்னதாக கடந்த 1992ம் ஆண்டு எங்க வீட்டு வேலன் என்கிற படம் சிறப்பாக வந்த சமயத்தில், சபரிமலைக்கு சென்றிருந்தார் சிம்பு என்பது குறிப்பிடத்தக்கது.

திரும்பி வந்தவுடன் விரைவில் மாநாடு சூட்டிங்கில் கலந்துக் கொள்வார் எனத் தெரிகிறது.

Actors Simbu and Mahath at Sabarimala Maanadu shoot soon

‘ரங்கஸ்தலம்’ தமிழ் ரீமேக்; லாரன்ஸை இயக்கும் லிங்குசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம்சரண், சமந்தா, ஜெகபதி பாபு, ஆதி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிப்பில் சுகுமார் இயக்கியிருந்த படம், ’ரங்கஸ்தலம்’.

ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்திருந்தார்.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான இந்த படம் தமிழில் ரீமேக் ஆகிறது.

இந்த படத்தின் ரீமேக் உரிமையை நடிகர் ராகவா லாரன்ஸ் வாங்கியிருந்த நிலையில் இதன் ரீமேக்கில் அவரே ஹீரோவாக நடிக்கிறாராம்.

இயக்குனர் லிங்குசாமி இயக்க உள்ளார்.

தற்போது அக்‌ஷய்குமார் நடிப்பில் காஞ்சனா’ ஹிந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார் லாரன்ஸ்.

இந்தப் படத்தை முடித்தபின், ’ரங்கஸ்தலம்’ ரீமேக்கில் நடிக்கவுள்ளார் ராகவா லாரன்ஸ்.

Lawrence to act in Rangasthalam remake in Lingusamy direction

More Articles
Follows