தெளிவான முடிவெடுக்க வலியுறுத்தி பால்கனி அரசுகள் மீது பாய்ந்த கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது இந்திய அரசு.

இதனையடுத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அரசு.

இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அகவிலைப்படி உயர்வையும் ரத்து செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வழக்கமாகப் பெறும் ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் ஓராண்டுக்கும், அகவிலைப்படி உயர்வை 2021-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரையும் நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைப் பாதிக்கும் எதையும் செய்யக் கூடாது என்கிறார் பிரதமர். ஆனால் மத்திய, மாநில அரசுகள் தனது ஊழியர்களின் அகவிலைப்படி ஏற்றத்தையும் ஈட்டிய விடுப்பையும் முடக்குகின்றன.

தொழில் முனைவோரையும் தொழிலாளரையும் பாதுகாப்பதில் தெளிவான முடிவெடுக்க வேண்டும் பால்கனி அரசுகள்”

இவ்வாறு கமல் பதிவிட்டுள்ளார்.

Kamal request Balcony Govts to take right decision

நல்லோர் சிந்தனையை படிக்காதவர்களுக்கு அது தெரியாது.; சூடான ‘சூர்யா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.

இதற்கு சில மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் விழாவில் ஜோதிகா கலந்துக் கொண்டு பேசியபோது…

தஞ்சை பெரிய கோயிலை பார்த்திருக்கிறேன். அதை பரமாரிக்க பணம் கொடுக்கிறீர்கள் வண்ணம் பூசுகிறீர்கள். கோயில்களுக்கு செய்வது போல பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள். என பேசியிருந்தார்.
அவருடைய பேச்சு ஒரு பக்கம் ஆதரவும் மறுபக்கம் கடுமையான எதிர்ப்பும் உருவானது.

இந்த விவகாரம் ஜோதிகாவோ அவரது கணவர் சூர்யாவோ எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும்.

ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடங்கங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது.

கோவில்களைப் போலவே பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை சிலர் குற்றமாக பார்க்கிறார்கள்.

இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். ‘மக்களுக்கு உதவினால், அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை. நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காது கொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.

பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும், எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்தது.

அறிஞர்கள், ஆன்மீகப் பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம்.

மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித் தர விரும்புகிறோம்.

தவறான நோக்கத்தோடு, தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம், நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் எங்களுக்கு துணை நிற்கிறார்கள்.

முகமறியாத எத்தனையோ பேர் எங்கள் சார்பாக பதில் அளிக்கிறார்கள். ஊடகங்கள் சரியான விதத்தில் இச்சர்ச்சையைக் கையாண்டன.

‘நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச் செய்கிறார்கள். எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Humanity is beyond Religion Suriya comes out in Support of Jyothika

அவர நல்லா தெரியும்.. வெறுப்பை நிறுத்துங்க… துல்கருக்கு ரம்யா ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் தயாரித்து நடித்த படம் ‘வரனே அவஷ்யமுண்டு’.

இதில் சுரேஷ் கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோரும் நடித்திருந்தனர்.

இந்த படம் வெளியாகி 2 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு இந்தப் படம் டிஜிட்டலில் இணையத்தில் வெளியானது.

இப்படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்ற பெயர் வைக்கப்பட்டு இருந்தது. அத்துடன் ஒரு காமெடி காட்சியும் இருக்கிறது.

இதனையடுத்து இந்த காட்சியை பார்த்த தமிழர்கள் காட்சியை நீக்க வேண்டும் எனவும் படத்தயாரிப்பாளரும் நடிகருமான துல்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

துல்கரும் மன்னிப்பு கேட்டு நீண்ண்ணட விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் ‘ஓகே கண்மணி’ படத்தில் துல்கருடன் நடித்த விஜே ரம்யா தனது ட்விட்டர் பதிவில், “துல்கருக்கு நம் மீது பெரிய மரியாதையும், தான் சென்னைவாசி என்ற பிணைப்பும் உள்ளது.

அவரைப் பல நாட்களாகத் தெரியும் என்பதால் என்னால் இதை சொல்ல முடியும்.

நாம் மென்மையானவர்கள். அப்படியே புரிந்துகொள்ள வேண்டியதில்லை. தயவுசெய்து தேவையில்லாத வெறுப்பை பரப்புவதை நிறுத்துங்கள்” என பதிவிட்டுள்ளார்.

VJ Ramya supports Dulquer in Dog name Prabakar issue

https://twitter.com/actorramya/status/1254443321390362624

ஆடி அடங்கும் வாழ்க்கையடா.. சர்வர் சுந்தரம் டைரக்டர் புலம்பல்; OTTல் ரிலீஸ் திட்டம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘சர்வர் சுந்தரம்’.

