இன்று தன் ரசிகர்களுக்கு காதல் தேவதை விருந்தளிக்கும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் காட்டி வந்த சிம்பு முதன்முறையாக சக்க போடு போடு ராஜா என்ற படத்திற்காக இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

சேதுராமன் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்க, விவேக், ரோபோ சங்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

சிம்புவின் நண்பர் விடிவி கணேஷ் தயாரித்து வருகிறார்.

இதன் ட்ரைலர் அண்மையில் வெளியானது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற நவம்பர் 14ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள காதல் தேவதை என்ற முழுப்பாடலை இன்று அக்டோபர் 23ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது சிம்பு ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோடிகளில் சம்பாதிக்கும் நடிகர்கள் என்ன செய்தார்கள்?… – சிவகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திறமைசாலிகள் கலைஞர்கள் தீயபழக்கங்களுக்கு அடிமையாகி விடாதீர்கள், கெட்டுப் போகாதீர்கள். என்று ஒரு விழாவில் நடிகர் சிவகுமார் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:.

பிரபல பாடலாசிரியரும் இயக்குநரும் பத்திரிகையாசிரியரு
மான எம்.ஜி.வல்லபன் பற்றிய தொகுப்பு நூலான ‘சகலகலா வல்லபன்’ நூல் வெளியீட்டு விழா நேற்றுமாலை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

விழாவில் நூலை நடிகர் சிவகுமார் வெளியிட்டார். இயக்குநர் கே. பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.

இந்நூலை அருள்செல்வன் தொகுத்துள்ளார்.

விழாவில் நூலை வெளியிட்டு நடிகர் சிவகுமார் பேசும் போது,

”திருத்துறைப்பூண்டியில் ஒரு அம்மா இட்லி வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு ஆறேழு வயதில் ஒரு பையன் இருந்தான். பள்ளிக்கூடம் போகிற பையனுக்கு 4 இட்லி வைத்துவிட்டு குளிக்கப் போனாள் தாய்.

அப்போது அந்த பையன் இட்லி துணியை தூக்கி மேலும் 2 இட்லியை எடுத்துச் சாப்பிட்டு விட்டான். கூடவே சித்தியும் இருந்தாள். குளித்து விட்டு வந்த போது சித்தி சொன்னாள் ” நீயில்லாத போது உன் பையன் 2 இட்லியைத் திருடி விட்டான்.” என்று. அப்போது ”. அவனுக்காகத்தானே நானே இந்தத் தொழிலைச் செய்கிறேன் ?” என்று கூறி மறுநாள் முதல் 3 இட்லியை கூடுதலாகக் கொடுக்க ஆரம்பித்தாள் அந்தத்தாய்.. அன்று இட்லி திருடிய பையன்தான் எஸ்.எஸ்.வாசன்.

அப்படிப்பட்டவாசன் சைக்கிளோடு சென்னை வந்தார். பெரிய தயாரிப்பாளர் ஆனார், 1948ல் கல்கத்தாவிலேயே தன் படத்துக்கு 10450 லேம்ப் போஸ்டர் போட்டவர் எஸ்.எஸ்.வாசன். இப்படி பலர் பற்றியும் அறிய காரணமாக இருந்ததுதான் பேசும் படம்.

1934ல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர்., கதாநாயகனான அவருக்கு 750 ரூபாய்தான் சம்பளம். கதாநாயகிக்கு 1000 ரூபாய் சம்பளம்.இயக்குநருக்கு 500 ரூபாய் சம்பளம். இயக்கியவர் கே.சுப்ரமணியம். படம் பவளக்கொடி.

சைக்கிள் ஒட்டத் தெரியாமலேயே ஒரு சைக்கிளை தெரியாமல் எடுத்துக் கொண்டுபோய் முதல் வாய்ப்பில் நடித்தவர் எம்.ஜி.ஆர். அவர் 10 ஆண்டுகள் போராடி ‘ராஜகுமாரி’யில் நடித்தார்.

பல ஆண்டுகள் போராடினார். அப்படி குட்டிக்கரணம் போட்டுத்தான் எம்.ஜி.ஆர். மேலே வந்தார். ஆனால் கையில் பத்து ரூபாய் இருந்த போது ஏழு ரூபாய் செலவுசெய்து மூன்று ரூபாய் தானம் செய்தவர் அவர்.

