ராஜமௌலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ஹாலிவுட் நடிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடித்து வரும் படம் ’ஆர்.ஆர்.ஆர்’.

இதில் வில்லனாக சமுத்திரக்கனி நடித்து வருகிறார்.

டிவிவி தானய்யா என்பவர் சுமார் ரூ. 350 கோடியில் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

முக்கிய கேரக்டரில் அஜய்தேவ்கன், அலியா பட் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஹாலிவுட் நடிகர்களான ரே ஸ்டீவென்சன்னும், அலிசன்டூட்டியும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

மேலும் ஹாலிவுட் நடிகை ஓலிவா மோரிஸ், ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

அடுத்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

 

 

தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்..; சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோவாவில் தொடங்கிய 50வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சூப்பர் ஸ்டாரின் ரஜினிகாந்தின் கலைச் சேவையை பாராட்டி அவருக்கு ‛கோல்டன் ஐகான் என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த விருதை சில நாட்களுக்கு முன்ர் அறிவித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த விருதை நடிகர் அமிதாப்பச்சன் நேற்று ரஜினிக்கு கோவாவில் வழங்கினார்.

விருதை பெற்றுக் கொண்ட ரஜினிகாந்த் பேசுகையில்,

‛‛இந்த விருதை பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. இதை அளித்த இந்திய அரசிற்கு நன்றி. சினிமாவில் இத்தனை ஆண்டுகள் என்னை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்” என பேசினார்.

*ஆண்கள் தினத்தில் ‘ரியல் ஹீரோ’ விருது பெற்ற நடிகர் அபி சரவணன்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மதுரையை சேர்ந்த ‘வுமன் ப்ரொபசனல் கனெக்ட்’ என்ற பெண்கள் அமைப்பு மதுரையில் இருந்து சாதனை படைத்த ஐம்பது ஆண்களை தேர்தெடுத்து உலக ஆண்கள் தினத்தன்று விருது வழங்கினார்கள்.

சினிமா நடிகரும் சமூக சேவகருமான டாக்டர் நடிகர் அபிசரவணன் அவர்ளுக்கு ‘ரியல் ஹீரோ’ எனும் விருது வழங்கப்பட்து… தொலைக்காட்சியை சேர்ந்த ஆன்ட்ரூஸ் , நாட்டுப்புற பாடகர் மதிச்சியம் பாலா உட்பட ஐம்பது சாதனை ஆண்கள் இந்த விருதை பெறறுக்கொண்டனர்.

விருது விழா முடிந்த கையோடு நேரடியாக பரவை சென்ற அபிசரவணன் பரவை முனியம்மாவை சந்தித்து விருததை வழங்கி ஆசி பெற்றார்…

பரவை முனியம்மா மிகுநத உற்சாகத்துடன் “நடிக்க தயாராக இருப்பதாகவும், அபி சரவணனுடன் நடிக்க வேண்டும்” என்றும் ஆவலை வெளிப்படுத்தியதாக அபி சரவணன் தெரிவித்தார்.

EPS கையால் விருது பெறும் ஜெயம் ரவி & RJ பாலாஜி & வருண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தாண்டு வெளியான படங்களில் பல வெற்றி படங்கள் இருந்தாலும் ஐசரி கணேஷ் தயாரித்த 3 படங்களுமே ஹிட் லிஸ்டில் சேர்ந்துள்ளன.

ஆர்ஜே. பாலாஜி நடித்த எல்கேஜி, ஜெயம் ரவி நடித்த கோமாளி மற்றும் வருண் நடித்த பப்பி இந்த 3 படங்களையும் தயாரித்து வெளியிட்டது வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம்.

இந்த நிலையில் இது குறித்து ஐசரி கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது…

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் 2019-ம் ஆண்டில் வெளியான எல்.கே.ஜி, கோமாளி, பப்பி ஆகிய மூன்று படங்களும் மக்களின் பேராதரவு பெற்றிய் வெற்றிப் படங்களாக அமைந்தன.

இதனைக் கொண்டாடும் வகையில் நடைபெறவுள்ள வெற்றி விழா நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பு விருந்தினராக வருகை புரிந்து மூன்று திரைப்படங்களிலும் பணியாற்றிய கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழா வரும் ஞாயிறு நவம்பர் 24 அன்று மாலை 6 மணிக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.

ரஜினியுடன் இணைந்தாலும் கமல்தான் முதல்வர் வேட்பாளர்..- ஸ்ரீப்ரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக மக்கள் நலனுக்காக இணைந்து செயல்படுவோம் என நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகிய இருவருமே தனித்தனியாக பேட்டி அளித்திருந்தனர்.

எனவே விரைவில் வருகிற உள்ளாட்சி தேர்தலில் ரஜினி ஆதரவுடன் கமல் களம் இறங்குவார் என கூறப்படுகிறது.

இதன் மூலம் தனது ரஜினி மன்றத்திற்கு இருக்கும் மக்களின் ஆதரவை தெரிந்து கொள்ள ரஜினிக்கும் வாய்ப்பு அமையும் எனவும் தெரிகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் தேர்தலை சந்தித்த அனுபவம் கமலுக்கு உள்ளது.

நடிகர் ரஜினிக்கு தமிழகமெங்கும் முக்கியமாக மகளிர் இடத்தில் நல்ல செல்வாக்கு உள்ளது.

எனவே இவர்கள் இணைவது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் எனவும் அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

ஆனால் ரஜினி கமல் ரசிகர்களை பொறுத்தவரை இது ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

ரஜினி கமல் நண்பர்களாக இருந்தாலும் அவர்களின் ரசிகர்கள் கடந்த 40 ஆண்டுகளாக எதிரிகளாகவே உள்ளனர்.

ஒருவேளை கூட்டணி அமைந்தால் யார் முதல்வர்? வேட்பாளராக இருப்பார் என இப்போதே பேச ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில் நடிகையும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில மகளிரணியின் ஒருங்கிணைப்பாளருமான ஸ்ரீப்ரியாவிடம் அளித்துள்ள ஒரு பேட்டியில்…

என்னை பொருத்தவரை கமல் முதல்வராக வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் நான் வேலை செய்வேன். யாருடன் இணைந்து வேலைசெய்ய வேண்டுமென அவர் சொல்கிறாரோ, அவர்களுடன் வேலை செய்வோம்” என தெரிவித்துள்ளார்.

2020 புத்தாண்டில் தளபதி 64 பர்ஸ்ட் லுக்; மீண்டும் செல்ஃபி புள்ள

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகும் அவரின 64வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க வருகிறார்.

இதில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்க மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, விஜே ரம்யா, சவுந்தர்யா, ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, கௌரி கிஷன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் அனிருத் இசையில் விஜய் மீண்டும் பாடல் பாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே அனிருத் இசையில் கத்தி படத்தில் செல்ஃபி புள்ள பாடலைப் பாடியிருந்தார்.

இந்த படம் கமல் நடித்த நம்மவர் படத்தின் ரீமேக் என தகவல்கள் வரவே அதை படக்குழு முற்றிலுமாக மறுத்துள்ளது.

இப்பட பர்ஸ்ட் லுக் 2020 புத்தாண்டு பிறக்கும்போது வெளியாகவுள்ளது.

More Articles
Follows