தேவர் மகன் 2 பட தலைப்பை மாற்றும் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.

ஆங்காங்கே பொதுக் கூட்டங்களையும் நடத்தி பேசி வருகிறார்.

இதனையடுத்து சென்னை திரும்பும்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.

அப்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால், வரவேற்பதாக கூறினார்.

மேலும் தேவர் மகன்-2 படத்திற்கு இன்னும் தலைப்பு தேர்வு செய்யப்படவில்லை எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

வடசென்னை-யை வரவேற்க தனுஷுக்கு 120 அடி உயர கட்-அவுட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தயாரித்து நடித்துள்ள வடசென்னை படம் நாளை மறுநாள் அக். 17-ல் ரிலீஸாகிறது.

வெற்றிமாறன் இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் வெளியிடுகிறது.

3 பாகமாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகத்தை மட்டும் தற்போது வெளியிடுகின்றனர்.

தனுஷ் & வெற்றிமாறன் கூட்டணி என்றாலே அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.

இதனை வரவேற்கும் விதமாக நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர்கள் அவருக்கு 120 அடி உயர கட் அவுட் வைத்திருக்கிறார்களாம்.

தனுஷ் படத்தை முடித்துவிட்டு *முண்டாசுப்பட்டி2* படத்தை இயக்கும் ராட்சசன் டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கிய படம் முண்டாசுப்பட்டி.

இதனையடுத்து பல வருடங்களுக்கு பிறகு ராட்சசன் படத்திற்காக இந்த கூட்டணி இணைந்தது.

இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில் ‘ராட்சசன்’ பட வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்க இருக்கிறாராம் ராம்குமார்.

அதனை முடித்து விட்டு ‘முண்டாசுப்பட்டி’ இரண்டாம் பாகத்தின் வேலைகளை தொடங்கவிருக்கிறார் ராம்குமார்.

ஹரீஷ் கல்யாண்-ஷில்பா மஞ்சுநாத் இணையும் *இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்சேதுபதியை வைத்து ‘புரியாத புதிர்’ படத்தை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி.

இவர் தனது இரண்டாவது படத்திற்கு ‘இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும்’ என்று பெயர் வைத்துள்ளார்.

இதில் ஹரீஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடிக்கிறார்.

இவர் விஜய் ஆண்டனியுடன் ‘காளி’ படத்தில் நாயகியாக நடித்தவர்.

மாதவ் மீடியா நிறுவனமும், ரஞ்சித் ஜெயக்கொடி ஃபிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைக்க கவின்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இப்படத்தின் இறுதிகட்ட சூட்டிங் நடந்து வரும் வேளையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

*கெட்டவன்* படம் நிற்க தனுஷ் தான் காரணம்.. : டைரக்டர் ஜி.டி. நந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல வருடங்களுக்கு மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட சினிமா போஸ்டர்களில் ஒன்று சிம்புவின் கெட்டவன் படம்.

இந்த படத்தில் சிம்புவின் கெட்அப்பே பரபரப்பாக பேசப்பட்டது.

இப்படத்தை ஜி.டி. நந்து என்பவர் இயக்கவிருந்தார்.

இவர் அண்மையில் ஒரு பேட்டியில் கெட்டவன் படம் பற்றி மனம் திறந்துள்ளார்.

அதில்… கெட்டவன் படக்கதையை பரத், ஜீவா ஆகியோரிடம் கூறினேன். அவர்கள் நடிக்கவில்லை. பின்னர் தனுஷை சந்திக்க நேரம் கேட்டேன்.

ஆனால் சந்திக்க முடியவில்லை. அதன்பின்புதான் சிம்புவை சந்தித்தேன். அவரும் ஓகே சொல்ல படம் நாளை ஆரம்பிக்க இருந்தது.

ஆனால் அப்போது சிம்பு நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். அதற்கு காரணமே தனுஷ் தான். என்னிடம் கதையை சொன்ன டைரக்டர் இப்போது உன்னிடம் கதை கூறியிருக்கிறார் என்று சிம்புவிடம் சொல்லிவிட்டார்.

நண்பர்கள் எதை சொன்னாலும் அதை அப்படியே நம்பி விடுவார் சிம்பு. அப்போது சிம்பு அப்படியே நம்பி படத்தை நிறுத்திவிட்டார்.

சிம்புவை தன் நண்பன் தனுஷ் சொல்வார். ஆனால் இருவரும் இணைந்து நடிக்க மாட்டார்கள்.” என அந்த பேட்டியில் கூறியுள்ளார் நந்து.

புலி முருகன் சாதனையை முறியடித்த *காயம்குளம் கொச்சுன்னி*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த அக். 11ஆம் தேதி மோகன்லால்-நிவின்பாலி நடித்த ‘காயம்குளம் கொச்சுன்னி’ என்ற படம் வெளியானது.

இப்படம் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதால் கேரளாவில் மட்டும் 35௦ திரையரங்குகளில் வெளியானது.

முதல்நாளில் மட்டும் 16௦௦க்கும் மேற்பட்ட காட்சிகள் திரையிடப்பட்டதாம்.

முதல்நாள் கேரளாவில் மட்டும் ரூ 5.6 கோடி வசூலித்து புலிமுருகன் படம் சாதனையை பின்னுக்கு தள்ளியுள்ளதாம்.

மேலும் உலகம் முழுதும் முதல் நாள் வசூலாக ரூ 10 கோடியை கடந்துவிட்டதாம். இதுவரை 25 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

மோகன்லாலும் நிவின்பாலியும் இப்படத்தில் இணைந்துள்ளதால் இந்த சாதனை சாத்தியமானதாக சொல்லப்படுகிறது.

More Articles
Follows