விஜய்-ஜெயம் ரவி இணையும் படத்தலைப்பு வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயம் ரவி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் போகன்.

தற்போது விஜய் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இது வனபகுதிகளை சார்ந்த கதையாக உருவாகி வருகிறது.

எனவே இப்படத்திற்கு வனமகன் என பெயரிட்டு, சற்றுமுன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஸ்டண்ட் சில்வா சண்டை காட்சிகளை அமைக்கிறார்.

அந்தோணி படத்தொகுப்பை கவனிக்க, திங்க் பிக் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

‘மல’யுடன் மோது ‘தல’யுடன் மோதாதே… கலக்கும் காளி வெங்கட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்சேதுபதி நடித்த சேதுபதி படத்தின் வெற்றியை தொடர்ந்து வான்சன் மூவிஸ் சார்பாக ஷான்சுதர்சன் தயாரித்து வரும் படம் “ எனக்கு வாய்த்த அடிமைகள்”.

அறிமுக இயக்குநர் மகேந்திரன் ராஜமணி இயக்கும் இப்படத்தில் ஜெய், ப்ரணிதா, கருணாகரன், காளி வெங்கட், ”நான் கடவுள்”ராஜேந்திரன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதில் ஷேர் ஆட்டோ டிரைவராக காளிவெங்கட் நடித்து வருகிறார்.

இதில் இவர் தீவிர அஜீத் ரசிகராக நடிக்கிறாராம்.

அவரின் ஆட்டோவில் ‘மல’யுடன் மோது ‘தல’யுடன் மோதாதே… என்ற வாசகம் இடம்பெற்றுள்ள போட்டோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம்… மோடிக்கு கௌதமி கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பிரதமர் மோடிக்கு கௌதமி கடிதம் எழுதியுள்ளார்.

கவுதமியின் கடிதம் அப்படியே:

பிரதமர் நரேந்திர மோடிக்கு,

நான் இந்தக் கடிதத்தை ஒரு சாதாரண இந்தியக் குடிமகனாக எழுதுகிறேன்.

நான் ஒரு குடும்பத்தின் தலைவி, ஒரு தாய் மற்றும் வேலைக்கு செல்லும் ஒரு பெண்.

நாட்டில் என்னுடன் வாழும் என் சக மக்களுக்கு இருக்கும் கவலையும், அக்கறையுமே எனக்கும் இருக்கின்றன.

அது, எனது குடும்பம் பாதுகாப்பாகவும், நிறைவாகவும் வாழத் தகுதியான ஒரு சூழலை ஏற்படுத்தவே.

சமீபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தீடீர் மரணத்தினால் துக்கத்தில் இருக்கும் கோடிக்கணக்கானவர்களில் நானும் ஒருத்தி.

இந்திய அரசியலில் அவர் ஓர் உயர்ந்த ஆளுமை. பலதரப்பட்ட பெண்களுக்கும் பெரிய உந்துசக்தியாக இருந்தவர். அவரது தலைமையில் தமிழகம் பல துறைகளில் முன்னணிக்கு வந்து முன்னேற்றம் கண்டுள்ளது.

எத்தனை தடைகள் வந்தாலும் கலங்காத ஜெயலலிதா என்ற சகாப்தத்தின் மறுக்கமுடியாத உறுதியும், வலிமையும், வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என கனவு கண்டிருக்கும் இன்னும் எண்ணற்றோருக்கு ஓர் ஊக்கியாக இருக்கும்.

அவரது மறைவு சோகமானதாகவும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதற்குக் காரணம், கடந்த சில மாதங்களாக இருந்த சூழல் மற்றும் முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், அவருக்கு நடந்த சிகிச்சை, அதிலிருந்து அவர் மீண்டு வந்தது, பிறகு திடீரென காலமானது என அதைச் சுற்றியிருக்கும் பதிலளிக்கப்படாத கேள்விகள்.