எப்போது உன் கையில் பத்து ரூபாய் இருந்தால் ஒரு ரூபாய் தானம் செய்ய மாட்டாயோ, அப்படிப்பட்ட நீ 1000 ரூபாய் இருந்தாலும் நூறு ரூபாய் சத்தியமாக தானம் செய்யமாட்டாய்.

இன்று கோடிக்கணக்காக பணம் வைத்துள்ள நடிகர்கள் என்ன தானம் செய்தார்கள்?

அன்று நல்ல செய்தியை மட்டுமே போட்ட பத்திரிகைதான் பேசும்படம். இப்படிப்பட்ட நல்ல செய்திகள் எல்லாம் தெரிந்து கொள்ள உதவியதுதான் பேசும்படம்.. பிறகு மாடர்ன் ஆர்ட் வந்தபிறகு ஆர்ட் மாறியது போல, வல்லபன் வந்தது மாடர்ன் ஆர்ட் காலம்.

அப்போதெல்லாம் நான் சிரமப்பட்ட போது இரண்டு வெள்ளை சட்டைதான்
வைத்திருப்பேன். இரண்டு வெள்ளை சட்டை வைத்துக் கொண்டு தினமும் ஒயிட் அண்ட் ஒயிட்டில் வருபவர் இவர் என்று பேசவைத்தேன்.

அப்படிப்பட்ட காலத்தில் பேசும்படத்தில் வல்லபன் இருந்தார். என்னை மாதம் இரண்டு ஓவியங்கள் சிவாஜி எம்.ஜி.ஆர். பத்தினி, சாவித்ரி என்று
வரையவைத்து 24 ஓவியங்களை பேசும்படத்தில் வெளியிட்டார்.

அப்படி எனக்கு நட்பாக வந்தவர்தான் வல்லபன். அவர் பிறந்த ஊர் கேரளா திரிச்சூர். பிறந்த ஆண்டு 1943.அவர் 60 வயதில் இறந்து விட்டார். அங்கே 5 ஆம் வகுப்புவரை கேரளாவில் படித்து விட்டு 6ஆம் வகுப்பிலிருந்து இங்கு படித்து எஸ்எஸ்.எல்.சி யில் மாநிலத்தில் முதலிடம் பெற்றார்.

அவர் அப்பா பிரியாணி கடை ஓட்டல் வைத்திருந்தார். கல்லூரியில் படித்த போது டாக்டர் ராதாகிருஷ்ணன் கையால் விருது வாங்கியிருக்கிறார். அந்த இளைஞன்தான் பிலிமாலயா வல்லபன்.

பிலிமாலயாவில் ஒரு மோட்டோ போட்டிருப்பார் ‘நல்லதைச் சொல்லும் போது நன்றி கூற நேரமில்லாதவர்கள், அல்லதைச் சொல்லும் போது எரிந்து விழா உரிமையில்லாதவர்கள்’ என்று. என்ன ஒரு தைரியம் பார்த்தீர்களா?

பிலிமாலயாவில் ‘எரிச்சலுடடும் எட்டு கேள்விகள் ‘என்று கேட்டு வாங்கிப் போடுவார். பொதுமக்கள் பேசிக் கொள்வதை தைரியமாகக் கேள்வியாகக் கேட்டுப் பதில் பெற்றுப் போடுவார்.

என்னிமும் கேட்டார்கள் மகாவிஷ்ணு, சிவன் என்று சாமி வேடமே போடுகிறீரே நடிக்க வராதா என்று. இப்படிப் பலரிடமும் கேட்டுப் போட்டுள்ளார். வாசனிடமும் கேட்டதுண்டு, சினிமாவே விஷூவல் மீடியா என்று சொல்கிறார்கள் நீங்கள் பக்கம் பக்கமாக வசனம் வைத்துள்ளீர்களே என்று.

முதன் முதலில் ஆபாவாணனையும் பாரதிராஜாவையும் பீச்சில் சந்திக்க வைத்து பேட்டி போட்டவர் வல்லபன்.

