ஜோதிகா நடிக்கும் புது பட பூஜை சென்னையில் நடந்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் தரமான வெற்றிப்படங்களை தந்து வரும் 2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் அடுத்த பட பூஜை, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷனில் இன்று காலை (நவம்பர் 28) மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

மிக வித்தியாசமான படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிகர்கள் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி கூட்டணியில் சூரி, கலையரசன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கிறார்கள். கிராமியப் பின்னணியில் உறவுகளின் வலிமையைச் உரக்கச்சொல்லும் விதமாக இந்தப் படம் உருவாகிறது. இயக்குநர் இரா.சரவணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்க, தமிழ்த் திரையுலகில் தனி முத்திரை பதித்து வரும் ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இளைய தலைமுறையின் நாடித்துடிப்புகளை தன் இசையால் கட்டிப் போட்டு வைத்திருக்கும் டி.இமான் இசை அமைக்க, தமிழ்த் திரையுலகின் முக்கிய படத் தொகுப்பாளர் ரூபன் எடிட்டிங் பணியைக் கவனிக்க, முஜூபுர் ரஹ்மான் கலை இயக்குநராகப் பங்கேற்கிறார். இந்தப் படத்தின் முழுப் படப்பிடிப்பும் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டப் பகுதிகளில் திட்டமிடப்பட்டிருக்கிறது.

இவ்விழாவில் நடிகர் திரு.சிவகுமார், 2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனரும் தயாரிப்பாளருமான சூர்யா, கார்த்தி, சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், இமான், 2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் CEO ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், இயக்குனர்கள் இயக்குனர்கள் பாண்டிராஜ், கல்யாண், பிரெட்ரிக், சி கௌதமராஜ், டீ. ஜே ஞானவேல், குகன் சென்னியப்பன், தயாரிப்பாளர் S R பிரபு, ஒளிப்பதிவாளர்கள் ரவி வர்மா ராம்ஜி, கதிர், விநியோகஸ்தர் B.சக்திவேலன் மற்றும் பின்னணி பாடகர் கிரிஷ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

ஜோதிகா & கார்த்தி நடித்த ‘தம்பி’ படத்தை வெளியிடும் SDC பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் டிஸ்டிபூசனில் கோடம்பாக்கத்தை திரும்பி பார்க்க வைத்த SDC பிக்சர்ஸ் தொரட்டி, திட்டம் போட்டு திருடுற கூட்டம், காவியன், ஆகிய படங்களை வெளியிட்டனர்.

சேரன் நடிப்பில் உருவாகியுள்ள “ராஜாவுக்கு செக்”, திரிஷாவின் “கர்ஜனை” படங்களை வெளியிட இருக்கிறார்கள்.

இதற்கிடையில் கார்த்தியின் “தம்பி” படம் நன்றாக வந்திருப்பதாக கேள்விப்பட்டு அப்படத்தின் தமிழ்நாட்டு தியேட்டரிகல் உரிமையை வாங்க முடிவு செய்து அப்படத்தை வாங்கினர்.

பல முன்னணி நிறுவனங்கள் போட்டி நிலையிலும் “தம்பி” படத்தின் தமிழ்நாட்டு உரிமையை SDC பிக்சர்ஸ் கைப்பற்றிள்ளது.

ஜோதிகா & சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்..

நான் கதை நாயகன்தான் கதாநாயகனல்ல : நடிகர் அப்புக்குட்டி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் மத்தியில் கதை நாயகனாக தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பெற்றிருப்பவர் நடிகர் அப்புக்குட்டி. சிறந்த நடிகராக தேசிய விருது பெற்றவர் மட்டுமல்ல வித்தியாசமான பாத்திரங்களுக்கும் விதிவிலக்கான பாத்திரங்களுக்கும் தன்னை ஒப்படைப்பவர் என்று பெயர் பெற்றவர் .

தனக்கென ஒரு தனி நாற்காலி தயாரித்துக்கொண்டு தமிழ் சினிமாவில் பயணிக்கும் அவர் கையில் இப்போதும் 8 படங்கள். அவரிடம் பேசியபோது கேட்டோம்,

தேசிய விருது பெற்று இருக்கிறீர்கள் இருந்தாலும் உங்களுக்கான சரியான அங்கீகாரம் கிடைத்திருப்பதாக உணர்கிறீர்களா ?

“என்னைப் பொறுத்தவரை இல்லாத வாய்ப்புகளையும் கிடைக்காத உயரங்களையும் நினைத்து வருத்தப் படுவதைவிட கிடைப்பதில் சிறப்பாக செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம் .

