‘கபாலி விநியோகஸ்தரே கவலைப்படாதீங்க…’ உறுதியளித்த கவர்னர்-முதல்வர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்பெல்லாம் படம் தயாரிப்பதுதான் கடினம். அதை ஈசியாக ரிலீஸ் செய்து விடுவார்கள். ஆனால் தற்போது மெகா பட்ஜெட் படங்களை கூட எளிதாக எடுத்து விடுகின்றனர். அதை ரிலீஸ் செய்வதற்குள் படாத பாடு பட்டு வருகின்றனர்.

தியேட்டர்கள் கிடைப்பதே அரிதாக இருக்கும் நிலையில், படம் ரிலீஸ் ஆகி இரண்டு நாள்களில் திருட்டு டிவிடியும் வந்து விடுகிறது.

இந்நிலையில் ரஜினியின் ‘கபாலி’ பட புதுச்சேரி ரிலீஸ் உரிமையை பெற்ற லெஜண்ட்ஸ் மீடியா ஜி.பி.செல்வகுமார், புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமி ஆகியோர்களை நேரில் சந்தித்துத்துள்ளார்.

அப்போது சினிமாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் திருட்டு டிவிடியை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டினார்.

மனுவை பெற்றுக் கொண்ட கவர்னரும் முதல்வரும் திருட்டு டிவிடியை ஒழிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்

சைமா (SIIMA 2016) விருதுகள் பெற்ற கலைஞர்கள்: முழு விவரம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமா கலைஞர்களை ஒன்றினைக்கும் வகையிலும், அவர்களை கௌரவிக்கும் வகையிலும் வருடந்தோறும் சைமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டிற்கான விருதுகள் சிங்கப்பூரில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வழங்கப்பட்டன.

விருதை வென்றவர்களின் விவரங்கள் இதோ…

  • சிறந்த நடிகர்: விக்ரம் (ஐ)
  • சிறந்த நடிகை : நயன்தாரா (நானும் ரவுடிதான்)
  • சிறந்த விமர்சக நடிகர்: ஜெயம் ரவி (தனி ஒருவன்)
  • சிறந்த விமர்சக நடிகை: நித்யா மேனன் (ஓகே கண்மணி)
  • சிறந்த வில்லன் நடிகர்: அருண் விஜய் (என்னை அறிந்தால்)
  • சிறந்த காமெடி நடிகர் : ஆர் ஜே பாலாஜி (நானும் ரௌடிதான்)
  • சிறந்த துணை நடிகர்: பிரகாஷ் ராஜ் (ஓகே கண்மணி)
  • சிறந்த துணை நடிகை: ராதிகா (தங்கமகன்)
  • சிறந்த அறிமுக நடிகர்: ஜி.வி.பிரகாஷ் (டார்லிங்)
  • சிறந்த அறிமுக நடிகை: கீர்த்தி சுரேஷ் (இது என்ன மாயம்)
  • சிறந்த இயக்குனர்: விக்னேஷ் சிவன் (நானும் ரௌடி தான்)
  • சிறந்த இசையமைப்பாளர்: அனிருத் (நானும் ரௌடி தான்)
  • சிறந்த பாடகர்: அனிருத் (தங்கமே பாடல் – நானும் ரௌடி தான்)
  • சிறந்த பாடகி: ஸ்வேதா மோகன் (என்ன சொல்ல – தங்கமகன்)
  • சிறந்த பாடலாசிரியர்: வைரமுத்து (ஓகே கண்மணி)
  • தென்னிந்தியாவின் யூத் ஐகான் விருது : சமந்தா.
  • வாழ்நாள் சாதனையாளர் விருது: பாடகி எஸ். ஜானகி மற்றும் பஞ்சு அருணாச்சலம்
  • அதிக முறை ரசிகர்களால் கேட்கப்பட்ட பாடல்: ஏண்டி ஏண்டி (புலி – விஜய்-ஸ்ருதி)

‘நல்லெண்ணத் தூதராக ரஜினியை நியமிக்க வேண்டும்.’ – கிரண்பேடி.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மையில் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுனராக கிரண்பேடி பதவியேற்றார்.

