காலா டீசர் அப்டேட்ஸ்.; தயாரிப்பாளர் தனுஷ் புது முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்து காலா படத்தை ரஞ்சித் இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசரை நாளை மார்ச் 1ஆம் தேதி வெளியிட உள்ளதாக இதன் தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்திருந்தார்.

இந்த டீசரை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளனர்.

பொதுவாக டீசரை யு-டியூப்பில் மட்டுமே வெளியிடுவார்கள். ஆனால் இதனை பேஸ்புக் பக்கத்திலும் வெளியிட உள்ளனர்.

கபாலி டீசரில் நெருப்புடா பிஜிஎம் செம மாஸாக அமைந்த்து. அதுபோலவே காலா டீசரிலும் செமயான பிஜிஎம் ஒன்று உள்ளதாம்.

இப்படத்தில் ரஜினியின் பெயர் கரிகாலன் என்ற காலா சேட்டு என சொல்லப்படுகிறது.

ரசிகர்கள் உறக்கத்தை தொலைக்க வேண்டாம் என்ற நோக்கத்தில் நள்ளிரவு டீசரை வெளியிடாமல் நாளை காலை அல்லது மாலையில் வெளியிட உள்ளனர்.

ஸ்ரீப்ரியங்காவின் மிக மிக அவசரத்திற்கு கைகொடுக்கும் வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமைதிப்படை 2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இயக்குநராக அவதாரமெடுத்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’.

கதாநாயகியை பிரதானப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், ‘கங்காரு’, ‘வந்தா மல’, ‘கோடை மழை,’ ஸ்கெட்ச் ஆகிய படங்களில் நடித்த ஸ்ரீபிரியங்கா பெண் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார்.

கதையை புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, என் ஆளோட செருப்பைக் காணோம் ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் எழுதியுள்ளார்.

புகைப்படம், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் கதா நாயகனாக நடித்துள்ள அரீஷ் குமார் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார்.

அவரோடு வழக்கு எண் முத்துராமன், லிங்கா, ஆண்டவன்கட்டளை அரவிந்த், ஈ. ராமதாஸ், சரவண சக்தி, வெற்றிக்குமரன், குணா, வி.கே.சுந்தர், மாஸ்டர் சாமுண்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார்.

எப்போதுமே நல்ல படங்களை எடுப்பதிலாகட்டும், அப்படங்களை லாப நஷ்டம் எதிர்பாராமல் மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்ப்பதிலாகட்டும் …

தமிழ் சினிமாவில் மிக முக்கியமானவராக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

காக்கா முட்டை, விசாரணை, லென்ஸ் என நீளும் அந்த பட்டியலில் இப்போது மிகமிக அவசரம் படத்தையும் சேர்த்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

இந்நிலையில் பெண் காவலர்கள் இன்றைய சூழலில் சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளையும் தைரியமாகப் பேசும் மிக மிக அவசரம் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் தனது பேனரில் வெளியிட இருக்கிறார்.

கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி உலகம் முழுக்க வெளியிடும் உரிமையைப் பெற்று வெளியிட இருக்கிறது.

இப்படத்தின் டிரைலர் வெளியீடு மார்ச் 19 ந்தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

Director Vetrimaaran going to release Miga Miga Avasaram

அரசியல்வாதிகள் கமல்-ரஜினிக்கு ராமராஜன் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டாரும் உலகநாயகனும் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை தெரிவித்து விட்டார்கள்.

கமல் தன் கட்சி பெயர், கொடி, சின்னத்தை அறிவித்து விட்டு கட்சி பணிகளை கவனித்து வருகிறார்.

ரஜினிகாந்த் கட்சி பெயரை அறிவிக்காமல் மன்ற நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் அரசியல்வாதியும் முன்னாள் நடிகருமான ராமராஜன் அவர்கள் புதுச்சேரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு அட்வைஸ் செய்யும் விதமாக பேசியுள்ளார்.

அதில்,,, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் நினைத்த உடனே முதலமைச்சர் ஆகிவிடவில்லை.

அவர்கள் மக்கள் பணி செய்தனர். அதன்பின்னர் அவர்கள் முதல்வர் பதவியை அடைந்தனர்.

இப்போது கட்சி தொடங்கியவர்கள் உடனே முதலமைச்சர் ஆகிவிடலாம் என நினைக்கிறார்கள். உடனே ஜொலித்துவிட முடியாது.

சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களுக்கு தகுந்த முன் அனுபவங்கள் தேவை” என பேசியுள்ளார்.

கமல் கட்சி சின்னத்தில் சிக்கல்; விட்டுக் கொடுத்தது தமிழர் பாசறை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற தன் கட்சி பெயரை அறிவித்து கட்சி சின்னம் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தினார் கமல்ஹாசன்.