வைபவி சாண்டில்யா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், ராதாரவி, செஃப் தாமோதரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

கெனன்யா பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

உணவே மருந்து என்பதை மையப்படுத்தை இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது-

இந்த படத்தின் ரிலீஸ் 2020 ஜனவரி, பிப்ரவரி, மார்ச் என பலமுறை அறிவிக்கப்பட்டு தள்ளிக் கொண்டே போனது.
தற்போது கொரோனா ஊரடங்கால் இனி 3 மாதங்களுக்கு ரீலீசுக்கு வாய்ப்பே இருக்காது.

இந்த நிலையில், படத்தின் இயக்குனர் ஆனந்த் பால்கி, தனது ட்விட்டர் பதிவில்…

‘உன் காசு என் காசுன்னு சொல்லி, ஆக மொத்தம் ஒன்றுக்கும் உதவல. ‘சர்வர் சுந்தரம்’ படத்தை வெளியிட்டு இருக்கலாம் இல்லடா. ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்று ஒரு பதிவில் கூறியுள்ளார்.

மற்றொரு பதிவில், இந்தப் படம் ஏன் ரிலீஸ் ஆகவில்லை என்று கேட்கும் ரசிகர்களுக்கு, தவறான வியாபாரிகளின் முதிர்ச்சியில்லாத அணுகுமுறை, சம்பந்தமில்லாதவர்களின் தலையீடு, பொறுப்பான நபர்கள் கை கழுவியது, படத்தின் ரிலீஸுக்கு யாரும் உதவத் தயாரில்லை.

பொறுப்பில்லாத ஒருவர் படத்தை வாங்க, பொறுப்புள்ளவர் பொறுப்பில்லாமல் நடப்பதன் பின்விளைவுதான். நம்பிக்கைதான் வாழ்க்கை. பொறுத்திருப்போம்.

இனி ரீலிஸைத் தவிர எதுவுமில்லை அனுபவிக்க’ என்று கூறியுள்ள அவர், மற்றொரு பதிவில், ‘சர்வர் சுந்தரம்’ படத்தை டிஜிட்டலில் வெளியிடலாமா? என்று கேட்டுள்ளார்.

சர்வர் சுந்தரம் படத்தின் தயாரிப்பாளர் என்ன சொல்ல போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Anand Balki wish to release Server Sundaram on OTT

தளபதி கொடுத்த தொகையை அஜித் ரசிகருக்கு கொடுத்த விஜய் ரசிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா நிவாரண நிதியாக ரூ. 1.30 கோடியை நடிகர் விஜய் வழங்கியுள்ளார்.

மேலும் ஊரடங்கால் சிரமத்தில் இருக்கும் தனது ரசிகர்கள் பலருக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிதி கொடுத்துள்ளார் விஜய் என கூறப்படுகிறது.

மதுரையை சேர்ந்த நாகராஜ் என்ற விஜய் ரசிகருக்கும் அந்த நிதி கிடைத்துள்ளதாக தெரிகிறது.

அந்த 5 ஆயிரம் ரூபாயையும் தனது நண்பரான அஜித் ரசிகர் சசிகுமாருக்கு கொடுத்து உதவியுள்ளார்.

மாற்றுத்திறனாளியான சசிகுமாருக்கு உதவியபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

அஜித் ரசிகருக்கு விஜய் ரசிகர் உதவி செய்துள்ளார் என்ற மற்ற நடிகர்களின் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

Vijay fan helps Ajith fan from Vijays Corona relief fund

மன்னிப்பு ஓகே துல்கர்.. ஆனா சீன் இருக்கே..; எச்சரிக்கும் சீமான்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் தயாரித்து நடித்த படம் ‘வரனே அவஷ்யமுண்டு’.

இதில் சுரேஷ் கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோரும் நடித்திருந்தனர்.

இந்த படம் வெளியாகி 2 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு இந்தப் படம் டிஜிட்டலில் இணையத்தில் வெளியானது.

இப்படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்ற பெயர் வைக்கப்பட்டு இருந்தது. அத்துடன் ஒரு காமெடி காட்சியும் இருக்கிறது.

