சூர்யாவுடன் முதன்முறையாக இணையும் பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிங்கம் 3 படத்தை முடித்துவிட்டு, கிராமத்து மண்ணில் வேட்டிய மடிச்சி கட்டி களம் இறங்க போகிறார் சூர்யா.

இப்படத்தை கிராமத்து பின்னணியில் உருவாக்கவிருக்கிறார் முத்தையா.

இவர்கள் இணைவது இதுவே முதன்முறையாகும்.

இந்தக் கூட்டணியில் கீர்த்தி சுரேஷும் முதன்முறையாக இணையவுள்ள நிலையில், இப்படத்திற்கு இமான் இசையமைக்கக்கூடும் என தகவல்கள் வந்துள்ளன.

இது இன்னும் உறுதியாகாத நிலையில், ஒருவேளை நடந்தால், சூர்யா படத்திற்கு இமான் இசையமைப்பது இதுவே முதன்முறை ஆகும்.

சிவகார்த்திகேயன் படத்தை வாங்கிய பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில், 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் ரெமோ.

இப்படத்தின் வியாபாரம் ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவித்து இருந்தனர்.

அதன்படி தற்போது ஒவ்வொரு ஏரியாவாக உரிமைகள் விற்கப்பட்டு வருகின்றன.

கோவை உரிமையை சீனியர் விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கி இருக்கிறார்.

மதுரை மற்றும் ராமநாதபுரம் ஏரியாவை ஜி.என். அழகர் சாமி, மினிமம் கியாரண்டி அடிப்படையில் வாங்கியிருக்கிறார்.

ராமராஜனுடன் இணைந்த ஜீவா… ஒர்க் அவுட் ஆகுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980களில் சூப்பர் ஸ்டாருக்கு படங்களுக்கு சவால் விட்டவர் ராமராஜன்.

பல வெள்ளி விழா படங்களை இவர் கொடுத்திருந்தாலும் இவரது ஒரு சில படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.

இதில் 1991ஆம் ஆண்டு வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படமும் ஒன்று.

இந்நிலையில் ஜீவா நடிக்கும் புதிய படத்திற்கு இதே தலைப்பையே வைத்துள்ளனர்.

சூப்பர் ஹிட் அடித்த படங்களின் தலைப்பாக வைத்திருக்கும் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் ஜீவா படத்திற்கு இப்படியொரு தலைப்பு வைத்திருப்பது ஒர்க் அவுட் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த தலைப்பில் எம்ஜிஆர் பாடல் ஒன்று இருப்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த புதிய படத்தை திருநாள் படத்தை தயாரித்த கோதண்டபாணி நிறுவனம் தயாரிக்கிறது.

கீர்த்தி சுரேஷை வாழ்த்திய மஞ்சிமா மோகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள நடிகைகளுக்கு எப்போதும் தமிழ் சினிமாவில் அதிக மவுசு உண்டு.

தற்போது கீர்த்தி சுரேஷ், மஞ்சிமா மோகன் உள்ளிட்டவர்கள் தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனுஷ் உடன் கீர்த்தி சுரேஷ் நடித்த, தொடரி படத்தின் 2வது ட்ரைலர் சற்றுமுன் வெளியாகியது.

இதனைப் பார்த்த மஞ்சிமா மோகன் கீர்த்திக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

எனவே, கீர்த்தியும் அதற்கு பதிலளித்து நன்றியை தெரிவித்துள்ளார்.

சிம்பு, உதயநிதி உள்ளிட்டவர்களின் படங்களில் மஞ்சிமா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கபாலியால் தள்ளிப் போன ஜி.வி. பிரகாஷின் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிவின்பாலி, இஷா தல்வார் நடித்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த படம் ‘தட்டத்தின் மறயத்து’. வினீத் சீனிவாசன் இயக்கியிருந்தார்.

இப்படத்தின் தமிழ் ரீமேக்கை ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்ற பெயரில் மித்ரன் ஜவஹர் இயக்கியிருக்கிறார்.

இதில் அறிமுக நாயகன் வால்டர் பிலிப்ஸ், இஷா தல்வார் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கலைப்புலி தாணு பெற்றுள்ளார்.

இன்று இப்படம் வெளியாகவிருந்த நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை தாணு தள்ளி வைத்துள்ளார்.

தமிழகத்தின் பல திரையரங்குகளில் இன்னும் கபாலி ஓடிக்கொண்டிப்பதால், தியேட்டர் கிடைக்காத காரணத்தால், இப்படத்தை ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் பற்றி ரெமோ இயக்குனர் பாக்யராஜ்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் அறிமுக படத்திலேயே திதைக்கதையில் ரிஸ்க் மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்திருப்பவர் பாக்யராஜ் கண்ணன்.

ரெமோ படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், சவுண்ட் என்ஜினியர் ரசூல் பூக்குட்டி ஆகியோருடன் பணி புரிந்தது பற்றி தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார் இவர்.

அதில் கூறியுள்ளதாவது…

“சிவா சார் படப்பிடிப்பிற்கு ஒரு நாள் கூட லேட்டாக வந்தது இல்லை.

அவர் அதிகாலை 3 மணிக்கு எல்லாம் வந்து மேக்கப் போட்டு காத்திருப்பார். நான் 8 மணிக்கு சூட்டிங்குக்கு 7 மணிக்குதான் வருவேன்.

இரவு 10 மணியானாலும் ஒரு நாள் கூட முகம் சுளித்து நடித்ததே இல்லை சிவா.

பெண் வேடத்திற்காக 9 கிலோ வரை எடையை குறைத்திருக்கிறார்.

பி.சி சார் என் படத்துக்கு ஒளிப்பதிவாளர் என்பதே என் பாக்கியம்தான். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.

ரசூல் சார் 3 ஸ்பீக்கர், 2 மைக் உள்ளிட்டவைகளை வைத்து சிவாவின் பெண் குரலை ஒலிப்பதிவு செய்துள்ளார்.”

இவ்வாறு பாக்யராஜ் கண்ணன் தெரிவித்துள்ளார்.

More Articles
Follows