இந்த விவகாரங்கள் குறித்த தகவல்கள் கிட்டத்தட்ட முழுமையாக மூடிமறைக்கப்பட்டுள்ளன.

அவரை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. கவலையுடன் அவரைப் பார்க்க வந்த பல பிரமுகர்களுக்கு, அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து விசாரிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

தமிழக அரசின் அன்பார்ந்த தலைவர் ஒருவரைச் சுற்றி ஏன் இத்தனை ரகசியங்கள்? ஏன் அவரை தனிமைப்படுத்தவேண்டும்? யாரின் அதிகாரத்தின் பேரில் அவரை அணுகுவதற்கான கட்டுப்பாடுகள் போடப்பட்டன? ஜெயலலிதாவின் உடல்நிலை சிக்கலாக இருந்தபோது, அவரது சிகிச்சை குறித்த முடிவுகளை எடுத்த நபர்கள் யார்? இந்த கேள்விகளுக்கெல்லாம் மக்களிடம் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு யாருடையது? இது போன்ற பல கேள்விகள் தமிழக மக்களிடம் நெருப்பாய் கொதித்துக் கொண்டிருக்கிறது.

அவர்களது எதிரொலியை அந்தக் கேள்விகளை நான் உங்கள் முன் வைக்கிறேன்.

நடந்தவற்றில் எந்த மர்மமும் இல்லை. நடந்தவை அப்படியே மக்களுக்கு தெரிவிக்கப்பட்டன என சிலர் கூறுவார்கள். ஆனால் ஐயா அதுதான் எனது பயமும் கூட.

ஜனநாயகத்தால் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் பற்றி உண்மையான தகவல்களைத் தெரிந்து கொள்வது ஒவ்வொரு குடுமகனின் உரிமையாகும்.

அந்தத் தலைவர்கள், மக்களின் நலனுக்காக தங்களது கடமையை செய்யும் அளவு உடல்நிலை சீராக உள்ளதா எனத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மக்களின் பிரியமான தலைவராக இருப்பவரின் ஆரோக்கியம் குறித்த கவலை மக்களுக்கு இருக்கும்.

இதில், இத்தகைய மிகப்பெரிய அளவிலான சோகத்தைச் சுற்றியிருக்கும் மர்மங்கள் எந்த சூழலிலும் கேள்வி கேட்கப்படாமலோ, பதிலளிக்கப்படாமலோ இருக்கக் கூடாது.

ஒரு தலைவரின் விஷயத்திலேயே இந்த நிலை என்றால் தனது உரிமைக்காகப் போராடும் ஒரு சாதாரணக் குடிமகனின் நிலை என்ன? நமது ஜனநாயக முறையின் மீது ஒவ்வொரு இந்தியரும் வைத்திருக்கும் நம்பிக்கைதான் நமது தேசத்தை உயர்வாக்குகிறது. அது எந்த நிலையிலும் பாதுகாக்கப்படவேண்டும்.

ஒவ்வொரு இந்தியரும் தங்களது தினசரி வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் குறித்து முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டிய உரிமை இருக்கிறது.

இந்த உரிமையை காக்க வேண்டும் என்கிற கவலையும், அக்கறையும் என்னைப் போலவே உங்களுக்கும் இருக்கிறது என்கிற பரிபூரண நம்பிக்கையின் பேரில் தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

சாதாரண இந்தியக் குடிமகனின் உரிமைக்காக பயம் கொள்ளாது போராடும் தலைவர் என்பதை பல முறை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். அதனால், எனது சக தேச மக்களின் குரலுக்கு நீங்கள் கவனம் தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

ஆழ்ந்த மரியாதை மற்றும் நம்பிக்கையுடன்

கவுதமி.

‘நாசர் மகனுடன் நட்பாய் பழகினேன்..’ ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சைவம் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தவர் லூத்புதின் பாஷா.

