ஜெயம்ரவியின் டிக் டிக் டிக் பட இசை வெளியீட்டு தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகியுள்ள படம் டிக் டிக் டிக்.

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜெயம்ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் ஆசிஸ். ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நேமிசந்த் ஜபக் மற்றும் ஹதேஷ் ஜபக் தயாரித்திருக்கும் இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.

டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

அடுத்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26-ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்யவுள்ளனர்.

இந்நிலையில் பாடல்களை ஜனவரி மாதம் 4ம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Jayam Ravis Tik Tik Tik movie audio release updates

காதலருடன் நெருக்கமாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஸ்ருதிஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை ஸ்ருதிஹாசனும், லண்டனை சேர்ந்த நடிகர் மைக்கேல் கோர்சலும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

பொது நிகழ்ச்சிகளில் கூட இருவரும் ஒன்றாகவே பங்கேற்று வருகின்றனர்.

அண்மையில் கூட நடிகர் ஆதவ் கண்ணாதாசனின் திருமணத்தில் மைக்கேல் கோர்சலுடன் ஸ்ருதி கலந்து கொண்டார்.

இந்நிலையில், ஓரிரு தினங்களுக்கு முன் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் படம் ஒன்றை ஸ்ருதியே தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shruthihassan celebrated Christmas with her lover Michael Corsale

அடுத்த டைரக்சன் மெர்சல் புரொடியூசருக்குதான்..; தனுஷ் கன்பார்ம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிப்பு, தயாரிப்பு என பல துறைகளை கடந்து தற்போது டைரக்சன் துறையிலும் காலடி எடுத்து வைத்துவிட்டார் தனுஷ்.

இவர் முதன்முதலாக இயக்கிய பவர் பாண்டி படம் பட்டி முதல் சிட்டி வரை பட்டைய கிளப்பியது.

எனவே அடுத்த படத்தை விரைவில் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரின் மௌனமே அதற்கு பதிலாக கிடைத்தது.

இந்நிலையில் தன் அடுத்த படத்தை மெர்சல் பட தயாரிப்பாளர் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்க்கு இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் அதில் தான் நடிக்கவுள்ளதையும், மற்ற விவரங்களை 2018ல் வெளியிடுவேன் என தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தனுஷ்-சாய்பல்லவி கூட்டணியில் இணைந்தார் வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 விரைவில் உருவாகவுள்ளது.

இப்படத்தை தனுஷ் தயாரித்து நடிக்கிறார்.

நாயகியாக சாய்பல்லவி நடிக்க, முக்கிய வேடத்தில் கிருஷ்ணா நடிக்கிறார்.

மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் மற்றொரு முக்கிய வேடத்தில் வரலட்சுமி நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஜீவாவின் 29வது படத்தில் நடிக்கும் கொரில்லா; படத்தலைப்பும் அதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டான் சாண்டி இயக்கும் புதிய படத்தில் ஜீவா ஜோடியாக `அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

முக்கிய கேரக்டரில் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் யோகி பாபு நடிக்கவுள்ளனர்.

இப்படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரிக்கிறார்.

ஹெய்ஸ்ட் (திருட்டு சம்பந்தப்பட்ட) காமெடி த்ரில்லர் ஜேனரில் உருவாகும் இப்படம் ஜீவாவின் 29-வது படமாகும்.

விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் இசையமைக்க, ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்திற்கு `கொரில்லா’ என தலைப்பிட்டுள்ளனர்.

மேலும் தமிழ் சினிமாவில் முதன்முறையாக கொரில்லா ஒன்று இப்படத்தில் நடிக்கவுள்ளது.

Actor Jiivas 29th movie titled Gorilla and it plays main role

கடவுளாக பாவித்து ரஜினியை பிரதட்ஷினம் செய்த ரசிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அவரது ரசிகர்கள் தலைவர் என அழைத்தாலும் ஒரு சிலர் அவரை தங்கள் தெய்வமாகவே வழிப்பட்டு வருகின்றனர் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
இந்நிலையில் இன்று தன் ரசிகர்கள் 3வது நாளாக போட்டோ எடுத்து வருகிறார் ரஜினிகாந்த்.

அப்போது பல ரசிகர்கள் ஆர்வ மிகுதியால் அவரது காலில் விழுந்தும், அவரை கட்டியணைத்தும் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

ஒரு ரசிகர் போட்டோ எடுப்பதற்கு முன்பு மேடையேறியதும் ரஜினியை கடவுளாக பாவித்து அவரை சுற்றி வலம் (பிரதட்ஷனம்) வந்தார்.

அதன்பின்னரே அவர் போட்டோ எடுத்துக் கொண்டார்.

More Articles
Follows