தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
இவர்களுடன் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்து சிவகார்த்திகேயன் எழுதிய ‘அரபிக்குத்து’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் யூடியூப்பில் பல சாதனைகளையும் படைத்தது .
இதன் பின்னர் அனிருத் இசையில் விஜய் பாடியிருக்கும் ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் வெளியானது. இந்த பாடலும் சாதனைகளை படைத்து வருகிறது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 20ல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கொரோனா சூழ்நிலை காரணமாக நடைபெறவில்லை.
எனவே ‘பீஸ்ட்’ படம் ரிலீசை விஜய் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்தனர்.
ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என கூறப்பட்டதால் அந்த அறிவிப்பை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்த நிலையில் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி (ஒரு நாள் முன்னதாக) திரையரங்கில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இன்று அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு நிச்சயம் விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தான் இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
Here’s Vijay’s Beast official release date
