தூதுவிடும் வேதாளம் வில்லன்.,. அஜித் ஓகே சொல்வாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேதாளத்தை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.

அனிருத் இசையமைக்கவுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் அஜித்தின் ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பார் என கூறப்படுகிறது.

தற்போது மற்ற கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதால், விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது..

இந்நிலையில், இப்படத்தில் அஜித்தின் வில்லனாக நடிக்க, கபீர் துகான் சிங் தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இவரின் சமீபத்திய வலைத்தள உரையாடலில்…

‘வேதாளம் படத்தில் நடித்த 25 நாட்கள் என் வாழ்வில் மறக்க முடியாதவை.

அதுபோன்ற அற்புதமான நாட்களுக்காக மீண்டும் காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இம்… அஜித் என்ன சொல்வாரோ பார்க்கலாம்..?

ஜெய்யுடன் இணையும் சூர்யா-கார்த்தியின் ஹீரோயின்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக அறிமுகமாகி தற்போது தனி ஹீரோவாக பல படங்களில் கலக்கி வருகிறார் ஜெய்.

இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து, எனக்கு வாய்த்த அடிமைகள் என்ற படத்தில் நடிக்கிறார்.

இதில் இவருடன் முதன்முறையாக இணைகிறார் ப்ரணித்தா. இவர் சூர்யாவுடன் மாஸ், கார்த்தியுடன் சகுனி ஆகிய படங்களில் நடித்தவர்.

தேவதாஸ் என்ற கேரக்டரில் ஜெய்யும் காந்தா கேரக்டரில் ப்ரணித்தாவும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் கருணாகரன், காளி வெங்கட், நவீன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மகேந்திரன் ராஜாமணி இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார்.

ஷான் சுதர்சன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

‘ரெமோ’வை தன் கஸ்டடிக்கு கொண்டு வந்த ஆஸ்கர் நாயகன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிமுருகன் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மீண்டும் இணைந்துள்ள படம் ‘ரெமோ’.

இதில் சிவகார்த்திகேயன், பெண் வேடம் உள்ளிட்ட மூன்று கேரக்டர்களில் நடித்துள்ளார்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கி வந்த இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

எனவே, இதன் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.

இதில் சிவகார்த்திகேயனே பெண் குரலுக்கும் டப்பிங் பேசவுள்ளதால், ஆஸ்கார் விருது நாயகன் ரசூல்பூக்குட்டியின் மேற்பார்வையில் டப்பிங் பணிகள் நடைபெறவுள்ளதாம்.

பிசிஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

விஜய்க்கு கதை சொல்ல மறுக்கும் முத்தின கத்திரிக்கா நடிகர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காமெடின்னா… அதுக்கு நான் கியராண்டி என சொல்லாமல், தன் படங்கள் மூலம் சொல்ல வைத்தவர் இயக்குனர் சுந்தர் சி.

இவர் நடித்துள்ள முத்தின கத்திரிக்கா படம் இன்று வெளியாகியுள்ளது.

சுந்தர் சியின் இயக்கத்தில் உருவான படங்களில் கவுண்டமணி, விவேக், வடிவேலு, சந்தானம் ஆகியோர் காமெடியின் உச்சத்தை தொட்டனர்.

மேலும், ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இவரது படங்களில் நடித்துள்ளனர்.

ஆனால் இதுவரை விஜய் இவருடன் பணியாற்றவில்லை.

இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது என்னவென்றால், எந்த இயக்குனர் என்றாலும் விஜய் கதை கேட்காமல் நடிக்க மாட்டாராம்.

ஆனால் சுந்தர்.சியோ கதை சொல்வதை விட அதை காட்சியாக கொண்டுவருவதில்தான் கில்லாடியாம்.

எனவேதான் இவர்கள் இணைவதில் தாமதம் ஆகிவருகிறதாம்.

ரோபா சங்கரின் மொபைல் சார்ஜை காலி செய்த ‘கபாலி’..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று (ஜீன் 16) இரவு மிகச்சரியாக 8 மணிக்கு ரஜினியின் கபாலி நெருப்புடா பாடல் டீசர் வெளியானது.

ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு ரசிகர்களையும் இது வெகுவாக கவர்ந்துள்ளது.

எனவே வெளியாகி 3 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை இது பெற்றது.

இந்நிலையில் இந்த டீசர் குறித்து பிரபல காமெடி நடிகரான ரோபா சங்கர் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது…

“நெருப்புடா டீசரை நான் பார்க்க ஆரம்பிக்கும் போது, 70% சார்ஜ் என் மொபைல் போனில் இருந்தது.

ஆனால் தற்போது சார்ஜ் முடியும் தருவாயில் உள்ளது. அத்தனை முறை பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

இந்த டீசருக்கு அடிமையாகி விட்டேன். தலைவா” என்று தெரிவித்துள்ளார்.

கபாலி நெருப்புடா பாடல் டீசர்… விமர்சனம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்தின் கபாலி படத்தின் டீசர் வெளியாகி உலகளவில் பெரும் சாதனை படைத்துள்ளது.

இது வெளியாகி 45 நாட்களை கடந்த நிலையில், இப்படத்தின் மற்றொரு பாடல் டீசர் நேற்று இரவு வெளியானது.

இந்த டீசர் 35 நொடிகளை கொண்டுள்ளது.

முதல் டீசரில் ரஜினி மட்டுமே பிரதானமாக இருந்தார். இடையில் கிஷோர் மற்றும் ராதிகா ஆப்தே தென்பட்டனர்.

ஆனால் இந்த டீசரில் படத்தின் மெயின் வில்லனான தைவான் நடிகர் வின்ஸ்டன் சவோ இம்பெற்றுள்ளார்.

இவருடன் தினேஷ், கலையரசன், தன்ஷிகா, கிஷோர், ராதிகா ஆப்தே, ஜான்விஜய் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

ஆனால் இதுவரை ரித்விகா இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நெருப்புடா டீசர் நிஜமான நெருப்பு போலவே பரவி வருகிறது.

இது வெளியாகி 3 மணி நேரத்தில் இந்த டீசரை மட்டும் 1 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

இதில் மூன்று விதமான கெட்டப்புகளில் தோன்றியிருக்கிறார் ரஜினி.

முழுக்க நரைத்த தாடி மற்றும் தலை முடியுடன் ஒரு கெட்டப்.

தாடி இல்லாமல் க்ளீன் செய்த முகத்துடன் கொஞ்சம் நரைத்த மீசை மற்றும் தலைமுடியுடன் ஒரு கெட்டப்.

மற்றும் இளமைகால ரஜினி என படு அசத்தலாக உள்ளார்.

பயமா…? என கேட்டபடியே ரஜினியின் காந்த சிரிப்புடன் இந்த டீசர் ஆரம்பம் ஆகிறது.

அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக இந்த டீசர் செல்கிறது.

ரஜினியை சுற்றி பாதுகாவலர்கள் போல் ஜான்விஜய், தினேஷ், கலையரசன் வருகின்றனர்.

தன்ஷிகா வித்தியாசமான டாம்பாய் கெட்டப்பில் தோன்றி அசத்தியிருக்கிறார்.

மலேசியாவில் நடக்கும் ஊர்வல போராட்டக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

கபாலி என்ற மிகப்பெரிய டானிடம் மண்டியிட்டு ஒருவர் கதறி அழுவதும் உள்ளது.

ஒரு ஆக்சிடெண்ட் மற்றும் ஒரு அதிரடி டான்ஸ் காட்சியும் உள்ளது.

இடையில் வரும் “நான் வந்துட்டேன்னு சொல்லு… திரும்ப வந்துடேன்னு…” என்ற பன்ச் டயலாக் படு அசத்தல்.

இறுதியாக கால்மேல் கால் போட்டு அமரும் ரஜினிக்கு நிகராக இன்று வரை எவரும் இல்லை எனலாம். அப்படி ஒரு எனர்ஜி தற்போதும் அவரிடம் உள்ளது.

ஆக மொத்தம், இந்த டீசரில், ஆக்ஷன், பாட்டு, ஃபயர் என எதற்கும் பஞ்சமில்லை.

More Articles
Follows