எனக்கு இப்போது வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன .நான் நடித்து ‘வாழ்க விவசாயி’,’ குஸ்கா’ படங்கள் வெளிவர தயாராக இருக்கின்றன இப்போது எட்டு படங்களில் நடித்து வருகிறேன் . ,’வல்லவனுக்கு வல்லவன்’, ‘பூம் பூம் காளை’, ‘வைரி’, ‘ரூட்டு’.’மாயநதி’ , ‘இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு’ , ‘பரமகுரு’ , ‘கல்தா’ போன்ற படங்கள் கைவசம் உள்ளன .எனக்கு வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.அதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்.”
என்கிறார்.

உங்களுக்குப் போட்டியாக யாரை நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது

,”உண்மையைச் சொன்னால் பலருக்கும் பலர் போட்டியாக இருப்பார்கள் .ஆனால் எனக்கு யாரும் போட்டி என்று கூற முடியாது. எனக்கு நகைச்சுவை பாத்திரங்களில் சூரி, சந்தானம் ,யோகிபாபு, சதீஷ் எனக்கு போட்டி என்று சிலர் நினைக்கிறார்கள் கேட்கிறார்கள்.நான் அப்படி நினைக்கவில்லை .சிலர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள் அவர்களை நான் போட்டியாக கருதவில்லை .எனக்கு நான் மட்டுமே போட்டி .

இந்தப் பாத்திரம் அப்புக்குட்டிக்குச் சரியாக பொருந்தும் அவர் சரியாக நடிப்பார் என்று நம்பிக்கையுடன் வரும் வாய்ப்புகள் எனக்கு மட்டுமே சொந்தமானது. எனக்கு வரும் அழைப்புகைளை யாரும் தட்டிப்பறிக்க முடியாது. என் இடத்தை யாரும் இட்டு நிரப்ப முடியாது .அது போல் எனக்கு யாரும் போட்டி கிடையாது எனக்கு நானே தான் போட்டி . ” என்கிறார் தெளிவாக..

எப்படிப் பட்ட படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்ற போது,

” அப்புகுட்டி என்றால் இயல்பாக நடிப்பார் என்ற எண்ணம் உள்ளது .நான் விரும்புவதும் அதைத்தான்.

நல்ல நகைச்சுவை வேடங்களிலும் மனதை தொடும் உணர்ச்சிகரமான கதாபாத்திரங்களிலும் வித்தியாசமான கதைகளிலும் நடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

எல்லா வாய்ப்புகளையும் நான் ஏற்றுக் கொள்வதில்லை . சும்மா வந்து போகும் கதாபாத்திரம் எனக்கு தேவையில்லை.

நான் எப்போதும் இப்படித்தான் நினைைக்கிறேன். நான் கதாநாயகன் அல்ல .நான் கதை நாயகன் மட்டுமே .

கதாநாயகன் என்கிற போது ஒரு வட்டத்துக்குள் சுழல வேண்டியிருக்கும் .அதனால் எனக்கென்று பாத்திரங்களில் எந்த இலக்கும் வரையறையும் வரம்பும் கிடையாது .அப்படிப்பட்ட நடிகராக ,ஒரு இயக்குநரின் நடிகராக நான் பயணம் செய்ய வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.” என்கிறார்.

சமீபத்திய எதிர்பார்ப்பாக நீங்கள் கருதுவது என்ன என்றால்,
” நான் நடித்து அடுத்து இரண்டு படங்கள் வெளியாகத் தயாராக இருக்கிறது. குறிப்பாக ‘வாழ்க விவசாயி’ மிகவும் நல்ல படம் ‘விவசாயிகளின் வாழ்வியலை அழகாகவும் மனதை தொடும்படி சொல்லும் கதை.. இனி யார் விவசாயம் பற்றியும் விவசாயிகளைப் பற்றி படம் எடுத்தாலும் இந்த ப் படத்தின் பாதிப்பு, இல்லாமல் இந்தப் படத்தின் சாயல் இல்லாமல் எடுக்க முடியாது .இப்படிச் சொல்லும் அளவுக்கு முழுமையாக விவசாயிகளின் பிரச்சினைகளை உணர்ச்சிகரமாக பேசுகிற படமாக இது இருக்கும் .

இதில் நடித்திருப்பதில் பெருமைப்படுகிறேன் .எனக்கு இதில் நல்ல பெயர் கிடைக்கும் .விவசாயம் பற்றிய விழிப்புணர்வு படமாகவும் இது இருக்கும் .அடுத்து நான் நடித்த’ குஸ்கா ‘ படம் வருகிறது அது என்னுடைய இன்னொரு பரிமாணத்தைக் காட்டும் படி இருக்கும்.” என்கிறார்.
இப்படி வரிசை கட்டி நிற்கும் பலதரப்பட்ட படங்களோடு புதிய நம்பிக்கையோடு அப்புக்குட்டியின் திரைப்பயணம் தொடர்கிறது .

விடுதலை சிறுத்தைகள் மிரட்டல்.; பாதுகாப்பு கோரி காயத்ரி ரகுராம் மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்து மதத்தை விமர்சித்ததாக திருமாவளவன் பற்றி நடிகை‌ காயத்ரி ட்விட்டரில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை பதிவிட்டார்‌.