இதைவிடப் பெரிய விஷயம் இளையராஜா என்கிற மாணிக்கத்தைக் கண்டுபிடித்து உலகத்துக்கு முதலில் சொன்னது வல்லபன். எவ்வளவு பெரிய விஷயம்?

செல்வராஜுக்கு இன்று உடல்நிலை சரியில்லை. அவரை நாம் கொண்டாட வேண்டும். முதன்முதலில் வல்லபனை ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்தில் பாடல் எழுத வைத்தவர் அவர்.

அதற்கான சன்மானம் 200 ரூபாயை டெல்லி திரைப்பட விழாவுக்குச் சென்ற வல்லபனுக்கு சித்ரா லெட்சுமணன் மூலம் கொடுத்து அனுப்பினார்.

தயாரிப்பாளர் கோவைத்தம்பி கதையோ திரைக்கதையோ வசனமோ வல்லபனைக் கேட்காமல் எதுவும் செய்யமாட்டார்.

இறுதியாக ஒன்று, கடவுள் என்பவனும் காலம் என்பவனும் கொடூரமானவர்கள்.

ஆமாம் கடவுள் என்பவனும் காலம் என்பவனும் கொடூரமானவர்கள்.
படைப்புக்கலைஞன் கொஞ்சம் விட்டால் கடவுளையே கேள்வி கேட்பான் என்று, மூன்று சாபத்தைக் கொடுத்திருக்கிறான்.

ஒருவன் கலைஞனாக இருந்தாலும் சரி, பாடகனாகஇருந்தாலும் சரி, நடனம் ஆடுபவனாக இருந்தாலும் சரி, இயக்குநராக இருந்தாலும் சரி, அவனுக்குப் புகை, மது, மாது என்கிற மூன்று சாபத்தைக் கொடுத்திருக்கிறான்.

இதை உலகஅளவில் சொல்வேன், கலைஞர்கள் மறைந்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் நடிகர்களும் சரி நடிகைகளும் சரி இயக்குநர்களும் சரி பலருக்கும் புகை, மது, மாது பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் 25 ஆண்டுகள் இருந்திருப்பார்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம். உடல் நலம் முக்கியம்.

கலைஞர்களே புகை, மது, மாது என்கிற மூன்றுக்கும் அடிமையாகாமல் இருங்கள். ” இவ்வாறு சிவகுமார் பேசினார்

விழாவில் நடிகர் ராஜேஷ், இயக்குநர்கள் சித்ராலெட்சுமணன், பேரரசு, ஈ.ராம்தாஸ், த.செ.ஞானவேல், கவிஞர்கள்அறிவுமதி யுகபாரதி,.

பத்திரிகையாளர்கள் தேவி மணி, ‘மக்கள்குரல்’ ராம்ஜி, குங்குமம் கே.என். சிவராமன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக நூலின் தொகுப்பாசிரியர் அருள்செல்வன் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் அர்ச்சனா பிரகாஷ் நன்றி கூறினார். விழாவை ராஜசேகர் தொகுத்து வழங்கினார்.

Sivakumar speech about Actors bad habits in film industry

விஜய் ஒரு காந்தியவாதி; தலைவராக உருவாகி மாற்றம் தரனும்… எஸ்ஏசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் படத்திற்கு மெர்சல் என்ற பெயரை அட்லி என்ன நினைத்து வைத்தாரோ? தெரியவில்லை.

ஆனால் தற்போது இந்திய அரசியலையே மெர்சலாக்கி வருகிறது.

படம் வெளியாவதற்கு முன்பே பல பிரச்சினைகளை சந்தித்து வந்த இப்படம் ரிலீசுக்கு பின்னர், பாஜக.வினரின் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.

மேலும் மருத்துவர்களை ஒட்டுமொத்தமாக அவமதித்துவிட்டதாக மருத்துவர்களும் கொந்தளிந்துள்ளனர்.

இந்நிலையில், விஜய்யின் தந்தையும் புரட்சி இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் விஜய் பற்றி கூறியதாவது… “விஜய்யின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம்.

விஜய் ஒரு காந்தியவாதி. அவர் ஒரு தலைவராக உருவாக வேண்டும். அவரை நம்பியுள்ளவர்களுக்கு நல்ல மாற்றத்தை தர வேண்டும்.