கட்சி சின்னத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்த 6 கைகளுக்கு மத்தியில் நட்சத்திரம் இருப்பது போன்ற உருவம் இடம்பெற்று இருந்தது.

எனவே இதனை விமர்சித்து பலரும் தங்கள் கருத்துக்கள் பதிவிட்டனர்.

அதே போன்ற பல சின்னங்கள் முன்பே வந்துள்ளன என ஆதாரங்ளுடன் மீம்ஸ்களை உருவாக்கி வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

இந்நிலையில் இதுகுறித்து கமல் தன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது:

மும்பையில் இருந்து தமிழர் பாசறையை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர்.

எங்களது கட்சி சின்னத்தில் தங்கள் அமைப்பு சின்னத்தின் சாயல் இருப்பதாக தெரிவித்தனர்.

தற்போது அவர்கள் என் மீதான அன்பின் காரணமாக அந்த சின்னத்தின் உரிமையை எங்களுக்கு தந்து விட்டனர்.

விமர்சனங்கள், பிரச்சினைகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களே இந்த பிரச்சினையை தீர்த்துவைத்து உள்ளனர்.

எனவே, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னத்தையும், பெயரையும் மாற்றியமைக்கும் திட்டம் எதுவும் இல்லை” என தெரிவித்தார் கமல்ஹாசன்.

ஒருவேளை அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை என்றால் என்ன செய்திருப்பார் கமல்? எனவும் தங்கள் கேள்விகளை வைக்கின்றனர் சிலர்.

ஸ்ரீதேவி மரணம் எழுப்பும் கேள்விகள்; விடை சொல்வார் யாரோ..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி இறந்தார் என அறிவிக்கப்பட்டது.

இந்த தகவலை முதலில் ஊடகங்களுக்கு யார் தெரிவித்தது என்பது இதுவரை தெரியவில்லை.

அதன்பின்னர் மது போதை காரணமாக குளிக்கும் நீர் தொட்டியில் விழுந்து மூச்சு திணறி இறந்துவிட்டதாக கூறப்பட்டது.

இந்த தகவலை பிரதேச பரிசோதனை செய்த பின்னர் வெளியிட்டனர்.

ஆனால் தொட்டியின் அளவு நிச்சயம் பெரிதாக இருக்க வாய்ப்பில்லை. அப்படி என்றால் அவர் அதில் இருந்து வெளியே வந்திருக்கலாமே எனவும் அவரது ரசிகர்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

கணவர் போனிகபூர் ஸ்ரீதேவியின் குளியல் அறைக்கு சென்ற நேரம் மாலை 6.30 மணி என்கிறார்கள். ஆனால் போலீசுக்கு தகவல் சொன்ன நேரம் இரவு 9 மணி என்கிறார்கள்.

அப்படி என்றால் அதுவரை என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

ஒரு வேளை ஸ்ரீதேவி மயங்கிய நிலையில் இருந்தாலும் அதுவரை அந்த ஸ்டார் ஓட்டலின் மருத்துவரை போனி கபூர் ஏன் நாடவில்லை? என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை சொல்லுவார் யாரோ..?

ரஜினிக்கும் கமலுக்கும் இதில் கூட இத்தனை ஒற்றுமையா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இரு துருவங்களாக கமல், ரஜினி இருவரும் திகழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு அடுத்து சினிமாவில் 2 தலைமுறைகள் வந்துவிட்ட போதிலும் இன்றுவரை இவர்களின் மார்கெட்டுக்கு மவுசு குறையவில்லை.

சினிமாவைத் தாண்டி இருவருக்கும் நல்ல நட்பு புரிதல் உள்ளது.

எந்த சக்தியாலும் இவர்களை பிரிக்க முடியாது என்னுமளவுக்கு இவர்களிடையே பல ஒற்றுமைகளை கூறலாம்.

தற்போது இருவரும் தமிழக மக்களின் நலனை பேணிக் காக்க அரசியல் களத்தில் குதித்துள்ளனர்.

கமல் தன் கட்சியை அறிவித்து விட்டார். ரஜினி விரைவில் அறிவிக்கவுள்ளார்.

இந்த ஒற்றுமைகளை தாண்டி இருவரிடையே தற்போது மற்றொரு ஒற்றுமையும் ஏற்பட்டுள்ளது.

ரஜினி நடிப்பில் காலா மற்றும் 2.ஓ படங்கள் திரைக்கு வரவுள்ளன.

அதுபோல் கமல் நடிப்பில் விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன.

இவர்கள் இருவரும் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை அறிவித்தபின் இருவரும் ஒவ்வொரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்2 படத்தில் கமல் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இப்படத்தை பிரபல நிறுவனமான லைகா தயாரிக்கிறது.

அதுபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இப்படத்தை பிரபல நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இசையமைப்பாளர், டெக்னீஷியன்கள் மற்றும் நாயகி பெயர்களை இதுவரை இவர்கள் இருவரும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows