ஹாலிவுட்டில் நடிக்க தனுஷுக்கு கன்டிஷன் போட்ட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடித்துள்ள ‘தொடரி’ செப்டம்பர் இறுதி வாரத்தில் வெளியாகிறது.

இதனையடுத்து ‘கொடி’ படத்தை தீபாவளிக்கு வெளியிட உள்ளனர்.

இதனிடையில் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ மற்றும் கெளதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவையில்லாமல் ராஜ்கிரண் நடிக்கும் பவர் பாண்டி படத்தை இயக்கி வருகிறார்.

வருகிற ஜனவரி முதல் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.

பிரபல பிரெஞ்ச் நாவலான ‘The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard’ திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இதில் தனுஷூடன் UmaThurman‬ மற்றும் ‎Alexandra Daddario‬ ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்பட வாய்ப்பு குறித்து தனுஷ் கூறியதாவது…

இப்பட இயக்குனர் என்னை அணுகிய விதம் ரொம்ப பிடித்திருந்தது.

இப்படக்குழு நாங்கள் 10 நடிகர்களின் படத்தை அனுப்புகிறோம். நீங்கள் யாரை தேர்வு செய்வீர்கள் என எங்களுக்கு தெரியும்” என அனுப்பி இருக்கிறார்கள்.

இப்பட இயக்குநரும் 10 படங்களையும் பார்த்துவிட்டு என்னை தேர்வு செய்திருக்கிறார்.

நான் நடித்த எல்லா படங்களையும் பார்த்திருக்கிறார் அவர்.

இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதை தவிர வேறு எதைப் பற்றியும் பேச அனுமதிக்க மாட்டேன் என்ற நிபந்தனையுடன் என்னிடம் பேசினார்.”

என்று தனுஷ் தெரிவித்திருக்கிறார்.

மோகன்லால் படம் ரீமேக்; கமல் போல் ரஜினி ஓகே சொல்வாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மைகாலமாக மலையாளத்தில் வெற்றி பெற்ற பல படங்கள் தமிழில் ரீமேக் ஆகி வருகின்றன.

இதில் மோகன்லால் நடித்த ஒப்பம் என்ற படத்தை பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கியிருந்தார்.

த்ரில்லர் கதையான இதில் மோகன்லால் பார்வையற்றவராக மோகன்லால் நடித்திருந்தார்.

நல்ல விமர்சனங்களை பெற்று வரும் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார்களாம்.

இதற்கான சிறப்பு காட்சியை ரஜினிக்கு திரையிட்டு காண்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இதில் ரஜினியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் தொடங்க உள்ளதாக தெரிகிறது.

மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் ரீமேக்கில் கமல் நடித்திருந்தார். பாபநாசம் என்ற பெயரில் வெளியான இப்படம் வெற்றி பெற்றது நாம் அறிந்ததே.

கமல் ஓகே சொன்னதை போல ரஜினி ஓகே சொல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கீர்த்தி சுரேஷ் வீட்டு திருமணம்; ஜொலித்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை கீர்த்தி சுரேஷின் அக்காவும், முன்னாள் நடிகை மேனகாவின் மூத்த மகளுமான ரேவதி சுரேஷ், நிதின் மோகன் என்பவரை மணந்தார்.

மணமகள் ரேவதி சினிமாவில் காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் திருமணம் நேற்று குருவாயூர் கோயிலில் நடைபெற்றது.

இதில் மலையாள நட்சத்திரங்கள் மம்மூட்டி, மோகன்லால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

இதில் தமிழக விஐபியான ரெமோ நாயகன் சிவகார்த்திக்கேயன் மாப்பிள்ளை போல வேஷ்டி சட்டையில் ஜொலித்தார்.

அப்போது கீர்த்தியும் அருகில் நின்று கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

ஒருவேளை இது ரெமோ படத்தின் புரோமோஷனா இருக்கலாம் என்று கூட அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டார்களாம்.

காவிரி தண்ணீர் பிரச்சினை; கர்நாடகத்திற்கு சுஹாசினி ஆதரவு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

மேலும் முழு அடைப்பும் அரசின் ஆதரவோடு நடந்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு ஆதரவாக நடிகை சுஹாசினி பேசியதாக செய்திகள் பரவின்.

இதுகுறித்து சுஹாசினி அளித்துள்ள விளக்கத்தில்…

காவிரி பிரச்சனை குறித்து எந்த சமூக வலைத்தளங்களிலும் தான் எவ்விதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

அந்த கருத்துக்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

மீண்டும் மோகன்லாலுடன் இணையும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீனியர் என்டிஆர் மற்றும் மோகன்லால் நடித்த நேரடி தெலுங்கு படமான ஜனதா கேரேஜ் அண்மையில் வெளியானது.

கொரடலா சிவா இயக்கிய இப்படத்திற்கு ஆந்திரா மற்றும் கேரளாவில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

இதன் மூலம் ரூ. 100 கோடி கிளப்பில் இப்படம் இணைந்துவிட்டது.

இந்நிலையில் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதில் ஜீனியர் என்டிஆர் வேடத்தில் விஜய்யும், மோகன்லால் வேடத்தில் மோகன்லாலே நடிக்கக்கூடும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது உறுதியாகும் பட்சத்தில் மீண்டும் ஒரு ஜில்லா இவர்கள் கூட்டணியில் வெளிவரலாம்.

மங்காத்தா நடிகரை இயக்கும் பாரதிராஜா மகன் மனோஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் அவர்கள் தாஜ்மஹால், சமுத்திரம், வாய்மை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இதனிடையில் பம்பாய், எந்திரன் ஆகிய படங்களிலும் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறாராம்.

இதனால், பாரதிராஜாவின் ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தை ரீமேக் செய்யவிருந்தார்.

ஆனால் அப்படம் தள்ளிப்போகவே, தற்போது ‘ஒரு கொம்பு கதை’ என ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

இதில் மங்காத்தா, ஜில்லா ஆகிய படங்களில் நடித்த மஹத் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.

More Articles
Follows