தனுஷை முந்தி விக்ரம் வர என்ன காரணம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தை செப்டம்பர் 2ஆம் தேதி தனுஷ் நடித்த தொடரி படத்தை ரிலீஸ் செய்யவுள்ளனர்..

பெரும்பாலான படங்களை வெள்ளிக்கிழமை வெளியாவது வழக்கம்தான். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்கிறீர்களா? அது சரிதான்.

ஆனால், விக்ரமின் இருமுகன் படத்தை தொடரிக்கு முன்பாக ஒரு நாள் முன்னே ரிலீஸ் செய்யவுள்ளனர்.

கடந்த முறை தன்னுடைய படம் அதுபோன்ற விசேஷ நாளில் வெளியானதால் வெற்றிப் பெறவில்லை.

எனவே இருமுகன் படத்தை மற்றொரு நாளில் வெளியிட விக்ரம் விரும்பினாராம்.

எனவேதான் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ், விடுமுறை நாளை கணக்கில் கொண்டும், விக்ரமின் வேண்டுக்கோளை ஏற்றும் செப்டம்பர் 1ஆம் தேதி படத்தை வெளியிடுகிறாராம்

‘கபாலி’யை பார்த்து ரஜினியிடம் என்ன சொன்னார் கேஎஸ்.ரவிக்குமார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிக்கு அதிரடியான ஹிட்டுக்களை கொடுத்த இயக்குனர்கள் பலர் இருக்கிறார்கள்.

அதில் ரஜினிக்கு ஆஸ்தான இயக்குனர் லிஸ்ட்டில் கே.எஸ்.ரவிக்குமாரும் உண்டு.

இந்நிலையில் கே.எஸ்.ஆரும் கபாலி படத்தை பார்த்துள்ளார்.

இப்படம் குறித்து ரஜினியிடம் இவர் கூறியுள்ளதாவது…

‘இது வழக்கமான ரஜினி படமாவும் இல்லை. ரஞ்சித் படமாவும் இல்லை.

ஒரு டான் படத்துல நீங்க ரொம்ப நல்லா நடிச்சீருக்கீங்க!’ அப்படின்னு சொன்னாராம் கே.எஸ்.ஆர்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் விஷால்-லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஆஸ்தான இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

பலவெற்றிப் படங்களை இவர் கொடுத்திருப்பதால் கமர்ஷியல் இயக்குனர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.

இந்நிலையில் விஷால் மற்றும் லாரன்ஸ் ஆகிய இருவருக்குமான கதைகளை இவர் தயாராக வைத்துள்ளதாராம்.

இவை தற்போது பேச்சு வார்த்தையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

அவர்களின் கால்ஷீட் கிடைக்கும்பட்சத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனத்தெரிகிறது.

20 நாட்களில் கபாலியின் மொத்த வசூல் எவ்வளவு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி, வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை பாக்ஸ் ஆபிஸில் படைத்து வருகிறது.

தற்போது வரை இப்படம் வெளியாகி மூன்று வாரங்களை கடந்துள்ளது.

மேலும் வார விடுமுறை நாட்களில் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி செல்வோரும் உண்டு.

இதுவரை சென்னையில் மட்டும் இப்படம் ரூ. 11 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

தமிழகத்தில் ரூ. 100 கோடியை கடந்து தென்னிந்திய சினிமாவுக்கே சவால் விட்டுள்ளது.

ஆந்திராவில் ரூ. 33 கோடியும், கர்நாடகாவில் ரூ. 30 கோடியும் மற்றும் கேரளாவில் 14 கோடியும் வசூலித்துள்ளதாம்.

இந்தியளவில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளை சேர்த்து ரூ. 210 கோடியை தாண்டிவிட்டது.

இதில் விநியோகஸ்தர்களின் பங்கு மட்டும் ரூ. 100 கோடி என கூறப்படுகிறது.

மலேசியாவில் இதுவரை எந்தப் படமும் வசூலிக்காத அளவு ரூ 26 கோடிகளைக் குவித்துள்ளது.

மேலும் சிங்கப்பூர், இலங்கை, வளைகுடா நாடுகள், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் கபாலி இன்னும் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மேலும் உலகளவில் சாட்டிலைட் உரிமை, இதர விளம்பரங்கள், புரேமோஷன் ஆகியவற்றை சேர்ந்து, இப்படம் ரூ 650 கோடியை கடந்துவிட்டதாம்.

இந்தியாவைச் சேர்ந்த ஒரு முன்னணி வர்த்தக இதழ் ஒன்று இப்படம் ரூ 650 கோடி வரை வசூல் செய்துவிட்டது என தெரிவித்துள்ளது.

வருகிற 26ஆம் தேதி இப்படம் சீனா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் வெளியாகவுள்ளது.

எனவே ஒட்டு மொத்தமாக ரூ. 1000 கோடியை சூப்பர் ஸ்டார் படம் தொட்டாலும் ஆச்சரியம் இல்லை.

சூர்யா விட்டு கொடுப்பார்; விஷால் விடுவாரா.? கார்த்தியுடன் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தீபாவளி பண்டிகைன்னா புதுப்படங்கள் ரிலீஸ் இல்லாமலா?

எனவே, தீபாவளியை குறிவைத்து நிறைய படங்கள் தயாராகி கொண்டிருக்கின்றன.

கோகுல் இயக்கத்தில் கார்த்தி நடித்த காஷ்மோரா, தீபாவளி அன்று ரிலீஸ் என்று முன்பே உறுதி செய்யப்பட்டு விட்டது.

இந்நிலையில் எவரும் எதிர்பாரா விதமாக சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்த கத்தி சண்டை படமும் தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மெட்ராஸ் என்டர்பிரைசஸ்’ தயாரித்த இப்படத்தை ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது.

நடிகர் சங்கம் தேர்தல் பணிகள் தொடங்கியது முதல் விஷால்-கார்த்தி நல்ல நட்பில் இருந்து வருகின்றனர்.

தற்போது இவர்களின் படங்கள் ஒரே நாளில் மோதிக் கொள்ளவிருக்கிறது.

தனது தம்பி கார்த்திக்காக சூர்யா தன் படத்தை தள்ளி வைத்துள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

பின்குறிப்பு :
2013ஆம் பொங்கலுக்கு விஷாலின் ‘சமர்’ மற்றும் கார்த்தியின் ‘அலெக்ஸ் பாண்டியன்’ இரண்டும் மோதியது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனின் நண்பரே அவருக்கு போட்டி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில ஹீரோக்களுக்கு மட்டுமே ஒரு சில காமெடியன்களுடன் ட்ராக் ஒர்க் அவுட் ஆகும்.

சத்யராஜ்-கவுண்டமணி, ஆர்யா-சந்தானம் உள்ளிட்டோர்கள் வரிசையில் சிவகார்த்திகேயன்-சூரிக்கும் முக்கிய பங்குண்டு.

இவர்களின் நட்பு திரைக்கு பின்னாலும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நர்ஸ் ஆக நடித்திருக்கிறார்.

அதுபோல் விஷால், தமன்னா, வடிவேலு நடித்து வரும் கத்தி சண்டை படத்தில் சூரியும் பெண் வேடமிட்டு நடித்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

More Articles
Follows