இதனையடுத்து இந்த காட்சியை பார்த்த தமிழர்கள் காட்சியை நீக்க வேண்டும் எனவும் படத்தயாரிப்பாளரும் நடிகருமான துல்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

மலையாள மொழியில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்துள்ள “வரனே அவசியமுண்ட (Varane Avashyamund)” படத்தில் உள்ள ஒரு காட்சியில், தமிழ்த் தேசிய இனத்தின் முகமாகவும் முகவரியாகவும் அடையாளமாகவுமிருக்கும் இப்பேரினத்தின் ஒப்பாரும் மிக்காரும் இல்லா உயர்ந்த உன்னதத் தலைவராம் மேதகு வே.பிராபகரன் அவர்களின் பெயரை தவறாகப் பயன்படுத்தி அவமதிக்கும் வகையில் காட்சியமைக்கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

உலகமே வியக்கும் தம்முடைய போர்த்திறனாலும், மரபு சார்ந்த நவீன வலிமை வாய்ந்த இராணுவ கட்டமைப்பினாலும், கட்டுக்கோப்பான ஒழுக்கத்தினாலும், இன விடுதலைக்குக் குரல்கொடுக்கும் உலக மாந்தர்களால் இன்றளவும் போற்றப்படும் மேதகு வே.பிரபாகரன் அவர்களைத் நடிகர் துல்கர் சல்மான் அவர்களோ, அல்லது தொடர்புடைய அவரது படக்குழுவினரோ அறியாமல் இருக்க வாய்ப்பில்லை.

மேலும் துல்கர் சல்மான் அவர்களின் நடிப்பில் வெளிவந்த முந்தைய படமான “காம்ரேட் இன் அமெரிக்கா (COMRADE IN AMERICA)” திரைப்படத்திலும் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் புகைப்படம் ஒரு காட்சியில் பயன் படுத்தப்பட்டிருப்பதால் அவருக்குக் கட்டாயம் தெரிந்திருக்கக்கூடும்.

அந்தக் காட்சியிலும் ஒரு குடிகாரர் வீட்டில் இருக்கும் அப்புகைப்படம் இறந்துவிட்டார் என்பதைக் குறிக்கும் விதமாகக் காட்டப்பட்டிருப்பதும் இயல்பானதாக இல்லை.

எனவே தெரியாமல் வைத்துவிட்டோம் என்றோ, கேரளாவில் அது பெரும்பாலானோர் வைத்திருக்கும் பொதுப்பெயர் என்றோ துல்கர் சல்மான் அவர்கள் கூறும் காரணங்கள் ஏற்புடையதல்ல.

படக்குழுவினர் நினைத்திருந்தால் இப்படி ஒருகாட்சியில் அத்தகைய பெயரை பயன்படுத்தாமல் தவிர்த்திருக்கலாம். மேலும் படக்குழுவினருக்கு எவ்வித உள்நோக்கமும் இல்லையென்றால் அந்த ஒரு குறிப்பிட்ட பெயர் இடம்பெறும் காட்சியை மட்டும் தனியாக விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது? என்ற கேள்வியும் எழுகிறது.

பழைய படத்தில் இடம்பெற்ற தொடர்ச்சி அந்தக் காட்சி என்றால் அது இன்றைய சூழலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று படக்குழுவினர் கணித்திருக்க வேண்டும்.

தமிழக இளம் தலைமுறையிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தவுடனேயே தற்போது துல்கர் சல்மான் அவர்கள் பொதுவெளியில் மன்னிப்புக் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது தான் என்றாலும் படத்திலிருந்து அந்தச் சர்ச்சைக்குரிய காட்சியை உடனடியாக நீக்க வேண்டும்.

அதுவரை தங்களுடைய படத்திற்கு எதிரான தமிழர்களின் எதிப்பு என்பது தொடர்ந்துக் கொண்டே இருக்குமென்று எச்சரிக்கிறேன். எனவே காயம்பட்ட ஒவ்வொரு தமிழனின் உள்ளத்து உணர்வையும், அவர்களின் எதிர்ப்பு நிலைப்பாட்டின் தீவிரத்தையும் உணர்ந்து படத்திலிருந்து அக்காட்சியை முழுமையாக நீக்க வேண்டும்.

மேலும் எதிர்காலத்திலும் இவ்வாறு மலிவான காட்சிகள் மூலம் தமிழர்கள், தமிழ்த் தலைவர்களை இழிவுபடுத்திவிடலாம் என்ற சிந்தனையே எழாமல் இருப்பது தான் இரு சகோதர தேசிய இனங்களின் ஒற்றுமைக்கும், மேன்மைக்கும் நலம்பயக்கும் என்பதைத் தொடர்புடைய படக்குழுவினர் உணர்ந்து செயல்படுவர் என்று நம்புகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார் சீமான்.

Seeman warns Dulquer to remove controversial scene from Varane Avashyamund

https://twitter.com/dulQuer/status/1254404061735997440

 

More Articles
Follows