சிவாஜி-டிஆர்-விஜய் வரிசையில் ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்-நடிகைகளின் வாரிசுகள் சினிமாவில் நடிப்பது சகஜம்தான்.

ஆனால் அவர்கள் இணைந்து ஒரே படத்தில் நடிப்பது அரிதான ஒன்று.

கதை அமையும்போது அப்படி வாய்ப்பு வந்தால் நடிப்போம் என்பார்கள்.

இந்நிலையில் சாதனை படத்தில் சிவாஜி மற்றும் பிரபு இணைந்து நடித்தனர்.

ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி உள்ளிட்ட பல படங்களில் டி.ராஜேந்தர் மற்றும் அவரது மகன் சிம்பு இணைந்து நடித்தனர்.‘

தியாகராஜன்-பிரசாந்த் மற்றும் நாசர்-லுத்புதீன் பாட்ஷா ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து, விஜய் அவரது மகன் சஞ்சய் உடன் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாட்டுக்கு இணைந்து நடித்தார்.

தற்போது ஜெயம் ரவி தனது மகன் ஆரவ் உடன் சௌந்தரராஜன் இயக்கும் டிக் டிக் டிக் படத்தில் இணைந்து நடிக்கிறார்.

இதனை ஜெயம் ரவியே தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

Jayam Ravi ‏@actor_jayamravi 3m3 minutes ago
Happiest day of my life! My son Aarav n I are acting together in #TikTikTik !!! God bless him

தனுஷ்-ரஞ்சித்துடன் கைகோர்க்கும் கலையரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களை தொடர்ந்து, கபாலி படத்தில் நடித்து உலகளவில் பிரபலமானார் கலையரசன்.

தற்போது, இவர் தனி ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.

அதில் ஜெயவேல் இயக்கத்தில் நடித்துள்ள ஒரு படம் பட்டினப்பாக்கம்.

இப்படத்தின் டீசரை இன்று யூடிப்பில் மாலை 4.30 மணிக்கு வெளியிடுகிறார் இயக்குனர் ரஞ்சித்.

இதனையடுத்து, பிரசன்னாவுடன் கலையரசன் இணைந்துள்ள படம் காலக்கூத்து.

இதில் தன்ஷிகா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே நாயகிகளாக நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை இன்று ட்விட்டரில் 6.00 மணிக்கு வெளியிடுகிறார் தனுஷ்.

விஜய்க்காக அமெரிக்கா பறந்த அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பைரவா படத்தை முடித்துவிட்டு சில நாட்கள் ஓய்வு எடுக்கவுள்ளார் விஜய்.

அதனையடுத்து இவரின் 61வது படத்தை அட்லி இயக்க ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கஹவுள்ளது.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்பட உள்ளதாம்.

இதற்காக அட்லி அமெரிக்கா பறந்திருக்கிறார்.

அங்கு படத்திற்காக லொகேஷன் தேடுகள் பணிகளில் தீவிரமாக இருக்கிறாராம்.

‘மற்ற நடிகர்களை போல் சிம்பு டார்ச்சர் செய்யமாட்டார்…’ கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அச்சம் என்பது மடமையடா படம் வருகிற நவம்பர் 11ஆம் தேதி வெளியாகிறது.

எனவே இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது கௌதம் மேனனிடம் சிம்புவுடன் தொடர்ந்து படம் செய்கிறீர்களே? இதற்கு என்ன காரணம்? என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளிக்கும்போது…

சிம்புவுடன் பணிபுரியும் போது வசதியாக (கம்பர்ட்டாக) உணர்கிறேன்.

அவர் மற்ற நடிகர்களை போல் டார்ச்சர் கொடுக்க மாட்டார்.

சொன்னதை புரிந்து கொள்வார்.

மற்ற நடிகர்களின் பெயரை சொல்ல முடியாது.

ஏன் என்றால், மறுபடியும் அவர்களுடன் பணிபுரிய உள்ளேன்.

மீண்டும் சிம்பு பட வாய்ப்பு வந்தால், என் சொந்த தயாரிப்பில் இயக்குவேன்” என்றார்.

‘சிவகார்த்திகேயன் போல என்னால் அழ முடியாது…’ கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு, மஞ்சிமா மோகன் முதன்முறையாக இணைந்துள்ள படம் அச்சம் என்பது மடமையடா.

கௌதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் பெரும் ஹிட்டடித்துள்ள நிலையில், இப்படம் நாளை மறுநாள் (நவ. 11) தேதி ரிலீஸ் ஆகிறது.

இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சிம்பு தவிர மற்ற நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

அப்போது கௌதம் மேன்னிடம் படம் தாமத்திற்கு என்ன காரணம்? என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளிக்கும்போது…

இப்படத்தை நான் தயாரிக்கவில்லை. இதன் தெலுங்கு பதிப்பை தயாரித்தவரே இதனையும் தயாரித்துள்ளார்.

படம் எதனால் தாமதம்? என்ன காரணம் என்பது எனக்கு தெரியாது.

ஆனால் பல சிரமங்களுக்கிடையில் இப்படத்தை வெளியிட இருக்கிறோம்.

பல கஷ்டங்களை அனுபவித்துள்ளேன்.

அதற்காக சிவகார்த்திகேயன் போல என்னால் அழமுடியாது.” என்றார்.

சூர்யா படம் டிராப் ஏன்..? கௌதம் மேனன் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு, மஞ்சிமா மோகன் இணைந்து நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படம் நாளை மறுநாள் (நவ. 11) தேதி ரிலீஸ் ஆகிறது.

இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது சூர்யா உடன் இணைந்து, பணியாற்ற உள்ள படம் என்ன ஆனது? என்று கேட்கப்பட்டது.

அப்போது…

அந்த படம் ஒரு ஆங்கில பாணியிலான படம். அதை தமிழில் எடுக்க நினைத்தேன்.

ஆனால் சூர்யா அது இங்கே இந்த சமயம் செட்டாகாது. பிறகு பார்க்கலாம் என்றார்.

எனவே அது தொடங்கப்படவில்லை.” என்றார்.

More Articles
Follows