அமெரிக்காவையே அசர வைக்கும் கபாலி ரிலீஸ்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒருவழியாக நாளை ஜூலை 11ஆம் தேதி சென்சாருக்கு செல்கிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’.

இதனைத் தொடர்ந்து விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

பெரும்பாலும் ஜூலை 22ஆம் தேதியே ரிலீஸ் தேதியாக இருக்கும் எனவும் தெரிகிறது.

எனவே முன் தினம் 21ஆம் தேதி வெளிநாடுகளில் பிரீமியர் ஷோக்கள் நடைபெறவுள்ளன.

இப்படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள ‘சினி கேலக்ஸி’ நிறுவனம் 460 ஸ்கிரீன்களில் படத்தை வெளியிடுகிறது.

ஒரு தமிழ் படம் இத்தனை அரங்குகளில் வெளியாவது அமெரிக்கர்களையே ஆச்சரியப்படுத்தி வருகிறதாம்.

‘காற்று வெளியிடை’… கார்த்தியுடன் இணைந்த ‘யூ டர்ன்’ நடிகை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படம் ‘காற்று வெளியிடை”.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பாடல்களை வைரமுத்து எழுதுகிறார்.

அண்மையில் இதன் பர்ஸ்ட் லுக் வெளியானது.

இதில் விமானம் ஓட்டும் பைலட்டாக கார்த்தி நடிக்கிறார். இவரின் நண்பராக ஆர்.ஜே. பாலாஜி நடிக்கிறார்.

பிரபல பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைத்ரி நாயகியாக நடித்து வரும் நிலையில், இதில் மற்றொரு நாயகியும் நடிக்கிறாராம்.

பவன்குமார் இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘யூ டர்ன்’ என்ற கன்னட படத்தில் நடித்த ஷராதா ஸ்ரீநாத்தான் அவர். அவர் இதில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

பாலிவுட்டுக்கு செல்லும் சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம்பாலா இயக்கத்தில் ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியான படம் ‘தில்லுக்கு துட்டு’.

சந்தானம் நாயகனாக நடிக்க, மொட்டை ராஜேந்திரன், கருணாஸ் உட்பட பலர் நடித்திருந்தனர்.

படத்தின் பெயருக்கு ஏற்ற போலவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று துட்டு சம்பாதித்து வருகிறது.

இந்நிலையில் பாலிவுட் தயாரிப்பாளர்கள் இப்படத்தை ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனர் முரளி தெரிவித்துள்ளதாவது…

‘தமிழ்நாட்டில் 300 தியேட்டர்களில் ‘தில்லுக்கு துட்டு’ ரிலீஸ் ஆனது.

ரசிகர்கள் ஆதரவால் தியேட்டர்களில் காட்சிகளை அதிகப்படுத்தியுள்ளனர்.

விரைவில் இப்படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடவுள்ளோம்.

இந்தியில் ரீமேக் செய்ய பலரும் முன்வந்துள்ளனர். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது” என்றார்.

2016ஆம் ஆண்டின் ஆறுமாத முடிவில் ஐந்து தமிழ் படங்களுக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.

அதில் ‘தில்லுக்குத் துட்டு’ படத்திற்கு 5வது இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்துடன் இணையும் மற்றொரு காமெடி ஹீரோ.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தல 57 படத்திற்காக சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் அஜித்.

அனிருத் இசையமைக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இவர்களுடன் தம்பி ராமையாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தற்போது மற்றொரு காமெடியனாக கருணாகரனும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இவர்கள் இருவரும் ஹீரோவுக்கு இணையான பாத்திரங்களில் மற்ற படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. (உபயம்: பேய்கள் ஜாக்கிரதை, உப்புக் கருவாடு உள்ளிட்ட படங்கள்)

சிங்கம் 3 படத்தில் ஸ்ருதியின் கேரக்டர் என்ன தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரி இயக்கத்தில் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

‘எஸ் 3’ என பெயரிடப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் சூர்யாவுடன் அனுஷ்கா, க்ரிஷ், சூரி, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதில் வித்யா என்ற கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இவருக்கு பத்திரிக்கையாளர் வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இம்மாத இறுதியில் ‘எஸ் 3’ படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன் கலந்து கொள்ளவிருக்கிறார்.

கபாலிக்கு பயந்து ஒதுங்கும் பாலிவுட் படங்கள்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிட்டதட்ட தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கி காத்திருக்கும் மக்கள் போல ரஜினியின் கபாலி ரிலீஸ் தேதியை அனைவரும் எதிர்நோக்கியுள்ளனர்.

படம் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஜுலை 22ம் தேதி கபாலி ரிலீஸ் எனக் கூறப்படும் நிலையில், அன்றைய தினம் வேறு எந்த படங்களும் வெளியாகவில்லையாம்.

மேலும் சில ஹாலிவுட் டப்பிங் படங்களின் ரிலீஸையும் தள்ளி வைத்து விட்டார்களாம்.

எனவே கபாலி சிங்கம் சிங்கிளாக வருகிறது.

More Articles
Follows