‘அரசியல் சாக்கடை; கெட்டவனுக்குத்தான் அதிகாரம் தேவை..’ – சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், அதற்காக போராடும் மாணவர்களுக்காகவும் சிம்பு பத்திரிகையார்களை சந்தித்தார்.

அவர் பேசும்போது…

“தமிழனை எல்லாரும் நசுக்கிறார்கள்.

தமிழக மீனவர்கள் இலங்கையிடம் மாட்டிக் கொண்டால் தமிழக மீனவர்கள் என்கிறார்களே தவிர அவர்களை இந்தியன் என்று சொல்ல மறுக்கிறார்கள்.

இன்று பொங்கல் விடுமுறை இல்லை என்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு அனுமதியில்லை.

தமிழர்கள் என்ன அநாதைகளா? அவர்களுக்காக நான் கேட்பேன்.

இதை நான் செய்வதால், நான் அரசியலில் இறங்க போகிறேன் என்று அர்த்தமில்லை.

அரசியல் சாக்கடை. நான் ஒருபோதும் அதுக்கு வரமாட்டேன்.

கெட்டவனுக்குதான் அதிகாரம் தேவை. நல்லது செய்ய நினைப்பவருக்கு பவர் தேவையில்லை. நல்ல மனசு போதும்” என்றார்.

I wont enter into politics says Simbu

‘மாணவர்கள் அஜித்-விஜய்-தனுஷுக்காக போராடவில்லை…’ – சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடத்திட வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் அவர்கள் சார்ந்த மாவட்டங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதில் போலீஸ் அவர்களின் மீது லத்தி சார்ஜ் நடத்தினர்.

எனவே மாணவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கிய பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது ஆவேசமாக பேட்டியளித்தார்.

நான் தமிழன். தமிழ் உணர்வுள்ளவன். என் மக்களுக்காக என் மண்னுக்காக போராடுவேன்.

ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினால் லத்திசார்ஜ் செய்வார்கள்.

எல்லாரும் ஒவ்வொரு இடத்திலும் போராடுகிறார்கள்.

ஆனால் நான் என் வீட்டின் முன்பு ஜனவரி 12ஆம் தேதி மாலை 5 மணிக்கு கறுப்பு சட்டை அணிந்துக் கொண்டு, பத்து நிமிடம் மௌனமாக நிற்கப் போகிறேன்.

போலீஸ் என்னை ஒன்றும் செய்ய முடியாது. முடிஞ்சா என்னைய அடிடா பார்க்கலாம்.

மாணவர்கள் அஜித், விஜய் தனுஷ்க்காக போராடவில்லை. நம் கலாச்சாரத்திற்காக போராடுகிறார்கள்.

உங்களுக்கும் தமிழ் உணர்வு இருந்தால் நீங்கள் அப்படி செய்யுங்கள்.

எல்லாரும் தங்கள் எதிர்ப்பை 10 நிமிடம் செலவழித்து இப்படி தெரிவிப்போம்.

எதற்கெல்லாமோ காத்திருக்கும் நீங்கள் இதை செய்ய மாட்டீர்களா?

நீங்கள் எங்கிருந்தாலும் இப்படி செய்யுங்கள்.

எல்லாருக்கும் தமிழ் உணர்வு உள்ளதா? என்று பார்ப்போம்.

ஒருவேளை போதுமான ஆதரவு இல்லையென்றால் இனி தமிழர்களின் எந்த பிரச்சினைக்கும் நான் வரமாட்டேன்.

அமெரிக்க விசா உள்ளது. அங்கு சென்றுவிடுவேன்” என தெரிவித்தார்.

ரிலீசுக்கு முன்பே வசூலில் பட்டைய கிளப்பும் ‘பைரவா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்துள்ள பைரவா படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

தமிழகத்தின் பெரும்பாலான தியேட்டர்களை இப்படத்திற்கு ஒதுக்கியுள்ளனர் தியேட்டர் உரிமையாளர்கள்.

இதனால் மற்ற படங்கள் கூட இன்று வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் வியாபாராம் மட்டும் ரூ. 78 கோடியை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது தமிழகத்தில் மட்டும் ரூ. 45 கோடியும் மற்றவைகளை சேர்த்து ரூ. 33 கோடியும் என சொல்லப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்திற்கு வந்த ‘பைரவா’ படத்தின் முக்கிய காட்சிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்யின் பைரவா படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இன்று மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பிரிமீயர் ஷோ நடத்தப்பட்டு வருகிறது.

இப்படத்தை பார்த்த சில விஷமிகள் முக்கியமான காட்சிகளை படம்பிடித்து இணையங்களில் வெளியிட்டுள்ளனர்.

இதனால் படக்குழுவினர் மற்றும் விஜய் ரசிகர்கள் செய்வது அறியாமல் திகைத்து வருகின்றனர்.

‘பைரவா’ ரிலீஸ் ஆகலேன்னா அவ்வளவுதான்… மிரட்டும் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் பரதன் இயக்கியுள்ள பைரவா படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

ஆனால் கேரளாவில் இப்படம் வெளியாவதில் சிச்கல் எழுந்துள்ளது.

