Breaking: வன்முறைக்கு அரசின் அலட்சியமே காரணம்; குடிமக்கள் குற்றவாளிகள் இல்லை : கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கலவரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளதாவது…

“ஸ்டெர்ட்லைட் ஆலைக்கு எதிராக நீதிக் கேட்டு மக்கள் அமைதியாகப் போராடிய பொழுதெல்லாம் அலட்சியப்படுத்தியது அரசுகள்.

அரசின் அலட்சியமே அனைத்து தவறுகளுக்கும் காரணம்.

இதில் குடிமக்கள் குற்றவாளிகள் இல்லை. அவர்கள் எப்பொழுதும் உயிர் இழக்கிறார்கள். முன்பு ஆலையினால், இப்பொழுது ஆணையினால். அனைவரும் அமைதிக் காக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தற்போது சற்றுமுன் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது..

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் எனவும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை தவிர வேறு வழியில்லை எனவும் அவர் கூறினார்.

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி அளித்தது யார்? அமைதி காக்க வேண்டியது மக்கள் மட்டுமல்ல; அரசும்தான். மக்களின் போராட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும் எனவும் கமல் தெரிவித்தார்.

Kamal questioning who gave permission to shoot at Sterlite Protest

Breaking: உரிமைக்காக போராடுபவர்களின் உயிரை பறிக்க உரிமையில்லை… ஜிவி. பிரகாஷ் செம பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாண்டிராஜின் உதவியாளர் வள்ளிகாந்த் இயக்கியுள்ள படம் செம.

ஜிவி. பிரகாஷ் இசையமைத்து நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அர்த்தனா நாயகியாக நடிக்க, முக்கிய வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார்.

வருகிற மே 25ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று சற்றுமுன் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இது படம் தொடர்பான விழா என்றாலும் தற்போது தூத்துக்குடியில் ஸ்டெர்ட்லைட் ஆலை வன்முறை நடைபெற்று வருவதால், எல்லாருடைய பேச்சும் அது தொடரபாகவே இருந்தது.

இந்த போராட்டத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். பல பேர் காயம் பட்டுள்ளனர்.

எனவே அவர்களுக்குகாக ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அவ்விழாவில் ஜிவி. பிரகாஷ் பேசும்போது…

தூத்துக்குடி மக்களின் உயிருக்கு கேடு விளைவிக்கும் ஸ்டெர்ட்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அங்குள்ள மக்கள் ப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் காவல்துறையும் தமிழக அரசும் அவர்கள் மீது தடியடி நடத்தி அவர்களின் உயிரை பறித்துள்ளது.

உரிமைக்காக போராடுபவர்களின் உயிரை பறிக்க எவருக்கும் உரிமையில்லை” என்று பேசினார்.

I dont know how the policemen acts ruthless Who gave them right says GV Prakash

Breaking: தூத்துக்குடி கலவரத்திற்கு தமிழக அரசே பொறுப்பு…: ரஜினி கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி இன்று 100வது நாள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று 144 தடை உத்தரவையும் மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றதால், காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி உள்ளிட்டவை நடத்தப்பட்டது.

இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த கலவரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கலவரத்திற்கு அரசின் அலட்சியமே காரணம். நடந்த வன்முறை மற்றும் உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் ரஜினிகாந்த்.

Rajini condemns TN Govt is responsible for Tuticorin Sterlite protest

சூப்பர் ஸ்டாரின் 2.0 ஸ்டைலில் உருவாகும் அஞ்சலியின் லிசா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இந்தியாவின் முதல் ஸ்டீரியோகிராஃபிக் 3டி ஹாரர் ஃபிலிம்’ என்ற டேக் லைனுடன்் அஞ்சலி நடிக்கும் லிசா படம் உருவாகுகிறது.

அறிமுக இயக்குனர் ராஜு விஸ்வநாத் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து படத்தையும் தன் சொந்த பேனரில் தயாரிக்கிறார் பி.ஜி.முத்தையா.

ரஜினியின் ‘2.0’ படம்போலவே முழுக்க முழுக்க 3டி கேமராவிலேயே படமாக்கப்படுகிறதாம்.

இதற்காக 2.0வில் பயன்படுத்திய அதே ‘ரிக்’கையே ‘லிசா’ படக்குழுவினரும் பயன்படுத்துகிறார்களாம்.

தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படம் ஹிந்தியிலும் ‘டப்’ செய்யப்படவிருக்கிறதாம்.

அடுத்தமாதம் இப்படத்தின் சில காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பவிருக்கிறது.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் & காலா-வை குறிவைக்கும் ரஜினியின் 2.0 டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் முதலானோர் நடித்துள்ள படம் ‘2.0’.

3D தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் இந்த படத்தின் கிராஃபிக்ஸ் போன்ற வேலைகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

ஏற்கெனவே இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பிறகு இப்படத்தின் தொழில்நுட்ப வேலைகளால் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் டீசரை வெளியிட முடிவு செய்துள்ள படக்குழுவினர் மும்பையில் இம்மாதம் மே 27-ஆம் தேதி நடக்கவிருக்கும் ஐபில் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள் எனத் தெரிய வந்துள்ளது.

ஆனால் இது குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் ‘2.0’ தயாரிப்பு தரப்பிலிருந்து வெளியாகவில்லை.

மேலும் ஜூன் 7ல் காலா பட ரிலீஸ் ஆவதால் அத்துடனும் 2.0 டீசரை திரையிட திட்டமிட்டுள்ளனர்.

இரண்டு படங்களையும் லைகா நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஆர். ரஹ்மான்-சிவகார்த்திகேயன் இணையும் படத்தலைப்பு இதுதானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘சீமராஜா’ படப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

இதனையடுத்து எம். ராஜேஷ் இயக்கத்தில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இதில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

இந்த இரண்டு படங்களும் இந்தாண்டுக்குள் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது.

இந்த படங்களை முடித்துவிட்டு ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிகுமார் இயக்கவுள்ள சயின்ஸ் பிக்ஷ்ன் படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, 24 ஏஎம். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு ‘விஞ்ஞானி’ என்று பெயர் வைத்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால் இதே பெயரில் இன்னொரு படமும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

எனவே படத்தலைப்பை வெளியிட்டு குழப்பதை ஏற்படுத்தாமல் இருந்தால் சரிதான்.

AR Rahman and Sivakarthikeyan movie may titled Vingani

 

More Articles
Follows