சைரா படத்தில் கமல்-மோகன்லால்; சிரஞ்சீவி & ராம்சரண் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிரஞ்சீவி நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சைரா படத்தை அவரது மகன் ராம்சரண் தயாரித்துள்ளார்.

இதில் சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், சுதீப், விஜய்சேதுபதி, நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 2ம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்தப் படத்தில் 3 நிமிடக் காட்சிக்கு கமல்ஹாசன் ‘வாய்ஸ் ஓவர்’ கொடுத்துள்ளதாக சென்னையில் நடைபெற்ற பிரஸ் மீட்டில் சிரஞ்சீவி பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

இப்பட மலையாள பதிப்பில் மோகன்லாலும், தெலுங்கில் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாணும் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளனர்.

Kamal and Mohanlal gave Voice over in Syeraa movie

‘சூரரைப் போற்று’ படக்குழுவினருக்கு தங்கக் காசு பரிசளித்த சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இறுதி சுற்று படத்தை இயக்கிய தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் சுதா கொங்கரா.

இவர் தற்போது சூர்யா நடித்து வரும் சூரரைப் போற்று என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இவருடன் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை, மும்பை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இதன் சூட்டிங்கை நடத்தினர்.

தற்போது சூட்டிங் முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் படக்குழுவினருக்கு தங்க காசுகளை பரிசாக கொடுத்திருக்கிறார் சூர்யா.

Suriya gifts gold coins to Soorarai Pottru team

ஒத்த செருப்பு-க்காக போராட தயாராகும் திரையுலகினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வித்தியாசமான சிந்தனைகளை கொண்ட பார்த்திபன், தானே இயக்கி, தயாரித்து தான் ஒருவரே நடித்து இயக்கிய படம் “ஒத்த செருப்பு சைஸ் 7”

இப்படம் கடந்த வாரம் வெளியானது. வித்தியாசமான முயற்சி என பலர் பாராட்டினாலும் படம் சுமாராக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் படத்தை பாராட்டிய ஊடகத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார் பார்த்திபன்.

இந்த நிகழ்வில் பார்த்திபனை பாராட்ட பல திரையுலக பிரபலங்கள் வந்திருந்தனர்.

இயக்குனர்கள் எஸ்ஏ. சந்திரசேகர், ஆர்கே. செல்வமணி, ஆர்.வி. உதயகுமார், விஜய், பேரரசு, தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்ட பலரும் பார்த்திபனை வெகுவாக பாராட்டினர்.

இவர்கள் பாராட்டும் போது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை பட்டியலில் ஒத்த செருப்பு படத்தை தேர்வு செய்யவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

மேலும் ஏதோ ஒரு ஆங்கில படம் தழுவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கல்லி பாய் படத்தை தேர்வு செய்ததை கண்டித்து பேசினர்.

இங்குள்ள அரசியலால் தான் தமிழ் படங்களுக்கு மதிப்பில்லை என பலரும் புகார் கூறினர்.

ஆஸ்கர் விருது போன்ற உலக விருது விழாக்களுக்கு ஒத்த செருப்பு போன்ற சென்றால் அதற்கான அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது என பார்த்திபன் பேசினார்.

எனவே விரைவில் பார்த்திபனுக்கு ஆதரவாக விரைவில் திரையுலகினர் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.

Tamil cinema industry announces protest to support Oththa Seruppu

ஹிந்தி கற்பதால் தமிழ் அழியாது; இருட்டு அறை முரட்டு குத்து விநியோகஸ்தர் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா மற்றும் கார்த்தி நடித்த பல படங்களை தயாரித்தவர் ஞானவேல் ராஜா.

இவையில்லாமல் ஹரஹர மஹா தேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து உள்ளிட்ட அடல்ட் ஒன்லி படங்களையும் விநியோகம் செய்துள்ளார்.

இந்த நிலையில் இந்தி மொழியை கற்றுக் கொள்வது குறித்து பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது…

மத்திய அரசு, ஒரு போதும் இந்தி மொழியை திணிக்கவில்லை. மற்றொரு மொழியை தெரிந்து கொள்வதில், ஒருபோதும் தவறு இல்லை.

ஒரு மொழி இருப்பதால், இன்னொரு மொழி அழியும் என்ற பிரசாரம், ஒரு கும்பலால் தவறாக பரப்பப்படுகிறது.

இதன் காரணமாக, இன்று 90 சதவீத தமிழர்களுக்கு, மத்திய அரசின் திட்டம் தெரிவதில்லை” என பேசியுள்ளார்.

Tamil wont be destroyed if we learn Hindi says Gnanavel Raja

ஞானவேல் ராஜா சொன்னது கடைந்தெடுத்த பொய்; கமல் நோட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உத்தமவில்லன் பட ரிலீஸ் பிரச்சினையின் போது தன்னிடம் கமலஹாசன் ரூ. 10 கோடி பணத்தை வாங்கியதாகவும் அதற்கு பதிலாக ஒரு படத்தில் நடித்து தருவதாகவும் ஒப்புக் கொண்டார் எனவும் ஆனால் இதுவரை படத்தில் நடிக்கவும் இல்லை பணத்தை திருப்பித் தரவும் இல்லை என ஞானவேல்ராஜா புகார் கூறியிருந்தார்.

ஆனால் ஞானவேல் ராஜாவின் புகாருக்கு கமல் சார்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது…

நடிகர் கமலஹாசனுக்கு ரூ.10 கோடி கடன் கொடுத்ததற்கான ஆவணங்களை தயாரிப்பாளர் ஞான வேல்ராஜா சமர்ப்பிக்க வேண்டும்.

அவர் கூறியது கடைந்தெடுத்த பொய். இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆவணம் இல்லையெனில் கமல் மீதான புகாரை வாபஸ் பெற வேண்டும்.

மேலும் ஞானவேல் ராஜன் கூறியது பொய் என தெரிய வரும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ராஜ்கமல் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.

Actor Kamal denies Taking Rs 10 Crore from Gnanavel Raja

கறிகடை வியாபாரிகளுக்கு பரிசளித்து விஜய் ரசிகர்கள் சமாதானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ள படம் பிகில்.

நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இந்த படம் அடுத்த மாதம் அக்டோபரில் வெளியாகவுள்ளது.

இதனிடையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த சில கறிகடை வியாபாரிகள் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

பிகில் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கறிகளை வெட்டும் கட்டை மீது விஜய் தன் செருப்பை வைத்திருந்தார் என கண்டித்தனர்.

இது தங்கள் தொழிலை அவமதித்துள்ளதாக போலீசிடம் புகார் கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில் அந்த கறிகடை வியாபாரிகளை சந்தித்த விஜய் ரசிகர்கள் அவர்களுக்கு கறியை வைத்து வெட்டும் அந்த கட்டையை இலவசமாக கொடுத்து வருகின்றனர்.

Vijay fans cool down Bigil protesters by donating gift

More Articles
Follows