இந்நிலையில் தன்னுடைய ட்விட்டரில்… “தங்கள் வீடுகளில் கழிவறை கட்ட முன்வரும் குடும்பத்தினரை ஊக்கப்படுத்தும் வகையில் ரஜினியின் ‘கபாலி’ பட டிக்கெட்டுகளை பரிசாக வழங்க மாவட்ட ஆட்சியர் திட்டமிட்டிருக்கிறார்” என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு அரசியல் பிரமுகர்களும் சமூக ஆர்வலர்களும் விமர்சனங்களை பதிவிட்டிருந்தனர்.

அதற்கு பதிலளிக்கும் வகையில், ”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை புதுச்சேரியின் வளர்ச்சிக்கு நல்லெண்ணத் தூதராக நியமிக்க வேண்டும்.

அதுபோல், தூய்மை இந்தியா பிரசாரத்துக்காகவும், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு தூதராகவும் அவரை நியமிக்க வேண்டும்.

அப்படி செய்தால், புதுச்சேரியை ஒரு முன்மாதிரி மாநிலமாக முன்னேற்றலாம்” என தெரிவித்துள்ளார்.

இதனையறிந்த ரஜினி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

அம்மா ஷோபாவுடன் நடிக்க விஜய் போடும் கன்டிஷன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல பாடகியான நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா ஒரு சில படங்களை இயக்கியும் இருக்கிறார். இவருக்கு நீண்ட நாட்களாக தன் மகன் விஜய்யுடன் ஒரு படத்தில் அம்மாவாக நடிக்க விருப்பம் உள்ளதாம்.

இவர்கள் இருவரும் ஒரு நகைக்கடை விளம்பரத்தில் இணைந்து நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
தற்போது அம்மாவின் ஆசையை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளாராம் விஜய்.

தன் அம்மாவின் கேரக்டர் படத்தில் மிக முக்கியமான கேரக்டராக இருக்க வேண்டும். அப்படி ஒரு கதை கிடைக்கும் பட்சத்தில் மட்டும்தான் நடிப்பேன் என கன்டிஷன் போட்டுள்ளாராம்.

சூர்யா – கார்த்தி இணையும் பிரம்மாண்ட படம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, தன் ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். ’36 வயதினிலே’ மற்றும் ‘பசங்க 2′ ஆகிய படங்களை தொடர்ந்து ’24’ என்ற படத்தை மிகுந்த பொருட் செலவில் தயாரித்தார்.

இப்படமும் சூர்யாவுக்கு நல்ல லாபத்தை பெற்று தரவே, தற்போது தன் தம்பி கார்த்தி நடிக்கவுள்ள ஒரு படத்தை தயாரிக்கிறாராம். இதற்காக பல முன்னணி இயக்குநர்களிடம் சூர்யா கதை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘காஷ்மோரா’ மற்றும் மணிரத்னம் படங்களை முடித்துவிட்டு, தன் அண்ணன் சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

முதன்முறையாக ஏ.ஆர். ரஹ்மானுடன் இணையும் சுந்தர் சி.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பு, நடிப்பு என கவனம் செலுத்தி வந்தாலும் இடையில் தன்னை வளர்த்து விட்ட டைரக்ஷனையும் விடாதவர் சுந்தர் சி.ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் மிகப்பிரம்மாண்டமாக படத்தை இயக்கவிருக்கிறார் இவர்.

இப்படத்தின் நாயகன், நாயகி யார்? என்ற உறுதியான தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.சரித்திர படமாக உருவாகவிருக்கும் இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாரிக்கின்றனர்.

இந்நிலையில் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மானை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.இவர்கள் இணைவது இதுவே முதன்முறையாகும்.

இதனை நடிகை குஷ்பூ தன் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

More Articles
Follows