இவர் நடிகர் நாசரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் முதன்முறையாக ஹீரோவாக நடித்துள்ள “பறந்து செல்ல வா“ என்ற படம் இன்று வெளியாகிறது.

இதுகுறித்து அவர் கூறியதாவது…

இப்படம் எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், நரேல்கேங் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இப்படத்தின் அனைத்தும் சிங்கப்பூரில் படமாக்கப்பட்டுள்ளது. 120 ரூபாயில் சிங்கப்பூரை சுற்றி பார்த்தது போல் ஒரு நல்ல அனுபவத்தை தரும்.

இயக்குநர் தனபால் பறந்து செல்ல வா கதையை கொடுத்து இந்த கதையில் நீங்க நடிக்க வேண்டும் என்றார். கதை மிகவும் சுவாரசியமாக இருந்தது , எனக்கு ரொம்ப பிடித்து விட்டது.

இப்படத்தில் நடிக்கும் போது எனக்கு பதட்டமாக இருந்தது. அதற்கு அப்பா என்னிடம் “நீ ஒரு நடிகன், கதாநாயகன் என்பதனை மறந்து மிக சாதாரணமான நடிகன் என்று நினைத்து நடித்தால் போதும் என்றார்.

ரஜினி சார் படத்துல வருகின்ற பாடலான “ நம்ம ஊர் சிங்காரி “ பாடல் அப்படியே படமாக்கபட்டுள்ளது.

இப்படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது…

இப்பட ஹீரோ லூத்புதின் பாட்ஷா ரொம்ப பதட்டமாக இருந்தார்.

நான் அவரோடு நட்புடன் பழகிய பின்புதான் காட்சிகளில் சிறப்பாக நடித்தார். நாங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்தோம்.

இதில் நான் ஒரு மார்டன் கேர்ள் ஆக நடித்துள்ளேன்.

என்னுடைய படத்திற்காக சிங்கப்பூருக்கு சூட்டிங் சென்றது இதுவே முதல்முறையாகும்” என்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

விஜய்யின் ‘தெறி’க்கும் அஷ்வினின் ‘திரி’க்கும் உள்ள ஒற்றுமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தில் விஜய், நைனிகா நடித்து சூப்பர் ஹிட் அடித்த படம் தெறி.

இப்படத்தில் அப்பா-மகள் பாசத்தை மிக அருமையாக காட்டியிருந்தார் அட்லி.

இந்நிலையில் அசோக் அமிர்தராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் திரி.

இப்படத்தில் அப்பா-மகன் பாசத்தை காட்டியிருக்கிறார்களாம்.

இதில் அஷ்வின் கக்கமனு மற்றும் ஸ்வாதி ரெட்டி இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.

சீஷோர் கோல்ட் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் ஏ.கே. பாலமுருகன் – ஆர். பி. பாலகோபி தயாரித்து இருக்கும் இப்படத்தை ஆண்டோன் ரஞ்சித் மற்றும் எஸ். ஜான் பீட்டர் ஆகியோரும் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

இதற்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்துள்ளதால், படத்திற்கு வரி விலக்கு கிடைக்கும் என்ற உற்சாகத்தில் இருக்கிறார் அறிமுக இயக்குனர் அசோக் அமிர்தராஜ்

‘பைரவா’ தவிர விஜய் ரசிகர்களுக்கு மற்றொரு விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் 2017ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகிறது.

தமிழில் ரிலீஸ் ஆகும் அதே நாளில்தான் தெலுங்கானா, ஆந்திராவிலும் தெலுங்கு பதிப்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நாளில் விஜய் நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தின் ரீமேக்கான கைதி எண் 150 படமும் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விவி. விநாயக் இயக்கியுள்ள இப்படத்தில் தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். நேற்று மாலை இப்படத்தினி டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழில் மாபெரும் வெற்றிப் பெற்ற கத்தி படம் தெலுங்கில் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது? என்பதை காண விஜய் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்களாம்.

Vijay fans will have double treat on pongal 2017

More Articles
Follows