எனவே அவரது வீட்டை முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என நடிகை காயத்ரி ரகுராம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர், தொலைபேசி மூலம் தொடர்ந்து மிரட்டல் விடுப்பதாகவும், எனவே தனது இல்லத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிய ‘தனுசு ராசி நேயர்களே’ டீஸர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் டீஸரை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு பாராட்டியது குறித்து ஒட்டு மொத்த படக்குழு முழுவதும் மகிழ்ச்சியில் மூழ்கித் திளைக்கிறது.

இது குறித்து விவரித்த இயக்குநர் சஞ்சய் பாரதி, “கிட்டத்தட்ட ஒரு கனவு நனவானதைப்போலத்தான் இருக்கிறது. எல்லோரையும்போல நானும் தலைவர் ரஜினிகாந்த் சாரின் தீவிர ரசிகன்தான். அவர் நடித்த படங்களை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்க இதுவரை நான் தவறியதே இல்லை. என் தந்தை சந்தான பாரதி, ரஜினி சாரின் நெருங்கிய நண்பர் என்றாலும், இயக்குநராக எனது பணியை அவர் பார்த்துப் பாராட்டியது என்னால் மறக்க முடியாத தருணம். வண்ணமயமான தனுசு ராசி நேயர்களே டீஸருக்காக ஒட்டுமொத்த படக்குழுவையும் வெகுவாகப் பாராட்டினார் ரஜினி சார்.

படத்தலைப்பு எவ்வாறு தனித்துவம் மிக்கதாக இருக்கிறதோ அதே அளவுக்கு சர்வதேச ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தக்கதாகவும் இருக்கிறது என்று பாராட்டினார். ரஜினி சார் பாராட்டியது வெறும் முகஸ்துதிக்காக அல்ல. நிஜமான ஈடுபாட்டுடன் படத்தைப் பற்றியும், படக்குழுவைப் பற்றியும் கேட்டறிந்தார். மிகுந்த ஆர்வத்துடன் என்னைப் பற்றியும் நான் யாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன் என்றும் கேட்டார். இயக்குநர் விஜயிடம் நான் உதவி இயக்குநராகப் பணியாற்றியதை விவரித்தேன். படம் எப்போது வெளியாகிறது என்று அவர் கேட்க, நான் ரிலீஸ் தேதியே சொன்னதும், சரியான நேரத்தில்தான் வெளியிடுகின்றீர்கள் என்று சொன்னார்” என்றார் இயக்குநர் சஞ்சய் பாரதி..

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் தனுசு ராசி நேயர்களே திரைப்படம் உலகெங்கும் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகிறது. அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
ரிபா மோனிகா ஜான் மற்றும் டிகான்கனா சூர்யவன்ஸி இருவரும் கதாநயாகி வேடங்களில் நடிக்க, ரேணுகா, முனீஷ்காந்த், யோகி பாபு, மற்றும் சில நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்துக்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். குபேந்திரன் படத்தொகுப்பை கவனிக்க, உமேஷ் ஜே குமார் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். விவேகா, மதன் கார்க்கி, விக்னேஷ் சிவன், கு.கார்த்திக், சந்துரு ஆகியோர் பாடல்களை எழுத, எம்.ஆர்.பொன் பார்த்திபன் வசனங்களைத் தீட்டுகிறார். ஆடியோகிராபி பொறுப்பை டி.உதயகுமாரும், ஆடை அலங்காரப் பொறுப்பை ஜி.அனுஷா மீனாக்ஷியும் ஏற்றிருக்கின்றனர். கல்யாண்-ஷெரீப் நடனக் காட்சிகளை அமைக்கின்றனர்.

உலக பிரபல மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை சினிமாவாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாட்டு, டான்ஸ், பாடல் எழுதுவது என பன்முக திறமை கொண்டவர் மைக்கேல் ஜாக்சன். உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

இவரின் வாழ்க்கை பல மர்மங்களை கொண்டதாக இருந்தது.

தொடர் அறுவைச் சிகிச்சை, பாலியல் புகார், திடீர் மரணம் என அதிர்ச்சிகைளை கொண்டது.

இவர் மரணமடைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க உள்ளனர்.

இதன் உரிமையை போஹெமிய ராப்சோடி படத்தை தயாரித்த கிரஹாம் கிங் என்பவர் வாங்கியிருக்கிறாராம்.

கிளாடியேட்டர் படத்திற்கு கதை எழுதிய ஜான் லோகன், இப்படத்துக்கு திரைக்கதை எழுதுகிறார்.

இதில் மைக்கேல் ஜாக்சனாக நடிப்பவர் யார் என்றுதானே கேட்கிறீர்கள்.

விரைவில் அறிவிப்பு வரும். காத்திருக்கவும்.

More Articles
Follows