அவர் அரசியலுக்கு வருவாரா? எனத் தெரியவில்லை. அதை அவர்தான் முடிவு செய்வார். ஆனால் அவர் வரவேண்டும் என்பது என் விருப்பம்” என தெரிவித்துள்ளார்.

SA Chandrasekar talks about Vijay and his political entry

மெர்சலை பார்த்துவிட்டு விஜய்-அட்லியை காயப்படுத்திய கமல்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் மெர்சல் படத்தை பார்த்தனர்.

இதில் வழக்கம்போல ரஜினி பட்டுப்படாமல் ஜிஎஸ்டி பற்றியோ கருத்து சுதந்திரம் பற்றியோ பேசாமல் மெர்சலை பாராட்டிவிட்டார்.

ஆனால் கமல், மெர்சலை படத்தை பார்த்துவிட்டு அந்த குழுவினருடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.

அதன் பின்னணியில் அபூர்வ சகோதரர்கள் பட போஸ்டர் இருந்தது.

இந்த போஸ்டர்தான் தற்போது பலரது கேள்வியாக உள்ளது.

இந்த படம் ரிலீஸ் ஆகி 20 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது கமல் அந்த படத்துடன் நிற்க காரணம் என்ன?

சமீபகாலமாக எத்தனையோ புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்திருக்கும் கமல் இதுபோன்ற பின்னணியில் எந்தவொரு போஸ்டரையும் வைக்காமல் மெர்சல் குழுவை சந்திக்கும்போது மட்டும் இதை வைத்திருப்பதன் நோக்கம் என்ன?

ஏற்கெனவே மெர்சல் படம் அபூர்வ சகோதரர்கள் படத்தின் ரீமேக் என பலராலும் கூறப்பட்டு வந்த நிலையில் அந்த போஸ்டரை அங்கு வைத்து விஜய்-அட்லியை இப்படி காயப்படுத்திவிட்டாரே கமல்? என பலரும் ஆதங்கத்துடன் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

What is the reason behind Apoorva Sagodharargal poster while Kamal met Mersal team

விக்ரமின் சாமி ஸ்கொயர் படத்திலிருந்து த்ரிஷா திடீர் விலகல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போலீஸ் யூனிபார்முக்கு பெருமை சேர்த்த படங்களில் மிக முக்கியமான படம் சாமி.

ஹரி இயக்கிய இப்படத்தில் விக்ரம், த்ரிஷா, விவேக், மனோரமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படம் பெரும் வெற்றிப் பெறவே இதன் இரண்டாம் பாகத்திற்கு சாமி ஸ்கொயர் எனப் பெயரிட்டு விரைவில் சூட்டிங்கை ஆரம்பிக்க இருந்தனர்.

இதில் விக்ரம், த்ரிஷா கூட்டணியில் மற்றொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் அவர்களும் இணைந்தார்.

இந்நிலையில் தன் கேரக்டரில் வலுவில்லை என்ற காரணத்தினால் இதிலிருந்து விலகுகிறேன். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் த்ரிஷா.

Trisha opting out of Vikrams Saamy Square

Trisha Krishnan‏Verified account @trishtrashers 10m10 minutes ago
Due to creative differences,I have chosen to opt out of Saamy 2 . Wishing the team goodluck.

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் சித்தார்த்-காளிதாஸ் ஜெயராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

`நேரம்’, `பிரேமம்’ படங்களை தொடர்ந்து அல்போன்ஸ் புத்திரன் இயக்கவுள்ள புதிய படம் குறித்த ஆவல் ரசிகர்களிடையே அதிகரித்து வந்தது.

இது இசையை மையப்படுத்தி உருவாகவுள்ளதாக அவரும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் புதிய படத்தில் சித்தார்த் மற்றும் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஆகிய இருவரும் நாயர்களாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

தமிழ், மலையாளம் என இருமொழிகளில் இப்படம் உருவாகவுள்ளதாம்.

இது அல்போன்ஸ் புத்திரனின் வழக்கமான பார்முலா என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு ரெஜேஷ் முருகேஷன் என்பவர் இசையமைக்கிறார்.

தற்போது இதன் முதற்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், மற்ற கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

More Articles
Follows