கேரளாவில் தியேட்டர் உரிமையாளர்கள் எக்ஸிபிட்டர்ஸ் ஃபடரேஷன் (The Kerala Film Exhibitors’ Federation) நடத்தி வரும் போராட்டம் காரணமாக புதிய திரைப்படங்கள் வெளியாகவில்லை.

மேலும் இது தொடர்பான நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் ‘பைரவா’ ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது.

ஆனால் செய்துக் கொண்ட ஒப்பந்தம்படி விநியோகஸ்தர்கள் இப்படத்தை வெளியிட வேண்டும் என அதிரடியாக தெரிவித்துள்ளனர்.

மேலும், கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் இவர்களுக்கு ஆதரவாக இறங்கியுள்ளனர்.

மாப்பாணர் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சஜன் நடிக்கும் ”யாகன்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாப்பாணர் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ”யாகன்” என்ற படம் உருவாகி வருகிறது. இதில் சஜன் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.

பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் புதுமுக இயக்குனர் வினோத் தங்கவேலு.

கிராமங்களில் நடைபெறும் பல வன்முறை சம்பவங்களுக்கு அடிப்படையே ஒருத்தொருத்தர் புரிந்துகொள்ளாமல் மோதுவதும், அந்த மோதலால் ஏற்படும் இழப்பு எத்தகையது என்பதையும் அழுத்தமாகச் சொல்லும் படைப்பாக உருவாகி வருகிறது யாகன். தான் சம்பந்தமேபடாத ஒரு அவமானம் வில்லனுக்கு நிகழ்கிறது.

அந்த அவமானத்துக்கு ஹீரோவின் குடும்பமே காரணம் எனப் புரிந்துகொள்ளப்படுவதால் ஹீரோவின் குடும்பம் சிதைந்துபோகிறது… இழப்புகளைச் சந்திக்க நேர்கிறது. அதற்கு ஹீரோ என்ன தீர்வு காண்கிறான் என்று போகிறது பரபரப்பான திரைக்கதை.

சிறுவர்களாக இருக்கும்போது அப்பாவின் விரலை விடாமல் பிடித்து நடக்கும் மகன், கொஞ்சம் வளர்ந்தவுடன் அப்பாவுக்கும் மகனுக்குமான அன்னியோன்யத்தில் தானாகவே இடைவெளி விழுந்துவிடுகிறது.

அது வயது காரணமாகவோ அல்லது இருவருக்கும் தேவைப்படும் தனிமை காரணமாகவோ இருக்கலாம். ஆனால் இந்த படத்தில் அப்பாவும் மகனும் எவ்வளவு அன்னியோன்யமாக இருக்கிறார்கள்.அப்பாவும் மகனும் எவ்வளவு தூரம் அன்பாக இருக்கமுடியும் என்பதைக் காட்டியிருக்கிறார்கள்.

அப்பாவாக இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் அப்பாக்களுக்கு மாற்று அப்பா கிடைத்துவிட்டார் என சந்தோசப்பட்டுக்கொள்ளலாம்.

கதாநாயகன் சஜன் சிதம்பரத்தை பூர்வீகமாகக் கொண்டவர். கதாநாயகியாக அஞ்சனா கீர்த்தி நடிக்கிறார். முனீஸ் ராஜா, தவசி, பாவா லட்சுமணன், ராஜேந்திர நாத், ரிந்து ரவி, டெலிபோன் ராஜ், தெனாலி, கிஷோர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

அப்பா மகனுக்குமான நெருக்கத்தை அன்பை அன்னியோன்யத்தை இதற்கு மேல் யாராலும் வார்த்தைகளால் வடித்துவிட முடியாது என்ற அளவில் நா. முத்துக்குமார் எழுதியுள்ளார்.

இந்த பாடலை நா. முதுக்குமாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கு சமர்ப்பணம் செய்ய இருக்கிறது படக்குழு. இசையமைப்பாளர் நிரோ பிரபாகரன் கூறும்போது, இந்தப் பாடலை கேட்கும் ஒவ்வொரு மகனும் தன் தந்தையை நூறு மடங்கு நேசிக்கத் தொடங்கிவிடுவான்.

அவர் எழுதி இந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்யும்போதே எங்களில் பலருக்கு கண்ணீர் வந்துவிட்டது. விரைவில் ஆடியோ வெளியீடு நடக்க இருக்கிறது. அப்போது இந்தப் பாடலைக் கேட்கலாம் என்றார்.

யாகன் படத்தின் ஒளிப்பதிவை கவனிக்கிறார் மகேஷ்.T. எடிட்டிங் செய்கிறார் சண்முகம். பாடல்களை நா. முத்துக்குமார், கபிலன், பத்மாவதி, அருண் பாரதி ஆகியோர் எழுதியுள்ளனர். தயாரிப்பு மேற்பார்வை தினேஷ் சுப்பிரமணியம்.

மாப்பாணர் புரொடக்சன்ஸ் சார்பாக ”யாகன்” படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வருகிறார் யோகராசா சின்னத்தம்பி. படம் வேகமாக வளர்ந்து வருகிறது.

Sajan and Anjana Keerthy starring Yaagan movie updates

More Articles
Follows